வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன்: த்ரிஷா

Will Bend But Won T Break Trisha

சென்னை: வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன் என்று நடிகை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தாங்கள் செய்வது, நினைப்பது என்று எல்லவாற்றையுமே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போடுகின்றனர். இப்படி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை படிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா போட்டுள்ள ஒரு ட்வீட் பலரை குழம்ப வைத்துள்ளது.

த்ரிஷாவின் ட்வீட்:

நன்றி மறந்த மக்கள் அதற்கான கர்மபலன்களை அனுபவிப்பார்கள். வளைந்து கொடுப்பேன். ஆனால் உடைய மாட்டேன். தற்போது நான் கற்றுக்கொண்டுள்ள பாடம் இது தான் என்று தெரிவித்துள்ளார்.

இதைப் படிக்கையில் த்ரிஷாவுக்கு என்ன ஆனது, ஏன் திடீர் என்று இப்படி ஒரு ட்வீட் என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

மணிரத்னம் மீது மேலும் புகார்கள்.. கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்!

More Distributors Rush Commissioner Office

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அவர் ஈடுகட்டித் தர வேண்டும் என்று கோரி அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல விநியோகஸ்தர்கள் சென்னை காவல் துறை ஆணையரிடம் மணிரத்னம் மீது புகார் கொடுத்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான படம் கடல். இதனை ஜெமினி நிறுவனம் வெளியிட்டது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி படு தோல்வியைச் சந்தித்தது. ஆனால் மணிரத்னம் எந்த நஷ்டமும் இல்லாமல் தப்பிவிட்டார். காரணம் இந்தப் படத்தை அவர் ஜெமினிக்கு ரூ 27 கோடி லாபம் வைத்து விற்றுவிட்டாராம்.

படம் வெளியாகி தாறுமாறான நஷ்டத்தை ஏற்படுத்தியதால், படத்தை விநியோகித்தவர்கள் மணிரத்னம் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

ஆனால் மணிரத்னமோ, எனக்கும் கடல் படத்துக்கும் சம்பந்தமில்லை. காரணம், படத்தை நான் மொத்தமாக ஜெமினிக்கு விற்றுவிட்டேன். என லாப நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பு என ஒதுங்கிவிட்டார்.

மேலும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் போலீசில் கோரினார்.

இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்காரர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடல் படம் மூலம் தங்களுக்கு ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி புகார் கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, இப்போது படத்தை வெளியிட்ட மற்ற ஏரியா விநியோகஸ்தர்களும் புகார் மனுவோடு கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுத்துள்ளனர்.

மணிரத்னம்தான் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர். அவரை நம்பித்தான் படம் வாங்கினோம். ஜெமினி நிறுவனத்தை அல்ல. எனவே எங்களுக்கு மணிரத்னம் நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி புகார் கொடுத்துள்ளனர்.

 

என்னது விஜய்க்கு வில்லன் நானா... அதெல்லாம் கப்சா!- பாடகர் விஜய்

Thalaivaa Doesn T Have Vijay Trio

சென்னை: தலைவா படத்தில் விஜய்க்கு வில்லனாக நான் நடிப்பதாக வந்த அத்தனை செய்திகளும் அக்மார்க் கப்சா, என்கிறார் பாடகர் விஜய்.

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். தமிழ் - மலையாளத்தில் இவரும் முன்னணி பாடகராக உள்ளார். கடந்த வாரம் சிறந்த பாடகருக்கான கேரள அரசின் விருதினை பெற்றுள்ளார்.

ஏஎல் விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் வில்லனாக விஜய் யேசுதாஸ் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகின்றன.

விஜய் - விஜய் - விஜய் காம்பினேஷன் என்பது செய்திக்கு ரைமிங்காக இருக்கும் என்பதால் இந்த செய்தியை பலரும் நம்பவே ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் சில தினங்களுக்கு முன் இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடம் கேட்டபோது, யார் இப்படியெல்லாம் செய்தியைக் கிளப்பிவிடுகிறார்கள் என்றார்.

இப்போது விஜய் யேசுதாஸே இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது சமீபத்திய ட்வீட்டில், "நிறைய பேர் என்னிடம் கேட்டு, நிறைய முறை விளக்கமும் சொன்ன விஷயத்தை திரும்பத் திரும்ப எழுதி வருவது கடுப்பைக் கிளப்புகிறது. நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஏதாவது சுவாரஸ்யமான வாய்ப்பு வந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா

Andrea Hails Kamal Hassan

விஸ்வரூபம் படத்தின்போது, கமல் அருகிலிருக்கும்போது எனக்கு பேச்சே வராது. அவர் பெரிய ஜீனியஸ், என்றார் நடிகை ஆன்ட்ரியா.

விஸ்வரூபம் படத்தில், கமலுடன் வந்து போகும் வேடத்தில் நடித்திருந்தாலும், படத்தின் வெற்ரி ஆன்ட்ரியாவை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

முதல் பாகத்தில் டம்மி வேடம் என்றாலும் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில்தான் ஆன்ட்ரியாவின் விஸ்வரூபத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவமாம் ஆன்ட்ரியாவுக்கு.

"அதில் மிகை எதுவும் இல்லை. விஷயத்தைச் சொல்லித்தான் என்னை ஒப்பந்தம் செய்தார் கமல் சார் (என்னமா புளுகறாங்கப்பா... விஸ்வரூபம் எடுக்கும்போது, அதன் இரண்டாம் பாகம் குறித்து கமலுக்கு ஐடியாவே இல்லை!!)

கமல் சாருடன் பெரும்பாலான காட்சிகளில் நானும் இருப்பது போல இரண்டாம் பாகம் அமைந்துள்ளது.

கமல் சார் ஒரு நடிப்பு ஜீனியஸ். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். எப்பவும் நான் கொஞ்சம் அதிகமாகவே பேசுவேன். ஆனால், கமலுக்கு முன்னால் எனக்கு பேச்சே வராது.

நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவரே பலமுறை என்னை கலாட்டா செய்துள்ளார். அதை நான் பெருமையாகக் கருதுகிறேன்," என்றார்.

வெளியில் உங்களைப் பற்றி ஏகப்பட்ட காதல் கிசுகிசு உலா வருகிறதே, என்றால், "இந்த மாதிரி வதந்திகள் என்னை கவலைப்பட வைக்கின்றன. நான் ரொம்ப வெளிப்படையானவள். அதற்காக தனிப்பட்ட உறவுகளை இப்படி பப்ளிக்காக அசிங்கப்படுத்துவது தவறு. எனக்கு யாருடனும் காதல் இல்லை. காதலரும் இல்லை," என்றார்.

 

குஷ்பு விவகாரம்… எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: அஜீத் கோபம்

Don T Link With Kushboo Issue Please Says Ajith

சென்னை: குஷ்பு வீட்டில் கல்லெறிந்த விஷயத்தை பற்றி குஷ்புவிடமே போன் செய்து அஜீத் விசாரித்ததாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது அஜீத்பேன்ஸ்.காம்.

இது எல்லா இணையதளங்களிலும் இறக்கை கட்டி பறந்தது. இதற்கு இதற்கு அஜீத் ரியாக்சன் செய்தாரோ இல்லையோ குஷ்புவின் ரியாக்சன் சூடாக இருந்தது.

பேனா இருக்குன்னு என்ன வேணும்னாலும் எழுதறதா? ஒரு எல்லை தாண்டி இப்படி எழுதினா என்னால பொறுத்துகிட்டு இருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் பொங்கியிருந்தார் குஷ்பு.

இது குறித்து அஜீத் என்ன சொல்கிறார்? என்று வலை படப்பிடிப்பில் இருந்தவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர் சில மீடியா நண்பர்கள், அதற்கு அஜீத் 'நான் என்னோட ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டேன். என் பேர்ல வர்ற இணைய தளத்தில் வர்ற செய்திக்கும் எனக்கும் மட்டும் எப்படி சம்பந்தம் இருக்கும்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க' என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அஜீத்.

 

சவீதாவின் டாக்ஸியில் சவாரி போன மயிலு...

Savita Was Really Good Sridevi Praises Female Driver

சவீதா என்ற பெண் ஓட்டிய டாக்ஸியில் சவாரி போய் படு குஷியாக காணப்படுகிறாராம் நடிகை ஸ்ரீதேவி. அவரது வாயைத் திறந்தாலே இப்போது சவீதா புராணம்தான். அப்படி ஒரு பாராட்டு.

செல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி அது. அதில் கலந்து கொண்ட விஐபிக்களை பெண் டிரைவர்களைக் கொண்ட கார்களில் அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீதேவியையும் அப்படி ஒரு காரில் அழைத்துச் சென்றனர். சகா கேப்ஸ் நிறுவனத்தின் டாக்ஸியில் ஸ்ரீதேவி பயணித்தார். இந்தக் காரை ஓட்டிச் சென்றவர் பெயர் சவீதா.

காரில் பயணித்த ஸ்ரீதேவி பின்னர் காரிலிருந்து இறங்கியதும் சவீதாவைப் பாராட்டித் தள்ளி விட்டார்.

இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், மிகவும் அருமையான ஐடியா இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் பெண் இயக்குநரிடம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமே இப்போது சவீதாவுடன்காரில் பயணித்தபோதும் கிடைத்தது.

ரொம்ப திரில்லாக இருந்தது. எனது காரை ஓட்டி வந்தவர் சவீதா. ரொம்ப நல்ல பெண் என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், இப்போது காலம் மாறி விட்டது. பெண்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் தர வேண்டும், அதிகாரம் தர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றார் ஸ்ரீதேவி.

 

நாலு பொண்ணு நாலு பசங்க... சலூன் கடை பவர் ஸ்டார்!

Power Star Srinivasan Plays As Barber

பவர் ஸ்டார் சீனிவாசன் வரவிருக்கும் ஒரு படத்தில் சலூன் கடை வைத்திருப்பவராக நடித்துள்ளார்.

இதில் அவர் எம்எஸ் பாஸ்கருடன் சேர்ந்து காமெடி பண்ணியிருக்கிறாராம்.

எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க'. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார் சிரஞ்சீவி அனீஸ்.

இந்த படத்தில் காதல் பித்தானாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, அவருடன் முக்கிய காமெடி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, ஆர்த்தி, நான்ஸி, ராமசந்திரன், சுந்தரி, வீரா, ரியாஸ்கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரவாயல் பகுதியில் நடை பெற்றது. காட்சியின் படி ஒரு மரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பவர் பவர் ஸ்டார்.

அவரிடம் சேவிங் செய்து கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கரிடம் தனது காதலின் ஆழத்தை தெரிவித்து, அவளை தன்னுடன் சேர்த்து வைக்க உதவி கேட்பார் பவர் ஸ்டார்.

அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ஐடியா சொல்லுகிறார்.

இந்தக் காட்சி குறித்து சீனிவாசன் கூறுகையில், "நாலு பொண்ணு நாலு பசங்க படத்துல எம்எஸ் பாஸ்கரோடு நானும் முதல் முறையா சேர்ந்து ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். ரொம்ப ரசித்து நடிக்கிறேன். கலகலப்பான காட்சிகள் நிறைய இருக்கு. அதே போல படப்பிடிப்பும் கலகலப்பா போய்கிட்டு இருக்கிறது.

மனசும் மனசும் இணைவது மட்டுமல்ல காதல். நல்ல மனிதர்களை இணைப்பதும் காதல்தான். காதல் பொழுது போக்கு அல்ல. அது சக்தி வாய்ந்த உறவு என்பதை வலியுறுத்தி இந்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ். இந்தப் படத்தை ரசிகர்கள் பார்த்து வெற்றி அடைய வைக்கணும்னு கேட்டுக்கிறேன். நன்றி," என்றார்.

இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

 

நான் சூர்யா ஃபேன் - பெருமை பொங்க சொல்லும் லட்சுமி மேனன்

Lakshmi Menon Is Surya Fan   

சசிகுமாருடன் சுந்தர பாண்டியன், விக்ரம் பிரபுவுடன் கும்கி என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட லட்சுமி மேனனுக்கு, இந்த இருவரில் பிடித்த ஹீரோ யார்?

ம்ஹூம்.. இருவருமே இல்லையாம்... இன்னும் ஜோடி போடாத சூர்யாவைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்கிறார் லட்சுமி.

இப்போது கொச்சியில் முகாமிட்டுள்ள லட்சுமி மேனன், சினிமா, ஷூட்டிங், டூயட் என அனைத்தையும் மறந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.

காரணம், நாளைதான் அவருக்கு முதல் தேர்வு ஆரம்பிக்கப் போகிறதாம்.

இந்தப் படிப்பைக் கூட அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணுபவர் சூர்யாதானாம். "நான் நடிக்க வரும் முன்பே சூர்யாவின் ரசிகை. அவருடன் ஜோடியாக நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டே அந்த வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்," என்றார்.

சூர்யா அடுத்து கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார். இவர்களில் லிங்குசாமி ஏற்கெனவே தன் படத்துக்கு சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். கவுதம் மேனன் சார்.. லட்சுமியின் கோரிக்கையை மனசுல வச்சிக்குங்க!!

 

பாலிமர் டிவி: நிவேதிதாவின் 'கோலிவுட் இன்பாக்ஸ்'

Kollywood Inbox Cinema Program On Polimer Tv

சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தொலைக்காட்சி ரசிகர்களிடையை நல்ல வரவேற்பு உண்டு. மக்கள் டிவி தவிர அனைத்து சேனல்களுமே சினிமா செய்திகளை ஒளிபரப்புகின்றனர்.

இப்போது பாமகவினரும் சினிமா எடுப்பதால் இனி மக்கள் தொலைக்காட்சியிலும் சினிமா நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆச்சரியமில்லை. நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல.

பாலிமர் தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளுக்காக புதியதாக தொடங்கியுள்ள கோலிவுட் இன்பாக்ஸ் பற்றிதான்.

சினிமா பூஜை தொடங்கி பாடல் வெளியீட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பு என ரிலீஸ் வரை திருவிழாதான். இதன் ஒவ்வொரு நிகழ்வையும் கோலிவுட் இன்பாக்ஸ் மூலம் ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

கிசு கிசு இல்லாத சினிமா செய்தியா? அதுவும் இந்த கோலிவுட் இன்பாக்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. ஞாயிறுதோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணிவரை ஒளிபரப்பாகும் கோலிவுட் இன்பாக்ஸ் நிகழ்ச்சியை நிவேதிதா தொகுத்து வழங்குகிறார்.

 

இது சென்சார் போர்டல்ல... மாஃபியா கும்பல்.. ஆதி பகவனுக்கு பணம் கேட்டார்கள்! - அமீர் திடுக் புகார்

Ameer Openly Alleged Censor Board

சென்னை: சான்றிதழ் தர பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது சென்சார் போர்டு. ஒரு அறிவிக்கப்படாத மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது, என பகிரங்கமாக புகார் கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.

ஆதிபகவன் படத்துக்கு ஏ சான்றுக்கு பதில் யு ஏஅல்லது யு சான்று தர என்னிடம் பணம் கேட்டார்கள் என்றும் அமீர் கூறியுள்ளார்.

மலேசியா கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமீர் கூறியதாவது:

திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சென்சார் போர்டு தற்போது அறிவிக்கப்பட்டாத மாபியா கும்பல் போல செயல்பட்டு வருகிறது.

‘யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனியாக கட்டணம், ‘யுஏ' சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.

பணம்தான்...

ஆக, இவர்கள் ஆட்சேபணைக்குரிய காட்சி என தரம் பிரிப்பது பணத்தின் அடிப்படையில்தான்ய

என்னுடைய ஆதிபகவன் படத்திற்கும் இதேபோல் பணம் கேட்டு என்னிடம் மீடியேட்டர்கள் வந்தார்கள். ஆனால் நாங்கள் பணம் கொடுக்க முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டனர்.

இப்படத்தை தணிக்கை செய்வதற்காக நான் கடந்த மாதம் 5-ந் தேதியே சென்சார் போர்டிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் 12-ந் தேதிதான் படத்தைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, அப்போதே 40 காட்சிகளை வெட்டவேண்டும். சில இடங்களில் வசனங்களை மியூட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏன்? என்று கேட்டதற்கு கெட்டவார்த்தை இருக்கிறது, பாடல் காட்சியில் மதுபாட்டில்கள் இருக்கின்றன, எனவே இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ‘ஏ' சான்றுதான் கொடுப்போம் என்றார்கள்.

ஆனால் இதையெல்லாம் மியூட் பண்ணிய பிறகும் ஏன் ‘ஏ' சர்பிடிகேட் கொடுக்கிறீங்க என்று கேட்டால், காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை மியூட் செய்தாலும் ‘ஏ' சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்று சொன்னார்கள்.

சூழ்நிலை சரியில்லை

இதுகுறித்து சென்சார் போர்டின் அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் இப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டியது இருந்திருக்காது. மேலும், வசனங்களை மியூட் பண்ண வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், இங்கே இப்பொழுதுள்ள சூழ்நிலை சரியில்லை. எனவே, நீங்கள் காட்சிகளை நீக்கினாலும், வசனங்களில் மியூட் செய்திருந்தாலும் ஏ சர்டிபிகேட்தான் கொடுக்கப்படும் என கூறினார். இந்த செய்தியை என்னிடம் 12-ந் தேதி கூறினார். ஆனால் அந்த சர்டிபிகேட் என் கையில் கொடுப்பதற்கு 19-ந் தேதி ஆகிவிட்டது.

இந்த படத்தை நான் 22-ந் தேதி வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் 19-ந் தேதி கொடுத்தால் நான் என்ன செய்யமுடியும்?

விஸ்வரூபத்தால்...

சரி, இப்போதுதான் விஸ்வரூபம் பெரிய பிரச்சினையிலிருந்து மீண்டு வெளியாகியிருக்கிறது. அதனால், இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 22-ந் தேதி படம் ரிலீஸ் ஆனது.

படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுத்திருந்ததால் பாடல்களை எந்த சேனலிலும் வெளியிடமுடியாது. ஆனால் பாடல்களை விளம்பரப்படுத்துவதற்காக மது அருந்துவது போன்ற காட்சிகள் உள்ள பாடல்களையெல்லாம் நீக்கிவிட்டு எங்களிடம் கொடுங்கள் என்று சென்சார் போர்டு அதிகாரிகள் சொன்னார்கள். 25-ந் தேதி கொடுத்தேன். அதன்பிறகு, 3 பாடல்களை 27-ந் தேதி போராடி வாங்கினோம்.

படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது படவிளம்பரத்துக்காக சில காட்சிகளை கேட்டால் இந்த நிமிஷம் வரை எந்த ஒரு காட்சியையும் கொடுக்கவில்லை. 26-ந் தேதி மனு செய்திருக்கிறோம்.

இன்றைக்கு மலேசியா புறப்படுகிறேன். அங்கு படம் பிரமாதமாக போய்க் கொணடிருக்கிறது. அங்க படத்தை பிரபலப்படுத்த நானும், இந்த படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவியும் செல்கிறோம்.

மலேசியாவிலும் தடுக்க சென்சார் முயற்சி

ஆனால், இங்கே இந்த படத்தை திட்டமிட்டு தடுக்க, சென்சார் போர்ட்டுக்கு இதில் என்ன அக்கறை என்று எனக்கு புரியவில்லை. சென்சார் போர்ட்டு திட்டமிட்டு செய்கிறதா? இல்லை சென்சார் போர்டுக்கு பின்னால் ஏதாவது இருக்கிறதா? இல்லையென்றால் சென்சார் போர்டு கேட்டதை கொடுக்கவில்லை என்று சொன்னதால் இந்த பிரச்சினையா? என எதுவுமே எனக்கு தெரியவில்லை. அலுவலர்களும் தெளிவாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

ஒரு ஏ சர்டிபிகேட் மட்டும் இந்த படத்திற்கு கொடுத்துவிட்டு இந்த படத்தை எந்தவிதத்திலும் விளம்பரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அது என்னவென்று புரியவில்லை. திரை விமர்சனம், மற்ற எதுவென்றாலும் படத்தின் காட்சிகளை கொடுத்தால்தான் இதை செய்யமுடியும். ஆனால், இதை செய்வதற்கு ஒரு காட்சிக்கூட கொடுக்கவில்லையென்றால் இந்த படத்தை எப்படி விளம்பரம் செய்யமுடியும்.

சீப் பப்ளிசிட்டி தேவையில்லை

நான் இயக்குனர் சங்கத்தின் செயலாளராக இருந்திருக்கிறேன். சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தும் இந்த பிரச்சினையை பெரிதாக்க விரும்பவில்லை. இவ்வளவு சீப்பான பப்ளிசிட்டி தேவையில்லை என்று நினைத்துவிட்டேன்.

சென்சார் போர்டு இந்த படத்திற்கு 'யு' சர்டிபிகேட் கொடுக்கவில்லை என்பதால், ஒரு மாதம் போராடிவிட்டு அதற்கப்புறம் படத்தை ரிலீஸ் செய்வது தேவையில்லாத பிரச்சினை என்று நினைத்துதான் ‘ஏ' சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லை என்று வாங்கினோம். அதன்பிறகும் படத்தை விளம்பரப்படுத்த தடை செய்கிறார்கள் என்றால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இந்த சட்டங்கள் எல்லாம் இன்றைக்குத்தான் புதிதாக வந்ததா? ஏற்கெனவே சென்சார் சட்டங்களில் இதுவெல்லாம் இருக்கிறதா?

ஆபாசக் காட்சி இருக்கா...

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகிறது. தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் பார்த்திருக்காங்க. இதுல ‘ஏ' சர்டிபிகேட் கொடுக்கிறதுக்கு என்ன இருக்கு? ஏதாவது முத்தக்காட்சி இருக்கிறதா? ஆடை அவிழ்ப்பு காட்சி இருக்கிறதா? கட்டிப்பிடித்து உருளுவதுபோல் இருக்கிறதா? யாரும் யாரையும் கற்பழிச்சாங்களா? ஒண்ணுமே இல்லை. இதற்கு ஏன் ‘ஏ' சர்டிபிகேட்? இதற்கு என்ன உள் அர்த்தம் இருக்கும் என்று எனக்கும் புரியலை. தெளிவா சொன்னா அதை நான் செஞ்சுட்டு போறேன். ரேட் கொடுத்து சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

யாரும் படமெடுக்க முடியாது

இது இப்படியே போனால் படம் யாரும் எடுக்க முடியாது. சென்சார் போர்டு இதற்கு விளக்கம் அளித்தே தீரவேண்டும். நான் சொன்னது எதுவும் தப்பு என்றால், சென்சார் போர்டு என்மீது நேரடியாக வழக்குகூட தொடுக்கலாம். இதற்கான காரணத்தை அவர்கள் சொல்லலாம்.

இவ்வாறு அமீர் பேசினார்.

 

மணிரத்னம் இயக்கும் இந்திப் படம்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கதை…

Mani Ratnam S Next Hindi Film On India Pakistan Partiti

மும்பை: கடல் படம் ஒரு வழியாக அலையின் சத்தம் கூட இல்லாமல் போய்விட்டது. நஷ்டப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டாலும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய மணிரத்னம் அடுத்த படியாக சத்தமில்லாமல் இந்தி படம் எடுக்க கிளம்பிவிட்டார்.

இந்த படத்தின் கதை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

மணிரத்னம் இயக்க உள்ள இந்திப் படத்திற்கு ரென்சில் டிசில்வா திரைக்கதை எழுதுகிறாராம். இவர் குர்பான் படத்தை இயக்கியுள்ளார்.

18 ஆண்டு கால விளம்பரப் பட இயக்குநர் என்ற பெரிய அந்தஸ்து கொண்ட டிசில்வா, ஏற்கனவே அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் சரியாக போகாவிட்டாலும் மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார் டிசில்வா.

இந்தப் படத்தில் இளைய தலைமுறை நடிகர்களை நடிக்கவைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விஷால், குமரிமுத்துவுக்கு நடிகர் சங்கம் மீண்டும் நோட்டீஸ்

Second Notice Vishal Kumari Muthu

சென்னை: எப்போதும் இல்லாத அளவுக்கு விஷால் மற்றும் குமரி முத்து விவகாரத்தில் கடுமை காட்டி வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இருவரும் ஏற்கெனவே அளித்த விளக்கங்கள் திருப்தியாக இல்லாததால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் சங்க நிர்வாகிகள்.

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் நடிகர்கள் விஷால், குமரிமுத்து பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

"விஸ்வரூபம்" படம் ரிலீசாக தடங்கள் ஏற்பட்ட போது நடிகர் சங்கம் கமலுக்கு உதவவில்லை என்று விஷால் விமர்சித்திருந்தார்.

இதற்கு நடிகர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இதற்கு விஷால் பதில் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தனது மனதில் பட்டதை சொன்னதாகவும் என்னை புண்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சமர் பட சம்பள பாக்கியை நடிகர் சங்கம் தனக்கு வாங்கித் தரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம் செயற் குழு உறுப்பினர்களிடம் சமர்பிக்கப்பட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசினார்கள். இறுதியில் விஷாலிடம் விளக்கம் கேட்டு இன்னொரு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

குமரி முத்து

நடிகர் சங்க நிர்வாகிகளை அவமதித்து கருத்து வெளியிட்டதாக நடிகர் குமரிமுத்துக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பபப்பட்டிருந்தது. செயற்குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் குமரிமுத்து செயற்குழுவுக்கு வரவில்லை. தனக்கு வேறு பணிகள் இருப்பதால் வர இயலவில்லை என்று கடிதம் அனுப்பி இருந்தார்.

எனவே அடுத்த செயற்குழுவில் ஆஜராகும்படி குமரிமுத்துவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

 

மாப்பிள்ளை ரெடி... அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

Anushka Getting Ready Say Bye Cinema

விரைவில் திருமணம்.. என்ற அறிவிப்பு பலகையை இப்போது த்ரிஷாவிடமிருந்து பிடுங்கி, அனுஷ்கா கையில் கொடுத்துவிட்டது மீடியா.

கடந்த சில தினங்களாக நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரபரப்பாக உலா வருகிறது மீடியாவில்.

தமிழில் இப்போது இரண்டாம் உலகம், சிங்கம் 2 படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. வேறு படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை.

தெலுங்கிலும் இரு படங்களில் நடித்துவருகிறார். ஆனால் எந்த புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் அனுஷ்கா சினிமாவுக்கு குட்பை சொல்லக் கூடும் என்ற யூகங்கள் கிளம்பிவிட்டன.

அதற்கு சிகரம் வைத்தது போல, அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், படங்களின் விற்பனை பாதிக்கக் கூடாது என்பதால் இப்போதைக்கு ரகசியம் காப்பதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர்தான் மாப்பிள்ளையாம்.

மறுப்பறிக்கை எப்போ விடப் போறீங்க அனுஷ்கா!!

 

பிரச்சினையில் பிரியாணி?

Biriyani Trouble   

எ வெங்கட் பிரபு டயட், என்ற டேக் லைனோடு தயாராகிக் கொண்டிருந்த பிரியாணி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஸ்டுடியோ க்ரீன் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம், முன்னணி ஹீரோ கார்த்தி, நம்பர் ஒன் ஹீரோயின் ஹன்சிகா, மங்காத்தா தந்த இயக்குநர் என எல்லாம் இருந்தும்.... ஏன் ஏன்? என்று கோடம்பாக்கமே கேட்கும் அளவுக்கு இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

காரணம்... இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் படத்தின் ஹீரோ கார்த்திக்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு என்கிறார்கள்.

வெங்கட் பிரபு அன்ட் கோ, தங்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்துடன் படத்தை இழு இழு என இழுத்துக் கொண்டிருப்பது தயாரிப்புத் தரப்பையும், முக்கியமாக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவையும் கோபப்படுத்திவிட்டதாம். கார்த்தியின் கால்ஷீட்டை ஏகத்துக்கும் வீணடித்துவிட்டாராம் வெங்கட்பிரபு.

எடுத்த வரைக்கும் போதும்... நிறுத்துங்க என்று தயாரிப்புத் தரப்பு ஒரு பக்கம் சொல்ல, மறுபக்கம் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்குப் போய்விட்டாராம் கார்த்தி.

பிரச்சினை முடிந்து பிரியாண கமகமக்கத் தொடங்கியது என்ற நல்ல சேதி வரட்டும் விரைவில்!

 

சின்னத்திரை நடிகைக்கு பின்னணி பாட வாய்ப்பு தரும் டி.ராஜேந்தர்

T Rajendhar Gives Chance A Small Screen

சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடிய சின்னத்திரை நடிகைக்கு தான் இயக்கும் திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் டி. ராஜேந்தர்.

சின்னத்திரை குடும்பங்கள் பங்கேற்கும் சன் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முதலில் சுகன்யா, மீனா, கங்கை அமரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இப்போது சூப்பர் 8 சுற்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களும் மாறியுள்ளனர். கங்கை அமரன் சன் சிங்கர் நடத்த போய்விட்டதால் அவருக்கு பதிலாக டி.ராஜேந்தர் நடுவராக வந்துள்ளார். சுகன்யாவிற்கு பதிலாக நடிகை சங்கீதாவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் காயத்ரி ஜெயராமுடன் சின்னத்திரை நடிகர் தீபக் இணைந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உறவுகள், திருமதி செல்வம், இளவரசி என 8 சீரியல் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.

இதில் உறவுகள் குடும்பத்தில் இருந்து வந்த சின்னத்திரை நடிகை, நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்... பாடலைப் பாடி அசத்தினார். பாடலைக் கேட்டு அசந்து போன டி. ராஜேந்தர், தான் இயக்கும் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.

சின்னத்திரை நடிகர்கள் நடிப்பதற்கு மட்டுமே தெரிந்திருப்பார்கள் என்று நினைத்து வந்த தனக்கு அவர்களின் பலவித திறமைகள் வியப்பில் ஆழ்த்துவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் யாரையும் விமர்சனம் செய்யாத டி. ராஜேந்தர் அவர்களை பலவிதங்களில் உற்சாகப்படுத்துகிறார்.

 

ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு... 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!

Studio Green Keeps 7 Films Pipeline

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது ஸ்டுடியோ கிரீன்.

தமிழ் சினிமா மார்கண்டேயன் எனப்படும் சிவக்குமாரின் உறவினர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமானது இந்த ஸ்டுடியோ க்ரீன்.

பருத்திவீரன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களை ஆரம்பத்தில் தயாரித்தது.

தொடர்ந்து சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்த படங்களை மட்டும் தயாரித்து வந்த இந்த நிறுவனம் இப்போது வெளிப்படங்களையும் வாங்கி வெளியிட ஆரம்பித்துள்ளது. அவை பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துவிடுகின்றன.

அட்டகத்தி, பீட்சா ஆகிய படங்களைத் தொடர்ந்து திருகுமரன் எண்டர்டைன்மண்டஸ் நிறுவனம் தயாரித்துள்ள சூது கவ்வும் என்ற படத்தையும் மொத்தமாக ஸ்டுடியோ க்ரீன்தான் வாங்கியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்க, 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நகுலன் குமாரசாமி இப்படத்தினை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களின் உரிமையை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியுள்ளது.

சிங்கம் 2, பிரியாணி, அழகுராஜா ஆல் இன் ஆல், 'அட்டகத்தி' ரஞ்சித்தின் அடுத்த படம் போன்றவற்றை தயாரித்து வருகிறது ஸ்டுடியோ க்ரீன்.

 

இயக்குநர் ஆசையில் ரோஹிணி.. சிங்கீதம் சீனிவாசராவ் படத்தில் உதவியாளரானார்!

Rohini Turns Assistant Singeetham Srinivasa Rao

முழுநேர இயக்குநராவது என்ற முடிவுக்கு வந்துவிட்ட நடிகை ரோஹிணி, தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருக்கிறார்.

சிங்கீதம் சீனிவாசராவை இன்றைய தலைமுறைக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. கமல் ஹாஸனின் அதிக வெற்றிப் படங்களின் இயக்குநர் இவர்தான்.

கமலின் முதல் தயாரிப்பான ராஜபார்வை, அடுத்த மெகா ஹிட் படமான அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், வசனங்களே இல்லாத பேசும் படம், மகளிர் மட்டும், லேடீஸ் ஒன்லி, சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்.

இப்போது வெல்கம் ஒபாமா என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். ராச்செல், சஞ்சய், ஊர்மிளா, நிரஞ்சனி என புதுங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தின் முதல் துணை இயக்குநராகப் பணியாற்றுகிறார் நடிகை ரோஹிணி. வசனமும் இவரே. இந்தப் படத்தை தமிழுக்கு மாற்றும் பொறுப்பும் ரோஹிணிக்குதான் தரப்பட்டுள்ளது.

ரோஹிணி ஏற்கெனவே தமிழில் அப்பாவின் மீசை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனாலும் சிங்கீதம் போன்ற ஜாம்பவானோடு பணியாற்றி முழுமையான அனுபவம் பெற உதவி இயக்குநராகியுள்ளார்.

 

மார்ச் முதல் பிரகாஷ்ராஜ் வழங்கும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சீசன் 2'

Vijay Tv Air 2nd Season Tamil Kbc With New Host

பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 நிகழ்ச்சி வரும் மார்ச் 11ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்பது எல்லோருக்கும் கனவுதான். அந்த கனவை நனவாக்கவே கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை அமிதாப்பச்சனை வைத்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது. ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்ற அந்த நிகழ்ச்சி முடிவடைந்து இப்போது இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனை பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்குகிறார். நீங்களும் வெல்லலாம் சீசன் 2 மார்ச் 11ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிபரப்பாகும்.

அது என்ன 4321?

இந்த நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 4321 என்று விளம்பரம் செய்தது விஜய் டிவி நான்கு ஆப்சன்கள், 3 லைப் லைன், 2 பேர் 1 கோடி என்பதுதான் அது.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களை தேர்ந்தெடுக்க விஜய்டிவியில் கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான பதிலளித்தவர்களை வைத்து கோவை, திருச்சி, சென்னையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு பெறுபவர்கள் பிரகாஷ் ராஜ் உடன் பங்கேற்று அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடைகளைக் கூறி ஒரு கோடி ரூபாய் வெல்வார்கள்.

 

கோச்சடையான் என் வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும் - சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல்கல்லாக அமையும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

படத்தை முழுவதுமாக நேற்று பார்த்த பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினியின் சார்பில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு:

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தான் 'கோச்சடையான்'.

rajini praises soundarya kochadaiyaan making

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார்,தீபிகா படுகோன், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா,ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் 19 ஆம் தேதியன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் துவங்கி 25 நாட்கள் நடைபெற்றது.

பிறகு ஏப்ரல்,மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து அத்துடன் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்தது.ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர், அயன் மேன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்த லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஆங்கில படங்களான "அவதார்", "டின் டின்" ஆகிய படங்களில் கையாண்ட மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலை-வேலு,
நடனம்-சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்,
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா,
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்,
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி,
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்,
பாடல்கள் - கவிஞர் வாலி , கவியரசு வைரமுத்து ,
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - ஆர். மாதேஷ் ,

இசை - இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான்,
கதை திரைக்கதை வசனம் - கேஎஸ் ரவிக்குமார் ,
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்வின் .

கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகள் நடைபெற்று முடிந்தது.

இன்று காலை "கோச்சடையான்" முழுப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கதாசிரியர் கேஎஸ் ரவிக்குமார் இருவரும் பார்த்து விட்டு வியந்த வண்ணம் உள்ளனர்.

நினைத்ததை விட பத்து மடங்கு பிரமாண்டம்

கோச்சடையான் படத்தின் கதாசிரியரான கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் கூறுகையில், "நான் நினைத்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது" என்றார்.

ரஜினி பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு, "என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் , மிக பிரமாதமாக வந்திருக்கிறது," என்று தன் மகளும் கோச்சடையான் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ஆர் அஷ்வினை வெகுவாக பாராட்டினார்.

தமிழ், தெலுங்கு , இந்தி ஆங்கிலம், ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங், ரீரிகார்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் , ஆகிய பணிகளை மார்ச் மாதம் 15ஆம் தேதி துவங்கி ஒரே நேரத்தில் மூன்று பிரிவுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர் .

கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடை பெற்று வருகிறது.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.