பொள்ளாச்சியான சுவிட்சர்லாந்து கே.வி. ஆனந்த் கமென்ட்
1/6/2011 10:37:34 AM
1/6/2011 10:37:34 AM
பெரும்பாலான படங்கள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்தில்தான் படமாகிறது. நம்மூர் பொள்ளாச்சிபோல் ஆகிவிட்டது இந்த லொகேஷன்கள். எனது கதைகளுக்கு மாறுபட்ட லொகேஷன்களையே தேர்வு செய்கிறேன். அது படத்துக்கு பிளஸ் ஆக அமைகிறது. 'அயன்' படத்தை தான்சானியாவில் படமாக்கினேன். பச்சை, நீல லொகேஷன்களில்தான் அழகு இருக்கிறது என்று நம்பவில்லை. நானும், எனது கேமராமேனும் ஸ்கிரிப்ட் தயாரானதும் கதைக்கான லொகேஷனை நெட்டில் தேட ஆரம்பித்துவிடுவோம். மேலும் டூரிஸம் அதிகாரிகள் மற்றும் அடிக்கடி உலக நாடுகளை சுற்றுபவர்களிடம் கேட்டறிவேன். அதன் பிறகே ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்வேன். 'கோ' படத்துக்கும் இதே போல் லொகேஷன்கள் தேர்வு செய்தேன். அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன்.
Source: Dinakaran