ஜவுளிக்கடை திறப்பு விழாவில் 180 பட நாயகி நித்யா மேனனிடம் வாலிபர் சில்மிஷம்


பாலக்காடு: ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த 180 பட நாயகி நடிகை நித்யா மேனனிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சமீபத்தில் தமிழில் வெளியான படம் 180 . இந்த படத்தில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பாலக்காடு அருகே ஓட்டுப்பாறையில் ஜவுளிக்கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக சென்றார். குறித்த நேரத்தில் நடிகை நித்யா மேனன் காரில் வந்து இறங்கினார். அப்போது, நடிகை நித்யா மேனனை காண ஜவுளிக்கடை முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

அவரை பார்ப்பதற்காக பலர் முண்டியடித்து சென்ற போது, ரசிகர் ஒருவர் நித்யா மேனனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நித்யா மேனன் அந்த வாலிபரை திட்டி விட்டு கடைக்குள் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். பிடிபட்ட வாலிபரின் ஊர் மற்றும் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
 

ஹீரோக்களுக்கு அம்மா வேடமா, ஆளவிடுங்க சாமி: தேவயானி


ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பெரியதிரையைப் போன்றே சின்னத்திரையிலும் எனக்கு நல்ல வரவேற்புள்ளது. தற்போது நான் சீரியல்களில் பிசியாக உள்ளேன். படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் நடிக்க நேரமில்லை. சிலர் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

நான் ஜோடியாக நடித்த ஹூரோக்களுக்கே அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள். எனக்கொன்றும் அந்த அளவுக்கு வயதாகிவிடவில்லை. நான் 100 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனது திறமைக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் இனி நடிப்பேன்.

எனது கணவர் ராஜ்குமாரன் இயக்கி வரும் படம் ஒன்றில் அத்தகைய சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்றார்.
 

கேரளாவில் பியூட்டி பார்லர் துவங்கினார் 'தாமிரபரணி' நாயகி பானு


தாமிரபரணி புகழ் நடிகை பானு கேரளாவில் பியூட்டி பார்லர் ஒன்றை திறந்துள்ளார்.

பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு சேர்ந்துள்ளார். அவர் கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதனால் தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை.

கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் ஸ்டுடியோ ரிவைவ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கியுள்ளேன். அழகுக்கலை குறித்து படித்துள்ள என் அம்மா தான் அதை நிர்வகித்து வருகிறார்.

சினிமாவை மட்டும் நம்பி இருக்காமல் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து தான் பியூட்டி பார்லரைத் துவங்கியுள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது என்றார்.
 

கிசு கிசு - ஹீரோக்களின் திடீர் மனமாற்றம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ஹீரோக்களின் திடீர் மனமாற்றம்

8/10/2011 3:53:26 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஹாரிஸான இசைக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள், வாசல்லேயே நின்னுடுதாம்... நின்னுடுதாம்... மெலடியா இசையை விரும்புற தயாரிப்புங்க, அவரை தேடிப்போனா தந்தைகுலத்தோட டார்ச்சர் தாங்க முடியாம நொந்து போறாங்களாம்... நொந்து போறாங்களாம்... இசைய பார்த்து பேசணும்னு கேட்டா, 2 மாசம் கழிச்சி வாங்கன்னு இசையோட அப்பாகுலம் திருப்பி அனுப்புறாராம்... அனுப்புறாராம்...

கிரீட பட இயக்கம், அடுத்து இயக்குற படத்துல நடிக்க அருந்ததி ஹீரோயினையே அப்ரோச் பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... டோலிவுட் படங்களை கமிட் பண்ணி வச்சிருக்கற ஹீரோயின், கால்ஷீட் தர்றத பற்றி இதுவர பதில் சொல்லலையாம்... சொல்லலையாம்... கால்ஷீட் உண்டா, இல்லையான்னு கேளுங்க. இல்லைன்னா வேற ஹீரோயினை பார்க்கலாம்னு தயாரிப்பு பிரஷர் தர்றாராம். கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம்னு தயாரிப்புகிட்ட இயக்கம் கெஞ்சுறாராம்... கெஞ்சுறாராம்...

டபுள் ஹீரோ கதைன்னு சொன்னாலே கோலிவுட் ஹீரோக்கள் அலறி அடிச்சி ஓடினாங்க. இப்போ அவங்களுக்குள்ள மாற்றம் வந்திருக்காம்... வந்திருக்காம்... Ôசோலோவா நடிச்சி தோத¢தது போதும். அதனால மார்க்கெட் பாதிக்குது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணி, டெவலப் ஆகலாம்Õனு இளம் ஹீரோக்கள் பேசிக்கிட்டாங்களாம்... பேசிக்கிட்டாங்களாம்... அடுத்தடுத்து டபுள்
ஹீரோ கதையில இளம் ஹீரோக்கள் நடிக்கப்போறாங்களாம்... நடிக்கப்போறாங்களாம்...




 

அன்னக்கிளிக்காக மேசையில் தாளம்போட்டுக் காட்டினேன்! - இளையராஜாவின் ப்ளாஷ்பேக்


அன்னக்கிளி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் மச்சானைப் பார்த்தீங்களா பாட்டுக்கு மேசையில் தாளம் போட்டுக் காட்டினேன். அவர் வாய்ப்புத் தந்தார் எனறார் இளையராஜா.

சஞ்சய், நந்தினி ஜோடியாக நடிக்க சுப்பு சுஜாதா இயக்கிய ‘தாண்டவக் கோனே’ படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பிரசாத் லேப் தியேட்டரில் இசையை வெளியி்ட்ட பின் அவர் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் பாதியில் கட்டாகிவிட்டது.

உடனே மைக் இல்லாமல் பேச ஆரம்பித்தார் ராஜா. மீண்டும் மைக்கை சரி செய்து அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த ராஜா, மைக் இல்லாமலேயே கணீரென்று பேச ஆரம்பித்துவி்ட்டார்.

அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு பெற்றது எப்படி என அவர் சுவாரஸ்மாக விளக்கினார். அவர் பேசுகையில், “புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன்.

எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட ‘மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே’ என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார்.

இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம், ‘நான் கண்டுபிடிக்காவிட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு,’ என்றார்.

இந்த படத்தின் இயக்குநர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. அந்த திறமைக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.

விழாவில் நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அன்னக்கிளிக்காக மேசையில் தாளம்போட்டுக் காட்டினேன்! - இளையராஜாவின் ப்ளாஷ்பேக்


அன்னக்கிளி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் மச்சானைப் பார்த்தீங்களா பாட்டுக்கு மேசையில் தாளம் போட்டுக் காட்டினேன். அவர் வாய்ப்புத் தந்தார் எனறார் இளையராஜா.

சஞ்சய், நந்தினி ஜோடியாக நடிக்க சுப்பு சுஜாதா இயக்கிய 'தாண்டவக் கோனே' படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பிரசாத் லேப் தியேட்டரில் இசையை வெளியி்ட்ட பின் அவர் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் பாதியில் கட்டாகிவிட்டது.

உடனே மைக் இல்லாமல் பேச ஆரம்பித்தார் ராஜா. மீண்டும் மைக்கை சரி செய்து அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த ராஜா, மைக் இல்லாமலேயே கணீரென்று பேச ஆரம்பித்துவி்ட்டார்.

அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு பெற்றது எப்படி என அவர் சுவாரஸ்மாக விளக்கினார். அவர் பேசுகையில், "புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன்.

எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட 'மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே' என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார்.

இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம், 'நான் கண்டுபிடிக்காவிட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு,' என்றார்.

இந்த படத்தின் இயக்குநர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. அந்த திறமைக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்," என்றார்.

விழாவில் நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ரவிச்சந்திரன் மறைவை நம்ப முடியவில்லை! -கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ உருக்கம்


சென்னை: ரவிச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை, என்று அவருடன் நடித்த நடிகைகள், பழகிய பிரமுகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்று இரவு மறைந்தார். அவரது மறைவுக்கு கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ரவிச்சந்திரன் நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960-களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஆண்டுதோறும் அவர் நடித்த பத்து படங்கள் வரை வெளியாகும். அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்துவிடும். எனவே தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நின்றனர். நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, "மானசீக காதல்', "மந்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ராஜ்ஸ்ரீ

ரவிச்சந்திரனின் மறைவு குறித்து அவரது முதல் படத்தில் நாயகியாக நடித்த ராஜஸ்ரீ கூறுகையில், "நான் நடித்த முதல் படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. நான் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானதால் படப்பிடிப்பின்போது என்னை சீனியர் நடிகை என்று மிகுந்த மரியாதை கொடுப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் அறிமுக நடிகராகவே தெரியாது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து மூன்று நாள்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் பார்த்தேன். அவருடைய மறைவை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

கே ஆர் விஜயா

ரவிச்சந்திரன் நடித்த கடைசி படமான ஆடுபுலியில் அவருக்கு ஜோடியாக கேஆர் விஜயா நடித்திருந்தார். அவர் கூறுகையில், "மனசு மிகவும் கஷ்டமாக உள்ளது. நேற்றுதான் அவரைப் பார்த்தது போலிருக்கிறது. அதற்குள் மறைந்துவிட்டார். மிக இனிமையான மனிதர் ரவிச்சந்திரன். நாங்கள் இருவரும் ஆடுபுலியில் நடித்தபோது, பழைய நாட்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். ரவிச்சந்திரன் மறைவு, எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது," என்றார்.

காதலிக்க நேரமில்லை வசனகர்த்தா சித்ராலயா கோபு கூறுகையில், "காதலிக்க நேரமில்லை' படத்துக்காக ஸ்ரீதர் ஏற்கெனவே நான்கு பேரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் ரவியைப் பார்த்தவுடன் "இவர்தான் நம் ஹீரோ'' என முடிவுசெய்துவிட்டார். ஆனாலும் ரவிச்சந்திரனிடம் அதைப்பற்றி ஏதும் கூறாமல் இருந்தார். அதனால் படப்பிடிப்பு தொடங்கும் நாள் வரை ரவிச்சந்திரன் பதற்றமாகத்தான் இருந்தார். பிறகு ஸ்ரீதர் அவரை படப்பிடிப்புக்கு அழைத்தவுடன்தான் சகஜ நிலைக்குத் திரும்பினார். அனைத்து இயக்குநர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர். அவருடைய மறைவு வேதனை தருவதாக உள்ளது", என்றார்.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்

"காதலிக்க நேரமில்லை' படத்தில் நான் இணை இயக்குநர். ரவிச்சந்திரனுக்கு முதல் படம் என்பதால் அவரிடம் சகஜமாகப் பேசி, நடிப்பை சொல்லித் தாருங்கள் என ஸ்ரீதர் கூறினார். அதனால் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு இப்போது வரை தொடர்ந்துகொண்டிருந்தது. ரவிச்சந்திரனைப் போன்ற குரு பக்தி உடையவர்களை சினிமாவுலகில் பார்ப்பது கஷ்டம். ஒரு நல்ல நண்பனை இழந்த சோகத்தில் இருக்கிறேன்," என்றார்.
 

மணிரத்னம் படத்தில் நடிக்க ஏங்கும் அனுஷ்கா


இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பது தான் தனது கனவு என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. அவரைத் தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ மணிரத்னம் படத்தில் நடிக்க ஏங்குகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

முதலில் மாதவனுடன் அறிமுகமாகி பின்னர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தற்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றது. படத்தை தேர்வு செய்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் யார் என்று பார்த்து தான் படத்தை தேர்வு செய்யவிருக்கிறேன்.

தமிழில் எனக்கு நம்பிக்கை அளித்த படம் தெய்வத்திருமகள். தெலுங்கில் பாபு, தமிழில் மணிரத்னம் படங்களில் நடிப்பது எனது கனவு என்றார்.

கனவு நனவாக வாழ்த்துக்கள்...!
 

பிராட் பிட் வாழ்க்கையை மாற்றிய படம்


மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் ஸ்மித் படம் தான் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் வாழ்க்கையே மாற்றிய படமாம்.

2005-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் ஸ்மித். இதில் பிராட் பிட், ஏஞ்சலினா ஜூலி நடித்திருந்தனர். இந்த படத்தில் நிக்கோல் கிட்மேன் தான் கதாநாயகியாக நடிக்கவிருந்தார்.

நிக்கோலுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சரியில்லை. அதனால் நான் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று பிராட் பிட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் ஏஞ்சலினா ஜூலி நாயகியானார். இந்த தகவல் அறிந்த பிட் படத்தின் தயாரிப்பாளர் ஆர்னன் மில்ஷனைத் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்கத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த படத்தில் நடித்தபோது தான் பிட்டுக்கும், ஜூலிக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஜுலியுடன் சேர்ந்ததால் பிராட் பிட்டை விட்டு அவரது அப்போதைய மனைவியான நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் விலகினார்.

பிராட் பிட் ஜுலியை காதலிக்கிறார் என்பதை ஆனிஸ்டன் முதலில் நம்பவில்லை. ஆனால் பிட் தனது வாயால் கூறியவுடன் அவர் ஆத்திரம் அடைந்து தனது கணவரை வெளியேற்றினார் என்று மில்ஷன் தெரிவித்தார்.
 

படப்பிடிப்பில் சமீரா காயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படப்பிடிப்பில் சமீரா காயம்

8/10/2011 11:51:19 AM

'வேட்டை' பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் சமீரா ரெட்டி காயமடைந்தார். லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா, அமலா பால் நடிக்கும் படம் 'வேட்டை'. இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக, குற்றாலத்தில் நடந்து வந்தது. அக்காள், தங்கையாக நடிக்கும் சமீரா, அமலா பால் பங்குபெறும் பாடல் காட்சியை இரு தினங்களுக்கு முன் படமாக்கினர். இரண்டு டூவீலர்களில் அமலாவும் சமீராவும் பாடிக்கொண்டு வருவது போல் காட்சி. அப்போது எதிர்பாராத விதமாக அமலாபால் ஓட்டி வந்த டூவீலர், சமீரா மீது மோதி விழுந்தது. இதில் சமீராவின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து ஷூட்டிங்கை நிறுத்திய படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி சமீராவிடம் கேட்டபோது, ''பெரிய காயம் ஏதுமில்லை. வண்டி மோதியதால் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் நடித்தேன்'' என்றார்.

 

வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், சேரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், சேரன்

8/10/2011 11:48:23 AM

வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், சேரன் இணைந்து நடிக்கிறார்கள். மகேந்திரா டாக்கீஸ் சார்பில் பரத்குமார், மகேந்திரன், மகா அஜய்பிரசாத் தயாரிக்கும் படம், 'மூன்று பேர் மூன்று காதல்'. வசந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். போஜன் கே.தினேஷ் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் வசந்த் கூறும்போது, ''தலைப்பில் காதல் இருந்தாலும் இது காதல் படமல்ல. காதலைப் பற்றிய படம். மூன்று பேரில் இருவராக அர்ஜுன், சேரன் நடிக்கிறார்கள் இன்னொரு ஹீரோவும் மூன்று ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள். நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு 'நடை உடை பாவணை' கதையை இயக்குகிறேன்'' என்றார்.

 

வீரப்பன் மனைவியாக நடிக்கிறார் விஜயலட்சுமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வீரப்பன் மனைவியாக நடிக்கிறார் விஜயலட்சுமி

8/10/2011 11:44:49 AM

ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் படம் 'வனயுத்தம்'. சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கை பற்றிய படமான இதை ஏ.எம்.ஆர்.ரமேஷ், வி.ஸ்ரீனிவாஸ், கே.ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கின்றனர். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு. வீரப்பனாக கிஷோர், போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடிக்கின்றனர். வீரப்பன் மனைவியாக நடிக்க பல நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது விஜயலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அவரது தங்கையாக நயனா நடிக்கிறார். தமிழில் 'வனயுத்தம்' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'அட்டஹாசா' என்றும் தயாராகும் இதன் ஷூட்டிங் மேட்டூரில் நடந்து வருகிறது.

 

வேலூர் மாவட்டம் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வேலூர் மாவட்டம் என்ன கதை?

8/10/2011 11:43:04 AM

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படம், 'வேலூர் மாவட்டம்'. நந்தா, பூர்ணா, சந்தானம் நடிக்கின்றனர். 'மாசிலாமணி'யை அடுத்து ஆர்.என்.ஆர்.மனோகர் இதை இயக்குகிறார். அவர் கூறியதாவது: போலீஸ் உயர் அதிகாரியாக பதவி ஏற்கும் நந்தா, தனது நேர்மையான நடவடிக்கைகளால், அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். பிரபலமான அரசியல்வாதி ஒருவர், தனது பினாமியாக ஒருவரை வைத்துக்கொண்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார். அவரது முகமூடியைக் கிழிக்கும் போலீஸ் அதிகாரியின் வீரச்செயல்களை சொல்லும் கதை இது. வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாகியுள்ளன.

 

திறமைசாலிகளை யாராலும் தடுக்க முடியாது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திறமைசாலிகளை யாராலும் தடுக்க முடியாது!

8/10/2011 11:41:57 AM

ஆம்பியன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம், 'தாண்டவக்கோனே'. சஞ்சய் ஹீரோ. நந்தகி ஹீரோயின். சம்பத், கஞ்சா கருப்பு, அருள்மணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. ஆர்.சுப்பு சுஜாதா இயக்குகிறார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. பாடலை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது:
நான் எப்போதும் அறிமுக இயக்குனர்களை உற்சாகப்படுத்துவேன். 'அன்னக்கிளி' படத்தில் என்னை பஞ்சு அருணாசலம் அறிமுகம் செய்தார். அதற்குமுன் என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், எங்கே சினிமா கம்பெனியின் போர்டு தெரிந்தாலும், அங்கே சென்று எனக்கு இசையமைக்க வாய்ப்பு கேட்பார். நான் கம்போஸ் செய்த பாடல்களை பாடிக் காட்டுவோம். நாங்கள் வாய்ப்பு கேட்காத கம்பெனிகளே கிடையாது. ஒருநாள் பஞ்சு அருணாசலத்திடம், அங்கு இருந்த மேஜையை தட்டி, 'மச்சானை பார்த்தீங்களா' பாடலை பாடினேன். அதில் மனதை பறிகொடுத்த அவர், 'அன்னக்கிளி'யில் அறிமுகம் செய்தார். எப்படி இந்த பையனை அறிமுகம் செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்கள். நானும் அவரிடம் கேட்க நினைத்தது உண்டு. அதாவது, என்னிடம் என்ன இருக்கிறது என அறிமுகம் செய்தீர்கள் என்று. இதை பஞ்சு அருணாசலம்தான் சொல்ல வேண்டும். யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம். திறமைசாலிகளை யாராலும் தடுக்க முடியாது. எவ்வளவு சிரமப்பட்டாலும், கண்டிப்பாக சாதிப்பார்கள். புது இயக்குனர்களின் வளர்ச்சிக்கு நானும், எனது இசையும் பயன்படுகிறது என்றால், அதை நினைத்து மகிழ்வேன். இவ்வாறு இளையராஜா பேசினார். சஞ்சய், சம்பத், அருள்மணி, பிரபாகர் சீனிவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமலன் தொகுத்து வழங்கினார்.

 

ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க மாட்டேன்

8/10/2011 11:40:21 AM

ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தேவயானி கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சினிமாவில் புகழ் பெற்ற அளவுக்கு சின்னத்திரையும் எனக்கு புகழைக் கொடுத்தது. சின்னத்திரையில் பிசியாக இருப்பதால் பெரிய திரையில் நடிக்க நேரம் இல்லை. நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாமே சாதாரண கேரக்டர்களாக இருக்கிறது. சில ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். நான் ஜோடியாக நடித்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்காது. எனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை. 100 படங்கள் வரை நடித்து விட்டேன். எல்லாவிதமான கேரக்டரிலும் நடித்தாகிவிட்டது. இனி சினிமாவில் நடிப்பதாக இருந்தால் சவாலான கேரக்டராக இருக்க வேண்டும். எனது திறமையையும், உழைப்பையும் வெளிக்கொண்டு வரும் படமாக இருக்க வேண்டும். என் கணவர் இயக்கி வரும் படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.

 

பியூட்டி பார்லர் தொடங்கினார் பானு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பியூட்டி பார்லர் தொடங்கினார் பானு

8/10/2011 11:38:22 AM

இலியானா, சோனா உட்பட சில நடிகைகள், நகைக்கடை, பேஷன் ஷோரூம் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ள பானு, கொச்சியில் பியூட்டி பார்லர் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 'புதுமுகங்கள் தேவை' படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக ஒரு படம். நல்ல வேடங்களுக்கு காத்திருப்பதால், அதிக படங்களில் நடிக்கவில்லை. இப்போது கொச்சி பனம்பில்லி நகரில் 'ஸ்டுடியோ ரிவைவ்' பெயரில் பியூட்டி பார்லர் தொடங்கியுள்ளேன். அம்மா ஷாலி, அழகுக்கலை குறித்து படித்துள்ளார். அவரது நிர்வாகத்தில் எனது பியூட்டி பார்லர் இயங்குகிறது. சினிமாவை மட்டுமே நம்பியிருக்காமல், பிசினஸ் செய்யலாம் என்று இதை தொடங்கியுள்ளேன். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

 

தெலுங்கானா இல்லேன்னா நானும் சந்திரசேகர் ராவும் தற்கொலை பண்ணிக்குவோம்! - விஜயசாந்தி


ஹைதராபாத்:அறிவித்தபடி தெலுங்கானா மாநிலத்தை பிரித்துக் கொடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்குப் பின் கட்சி தலைவர் சந்திரசேகர ராவும் தற்கொலை செய்து கொள்வார் என்றார் நடிகையும் எம்பியுமான விஜயசாந்தி.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் முன்னணித் தலைவரும், எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி நேற்று ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த மாநில மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கானா தனி மாநிலத்திற்காக மாணவர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள். இது நல்ல தல்ல. தெலுங்கானா அமைப்ப தற்கு உயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலை செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு பிறகு கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் தற்கொலை செய்வார்.

தனி மாநில போராட்டத்தை முடக்க மத்திய - மாநில அரசுகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுகின்றன. அதை தெலுங்கானா பெண்கள் முறியடிக்க வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால், அதை இந்தியாவிலேயே முதன்மை மாநில மாக மாற்றிக் காட்டுவோம்.

மத்திய அரசு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. அம் மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்," என்றார்.
 

மானமே போச்சு... 1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க! - நடிகை ரீமாசென்


தான் நடித்த வங்க மொழிப் படத்தை, செக்ஸ் படம் போல சித்தரித்து போஸ்டர் அடித்ததால் மானமே போய்விட்டதாக புலம்பித் தள்ளிய நடிகை ரீமா சென், அதற்கு நஷ்ட ஈடாக ரூ 1 கோடி கேட்டுள்ளார் தயாரிப்பாளரிடம்.

கடந்த சில நாட்களாக இளவரசி என்ற பெயரில் ரீமா சென்னின் படு செக்ஸியான போஸ்டர்கள் சென்னை நகரெங்கும் ஒட்டப்பட்டு வருகின்றன.

இது வங்க மொழியில் இதி ஸ்ரீகந்தா என்ற தலைப்பில் வெளியான படத்தின் தமிழ் டப்பிங் ஆகும். இதில் செக்ஸ் தொழிலாளியாக வரும் ரீமா சென், வாடிக்கையாளர் ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

அந்தக் காட்சியை ஸ்டில்களாக்கி வெளியிட்டு பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் படத்துக்கு.

விஷயம் தெரிந்து கொதித்துப் போன ரீமா, "இது பலான படமல்ல. பக்கா ஆர்ட் பிலிம். இதை இப்படி காட்டியதால் என் மானமே போயிடுச்சி," என நண்பர்களிடம் புலம்பினாராம்.

மேலும், "விளம்பரத்தை உடனே நிறுத்தலைன்னா உங்க மேல ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன்," என்று தயாரிப்பாளரையும் எச்சரித்துள்ளார்.

ஆனால் இதெற்கெல்லாம் அசராத தயாரிப்பாளர், இது எனது படம். இதில் நடித்ததற்கு போதிய அளவு சம்பளம் கொடுத்துவிட்டேன். இனி நான் என்ன செய்தாலும் கேட்க சம்பந்தப்பட்ட நடிகைக்கு உரிமையில்லை. படத்தில் இருப்பதைத்தானே காட்டியுள்ளேன், என்று பதிலுக்கு எச்சரிக்க, ரீமா அமைதியாகிவிட்டாராம்!
 

ஆசின் மனதில் இடம் பிடித்த புது 'ரசிகன்'!


ஆசினைச் சுற்றிச் சுற்றி வந்த புது 'ரசிகன்'-சாக்லேட், ரோஸ் கொடுத்து அசத்தல்!

பாலிவுட்டில் நுழைந்துள்ள ஆசினுக்கு ஒரு தீவிர ரசிகன் கிடைத்துள்ளார். இதனால் ஆசின் படுகுஷியாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் சாஜித் நாதியாத்வாலாவின் படமான ஹவுஸ்புல் 2-ல் ஆசின் நடித்து வருகிறார். இந்த படபிடிப்பில்தான் அந்த புது ரசிகன் ஆசினுக்குக்கிடைத்தார்.

கட்... கற்பனையை வேகமாக ஓட விட வேண்டாம். அந்த ரசிகர், பாலிவுட் நடிகரோ அல்லது வேறு யாருமோ கிடையாது. 8 வயதேயாகும் ஒரு குட்டிப் பையன்தான். படத்தின் இயக்குனர் சாஜிதின் 8 வயது மகன் சுபான்தான் ஆசினைப் பிடித்துள்ள புது ரசிகன்.

படப்பிடிப்பை ஜாலியாக பார்க்க வந்த சுபானுக்கு ஆசினைப் பிடித்துவிட்டது. ஆசினுக்கும் சுபானை பிடித்துவிட்டது. அசின் போகும் இடமெல்லாம் சுபானும் செல்கிறான். அவ்வப்போது சாக்கலேட்டுகள், ரோஜாப்பூக்கள் கொடுத்து ஆசினை அசத்துகிறானாம் பொடியன். அடடா என் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளான் என்று ஆசினும் நெகிழ்ந்துபோயுள்ளார்.
 

மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய ரிலையன்ஸ்!


அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மீண்டும் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு திரும்பியுள்ளது.

இந்த நிறுவனம்தான் சூர்யா நடித்த சிங்கம், மாதவன் நடித்த யாவரும் நலம் போன்ற படங்களை தமிழில் தயாரித்தது.

ஆனால் சில நெருக்கடிகள் காரணமாக அப்போது தமிழ் சினிமா தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது.

இப்போது மீண்டும் திரைப்பட விநியோகத்தை தமிழில் ஆரம்பித்துள்ளது. பரத் - ரீமா கலிங்கல் நடிக்கும் யுவன் யுவதி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ரிலையன்ஸ். ஜிஎன்ஆர் குமரவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் வெளியாகிறது.

இதைத் தவிர ஆயிரம் விளக்கு மற்றும் ஒஸ்தி ஆகிய படங்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் விநியோகிக்கவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு 27 திரையரங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆம்... திருமணத்துக்கு தயாராக உள்ளேன்! - த்ரிஷா


திருமண வதந்திகளுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா. அடுத்த ஆண்டு தனது திருமணம் நடப்பது உண்மைதான் என்றும், அதற்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்ருத் என்பவரை அவர் திருமணம் செய்வதாக சமீபகாலமாக வந்த செய்திகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா பதிலளிக்கையில், "அம்ருத் சென்னையைச் சேர்ந்தவர். ஒரு மாதத்துக்கு முன்தான் சிநேகிதர் ஒருவர் மூலம் அறிமுகமானார். என் நட்பு வட்டாரத்தில் அவரும் சேர்ந்துள்ளார். நண் பர்கள் எல்லோரும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்திப்போம்.

அம்ருத்தையும் இன்னொருத்தரையும் என் தாய் பார்த்து வைத்திருப்பதாகவும் அவர்களில் ஒருவரை எனக்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்யப் போவ தாகவும் செய்தி வந்துள்ளன. இதில் உண்மை இல்லை.

நான் யாரிடமும் என் திருமணம் சம்பந்தமாக பேசவில்லை. கடந்த 5 மாதங்களாக ஹைதராபாத்தில் இருந்தேன்," என்றார்.

சரி திருமணம் எப்போது? என்று கேட்டபோது, "நிச்சயம் அடுத்த ஆண்டு நடக்கும். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை இதுவரை சந்திக்கவில்லை. என்னை பொருத்தவரை நான் திருமணத்துக்கு தயாராகவே இருக்கிறேன்," என்றார்.
 

கள்ளக்காதலரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கு- நடிகை நிலா முன்ஜாமீன் கோரி மனு


சண்டிகர்: கள்ளக்காதலரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்ய தேடப்பட்டு வரும் நடிகை நிலா, முன்ஜாமீன் கோரி பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மீரா சோப்ரா எனப்படும் நடிகை நிலாவின் நண்பர் சுமித் பட்டன். இவரது மனைவி ருச்சி. இவர் சமீபத்தில் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இருப்பினும் சுமித்தும், நடிகை நிலாவும் கள்ளக்காதலர்கள். இதன் விளைவாகவே ருச்சி கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் நிலாவுக்கும், சுமித்துக்கும் தொடர்பு உள்ளது என்று ருச்சியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து இதை கொலை வழக்காக மாற்றினர் போலீஸார். மேலும் சுமித்தும் கைது செய்யப்பட்டார். நிலாவையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை நிலா தலைமறைவானார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி நிலா பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
 

திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி பட சிடிக்களை விற்றவர் கைது


திருவாரூர்: திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி போன்ற புதிய திரைப்பட டிசி-க்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் காட்டூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் பாலகுருசாமி(38). இவர் திருவாரூர் பஸ் நிலையத்தில் வீடியோ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுப்பட சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவாரூர் நகர போலீசார், பாலகுருசாமியின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி திருட்டுத்தனமாக புதிய பட டிவிடி-க்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

பாலகுருசாமியை கைது செய்த போலீசார், அவரது கடையில் இருந்த காஞ்சனா, கருங்காலி உள்பட 20க்கும் மேற்பட்ட புதுப்பட சிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் போலீஸ் சோதனைக்கு பயந்து திருவாரூரில் வீடியோ கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது.