'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

சென்னை: இன்னும் வெளி வராத ரஜினியின் கோச்சடையான் படம் குறித்து தவறான தகவல் பரப்பும் விஷமிகளைக் கண்டிப்பதாக சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைமை நிர்வாகிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

இந்த நிலையில் கோச்சடையான் பொம்மை படம், கார்ட்டூன் படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும் இண்டர்நெட்டில் சிலர் செய்தி பரப்பி உள்ளனர். படமே இன்னும் வரவில்லை. ஆனால் அதற்குள் இப்படி விஷமத்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோச்சடையான் டிரைலர் காட்சிகளை 3டி பரிமானத்துடன் புதிய தொழில் நுட்பத்துடன் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தியது.

டிரையிலரை ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள் மெயின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுவரை தலைவரின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வசூலும், வெற்றியும் கோச்சடையானுக்குக் கிடைக்கும்.

'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

டிரைலர் வெளியீடு அன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை விட வெளியே சூப்பர் ஸ்டாரை பார்க்க நின்ற ரசிகர்கள் கூட்டம் பலமடங்கு. ரசிகர்களை பார்த்த சூப்பர்ஸ்டார் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்துவேன் என்று கூறினார்.

முத்து படம் வெற்றி மூலம் ஜப்பான் பாராளுமன்றத்தில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முன் ஜப்பான் பிரதமர் பாராட்டியது போல், ஐ.நா.சபையில் கோச்சடையான் படத்தை உலக தலைவர்கள் பாராட்ட வேண்டும். அதுதான் எங்கள் லட்சியம்.

கோச்சடையான் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு வைரக் கல்லாகவும் அதே வகையில் தமிழ் மண்ணின் பெருமையை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமையும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

கோச்சடையான் கார்ட்டூன் பொம்மை படம் என சில விஷமிகள் வதந்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது. இது தலைவர் படம். அது ஒன்றுபோதும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்கு கத்தி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குநர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அய்ங்கரன் ஃபிலிம்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. 'வாள்', 'அடிதடி', 'தீரன்' என்று படத்துக்கு பல்வேறு டைட்டில்கள் வைத்ததாக தகவல் கிளம்புவதும், பின் அதை முருகதாஸ் மறுப்பதுமாக இருந்தது.

முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

ஆனால், இப்போது படத்தின் டைட்டில் 'கத்தி' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதை தன் ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

'கத்தி' படத்தின் ஷூட்டிங் படுவேக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்துவிட வேண்டுமென்று வெகுவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

ரூ 20 ஆயிரம் ரூம் வாடகைக் கொடுத்து ‘பால்’ நடிகையை பராமரிக்கும் பாதுகாவலர்....

சென்னை: கேரளாவில் இருந்து பறந்து வந்த இந்த மைனா நடிகை தமிழில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அவ்வப்போது படப்பிடிப்புகளுக்காக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நடிகை பிரபல ஓட்டல் ஒன்றில் அறையை குத்தகைக்கு எடுத்துள்ளாராம். நாளொன்றுக்கு வாடகை ரூ 20 ஆயிரம் ரூபாயாம்.

மாதக்கணக்கில் இந்த அறையில் தான் நடிகை வசித்து வருகிறாராம். ஆனால், ஹோட்டல் அறைக் கட்டணத்தை அம்மணி கொடுப்பதில்லையாம். அதை அவருடனே சுற்றி வரும் பாதுகாவலர் சார் தான் கொடுக்கிறாராம்.

 

இளையராஜா பேன்ஸ் கிளப்: கார்த்திக் ராஜாவுக்கு பதில் பவதாரிணி தலைவர்

சென்னை: இளையராஜா பேன்ஸ் கிளப் தலைவராக கார்த்திக் ராஜாவுக்கு பதில், பவதாரிணி செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா பேன்ஸ் கிளப் (ஐஎப்சி) துவக்க விழா நடைபெறுகிறது .

இளையராஜா பேன்ஸ் கிளப்: கார்த்திக் ராஜாவுக்கு பதில் பவதாரிணி தலைவர்

இந்த அமைப்புக்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தலைவராகவும், தயாரிப்பாளர் வேலுச்சாமி, இயக்குநர் ரத்னகுமார் ஆகியோர் மேனேஜிங் ட்ரஸ்டிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இப்போது அதில் ஒரு மாற்றம். கார்த்திக் ராஜாவுக்கு உள்ள வேலை பளு காரணமாக அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார்.

இந்த பேன்ஸ் க்ளப் துவக்க விழாவில் யுவன்ஷங்கர் ராஜா,கார்த்திக்ராஜா, பவதாரணி மூவருமே பங்கேற்கின்றனர்.

இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார்.

 

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லண்டன் அமைப்பு வழங்கியது!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் விடுத்த அறிவிப்பில், "சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் கஷ்டப்பட்டு திரைப்படத் துறையில் முன்னேறி சாதனை படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லண்டன் அமைப்பு வழங்கியது!

அவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம். இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது.

இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை நந்தா, மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.

75 வயதுடைய நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.

நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி நடிகர், நடிகைகள் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்

அதன்பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகை நந்தாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

நடிகை நந்தா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் கால் பதித்தவர். தனது முதல் படமான ‘தூபன் அவுர் தியா'வில் தனது சொந்த மாமாவுடன் நடித்தார். இந்த படம் கடந்த 1956-ம் ஆண்டு வெளிவந்தது.

பின்னர் ‘பாபி', தேவ் ஆனந்தின் ‘கலாபசார்', 'தி ட்ரெயின்' மற்றும் ‘தூல் கா பூல்' ஆகிய திரைப் படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்தார். 1959-ம் ஆண்டில் வெளியான ‘சோட்டி பெஹன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது முழு திறமையையும் நிரூபித்த நந்தா, மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்  

தீன் தேவியான், கும்நாம் போன்றவை அவர் நடித்த மேலும் சில படங்கள். அவர் கடைசியாக நடித்தது 1983-ல் வந்த பிரேம் ரோக்.

திருமணம் ஆகாதவர்

மேலும், அவரது நடிப்பில் வெளியான ‘அஞ்சால்' திரைப்படம் வெற்றி பெற்றதன் மூலம் நடிகை நந்தாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை நந்தா திருமணம் ஆகாதவர். வெர்சோவாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அவர் வசித்து வந்தார்.