ஸ்ருதியை இயக்க ஆசைப்படும் விஷால்!

Vishal Wants Direct Shriti Hassan

ஸ்ருதிக்காகவே ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், அவரை ஹீரோயினாக வைத்து இயக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் விஷால்.

சமர் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்திலிருக்கும் விஷால், தனது அடுத்தடுத்த படங்கள் குறித்துக் கூறுகையில், "நடிப்பில் இப்போது பிஸியாக இருந்தாலும், ஒரு படத்தை நானே இயக்க வேண்டும் ஆசையும் உள்ளது.

கைவசம் கதை ரெடி. இந்தக் கதையில் ஸ்ருதி ஹாஸன் நடித்தால் நன்றாக இருக்கும். அந்தக் கதையை எழுதும்போதே ஸ்ருதியை மனதில் வைத்துதான் எழுதினேன். அது நடக்குமா நடக்காதா என்றெல்லாம் சொல்ல முடியாது.

என்னுடைய அடுத்த படம் மதகஜராஜா. கலகலப்பான ஜாலி படம் இது. விரைவில் வரவிருக்கிறது.

அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, ஜீவா நடிக்கின்றனர்.

எப்போது படம் தொடங்கும் என்று தெரியவில்லை. அதை வெங்கட்பிரபுதான் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.

 

சென்னையிலிருந்த சினிமாவை நான் கிராமத்துக்கு கொண்டு வந்தேன் - பாரதிராஜா

Annakodiyum Kodiveeranum Audio Released

கிராமத்திலிருந்த என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றது சினிமா... அந்த சினிமாவை சென்னையிலிருந்து கிராமத்துக்கு அழைத்து வந்தேன், என்றார் இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா தயாரித்து இயக்கி வரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது.

இசைஞானி இளையராஜா தலைமை ஏற்று இசைக் குறுந்தகட்டை வெளியிட, அதை இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா பெற்றுக் கொண்டனர்.

பாரதிராஜாவுக்கு இது 50வது படம் என்பதால், அவரை வாழ்த்திப் பேச தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திரண்டிருந்தனர்.

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்து, பின்னர் பாரதிராஜாவால் நீக்கப்பட்ட பார்த்திபனும் வந்திருந்து வாழ்த்தினார்.

விழாவில் பாரதிராஜா பேசுகையில், "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. இங்கிருந்து சென்ற இளையராஜா போன்ற பல சினிமா கலைஞர்கள் உலக அளவில் பெருமை பெற்று உள்ளனர்.

எனக்கு இங்குள்ள மக்கள் கலாச்சார பிச்சை அளித்தனர். சினிமா என்னை சென்னைக்கு அழைத்து சென்றது. அந்த சினிமாவை, நான் கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளேன். இதுதான் என் சாதனை.

இங்குள்ள கடலை காட்டில், எனக்கு கதை கூறியவர்களைகூட நான் ஆசிரியராக நினைக்கிறேன். கலைப்பயணத்தை தொடங்கிய மதுரையிலேயே, எனது 50-வது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது பெருமை அளிக்கிறது," என்றார்.

 

‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தெற்காசிய திரைப்பட விருது

Vazhakku Enn 18 9 Wins At South Asian Film Festival

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளது.

இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்' பட நிறுவனத்திற்காக சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த படம் ‘வழக்கு எண் 18/9. 2012 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இந்த திரைப்படம் சிறப்பான வரவேற்பினை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன. இந்த நிலையில் தெற்காசிய அளவில் நடந்து வரும் திரைப் பட விழாவில் மிகச் சிறந்த படமாக ‘வழக்கு எண் 18/9′ படம் தேர்வானது.

விழாவின் கடைசி நாள் அன்று இந்த படம் திரையிடப்பட்டது. அப்போது அந்த அரங்கில் இயக்குனர் தயாரிப்பாளர் லிங்குசாமியும், பட இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இருந்தார்கள். படம் பார்த்தவர்கள் அனைவரும் இயக்குனர் பாலாஜி சக்திவேலை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.

விருது குறித்து கருத்து கூறிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழ் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அதிலும் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. என்னை பாராட்டிய, வாழ்த்திய எனது சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இன்னும் நிறைய தமிழ் படங்கள் சர்வதேச அரங்கில் பேர் பெற வேண்டும் என்பதே என் ஆசை. நான் மட்டுமல்ல தமிழில் பல திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்றார் பாலாஜி சக்திவேல்.

 

'துணை முதல்வர் அன்னபோஸ்ட்'- பாக்யராஜின் புதிய படம்!

Bhagyaraj S New Movie Thunai Muthalvar Unopposed

ஒரு இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்துக்கு 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்று பெரிட்டுள்ளார் இயக்குநர் கே பாக்யராஜ்.

தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா இயக்குநர், திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படுபவர் கே பாக்யராஜ்.

தொடர்ந்து 9 வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர். சமீபத்தில் அவர் இயக்கி வந்த படம் சித்து ப்ளஸ டூ. இந்தப் படம் சரியாகப் போகவில்லை.

இந்த நிலையில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார் பாக்யராஜ்.

இந்தப் படத்துக்கு துணை முதல்வர் அன்னபோஸ்ட் என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படம் அரசியல் தொடர்புடையதா.. முழு நீள காமெடி படமா.. நடிகர் நடிகைகள் யார் என்பது குறித்து அவர் விவரங்களை வெளியிடவில்லை.

நேற்று மதுரையில் நடந்த அன்னக் கொடியும் கொடிவீரனும் விழாவில் பேசிய பாக்யராஜ் கூறுகையில், "எங்க டைரக்டர் பாரதிராஜாவுக்கு கோபம் அதிகம், அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.

சினிமாவை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். என்னை முதல் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. என்னை ஹீரோவாக்கியவரும் அவரே. நான் இயக்குநரானதும் அவரால்தான். அவருக்கு என்றென்று நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போது 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்ற படத்தை இயக்கி வருகிறேன். விவரங்களை விரைவில் சொல்கிறேன்," என்றார்.

 

பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை

58th Idea Filmfare Awards 2012 Ranbir Vidya

மும்பை: மும்பையில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதினை வித்யா பாலனும் பெற்றனர். சிறந்த இந்தி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'பர்பி' 7 விருதுகளை தட்டிச் சென்றது.

இந்திய அளவில் சினிமாத்துறையினருக்கு தரப்படும் மிக முக்கியமான விருது பிலிம்பேர் விருது. 58வது ‘பிலிம் பேர்' விருதுகள் வழங்கும் விழா அந்தேரியில் உள்ள ஒய்.ஆர்.எஃப் ஸ்டுடியோவில் நேற்றிரவு நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனம்.... நடிகர், நடிகையர்களின் ரெட் கார்பெட் அணிவகுப்பு என கலர்ஃபுல்லாக இருந்தது விழா அரங்கம்.

இந்த ஆண்டிற்கான சிறந்த பாலிவுட் திரைப்படமாக ‘பர்பி' தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் சிறந்தநடிகர், சிறந்த இசை உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதினை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதினை இந்த ஆண்டு ‘பர்பி' படத்துக்காக நடிகர் ரன்பிர் கபூர் பெற்றார். இவர் கடந்த ஆண்டு ‘ராக் ஸ்டார்' படத்தில் நடித்ததற்காக சென்ற ஆண்டின் சிறந்த கதாநாயகனுக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.

தொடர்ந்து 2 வது முறையாக

‘கஹானி' படத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இம்முறையும் சிறந்த நடிகை விருதினை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ‘டர்ட்டி பிக்சர்' படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் இவ்விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலியானவுக்கு விருது

தென்னிந்திய நடிகையான இலியானா முதன் முறையாக பர்பி படத்தில் அறிமுகமானர். இந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அவருக்கு சிறந்த புதுமுக நாயகி விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதினை கஹானி பட இயக்குநர் சுஜாய் கோஷ் பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது யாஷ் சோப்ராவிற்கு வழங்கப்பட்டது.

ஆடல் பாடல் நடனம்

விழா மேடையில் ஷாருக்கான், சயீப் அலிகான் ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. அதேபோல் நடிகை கத்ரீனா கைப் நடனம் அமர்களப்படுத்தியது. பிரபல பாப் பாடகி உஷா உதூப்பின் பாடல்களுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் உற்சாகமாய் ஆட்டம் போட்டனர்

 

சினிமா இயக்குநர் அவதாரமெடுத்த நடிகை சோனா!

Sona S Debut Movie Titled As Dev   

சர்ச்சைக்கு பெயர்போன கவர்ச்சி நடிகை சோனா, இயக்குநராகிவிட்டார். தான் இயக்கும் முதல் படத்துக்கு தேவ் என்று தலைப்பு வைத்துள்ளார்.

அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வையாபுரி டாவடிக்கும் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் சோனா. அதன் பிறகு தெலுங்கில் 25 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானார்.

மீண்டும் தமிழுக்கு வந்து, மிருகம், குசேலன், அழகர்மலை படங்கள் மூலம் பிஸியானார்.

ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் என்ற கடையை நடத்திய சோனா, படத் தயாரிப்பிலும் இறங்கினார். யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட விநியோகத்திலும் இறங்கினார்.

இப்போது, இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு திரைப்படக் கல்லூரியில் முறையாக பயிற்சி பெற்றுள்ள சோனா, முதல் படத்துக்கு தேவ் என்று பெயரிட்டுள்ளார்.

நாயகனாக தேவ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

சாதியின் பேரால் காதலை எதிர்ப்பதா?... 'நீயா நானாவில்' குமுறல்!

Vijay Tv Neeya Naana Love Marriage Debate

காதல்.... சரித்திர காலத்திலும், சங்க காலத்திலும் காதல்தான் பாடுபொருள்... சினிமாவிலும், நாடகங்களிலும், கதைகளிலும் காதல் இன்றி இல்லை. காதல் மட்டும் இல்லை என்றால் மனிதர்களின் வாழ்வே சூன்யமாகிவிடும்.

காதலுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. அதுபோலத்தான் சாதி பார்த்து வருவதில்லை காதல். அந்த காதல்தான் இன்றைக்கு சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக மூன்று கிராமங்களை எரித்து சாம்பலாக்கியிருக்கிறது.

இந்த காதல்தான் ஞாயிறு இரவு விஜய் டிவியின் விவாதப் பொருளாகவும் அமைந்திருந்தது. காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் ஒருபுறமும், காதல் திருமணங்களை ஆதரிப்பவர்கள் ஒருபுறமும் பேசி தங்களின் கருத்துக்களை நியாயப்படுத்தினர்.

தன்னுடைய மகள் வேறு சாதிக்காரரை காதலிக்கிறார் என்பதற்காக வெறுக்காமல் அவர்களின் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து வைத்ததாக கூறினார் ஒருதாய்.

அதேபோல் காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒதுக்கப்பட்டு வாழ்வதைப் போல தங்களின் பிள்ளைகளும் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே காதலை எதிர்ப்பதாக கூறினார் மற்றொரு பெண்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நான்கு சிறப்பு விருந்தினர்களும் காதல் திருமணம் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். பத்திரிக்கையாளர் இறைவன் காதல் திருமணத்தால் பெண்கள்தான் ஏமாற்றப்படுகின்றனர் என்றார்.

கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஈஸ்வரன், 20 வயதிற்கு மேல் அனுபவத்தில் வரும் காதலை எதிர்க்கவில்லை. அதே சமயம் 17 வயதில் பெண்களை காதல் வயப்படுத்தி அவர்களை ப்ளாக் மெயில் செய்யும் கலாச்சாரம் பரவி வருகிறது. இந்த காதலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

தங்களை விட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்கமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பேசிய சிலர் கூறினர். இதே போலத்தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பையன் என்பதற்காக அவனை காதலித்த பெண் குழந்தையை கவுரக் கொலை செய்யவும் துணிகின்றனர். இந்த விசயத்தை எதிர்த்தார் சிறப்பு விருந்தினர் சுப.வீ.

இந்த சமூகத்தில் மதம் மாறுவதைப் போல சாதி மாறிக்கொள்ள முடியும் என்றால் தான் தலித் ஆக மாறுவேன் என்று கூறினார் சுப.வீ. சாதியக் கட்டுப்பாடு என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை நூறு ஆண்டு கோடாறியால் வெட்டி விட முடியாது. ஆனால் கண்டிப்பாக அது வெட்டப்படும். கலப்பு காதல் திருமணங்கள் சமுதாயத்தில் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.

இந்த விவாதங்களைக் பேட்ட எழுத்தாளர் இமையன், மிகவும் வேதனையோடு சில கருத்துக்களைத் தெரிவித்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பிற சமூதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் காதலிக்கின்றனர் அதை ஏற்றுக்கொள்கிறது இந்த சமூகம். அதே போல் பிற சமூக ஆண்கள் காதலின் பெயரால் தலித் இளம் பெண்களை ஏமாற்றிவிடுகின்றனர் அதை கேட்பதற்கு யாருமில்லை. ஆனால் பிற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை காதலித்தால் எதிர்க்கின்றனர். கவுரக் கொலை செய்கின்றனர். இது போன்ற மக்கள் வாழும் சமுதாயத்தில் பிறந்த காரணத்திற்காக வெட்கப்படுகிறேன் என்றார் இமையன்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தொகுப்பாளர் கோபிநாத், இந்த சமுதாயத்தில் எத்தனையோ விசயங்கள் மாறிவிட்டன. வீட்டுக்குள் ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பட்டு விட்டது. அவர்கள் வேலைக்குப் போகின்றனர். அதேபோல் காதல் கலப்புத் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நிச்சயம் ஒருநாள் இந்த நிலை மாறும் என்று கூறி முடித்தார்.

 

முனி 3-ல் லட்சுமி ராய் நீக்கம்... ஹீரோயினானார் டாப்சி!

Muni 3 Lakshmi Rai And Tapsee Inn   

ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி படத்தின் மூன்றாம் பாகத்தில் லட்சுமி ராய் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் டாப்சி ஹீரோயினாக நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் முனி. இதன் முதல் பாகத்தில் ராகவா லாரன்ஸ் - வேதிகா நடித்திருந்தனர். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்தார். படம் சுமாராகப் போனது.

ஆனால் அதன் அடுத்த பாகத்தை காஞ்சனா - முனி 2 என்ற பெயரில் எடுத்தார் லாரன்ஸ். இதில் சரத்குமார் முக்கிய வேடம் ஏற்றார். லட்சுமி ராய் ஜோடியாக நடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்போது மூன்றாவது பாகத்தை எடுக்கிறார் லாரன்ஸ். இந்தப் படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்து இயக்குகிறார். படத்துக்கு முனி 2 என்று தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ள அவர், முதலில் லட்சுமிராயையே நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் இப்போது லட்சுமி ராய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் டாப்சியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

டாப்சி கைவசம் இப்போது அஜீத் நடிக்கும் படம் உள்பட நான்கு தமிழ்ப் படங்கள் உள்ளன.

 

கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய சந்தானம்!

Santhanam Celebrates His Birthday At Kodanadu

சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் (இப்போ பாஸ்) நடிக்கும் தலைவன் படப்பிடிப்பில் கிராம மக்களுக்கு லட்டு கொடுத்து பிறந்த நாளைக் கொண்டாடினார் சந்தானம்.

பு‌ளு ஒசன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌. சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ தயா‌ரி‌க்கும்‌ படம்‌ ‘தலை‌வன்'. தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ ரமே‌ஷ்‌ செ‌ல்‌வன் இயக்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பா‌ஸ் - நி‌கி‌ஷா‌ படே‌ல்‌ முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌க்‌க, நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ சந்‌தா‌னம்‌ நடி‌த்‌து வருகி‌றா‌ர்.

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ இன்‌று ஊட்‌டி‌ அருகே‌ உள்‌ள கொ‌டநா‌டு - மி‌லி‌ட்‌டே‌ன்‌ ‌ பகுதி‌யி‌ல்‌ நடந்து வருகி‌றது. நடி‌கர்‌ சந்‌தா‌னத்‌துக்‌கு இன்‌று பி‌றந்‌த நா‌ள். இதனை‌ முன்‌னி‌ட்‌டு படப்‌பி‌டி‌ப்‌பு‌ குழுவி‌னர்‌ ஐம்‌பது கி‌லோ‌ எடை‌கொ‌ண்‌ட பெ‌ரி‌ய கே‌க் வர வை‌‌த்‌தி‌ருந்‌தனர்.

படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கு கா‌லை‌ எட்‌டு மணி‌க்‌கு சந்தானம் வந்‌ததும்‌ அந்‌த கே‌க்‌கை‌ பா‌ர்‌த்‌து இன்‌ப அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌ந்‌தா‌ர். பி‌றகு படப்‌பி‌டி‌ப்‌பி‌ல்‌ கே‌க்‌ வெ‌ட்‌டி‌ தனது பி‌றந்‌தநா‌ளை‌ உற்‌சா‌கத்‌துடன்‌‌‌ கொ‌ண்‌டா‌டி‌னா‌ர். அவருக்‌கு கதா‌நா‌யகன்‌ பா‌ஸ்‌, கதா‌நா‌யகி‌ நி‌கி‌ஷா‌ படே‌ல்‌, தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌, இயக்‌குனர்‌ ரமே‌ஷ்‌செ‌ல்‌வன்‌, ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ ‌எஸ்‌.கே‌.பூ‌பதி, நடி‌கர்‌ ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌, வி‌டி‌வி‌ கணே‌சன்‌, மோ‌னி‌கா‌, மீ‌ரா‌ கி‌ருஷ்‌ணன்‌ உட்‌பட அனை‌வரும்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தனர்‌. ‌

பி‌றகு ஏற்‌பா‌டு செ‌ய்‌தி‌ருந்‌த 1000 லட்‌டுகளை‌ மி‌லி‌ட்‌டே‌ன்‌ கி‌ரா‌ம மக்‌களுக்‌கு வழங்‌கி‌னா‌ர். கி‌ரா‌ம மக்‌கள்‌ அவருக்‌கு உற்‌சா‌கத்‌துடன்‌ பி‌றந்‌த நா‌ள்‌ வா‌ழ்‌த்‌துக்‌களை‌த் தெ‌ரி‌வி‌த்‌தனர்.

 

கமலுக்கும், விக்ரமுக்கும் இடையே உள்ள 5 ஒற்றுமைகள்

Kamal Hassan Vikram

சென்னை: கமல் ஹாசனுக்கும், விக்ரமுக்கும் இடையே 5 ஒற்றுமைகள் உள்ளன.

உலக நாயகன் கமல் ஹாசனுக்கும், சீயான் விக்ரமுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியைச் சேர்ந்தவர்கள். கமல் ஹாசன் இசை, நடனம், நடிப்பு, இயக்கம் என பலவற்றை அறிந்து வைத்துள்ளவர் மட்டுமல்ல பல்வேறு மொழிகளும் தெரிந்தவர்.

கமலைப் போன்று விக்ரமுக்கும் பல மொழிகள் தெரியும். விக்ரம் நடிப்பு தவிர பாடுவார், பிற நடிகர்களுக்கு பின்னணி பேசுவார். இருவருமே செய்தியாளர்களிடம் பேசுகையில் எந்தெந்த இடத்தில் பேட்டி கொடுக்கிறார்களோ அந்தந்த இடத்திற்குரிய மொழியில் பேட்டியளிப்பார்கள். படம் நன்றாக வர வேண்டும் என இருவருமே மெனக்கெடுவார்கள். உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறுவதும் இருவருக்கும் கை வந்த கலையாகும்.

இருவருமே தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதவர்கள். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதிக்கக்கூடியவர்கள்.