'முதல்ல இவங்களுக்கு கல்யாணமாகட்டும், நானும் பண்ணிக்கிறேன்!' - காஜல் அகர்வாலின் கல்யாண ஆசை

திரும்பத் திரும்ப பேசுற நீ... என்பது போல, திரும்பத் திரும்ப மீடியாவால் கல்யாணம் செய்து வைக்கப்படும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

தமிழில் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வரும் அவரது திருமணம் குறித்து நான்காவது முறையாக செய்தி வெளியாகியுள்ளது.

மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபரைப் பிடித்துவிட்டார் என்றும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.

'முதல்ல இவங்களுக்கு கல்யாணமாகட்டும், நானும் பண்ணிக்கிறேன்!' - காஜல் அகர்வாலின் கல்யாண ஆசை

இதுகுறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் காஜல். அதில், "நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா போன்றோர் எனக்கு சீனியர் நடிகைகள். அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. சீனியர் நடிகைகளுக்கு திருமணம் முடிந்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் தற்போது தனுஷுடன் ‘மாரி', விஷாலுடன் ‘பாயும் புலி', மற்றும் ‘மர்ம மனிதன்' ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளன. இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். சமீபத்தில்தான் அவர் தங்கை நிஷாவுக்கு திருமணம் நடந்தது.

 

ரஜினி - ஷங்கர் இணையும் படம்... பட்ஜெட் ரூ 250 கோடி!

ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. ரூ 250 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம் கத்தி புகழ் லைக்கா.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

ரஜினி - ஷங்கர் இணையும் படம்... பட்ஜெட் ரூ 250 கோடி!

காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள். விக்ரம் மற்றும் விஜய்யை வைத்து ஒரு திரைக்கதையை தயார் செய்திருந்தாராம் ஷங்கர்.

இந்தக் கதையை இப்போது ரஜினி - விக்ரம் அல்லது கமலை வைத்துப் பண்ணலாம் என ஒரு ஐடியா இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

'ரஜினி படத்தில் கமல் வில்லனா? வேணவே வேணாம்!!' - ரசிகர்கள் கருத்து

ரஜினியும் கமலும் மீண்டும் இணைவார்களா? அப்படி இணைந்தால் திரையுலகுக்கே அது திருவிழா மாதிரி இருக்குமே... - இப்படித்தான் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இரு சாதனை நடிகர்களின் ரசிகர்களில் ஒரு பிரிவினரோ, கமல் நடிப்பதாக வந்த செய்தியைக் கூட விரும்பவில்லை.

'ரஜினி படத்தில் கமல் வில்லனா? வேணவே வேணாம்!!' - ரசிகர்கள் கருத்து

கமலும் ரஜினியும் இணைகிறார்கள், அதுவும் கமல் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற வதந்தி (ஆம்.. வெறும் யூகம்தான்.. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை), ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் 'தலைவா... இது வேணவே வேணாம்...' என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கமல் ரசிகர்களில் சிலரும் இந்த பரீட்சார்த்தம் வேண்டாம் என்று கூறியுள்ளனர் (அப்புறம் எப்போதான் இவர்களை சேர்த்து திரையில் பார்ப்பது!)

உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு இணையை, இவர்கள் வேண்டாம் எனக் கூற என்னதான் காரணம்? ஒன்றல்ல.. இரு காரணங்களைச் சொல்கிறார்கள்.

பாயின்ட் நம்பர் ஒன்: இப்போதுதான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கிடையில் மோதல் இல்லாமல் உள்ளது. இந்தப் படம் வந்தால், நிச்சயம் விரும்பத்தகாத மோதல் வெடிக்கும். எனவே இது வேண்டாத வேலை. அதுவும் வில்லன் கமல் என்றால் நிச்சயம் மோதல் எழும் என்பது கமல் ரசிகர்கள் தரப்பு வாதம்.

பாயின்ட் நம்பர் 2: ரஜினியின் பெருந்தன்மை சினிமா உலகம் அறிந்தது. தன்னுடன் நடிக்கும் வில்லன்களுக்கு தன்னைவிட அதிக முக்கியத்துவம் தருவார். அதுவும் கமல் என்றால் கேட்கவே வேண்டாம். எனவே ரஜினியின் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைவதை விரும்பவில்லை. இது ரஜினி ரசிகர்கள்!

நீங்க என்ன சொல்றீங்க?

 

காஞ்சனா வசூல் அப்டேட்: நான்காம் நாளில் ரூ 18.5 கோடி

ராகவா லாரன்சின் காஞ்சனா வெளியான நான்காம் நாள் வரை ரூ 18.5 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாரன்ஸ் நடித்து இயக்கிய பேய் படங்கள் வரிசையில் ‘காஞ்சனா-2' கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வந்த ‘முனி', ‘காஞ்சனா' படங்கள் வசூல் சாதனை படைத்தன. அதுபோல் ‘காஞ்சனா-2' படமும் வசூல் குவிக்கிறது.

காஞ்சனா வசூல் அப்டேட்: நான்காம் நாளில் ரூ 18.5 கோடி

படம் வந்த இரண்டு நாட்களில் ரூ.10 கோடியே 87 லட்சம் வசூலித்தது. தற்போது வசூல் ரூ.18.5 கோடியைத் தாண்டியது. வெளிநாடுகளில், குறிப்பாக மலேசியாவில் காஞ்சனா 2- படத்தின் வசூல் அமோகமாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

அடுத்து இதன் தெலுங்குப் பதிப்பை ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 24-ந் தேதி ஆந்திரா முழுவதும் தெலுங்கு மொழியிலேயே படம் வெளியாகிறது. பெல்லம்கொண்டா சுரேஷ் இந்தப் படத்தை அங்கு வெளியிடுகிறார்.

 

லிப் லாக் சீனுக்கு பத்து டேக்... இது சொதப்பலா.. பக்கா ப்ளானா?

பிவிபி நிறுவனம் தயாரிப்பில் தயாராகி வரும் படம் கிரகணம் படத்தில் இடம் பெறும் ஒரு லிப் லாக் சீனுக்கு பத்து டேக் வாங்கியுள்ளனர் நாயகன் கிருஷ்ணாவும் நாயகி நந்தினி ராயும்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் இப்படத்தில் கருணாஸ், கருணாகரன், ‘கயல்' சந்திரன் ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவை கவனிக்க, படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது - கெட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் திரைப்படம்தான் இந்த ‘கிரகணம்'.

லிப் லாக் சீனுக்கு பத்து டேக்... இது சொதப்பலா.. பக்கா ப்ளானா?

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி நந்தினி ராய்க்கு தமிழில் இது முதல் படம். தமிழ் சினிமாவில் நிரந்தரமாக காலூன்ற வேண்டும் என்பதற்காக நந்தினி ராய் படத்தில் கவர்ச்சியில் ஏக தாராளம் காட்டி திக்குமுக்காட வைக்கிறாராம்.

படத்தில் கிருஷ்ணாவுடன் லிப் டு லிப் கிஸ்ஸடிக்க வேண்டும் என்றதும் தயங்காமல் ஒப்புக் கொண்டாராம் நந்தினி.

ஆனால் காட்சியை எடுக்கும்போது நந்தினியும் கிருஷ்ணாவும் ஏகத்துக்கும் சொதப்பியிருக்கிறார்கள்.

இதனால் சம்மந்தப்பட்ட காட்சி 10 டேக் வரை சென்று பின் ஒரு வழியாக ஓகேவாகி இருக்கிறது.

 

"பூ" மாதிரியே தமிழ்நாட்டு மருமகளாகிறாரா "நம்பர்"?

சென்னை: ‘வயசு ஏற ஏற உன் அழகும், ஸ்டைலும் கூடிட்டே போகுது'னு நீலாம்பரி சொன்ன டயலாக் சூப்பருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, பெரிய நம்பர் நடிகைக்கு கச்சிதமாகவேப் பொருந்துகிறது.

வயது குறைந்த புதிய நடிகைகள் பலர் அறிமுகம் ஆனபோதும், தொடர்ந்து பல நடிகர்களின் முதல் சாய்ஸ் பெரிய நம்பர் நடிகை தான். காரணம் அவரது அழகு மட்டுமல்ல. உடன் நடிக்கும் நடிகர்களுடன் திரையில் அழகான கெமிஸ்ட்ரி வர வைத்து விடுவது தான்.

அதனால் தான் தொடர்ந்து தமிழில் நிலையான இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் நடிகை. இந்நிலையில், சமீப காலமாக நடிகை தனது பழைய தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார்.

காரணம் என்னவென்று விசாரித்தால், அம்மணி தமிழ்நாட்டு மருமகளாகப் போகிறாராம். ஏற்கனவே, டான்ஸ், விரல் என இரண்டு நடிகர்களுடன் காதல் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பூ நடிகையைப் போல, இவரும் தமிழக மருமகள் ஆகும் திட்டத்தில் நடிகை இருக்கிறார்.

எனவே, பழைய காதலைத் தூசு தட்டப் போகிறாரா இல்லை புதிய காதலா என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. காலம் தான் பதில் சொல்லணும்...அதுவரைக்கும் பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு.. உன் நெஞ்சுக்குள்ள யார் என்று சொல்வேன் என்று நாம் பாட்டுப் பாடிக் கொண்டிருப்போம்!

 

ரஜினியைச் சந்தித்து படம் எடுக்கணும்... அதுக்கு இந்த ரசிகர் என்ன பண்ணார் தெரியுமா?

ரஜினிகாந்தைச் சந்திக்க, அவருடன் ஒரே ஒரு படமெடுத்துக் கொள்ள ஜப்பானிலிருந்தும், லண்டனிலிருந்தும் சென்னைக்கு வரும் ரசிகர்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இங்கு சென்னையில் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர் ஒரு என்ன செய்தார் தெரியுமா... ரஜினி ஹாங்காங் செல்வதைக் கேள்விப்பட்டு, அதே விமானத்தில் குடும்பத்துக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து கூடவே போய் படமெடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

அந்த ரசிகர் பெயர் சீனிவாசன் ஜெயசீலன். கத்தே பசிபிக் விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

ரஜினியைச் சந்தித்து படம் எடுக்கணும்... அதுக்கு இந்த ரசிகர் என்ன பண்ணார் தெரியுமா?

லிங்கா படத்துக்காக ரஜினி குழுவினரோடு ஹாங்காங் செல்லும் தகவல் கிடைத்ததும், முதலில் பயணிகள் பட்டியலைச் சோதித்து, அதில் ரஜினி பெயர் இருப்பதை உறுதி செய்ததுமே, தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஹாங்காங் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

குறித்த தேதியில் ரஜினி சென்னை விமான நிலையத்துக்கு வர, அங்கிருந்து ரஜினியுடன் பயணத்திருக்கிறார். விமான நிலையத்தில் படக் குழுவினருக்கு சீனிவாசன் ஜெயசீலனும் உதவி செய்திருக்கிறார்.

அதற்காக நன்றி சொல்ல வந்த உதவி இயக்குநர் கார்த்திக்கிடம், ரஜினியைச் சந்திக்க உதவுமாறு கூற, அவரும் அறிமுகப்படுத்தினாராம்.

அந்த அனுபவத்தை இப்படி விவரிக்கிறார் சீனிவாசன்: "என்னைப் பார்த்ததும் கம்பீரமாக சிரித்தவர், " வாங்க வாங்க எப்படி இருக்கீங்க" என்றார். நான் என் குடும்பத்தினரும் அவரைப் பார்க்க விரும்புவதைக் கூறினேன். உடனே அவர்களை அழைத்துவரச் சொன்னார்.

என் மகனைப் பார்த்ததும் அவர் எழுந்து அவனை அமரவைத்தார். அந்தக் கணத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து என் குழந்தைகளிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு விமானத்தில் ஏறினோம்.

ஹாங்காங் சென்று இறங்கியவுடன், படப்பிடிப்பு குழுவினர் மக்காவ் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன் என்னைப் பார்த்த ரஜினிகாந்த், ‘நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு ‘உங்களோடு புகைப்படம் எடுக்கத்தான் நாங்கள் விமானத்தில் வந்தோம். உடனே சென்னை கிளம்புகிறோம்' என்றேன். அவர் நெகிழ்ந்து போய் எங்களிடம் இருந்து விடைபெற்றார். நாங்களும் ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் சென்னை திரும்பினோம்," என்றார்.

படம்: தி இந்து

 

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் லட்சுமி மேனன்!

முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை லட்சுமி மேனன். நாய்கள் ஜாக்கிரதைக்குப் பிறகு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில்தான் இருவரும் ஜோடி சேர்கின்றனர்.

இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் லட்சுமி மேனன்!

'ஜெயம்' ரவி ஹீரோவாக நடிக்கும் 19வது படம் இது. படத்தில் லட்சுமி மேனன் நடிப்பதை தன் ட்விட்டர் பக்கத்தில் சக்தி சௌந்தர்ராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'ஜெயம்' ரவியும், லட்சுமி மேனனும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

'ஜெயம்' ரவி நடிப்பில் 'ரோமியோ ஜூலியட்', 'பூலோகம்','அப்பாடக்கர்','தனி ஒருவன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

 

9வது விஜய் அவார்ட்ஸு... பிரபு தேவா டான்ஸு... ரெடியாகட்டும் உங்க "ஐஸு"!

விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடனமாடுவார் என அந்த தொலைக்காட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழ் திரை உலகில் நடன இயக்குநராக அறிமுகமாகி ஹீரோவாகி பின்னர் பாலிவுட், தமிழ் திரை உலகில் வெற்றிகரமான இயக்குநராகவும்

இருக்கிறார் பிரபுதேவா..

டீன் ஏஜ் முதல் இப்போது வரைக்கும் தொடர்ந்து காதல் கிசுக்களில் சிக்கி ஊடகங்களில் அடிபட்டு வரும் பிரபுதேவா அவ்வப்போது விழா மேடைகளில் தனது சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி வருகிறார். இம்முறை பிரபுதேவா ஆடப்போவது சென்னையில் அதுவும் விஜய் டிவி விருதுகள் வழங்கும் விழாவில் என்கின்றனர்.

9வது விஜய் அவார்ட்ஸு... பிரபு தேவா டான்ஸு... ரெடியாகட்டும் உங்க

விஜய் அவார்ட்ஸ் 9

2014 ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவை வழக்கம்போல நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது விஜய் டி.வி. ஏப்ரல் 25ந் தேதி நடக்க இருப்பதாக தற்போது தேதியை அறிவித்துள்ளது. என்றாலும் கடந்த மாதமே அதன் பணிகளை துவக்கி விட்டது.

ஜூரிகள் யார்? யார்?

2014 ஆம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ்சுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இயக்குனர் கே.பாக்யராஜ், பால்கி, கே.வி.ஆனந்த், நடிகை நதியா, விமர்சகர் யூகி சேது ஆகியோர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு

இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் தேர்வுக்கு வந்துள்ள படங்களை பார்த்து வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் டப்பிங் கலைஞர்க, ஒலிப்பதிவாளர் உள்ளிட்ட சில பிரிவுகளை விருதுக்கு சேர்த்திருக்கிறார்கள்.

நட்சத்திர பட்டாளங்கள்

பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதும் நட்சத்திரங்கள்

ரஜினி, அஜீத், விஜய், தனுஷ், சூர்யா என பிரபல நட்சத்திரங்கள் பேவரைட் ஹீரோ பட்டியலில் மோதுகின்றனர்.

ஹீரோயின்கள்

ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதிவ்யா என அழகு நட்சத்திரங்களும் ஃபேவரைட் ஹீரோயின்கள் இந்த ஆண்டு மோதுகின்றனர். இவர்களில் யாருக்கு விருது கிடைக்கப்போகிறதோ ஏப்ரல் 25ஆம் தேதி தெரியும்.

பிரம்மாண்ட கலைவிழா

விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் பிரமாண்ட நடன கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிரபுதேவாவின் அட்டகாசமான நடனமும் இடம்பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா உடன் நடனம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே நேரு ஸ்டேடியத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு நடிகர்கள் விழா எடுத்தபோது நயன்தாரா உடன் பிரபுதேவா நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காஞ்சனா 2... மூன்று நாட்களில் ரூ 15 கோடி.. கொண்டாடுகிறது திரையுலகம்!

காஞ்சனா 2 பற்றித்தான் கோலிவுட்டே பேசிக் கொண்டிருக்கிறது. 'ஜாக்பாட் அடிச்சார்யா ராகவா லாரன்ஸ்...', 'காஞ்சனா 2 வெளியிட்ட தியேட்டர்களில் திருவிழா கூட்டமாமே' என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொள்வதைக் கேட்க முடிகிறது.

படம் வெளியான மூன்று நாட்களில் ரூ 15 கோடிக்கு மேல் குவித்திருக்கிறது. இந்தப் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது பெரிய வசூல். இன்னும் சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்தால் எங்கேயோ போகிறது.

காஞ்சனா 2... மூன்று நாட்களில் ரூ 15 கோடி.. கொண்டாடுகிறது திரையுலகம்!

படம் வெளியாகும் முன்பே ரஜினிக்கு மட்டும் போட்டுக் காட்டிவிட்டார் லாரன்ஸ். படம் பார்த்து முடித்த ரஜினி, 'கலக்கிட்டே கண்ணா... பெரிய வெற்றிப் படமா அமையும்' என்று லாரன்ஸைப் பாராட்டியிருந்தார்.

இப்போது படம் வெளியான பிறகு, 'காஞ்சனா படத்தின் வெற்றி திரையுலகில் ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக' தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யும் ராகவா லாரன்ஸை அழைத்து 'மிரட்டிட்டீங்க மொட்ட சிவா' என்று பாராட்டியுள்ளார்.

திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த பலரும் லாரன்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.