ரஜினி - ஷங்கர் இணையும் படம் ரோபோ 2?

லிங்கா படம் முடிந்ததும் ரஜினியும் ஷங்கரும் இணையவிருக்கும் படம் ரோபோவின் இரண்டாம் பாகம் என கற்பூரம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளது மீடியா.

ரஜினி - ஷங்கர் இணையும் படம் ரோபோ 2?

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை.. இப்படி ஒரு ஐடியா அவர்களுக்கு இருக்கிறதா என்பதை அவர்களாகச் சொன்னால்தான் உண்டு.

எந்திரன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்' (ரோபோ) படம் 2010-ல் வெளி வந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி', ‘ரோபோ' என இரு கேரக்டரில் வந்தார். பிரமாண்ட படமாக வந்த எந்திரன், வசூலிலும் கோடிகளைக் குவித்தது.

எந்திரன் 2

இதன் இரண்டாம் பாகம் ‘எந்திரன் - 2' என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டதாக முன்பே தகவல் வெளியானது. ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் இதனை உறுதிப்படுத்தினார்.

ராணா

ஆனால் ரஜினியோ ராணாவை அப்போது அறிவித்தார். ராணா நின்றதும், கோச்சடையான் உருவானது.

மீண்டும்...

இப்போது ரஜினி - ரவிக்குமார் காம்பினேஷனில் லிங்கா படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படம் முடிந்ததுமே, ஷங்கருக்குத்தான் அடுத்த படம் பண்ணுவார் ரஜினி என தகவல் வெளியாகியுள்ளது.

ரோபோ 2

ஷங்கரும் ஐ படத்தின் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுக்கு தயார் செய்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ரோபோ 2-க்கான பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளனவாம். படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ரூ 200 கோடி

இப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் இன்னொரு முன்னணி நடிகையை இந்தப் படத்துக்காக பேசி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

 

பெருச்சாழி பட ரீமேக்? கமல் மறுப்பு!

பெருச்சாழி பட ரீமேக்? கமல் மறுப்பு!

மலையாளத்தில் தயாராகும் பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிப்பதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தரப்பு தெரிவித்துள்ளது.

மோகன்லால், ஆன்ட்ரியா, முகேஷ் நடிக்க, அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள மலையாளப் படம் பெருச்சாழி.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கதை பற்றிக் கேள்விப்பட்ட கமல் ஹாஸன், அந்தக் கதையின் தமிழ் ரீமேக்கில் தானே நடிக்க விருப்பம் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியில் உண்மையில்லை. கமலுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே மோகன் லால் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல் ஹாஸன்தான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி

பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, தனது கண்களை தானம் செய்தார்.

கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி

நேற்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தனர் ஷில்பாவும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும்.

பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்.

இதுகுறித்து ஷில்பா கூறுகையில், "நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்கள் மற்றவர்களுக்கு பார்வை வழங்கும் என்ற செய்தியே இப்போது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.

 

நோ பிகினி... நோ கிஸ்ஸிங்... தமன்னாவின் அதிரடி முடிவு!

இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார்.

தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ்.

நோ பிகினி... நோ கிஸ்ஸிங்... தமன்னாவின் அதிரடி முடிவு!

இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது.

மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தேர்வு செய்தாராம்.

மேலும் நீச்சலுடை, முத்தக்காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே ஒரு கொள்கையாக வைத்துள்ளேன்.

இனியும் இந்த முடிவில் மாற்றமிருக்காது. அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் எனக்கு வசதியாகவும் இல்லை," என்றார்.

 

அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாரண்ர்.

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு சிம்பு - த்ரிஷாவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவிருந்தார் செல்வராகவன்.

அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்

ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.

இரண்டாம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆயிர்த்தில் ஒருவன் படத்துக்கு இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

ஆனால் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால்தான் சினிமா சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவி்ட்டால் காமெடிப் படங்கள்தான் எடுக்கணும்,"என்றார்.

 

கோச்சடையான் ஒரு நாள் கலெக்ஷனில் 70 சதவீதத்தை வசூலித்த மஞ்சப்பை!

சென்னை: நேற்று வெளியான கோச்சடையான் ஒரு நாள் கலெக்ஷனில் 70 சதவீதத்தை வசூலித்த மஞ்சப்பை!  

ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள படம் மஞ்சப்பை. தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான உறவைச் சொல்லும் இந்தப் படம் நேற்று வெளியானது.

லிங்குசாமியும் இயக்குநர் சற்குணமும் இணைந்து தயாரித்தனர்.

நேற்று வெளியான இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை இன்று, படத்தின் தயாரிப்பாளரே வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இந்தப் படம் முதல் நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். இது ரஜினியின் கோச்சடையான் பட வசூலில் 70 சதவீதம் இருக்கும் என நம்புவதாக தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பில் கூறப்படுகிறது.

அப்ப நாளைக்கே சக்ஸஸ் மீட் நிச்சயம்!!

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.