3/18/2011 10:55:17 AM
ஜெனிலியா கூறியது: 'பாலிவுட்டை உதறிவிட்டு கோலிவுட்டுக்கு போனவர், இப்போது மீண்டும் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்Õ என்று மும்பையில் சிலர் என் மீது புகார் கூறுகின்றனர். இது யாரோ கட்டிவிடும் கதை. நான் பாலிவுட்டுக்கு வந்தது பிடிக்காமல் என்னை துரத்தப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில்தான் அறிமுகம் ஆனேன். அதன்பிறகு கோலிவுட், டோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஷங்கரின் 'பாய்ஸ்Õ படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் 'துஜே மேரி கஸம்Õ என்ற இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமான நடிகை நான் ஒருத்திதான். இப்போதுதான் நான் இந்தியில் கவனம் செலுத்துவதாகவும் பாலிவுட்டில் லாபம் அடைய வந்திருப்பதாகவும் கூறுவது தவறு. ஷூட்டிங்கிற்காக மும்பை, சென்னை, ஐதராபாத் என்று 3 நகரங்களுக்கும் சுற்றி சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வெற்றி, இந்த பேச்சுக்களையெல்லாம் மாற்றிவிடும். அதற்காக காத்திருக்கிறேன்.