முத்தமிடத் தூண்டும் நடிகை யார்?இப்படியும் ஒரு போட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல ‘பான்ட்டஸி’ என்ற ஆண்களுக்கான இதழ் ஒன்று நடிகைகளில், பார்த்ததும் முத்தமிடத் தூண்டும் அழகி யார்? இப்படி ஒரு போட்டியை நடத்தியது. ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இந்த கணக்கெடுப்பில் இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான, அசத்தலான தோற்றம் கொண்டவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதில் பிரபல இந்தி நடிகையான 28 வயது பிரியங்கா சோப்ரா அதிக வாக்குகளுடன் வென்றுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் 2-வது இடத்தையும், கரீனா கபூர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகை பிபாஷா பாசு 4-வது இடத்திலும், கத்ரினா கைப் 5-வது இடத்திலும், சோனம் கபூர் 6-வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7-வது இடத்திலும் உள்ளனர். தீபிகா படுகோனே, ஜெனிலியா டிசோசா முறையே 8வது மற்றும் 9வது இடம் பெற்றுள்ளனர். நம்ம ஊரு அசினுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.


Source: Dinakaran
 

எந்திரன் - பட விமர்சனம்

http://thatstamil.oneindia.in/img/2010/10/enthiran-review_04102010.jpg
டெர்மினேட்டர், அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்க்கும் போதெல்லாம், "தமிழில் இப்படியெல்லாம் படமெடுப்பது சாத்தியம்தானா...அதற்கேற்ற நடிகர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்களா...?" என்ற கேள்வி மனதுக்குள் எழுந்து பாடாய்படுத்தும்.

இதோ... வாய்ப்பும் வசதியும் அமைந்தால் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்புகளை நம்மாலும் தர முடியும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

ரசிகர்கள், சினிமா விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன்.

படத்தில் ரஜினியின் பங்களிப்பைப் பாராட்டுவதா, ஷங்கரின் அசுர உழைப்பைப் புகழ்வதா... ஐஸ்வர்யா ராயின் இதயம் வருடும் அழகை வர்ணிப்பதா..இப்படி, விமர்சனம் எழுதுபவர்களுக்கு சவால்விடும் சமாச்சாரங்கள் ஏராளம்.

இந்தப் படத்தின் மையக் கருவை ரொம்ப சிம்பிளாக ஒரு வரியில் சொல்வதென்னால், வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்த கதை. விஞ்ஞானத்தை எந்த அளவு வரை பயன்படுத்தலாம்... எந்த அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை இத்தனை அழுத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

டாக்டர் வசீகரன் 10 வருடம் முயன்று ஒரு மனித ரோபோவை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். சில காலம் கழித்து உணர்வையும் கொடுக்கிறார். மனிதனாகவே மாறிய ரோபோ அடுத்து மனித இனத்தின் ஒட்டுமொத்த தீய குணங்களையும் சுவீகாரம் எடுத்துக் கொள்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரிந்த முடிவுதான் என்றாலும், யாரும் அத்தனை சுலபத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத க்ளைமாக்ஸ்.


ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர்!.

ரஜினியா இது... வழக்கமான பஞ்ச் டயலாக், ஸ்டைல் மானரிஸங்கள், அதிரடி அறிமுகக் காட்சி, நூறுபேரை பறந்து பறந்து புரட்டியெடுக்கும் மிகைப்படுத்தல் எதுவுமே இல்லை. ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து மிரட்டுகிறார்.

ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் மனநிலையில் உள்ள ரோபோ எப்படியிருக்கும்... வில்லத்தனத்தின் மொத்த உருவம் எப்படி இருக்கும்... அத்தனைக்கும் ஒரே விடை ரஜினி எந்திரனில் செய்துள்ள வேடங்களே.

கிளிமாஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் ரஜினியை என்றும் மார்க்கண்டேயனாக மனதில் நிறுத்துகிறது.

ஐஸ்வர்யா ராய்... அழகின் மொத்த உருவமாய் வந்து மனதை அள்ளிக் கொண்டு விட்டார். இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார்.

விஞ்ஞானி ரஜினிக்கும் அவருக்கும் நடக்கும் காதல் ஊடலும் அதை ஐஸ் தீர்க்கிற விதமும் காதலர்களை சூடேற்றும் சமாச்சாரங்கள்.

வில்லனாக வரும் டேனி டெங்ஸோஹ்பாவுக்கு பெரிதாக வேலையில்லை. காமெடிக்காக சேர்க்கப்பட்ட சந்தானத்தையும் கருணாஸையும் சிட்டி பாத்திரமே ஓரங்கட்டி விடுகிறது.

சிட்டி ரஜினி செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குதூகலப்படுத்தக்கூடியது.

இந்தப் படத்தில் மிக முக்கிய அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகள் மற்றும் லெகஸி எஃபக்ட்ஸின் கிராபிக்ஸ் பிரமாண்டம்.

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் சாபு சிரிலின் கலையும் ஆண்டனியின் எடிட்டிங்கும், பீட்டர்ஹெய்னின் ஸ்டன்ட்டும் அருமை அருமை. அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை...ஆனால் மகா அர்த்தமுள்ளவை!

ஏ.ஆர். ரஹ்மானின் இசை இன்னொரு ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக பின்னணி் இசையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ரஹ்மான், இந்தப் படத்தில் காட்டியிருப்பது விஸ்வரூம்.
 

எந்திரன் பற்றி அவதூறு... நாளிதழ்களுக்கு சன் நோட்டீஸ்!

http://thatstamil.oneindia.in/img/2010/10/08-endhiran8-200.jpg 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, பிரபலமான தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம்.

இந்த நாளிதழ்கள் படம் பற்றிய கருத்தைச் சொல்லாமல், படத்தை தனிப்பட முறையில் தாக்கி வருவதாகவும், மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படி தூண்டும் விதத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சென்னை நகரில் இன்று வரை 42 அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன். ஆனால் அந்த ஆங்கில நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது. இது பொறாமையால் வெளியிடப்பட்ட செய்தியே.

குறிப்பிட்ட அந்த தமிழ் நாளிதழ், படத்துக்கான மார்க்கெட்டிங் உள்ளிட்ட பலவற்றை குறை சொல்லியிருந்தது. உண்மையில் அனைத்தையும் சட்டப்படியும் திரையுலக விதிகளுக்கு உள்ளிட்டும்தான் நாங்கள் செய்திருக்கிறோம், என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரு நாளிதழ்களும் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
 

இந்திக்கு போகிறார் அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'நாடோடிகள்Õ படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார் அனன்யா. அதிக சம்பளம் கேட்கிறார். கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார் என்று பல புகார்கள் அவர் மீது கூறப்பட்டது. அதையெல்லாம் மறுத்து வந்த அனன்யா, நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொல்லி வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியம் சிவா இயக்கும் 'சீடன்Õ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது அவரைத் தேடி
வந்திருக்கிறது இந்தி பட வாய்ப்பு.ராம் கோபால் வர்மாவின் உதவியாளர், அஜீத். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் படம் இயக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிப்பது பற்றி பேச்சு நடத்தி வருகிறார். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார்.
மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அசின், த்ரிஷா, பிரியாமணி, பத்மப்ரியாவை தொடர்ந்து பாலிவுட்டில் காலடி பதிக்கிறார் அனன்யா.


Source: Dinakaran
 

பந்தா பண்ணும் நடிகைகள் இயக்குனர் தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீ நகர் அகம் புறம்Õ பட இயக்குனர் திருமலை கூறியதாவது:பெரிய பட்ஜெட் படம் இயக்க சினிமாவுக்கு வந்தேன். முதல் படம் அப்படி அமையவில்லை. அடுத்த படம் டைரக்ஷனுடன் தயாரிப்பு என பொறுப்பு கூடிவிட்டது. மூன்றாவது படத்துக்கான கதை ரெடி செய்தபோது திருப்தியாக அமையவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர்கள், Ôரிஸ்க் வேண்டாம். ஹிட் படத்தை ரீமேக் செய்யலாம்Õ என்றார்கள். தெலுங்கில் ஹிட்டான 'பிளேடு பாபுஜிÕ படத்தை தமிழில் 'காசேதான் கடவுளடாÕ பெயரில் இயக்குகிறேன். இதில் பாண்டியராஜன், கருணாஸ், நளினி, பாண்டு, மனோபாலா, சத்யன் என தெரிந்த முகங்களாகவே 27 நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய வேண்டி இருந்தது.'அகம் புறம்Õ வில்லன் சரண் இதில் ஹீரோ. கதாநாயகி தேர்வில் குழப்பம் ஏற்பட்டது.
கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலே நடிகைகள் பந்தாவாக நடந்து கொள்கிறார்கள். சில பிரபல நடிகைகளை கேட்டேன். கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே 'மச்சக்காரன்Õ படத்தில் நடித்த காம்னா தெலுங்கில் நடித்து வருகிறார். அவர் மும்பையில் இருந்தார். போனில் பேசியபோது, நேரில் வரச் சொன்னார். வீட்டுக்கு சென்றதும் வாசலில் நின்று வரவேற்றார். கதை கேட்டவுடன் நடிக்க
சம்மதித்தார். சம்பளத்தை பற்றி பேசவே இல்லை. நேரடியாக ஷூட்டிங் வந்துவிட்டார். இதை மற்ற நடிகைகள் கற்க வேண்டும். இவ்வாறு திருமலை கூறினார்.


Source: Dinakaran
 

கௌதம் மேனன் படத்தில் அதர்வா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மறைந்த முரளியின் மகன் அத்வா பாணா காத்தாடி பிறகு கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அவரது தந்தை மறைவுக்கு பிறகு ஒப்பந்தமான முதல் படம். படத்தை கவுதம் மேனன் தயாரிக்கிறார். யார் இயக்கம் என்பது குறித்து எந்த ஒரு தவகலும் வெளி வரவில்லை. தற்போது தன் தயாரிப்பில் இருக்கும் 3 படங்கள் முடிந்த பிறகு இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படும் என கௌதம் மேனன் கூறினார்.


Source: Dinakaran
 

படம் தயாரிக்கும் அஜீத்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தல பற்றி லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா.. நம்ம தல படம் தயாரிக்க போகிறார். நிக் ஆர்ட்ஸ் அ‌‌ஜீத் நடித்த பல படங்களை தயா‌ரித்துள்ளது. இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அ‌‌ஜீத் ஏறக்குறைய ஒரு தயா‌ரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. ஆனால் நிக் ஆர்ட்ஸிலிருந்து பிரிந்த அஜீத் இப்ப குட்வில் எ‌ண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் தயா‌ரிப்பு நிறுவனம் வைத்து படங்களை தயாரிக்க போகிறார். இந்த நிறுவனத்தின் முதல் ஹீரோ நம்ம தல இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தல படம் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் படங்களையும் அஜீத் தயாரிப்பார் என தெரிகிறது.


Source: Dinakaran
 

டுவிட்டர் மோகம் காஜல் சாடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் என இணையதளம் மூலம் நண்பர்கள், ரசிகர்களுடன் பேசிக்கொள்வது அதிகரித்து வருகிறது. தமிழ் நடிகைகள் பலர் டுவிட்டரில் இணைந்துள்ளனர். இதிலிருந்து மாறுபடுகிறார் காஜல் அகர்வால். 'டுவிட்டர், பேஸ்புக்கில் இணைவதில் தனக்கு உடன்பாடில்லை' என்கிறார்.
இது பற்றி காஜல் அகர்வால் கூறியது: என்னைப் பொருத்தவரை கம்ப்யூட்டரை எனது அத்தியாவச¤ய தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன். உதாரணத்துக்கு மெயில் பார்ப்பது, ஏதேனும் தகவலை பெறுவது போன்றவற்றுக்காக இணையதளத்தை பயன்படுத்துகிறேன். டுவிட்டரில் சேர்ந்து எனது தினசரி நடவடிக்கைகளை எழுதுவது, கருத்துகளை சொல்வது எனக்கு பிடிக்காத விஷயம். எனது சொந்த விஷயங்களை நான் ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? டுவிட்டரில் தங்கள் கருத்துகள், அன்றாட பணிகள் தொடர்பாக சிலர் எழுதுகிறார்கள். அவர்களுக்கு நான் எதிரி கிடையாது. அதே நேரம், எனக்குப் பிடிக்காத ஒன்றை, பிறர் செய்கிறார்கள் என்பதால் நானும் செய்ய மாட்டேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


Source: Dinakaran
 

இனி ஆர்யா டைம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு ‘நான் கடவுள்’ படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். நான் கடவுள் படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசத்திய ஆர்யா, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடியுலும் அசத்தினார். பாலா, லிங்குசாமி, அடுத்து மிஷ்கின்… இன்றைய தேதியில் கே‌ரியர் கிராஃப் பிரைட்டாக இருப்பது ஆர்யாவுக்குதான். யுத்தம் செய் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கும் படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் நடிக்க மிஷ்கினின் தேர்வு ஆர்யா. லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிக்கும் ஆர்யாவிடம் ஒன் லைன் ஒன்றை கூறியிருக்கிறார் மிஷ்கின். ஒன் லைன் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளது.


Source: Dinakaran
 

‘ரோபோ’ படத்துக்கு பாலிவுட் புகழாரம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலிவுட் பிரபலங்களுக்காக 'ரோபோ' படத்தின் பிரத்யேக காட்சி நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. படம் பார்த்த இந்தி திரையுலகினர், படத்தின் பிரமாண்டம் குறித்து பாராட்டினர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி, உலகம் முழுவதும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் 'எந்திரன்' படத்தின் இந்தி பதிப்பு 'ரோபோ'. இதன் பிரத்யேக காட்சி, முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்காக நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது.
இதற்காக ரஜினி தனது குடும்பத்துடன் மும்பை வந்தார். பாலிவுட்டின் எவர்கிரீன் ஹீரோ என்றழைக்கப்படும் தேவ் ஆனந்த், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேல், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, சன்னி தியோல், ஆமிர் கான், வினோத் கன்னா, ஓம்புரி, நடிகைகள் நதியா, மாளவிகா, ஊர்மிளா மடோன்கர், சினேகா, ஹேமாமாலினி, இயக்குனர்கள் யாஷ் சோப்ரா, கரண் ஜோஹர் உள்ளிட்டோர் ரோபோ படத்தை கண்டு களித்தனர்.
மேலும் வட இந்தியாவில் படத்தை வெளியிட்ட ஜெமினி சர்க்கியூட் மனோகர் பிரசாத், கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர் நம்பிராஜன் மற்றும் பலரும் படத்தை பார்த்தனர். படத்தின் பிரமாண்டம் குறித்து பாராட்டிய பாலிவுட் பிரபலங்கள், சன் பிக்சர்ஸ்&ரஜினி&ஷங்கர் கூட்டணி இந்திய திரையுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டனர். தேவ் ஆனந்த் கூறுகையில், "மிகவும் அற்புதமான படம். இது போன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை. ரஜினி, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை" என்றார்.
வினோத் கன்னா கூறுகையில்,"இந்திய திரையுலகத்தை ரோபோ படத்தின் மூலம் ஹாலிவுட் தரத்துக்கு தயாரிப்பாளர் கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமான படம்" என்றார். ஹேமமாலினி கூறுகையில்,"ரஜினி, ஷங்கரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை" என்றார். "எதிர்ப்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த படம். ரோபோ படத்தின் தமிழ் வெளியீடான எந்திரனை பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காக நான் விரைவில் எனது குடும்பத்துடன் சென்னை செல்வேன்" என்றார் அபிஷேக் பச்சன்.
ஆமிர் கான் கூறும்போது, "இந்திய சினிமாவில் இப்படியும் படம் பண்ணலாமா என்று என்னை பிரமிக்க வைத்து விட்டது ரோபோ" என்றார். இயக்குனர் ஷங்கர் கூறுகையில்,"முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சினிமா துறையில் யாரும் இதுவரை எட்டியிராத மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன் ஒரு பகுதிதான் இந்தப்படம்" என்றார். ரஜினிகாந்த் கூறும்போது, "படம் வெற்றி என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும் படத்திற்கு இந்தளவுக்கு கிடைத்த பிரமாண்டமான வெற்றி என்னை பிரமிக்க வைத்து விட்டது. எனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானது இது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.


Source: Dinakaran
 

பட நிறுவன வேலையை தொடங்கினார் அஜீத்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முன்னணி நடிகர்கள் பலர் வரிசையாக பட தயாரிப்பில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் அஜீத்தும் சேர்ந்துவிட்டார். Ôகுட்வில் என்டர்டெய்ன்மென்ட்Õ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பெயரை பதிவு செய்திருந்தார். தயாரிப்பாளருக்கான பொறுப்பை அஜீத் மனைவி ஷாலினி ஏற்றிருக்கிறார். கதைகளை கேட்கும் பணியையும் அவர் செய்ய உள்ளார்.
பட நிறுவனம் மூலம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தான் மட்டுமல்லாமல் பிற ஹீரோக்களையும் வைத்து
படங்களை தயாரிக்க உள்ளார் அஜீத். பிரபல இயக்குனர்களுக்கு மட்டுமில்லாமல், புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு தருவது பற்றி ஆலோசித்து வருகிறார்..


Source: Dinakaran
 

இனி படம் தயாரிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யார் சொன்னது? அப்படி எதுவுமே இல்லை. இப்போது சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அந்தப் பக்கம் கொஞ்சம் கவனம் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் கதை கேட்பதும் கதை விவாதமும் எனது கம்பெனியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விரைவில் புதிய படம் பற்றிச்  சொல்கிறேன் என்கிறார் எஸ்.பி.பி.சரண்.


Source: Dinakaran
 

எந்திரன் திருட்டு சிடி விற்பனையா?ரஜினி ரசிகர்கள் கண்காணிப்பு :மேலூர் விசிடி வியாபாரிக்கு அடி,உதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எந்திரன் திரைப்படத்தின் திருட்டு விசிடி விற்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத பெரும் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும் என்பதால் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் மதுரை அடுத்த மேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ராணி வீடியோ சென்டரில் எந்திரன் படத்தின் திருட்டு விசிடி விற்கப்படுவதாக ரஜினி ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த கடை முன்பு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுப்புராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் துரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர் சங்க செயலாளர் சாகுல் ஹமீது உட்பட 100க்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
போலீசுக்கு தகவல் சொல்லியும் நீண்ட நேரமாக வராததால் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களே கடையில் விசாரித்து திருட்டு விசிடி விற்பனை நடப்பதை உறுதிப் படுத்திக் கொண்டனர். பின்னர் அங்கு பதுக்கி வைத்திருந்த திருட்டு விசிடிக்களை கைப்பற்றினர். திருட்டு விசிடிகளையும் அதை விற்பனை செய்த நிஜாமுதீனையும் போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்குள் ஆவேசமான ரசிகர்கள் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்கவிடாமல் தடுக்க சதி செய்வதாக கோஷமிட்டபடி நிஜாமுதீனை பிடித்து, அடித்து உதைத்தனர். பின் அவரை போலீசில் ஒப்படைத்தனர். கையும் களவுமாக குற்றவாளியை பொதுமக்களே பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்ததால் போலீசார் அவரை கைது செய்து விசிடிகளை பறிமுதல் செய்தனர்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறும்போது, 'எந்திரன் சிடி விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். திருட்டு விசிடியை ஒழித்து திரையுலகை காப்பாற்ற முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு கலங்கம் உண்டாக்கும் விதமாக திருட்டு விசிட் கும்பல்கள் செயல்பட காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். எந்திரன் பட விசிடி விற்பனை செய்தவரை ரசிகர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விசிடி விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களை சந்தேகத்தின்பேரில் போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'எந்திரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை பொறுக்க முடியாத சில விஷமிகள் திருட்டு விசிடி தயாரித்து விற்பனை செய்யக்கூடும் என்று நினைத்தோம். அது உண்மையாகி இருக்கிறது. ஆனால் ரஜினி படை மிகவும் பெரியது. எங்கே யார் திருட்டு விசிடி விற்றாலும் அதை கண்டுபிடிக்க எங்களால் முடியும். அத்தகைய ஆசாமிகளை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்போம்' என்றார்.


Source: Dinakaran
 

தனுஷுடன் நடிக்க‌த் தயார் :சிம்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் 'வானம்' 'வேதம்' தெலுங்கு படத்தின் ரீமேக். இதில் பரத்துடன் சேர்ந்து நடிக்கும் சிம்பு. கதை சரியாக அமைந்தால் தனுஷுடன் சேர்ந்து நடிக்க தயார் என கூறியுள்ளார். ஒரு படத்திற்க கதை தான் ஹீரோ தவிர, அதில் யார் நடிக்கிறார்கள் என்பதுது முக்கியமில்லை என்ற சிம்பு, கதை சரியாக அமைந்தால் தனுஷ் மற்றும் வேறு எந்த நடிகருடன் நடிக்க தயார் என கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

பால் தாக்கரே-வை சந்தித்த ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'எந்திரன்' படத்தின் இந்தி பதிப்பு 'ரோபோ'. இதன் பிரத்யேக காட்சி, முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்காக நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது. இதற்காக ரஜினி தனது குடும்பத்துடன் மும்பை வந்தார். இந்த நிலையில் இன்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே வீட்டுக்குச் சென்றார் ரஜினிகாந்த். அவரிடம் ஆசியும் பெற்றார். எந்திரன் படத்தை பார்க்க வருமாறு ரஜினி பால் தாக்கரே-விடம் கேட்டுக் கொண்டார்.


Source: Dinakaran
 

தமிழில் வருகிறது ஸ்…ஸ்…ஸ்


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹாலிவுட் இயக்குனர் ஜெனிபர் சேம்பர் லிஞ்ச் இயக்கும் படம் ‘ஹிஸ்’. மல்லிகா ஷெராவத் நடிக்கும் இந்த படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகிறது. இதை, தமிழில் ‘ஸ்…ஸ்…ஸ்’ என்ற பெயரில் ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் இர்பான் கான், நடிகை திவ்யா தத்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். மனித உருவம் எடுக்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் அதன் சத்தத்தையே தலைப்பாக்கி இருக்கிறார்கள். மது அம்பாட் ஒளிப்பதிவு, இசை அலெக்ஸாண்டர். வரும் 22&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
 

நயன்தாரா உருவப்படத்திற்கு பெண்கள் அமைப்பினர் தீ வைப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளாக செய்திகள் தெரிவிக்கின்றனர். ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம், மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு போன்றவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று காலை திருமங்கலம் சிக்னல் அருகில் கூடினார்கள். கையில் நயன்தாரா உருவப்படங்கள் வைத்திருந்தனர் அவர்கள், திடீரென்று நயன்தாராவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
முன்னதாக, விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறியது. தொடர்ந்து நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரமலத், பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

கவர்ச்சிக்கு நடிகை மறுப்பு டைரக்டர் ஆவேசம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘கந்தா’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க பட ஹீரோயின் மித்ரா மறுத்தாராம். இது பற்றி பட டைரக்டர் பாபு கே.விசுவநாத் கூறியதாவது: 'கந்தாÕ படத்தில் கரண் ஹீரோ. மித்ரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். தஞ்சாவூரில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. 'உயர்ந்தது காதல்Õ எனத் தொடங்கும் பாடல் காட்சியை படமாக்க மலேசியா சென்றோம். அப்போது மித்ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஒன்றிரண்டு நாளில் சரியாகி விடுவார் என்று பொறுத்தோம். ஆனால் யாரையும் மதிக்காத போக்கு அதிகரித்தது. ஷூட்டிங்கில் பாடல் காட்சி பற்றி விளக்கம் செல்லும்போது, அதை கவனிக்காதது போல் இருப்பார். அந்த பாடலில் கவர்ச்சி அவசியம். அதற்காக அவருக்கு கவர்ச்சி உடையை தந்தோம். அதற்கு மேல் இன்னொரு ஆடையை போர்த்திக்கொண்டு நடிக்க வந்தார். 'இப்படி நடிப்பது இந்த பாடலுக்கு நன்றாக இருக்காது. கவர்ச்சி உடை தெரியும்படி நடியுங்கள்Õ என்றேன். ஆனால் அவர் மறுத்தார். இதனால் கோபம் வந்தது. 'ஆரம்பத்தில் மரியாதையுடன் நடந்தீர்கள். இப்போது ஹீரோயினை மாற்ற முடியாத அளவுக்கு காட்சிகளை படமாக்கிவிட்டேன். அந்த தைரியத்தில் மரியாதை குறைவாக நடப்பதும் சொல்கிறபடி நடிக்காததும் சரியல்லÕ என சத்தம் போட்டேன். இப்படி சொன்னதால் அழுது கொண்டிருந்தார். பின் அவராகவே சமாதானமாகி 20 நிமிடத்துக்கு பின் நடிக்க வந்தார். இவ்வாறு பாபு விசுவநாத் கூறினார்.


Source: Dinakaran
 

பல ஹீரோ கதைக்கு எல்லா நடிகர்களும் தயார் ஆகணும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் பல ஹீரோக்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார் பரத். இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள் வருகின்றன. பெரிய நடிகர், அறிமுக நடிகர் என யார் நடித்தாலும் 2 ஹீரோ கதைகள் ஜெயித்திருக்கிறது. ஆரம்பத்தில் 'பாய்ஸ்Õ படத்தில் நான்கு பேருடன் சேர்ந்து நடித்தேன். பின் 'பட்டியல்Õ, Ôவெயில்Õ உள்ளிட்ட சில படங்களிலும் இரட்டை ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன். 'டபுள் ஹீரோ கதையில் நடிக்காதீர்கள்?Õ என சிலர் அறிவுரை கூறியதால், அதன்பின் அப்படிப்பட்ட கதைகளை தவிர்த்தேன். ஆனால் கதையை ரசிக்கும் போக்கு இப்போது மாறி இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் மீண்டும் இரு ஹீரோ கதைகளில் நடிக்கிறேன். பல ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் பாலிவுட்டில் நிறைய வருகிறது. தமிழில் அப்படி இல்லை. பல ஹீரோக்கள் கதைக்கு எல்லா நடிகர்களுமே தயாராக வேண்டும் என்பது என் கருத்து.


Source: Dinakaran