6/21/2011 3:41:57 PM
பாலிவுட் முன்னணி ஹீரோயின் கேத்ரினா கைப்புக்கு கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியை மறக்க முடியாது. அன்று தனது பிறந்த நாள் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். பாலிவுட் ஸ்டார்கள் குவிந்தனர். ஷாருக்கான், சல்மான் கானும் விழாவில் கலந்துகொண்டனர். திடீரென்று இரண்டு கான்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பார்ட்டியே அல்லோலப்பட்டது. சந்தோஷ பார்ட்டி, மோதலில் முடிந்ததில் அப்செட் ஆனார் கேத்ரினா.
சம்பவம் நடந்து 3 வருடம் ஆகிவிட்டது. இதுவரை ஷாருக், சல்மான் பேசிக் கொள்வதே இல்லை. இவர்கள் சண்டை காரணமாக கடந்த 3 வருடமாக பிறந்த நாள் பார்ட்டியை நடத்தாமல் இருந்தார் கேத்ரினா. இந்நிலையில் அடுத்த மாதம் வர உள்ள தனது பர்த்டேக்கு பார்ட்டி வைக்க முடிவு எடுத்திருக்கிறார். இது பற்றி அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறும்போது, ÔÔபர்த்டே பார்ட்டி கலாட்டாவால் அதிர்ச்சி அடைந்த கேத்ரினா பார்ட்டி கொடுப்பதையே நிறுத்திவிட்டார். அந்த சம்பவத்தால் ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இப்போது பயத்திலிருந்து மீண்டிருக்கிறார். 'பர்த்டே பார்ட்டி வேண்டும்Õ என்று சக ஹீரோ, ஹீரோயின்கள் கேட்பதால் அவர்களது விருப்பத்தை தட்டிக் கழிக்க விரும்பவில்லைÕÕ என்றார். பார்ட்டிக்கு ஷாருக்கான், சல்மான் கானுக்கும் அழைப்பு விடுக்க உள்ளாராம் கேத்ரினா.