இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்... ஷகிலா விரக்தி

சென்னை: இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம் என்று விரக்தியுடன் கேட்கிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா.

இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்... ஷகிலா விரக்தி

மலையாள பி-கிரேட் படங்களில் நடித்து புகழ்பெற்ற 38 வயதான ஷகிலா, இப்போது அதில் இருந்து ரிட்டையர்ட் பெற்றுக் கொண்டு, பொழுது போக்கு சினிமாக்களில் தலை காட்டி வருகிறார். கன்னடத்தில் தற்போது ஷகிலா நடித்துவரும் ஒரு திரைப்படத்தின் ஹீரோவுடன், இவருக்கு திருமணமாகிவிட்டதாக தகவல் பரவியது.

இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்... ஷகிலா விரக்தி

இதை மறுத்துள்ள ஷகிலா, எனக்கு 38 வயது, ஹீரோவுக்கு 28 வயது. அவர் எனக்கு தம்பி மாதிரி. அவரை திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரப்பியுள்ளனர். பல்வேறு வதந்திகளில் இதுவும் ஒரு வதந்தி என்று நினைத்துக் கொண்டுள்ளேன். இனிமேல் எனக்கு எதற்கு திருமணம், பிள்ளைகுட்டியெல்லாம். பூமிக்கு மேலும் ஒருவரை பாரமாக்க நான் விரும்பவில்லை என்று விரக்தியோடு கூறியுள்ளார்.

 

என்னை அறிந்தால்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர்

ஒளிப்பதிவு: டான் மெக்ஆர்தர்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ஏ எம் ரத்னம்

இயக்கம்: கவுதம் மேனன்

தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் கவுதம் மேனன், அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, ஹாரிஸ், விவேக் என புதிய குழுவோடு களமிறங்கியிருக்கிறார்.

என்னை அறிந்தால்- விமர்சனம்

கவுதம் மேனன் சொல்லும் போலீஸ் அதிகாரியின் கதைகளில் என்னென்ன வழக்கமான அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் அடங்கிய கதை 'என்னை அறிந்தால்'. நேர்மையான அதிகாரி, மோசமான வில்லன், ஏற்கெனவே திருமணமான அல்லது விவாகரத்தான ஹீரோயின், வன்முறைகளின் உச்சமான மோதல்கள்... அத்தனையும் இதிலும் காணக் கிடைக்கின்றன.

ஹீரோவின் சுய அறிமுகத்தோடு காட்சிகள் ஆரம்பிக்கின்றன. தந்தையை கொடூரமான முறையில் இழந்து, போலீஸ் அதிகாரியாகிறார் ஹீரோ. ஒரு மோசமான சமூக விரோத கும்பலை பழிவாங்க தாதா அருண் விஜய்யோடு தொடர்பு வைத்திருக்கிறார். சரியான நேரம் வரும்போது கும்பலை போட்டுத் தள்ளுகிறார். தப்பிக்கும் அருண் விஜய், ஹீரோவின் காதலியைப் போட்டுத் தள்ள... மீதி என்னவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

என்னை அறிந்தால்- விமர்சனம்

படத்தில் அஜீத் வசீகரிக்கிறார். ஒரு துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி, காதலியை இழந்து துயரில் கதறும் காதலன், பொறுப்பான அன்பான அப்பா என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் நடிப்பு முழுமையாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் அவர் நடிப்பில் பொறி பறக்கிறது.

ஆஷிஷ் வித்யார்த்தியுடன் அஜீத் மோதும் காட்சியிலும், ரவுடி கும்பலை எச்சரிக்கும் காட்சியிலும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

த்ரிஷாவுக்கு சின்ன வேடம் என்றாலும் படமெங்கும் வியாபித்து நிற்கும் அளவுக்கு சிறப்பான வேடம். அழகு, நடிப்பு இரண்டிலுமே குறை வைக்கவில்லை. மழை வரப் போகுதே.. பாடலில் த்ரிஷா அள்ளுகிறார்!

என்னை அறிந்தால்- விமர்சனம்

அனுஷ்காவின் நடிப்பில் குறையொன்றுமில்லை. சில காட்சிகளில் அவர் தோற்றத்தைப் பார்க்கும்போது, 'திருமணத்துக்கு நேரமாச்சு' என்ற அலாரம் கேட்கிறது!

இன்னொன்று, உடை விஷயத்திலும், மேக்கப்பிலும் த்ரிஷாவை பார்த்துப் பார்த்து இழைத்தவர்கள், அனுஷ்காவை கண்டுக்கவில்லை போலத் தெரிகிறது.

இறுக்கமான ஆக்ஷன் காட்சிகளுக்கு மத்தியில் விவேக்கின் வருகை பெரிய ரிலாக்ஸ்!

என்னை அறிந்தால்- விமர்சனம்

படத்தில் அஜீத்துக்கு இணையான முக்கியத்துவம் வில்லனான அருண் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து நடித்திருக்கிறார். முதல் முறையாக அவரது பாடி லாங்குவேஜ் பார்வையாளர்களை எரிச்சல்படுத்தாமல் இருப்பது இந்தப் படத்தில்தான்.

நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, பார்வதி நாயர், அனிகா என அனைவருமே கதையின் மாந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. பல காட்சிகள் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களை நினைவுறுத்துகின்றன. வசனங்களும்.

எண்பதுகளில் பெரும் வெற்றி கண்ட இயக்குநர்கள் தங்களுக்கென ஒரு பாணி வைத்திருந்தார்கள். ஆனால் முந்தைய படங்களின் காட்சிகள் எதுவும் ரிபீட்டாக மாதிரி பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரே கதை, ஏற்கெனவே வைத்த காட்சிகளை வேறு நடிகர்களை வைத்து ரீமேக் பண்ணுவது தனி பாணியாகிவிட்டது. கவுதம் மேனனும் இதிலிருந்து தப்பவில்லையோ என்று தோன்றுகிறது சில காட்சிகளை, பாத்திரப் படைப்புகளைப் பார்க்கும்போது.

என்னை அறிந்தால்- விமர்சனம்

படத்தின் பெரும் பலம் இசை. ஹாரிஸ் ஜெயராஜ் இரண்டு இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார். காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசை.

டான் மெக்ஆர்தரின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ். ஒவ்வொரு சூழலையும் நாடகத்தனமின்றி காட்டியிருக்கிறது.

என்னை அறிந்தால்- விமர்சனம்

கவுதம் மேனனைப் பொருத்தவரை, இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய மறுபிரவேசத்துக்கு உதவியிருக்கிறது. அதற்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்த அஜீத்துக்கு இன்னும் ஒரு பெட்டரான கதையை அவர் யோசித்திருக்கலாம்!

அதே நேரம் எடுத்துக் கொண்ட கதையை ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்காக, இந்தப் படத்தைப் பார்க்கலாம்!

 

உறுமீன் படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் சான்ட்ரா!

ஜிகிர்தண்டா படத்துக்குப் பிறகு மிகவும் பரபரப்பாகிவிட்ட பாபி சிம்ஹா, இப்போது நாயகனாக நடிக்கும் படம் உறுமீன்.

அவரை இந்த நிலைக்கு உயர்த்திய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்தான் இந்த உறுமீன் படத்தை புரமோட் செய்கிறார்.

உறுமீன் படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் சான்ட்ரா!  

உறுமீன் படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். இதில் பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக ஆராதனா அறிமுகமாகிறார். மேலும் இவர்களுடன் காளி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த டீமுடன் தற்போது சாண்ட்ராவும் இணைந்துள்ளார். இப்படத்தில் இவர் பாபி சிம்ஹாவிற்கு தோழியாக ஜெனிபர் எனும் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உறுமீன் படம் வேகமாக தயாராகி வருகிறது.

 

என்னை அறிந்தால்... ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷாலினி!

என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களுடன் ஆல்பட் தியேட்டரில் பார்த்து ரசித்தார் அஜீத்தின் மனைவி ஷாலினி.

என்னை அறிந்தால் படம் இன்று காலை வெளியானது. உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இப்படம் வெளியானது.

என்னை அறிந்தால்... ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷாலினி!

தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டார்கள். காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆரவாரமாக சென்று படத்தைப் பார்த்தனர்.

என்னை அறிந்தால்... ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷாலினி!

எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் அஜீத் கட்அவுட்கள் வைத்து இருந்தார்கள். கொடி தோரணங்களும் கட்டி இருந்தனர். பட்டாசு வெடித்து இனிப்புகளும் வழங்கினார்கள்.

என்னை அறிந்தால்... ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷாலினி!

இந்த தியேட்டரில் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார்.

என்னை அறிந்தால் படத்தை திரையிடக் கூடாது என்று தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது. இதனால் அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

செருப்பு, நகையைத் தொடர்ந்து... உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க சமந்தா முடிவு?

சென்னை: பிரபல நிறுவனத்தின் உள்ளாடைகளுக்கான விளம்பரத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் சொல்லிக் கொள்கிறபடி வெற்றிப் படங்கள் எதையும் தராவிட்டாலும், குறிப்பிடத்தக்க நடிகையாகவே வலம் வருகிறார் நடிகை சமந்தா. தெலுங்கில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கில் நடித்தவருக்கு, அதன் பின் அங்கு வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதனால், தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார் சமந்தா.

செருப்பு, நகையைத் தொடர்ந்து... உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க சமந்தா முடிவு?

இந்நிலையில், இந்தாண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தலா 3 படங்கள் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். இதுதவிர விக்ரம் ஜோடியாக இவர் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

பரபரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சமந்தாவின் கவனம் விளம்பரங்கள் மீதும் உள்ளது. ஏற்கனவே, அவர் பல முன்னணி நிறுவனங்களின் நகைகள், செருப்புகள் போன்றவற்றின் விளம்பரங்களில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது புதிதாக உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதற்காக சமந்தாவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

நல்ல வழியில் பணம் சம்பாதிப்பது தவறேயில்லை என்பது தான் சமந்தாவின் கொள்கை. இதனை அவரே பல பேட்டிகளில் திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறார். எனவே, அவரது இந்த உள்ளாடை விளம்பர முடிவு அதிர்ச்சி அளிக்கவில்லை என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

இந்த புதிய விளம்பர ஒப்பந்தத்தின் படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாடை விளம்பரங்கள் மற்றும் அந்த நிறுவனம் தொடர்பான விழாக்களில் சமந்தா பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சல்மான்கான், அக்‌ஷய்குமார், பிபாசா பாசு, சுனில் ஷெட்டி என உள்ளாடை விளம்பரங்களில் நடித்த திரைப் பிரபலங்கள் பலர் உள்ளனர். இவர்களைத் தனது முன்மாதிரியாக வைத்து தான் இந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஆனால், இது தொடர்பாக இதுவரை சமந்தா தரப்பில் இருந்தோ, அந்த உள்ளாடை நிறுவனத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!

மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் "இனி வரும் நாட்கள்".

எம்ஜேடி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க , முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம் .

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!

இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார் நதியா.

படம் குறித்து இயக்குநர் துளசிதாஸ் கூறுகையில், "டாக்குமெண்டரி எடுக்க போகும் கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதைத் தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைக்கதையாக அமைத்திருக்கிறோம்.

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!

பெண்களுக்கு நடிப்பில் முக்கியத்துவம் எல்லா படங்களிலும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் முழுவதுமே பெண்கள் மட்டும் நடிப்பதால், அவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு வாய்ப்பாக
அமைந்திருக்கிறது... பாட்டு, சண்டை காமெடி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கிறது ..

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!  

படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள் கதாநாயகன் எங்கே? என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை படத்தின் திரைக்கதையே நாயகன்," என்றார்.

படப்பிடிப்பு கம்பம் , நாகர்கோவில் , தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

 

ரஜினிகாந்த் பெயரை தலைப்பில் பயன்படுத்த நீதிமன்றம் தடை.. உச்சநீதிமன்றம் செல்ல முடிவு!

இந்திப் படம் ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆதித்ய மேனன் நடிக்க , பைசல் அகமது இயக்கும் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தின் தலைப்பில் தன் பெயர் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இது ரஜினியின் பெயரைக் கெடுக்கும் உள்நோக்கம் இல்லை என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறினர்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஜினியின் பெயரை படத்தின் தலைப்பில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது.

ரஜினிகாந்த் பெயரை தலைப்பில் பயன்படுத்த நீதிமன்றம் தடை.. உச்சநீதிமன்றம் செல்ல முடிவு!

இதைத் தொடர்ந்து படத்துக்கு வேறு தலைப்பு வைக்க இயக்குநர் முடிவு செய்துள்ளார்.

ஆனால் தயாரிப்பாளரோ, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளார்களாம்.

இதுகுறித்து இயக்குநர் பைசல் கூறுகையில், "இந்த விஷயத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை. ரஜினியை சங்கடப்படுத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவெடுத்திருக்கிறார். அவரை என்னால் தடுக்க முடியவில்லை," என்றார்.

 

மன நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர அனைவருக்கும் பிடித்த படம் "என்னை அறிந்தால்"- சிம்பு அட்டாக்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்னை அறிந்தால் திரைப்படத்தை நல்லாயில்லை என்று சொல்வார்கள், மற்றபடி தமிழில் வெகு காலத்திற்கு பிறகு வெளியாகியுள்ள அருமையா திரைப்படம் என்னை அறிந்தால் என்று சிலம்பரசன் கூறியுள்ளார்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர அனைவருக்கும் பிடித்த படம்

அஜித் நடித்துள்ள என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், நடிகர் சிம்பு தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வெகு காலத்திற்கு பிறகு தமிழில் அருமையான ஒரு படம் வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர, தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்.

தல அருமையாக நடித்துள்ளார். மாஸ்+கிளாஸ் நடிப்பு. இவ்வாறு சிம்பு பாராட்டியுள்ளார்.

 

என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

அஜீத்தின் என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

ஏ எம் ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் - அனுஷ்கா - த்ரிஷா - விவேக் நடித்துள்ள என்னை அறிந்தால் 1600 திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ளது.

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் இந்தப் படம் வெளியானது. மேள தாளம் முழங்க, அதிரடியாக முதல் காட்சி தொடங்கியது துபாயில்.

தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் வார நாளான வியாழக் கிழமை காட்டி படத்தின் அதிகாலைக் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர்.

சென்னையில் காசி, ஜோதி, உள்ளகரம் குமரன் போன்ற அரங்குகளில் மட்டும் காலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது.

இங்கெல்லாம் படம் பார்த்த ரசிகர்கள், அஜீத்தின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று கூறி கொண்டாடினர்.

ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை குறை கூறியுள்ளனர்.

 

'தல படத்தில் தலைவர் சீன்'... தியேட்டரே அதிருது!

அஜீத்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒரு காட்சியிலாவது ரஜினியின் படம் அல்லது ரஜினி படத்திலிருந்து ஒரு காட்சி இடம்பெறுவது வழக்கம்.

வான்மதி என்ற படத்தில் அஜீத் எப்படிப்பட்ட ரஜினி ரசிகன் என்பதைக் காட்ட ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.

அதில் அஜீத்தும் அவர் நண்பர்களும் ஒட்டும் ரஜினியின் போஸ்டரை ஒருவர் கிழித்துவிட, 'ஏன்ணே எங்க தலைவர் போஸ்டரை கிழிக்கிறீங்க?' என்று கேட்பார் அஜீத்.

'தல படத்தில் தலைவர் சீன்'...  தியேட்டரே அதிருது!

உடனே கிழித்தவர்கள், 'இவரெல்லாம் ஒரு தலைவரா.. தலைவரா வர இவருக்கு என்ன தகுதியிருக்கு?' என்பார்கள்.

அதற்கு பதிலளிக்கும் அஜீத், 'இதே இடத்துல உங்க தலைவர் போஸ்டர் இருந்து, நாங்க கிழிச்சிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?' என்பார்

'வெட்டுக்குத்து விழுந்திருக்கும்... ரத்த ஆறே ஓடியிருக்கும்' என்பார்கள் போஸ்டர் கிழித்தவர்கள்.

உடனே அஜீத், 'ஆனா நாங்க அப்படியெல்லாம் பண்ணாம, அமைதியா நின்னு பேசிக்கிட்டிருக்கோம். தொண்டனுக்கு வன்முறை கூடாதுன்னு அகிம்சையையும் சத்தியத்தையும் சொல்லிக்கொடுத்த தலைவர்யா அவரு. தலைவராக இதைவிட வேற என்ன தகுதி வேணும்?' என்பார்.

உடனே.. 'மன்னிச்சிக்க தலைவா... குடுங்கப்பா நாலு போஸ்டர்.. பண்ண பாவத்துக்கு நாங்களே ஓட்டிட்டுப் போறோம்...' என்று கிளம்பும் போஸ்டர் கிழித்த கோஷ்டி.

இதுபோல இன்னும் சில அஜீத் படங்களிலும் ரஜினியின் போஸ்டர் அல்லது காட்சியைக் காட்டுவார்கள்.

என்னை அறிந்தால் படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் மூன்று முகம் படத்தில் ரஜினியின் புகழ்பெற்ற பாத்திரமான அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர் இடம்பெறுகிறது.

அந்தக் காட்சி வந்ததும் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.

'தல படத்தில் தலைவர் சீன் பார்க்கவே பரவசமா இருக்கு' என ரசிகர்கள் தெரிவித்தனர்.

 

என்னை அறிந்தால்... கடல் தாண்டி இலங்கையிலும் கொண்டாடித் தீர்க்கும் அஜீத் ரசிகர்கள்!

கொழும்பு: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கு தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர்.

என்னை அறிந்தால்... கடல் தாண்டி இலங்கையிலும் கொண்டாடித் தீர்க்கும் அஜீத் ரசிகர்கள்!

தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு இலங்கையிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இப்படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தான் என்றும், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் பாராட்டியுள்ளன. அஜித் இந்தப் படத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளதாகவும், அருண் விஜய் நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் விமர்சனத்தில் அவை குறிப்பிட்டுள்ளன.

இப்படத்தில் தனக்குக் கொடுத்துள்ள கேரக்டர் குறித்து அருண் விஜய்யே, அஜீத் மற்றும் கெளதம் மேனனை பாராட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கையில் இப்படம் 20க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!

வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!  

படத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பேன்ட், ஒரு சிவப்பு ஓவர் கோட், மஞ்சள் ஸ்கார்ப் காஸ்ட்யூமில் சாய்ந்தபடி போஸ் கொடுக்கிறார் வடிவேலு. சுருள் முடி, ரவுண்டு கண்ணாடி, குறுகிய முறுக்கு மீசையுடன், பக்கா பழைய வடிவேலுவாக காட்சி தருகிறார்.

தெனாலிராமன் மாதிரி சீரியஸான படமில்லை.. இது சிரிப்புப் படம் என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த போஸ்டர்.

 

ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்

சென்னை: தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ், அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள ஷமிதாப் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் தனுஷ் பஸ் கண்டக்டராக இருந்து திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஆகிறார். பேச முடியாவிட்டாலும் சினிமாவில் சாதிக்கிறார்.

ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்

இந்நிலையில் தனுஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிடாதீர்கள். ரஜினிகாந்த் சாதித்ததில் நான் ஒரு சதவீதம் கூட சாதிக்கவில்லை. அதனால் அவருடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க எந்தவித காரணமும் இல்லை. ரஜினி ஒரு கிங், அவர் ஒரு கடவுள். அவர் தான் எப்பொழுதும் சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இந்த மாதம் ஷமிதாப் மற்றும் அனேகன் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. மேலும் அவர் தயாரித்துள்ள காக்கிச்சட்டை படமும் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரிலீசானது அஜித்தின் 'என்னை அறிந்தால்'! தெறி மாஸ் என்கின்றனர் ரசிகர்கள்

சென்னை: ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் தெறி மாஸ் என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.

ஏ கிளாஸ் ஆடியன்ஸ்சை ஈர்க்கும், கவுதம் மேனனும், ஆல் கிளாசையும் அபேஸ் செய்யும் அஜித்தும் இணைந்து ஸ்வீட் காம்போவாக கொடுத்துள்ள படம்தான் என்னை அறிந்தால். கடந்த மாதம் ரிலீசாக வேண்டிய திரைப்படம், பட வேலைகள் பாக்கி காரணமாக தாமதமானது. ஆனால் புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதைப்போல உள்ளது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு.

ரிலீசானது அஜித்தின் 'என்னை அறிந்தால்'! தெறி மாஸ் என்கின்றனர் ரசிகர்கள்

இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் நேற்றிரவே படம் ரிலீஸ் ஆன நிலையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ரிலீஸ் ஆனது. பெங்களூருவிலும் அதிகாலை ரிலீஸ் ஆனது. என்னை அறிந்தால் ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டர்களுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கட்-அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகளை வைத்து கொந்தளித்தனர் ரசிகர்கள்.

கேரளாவில் இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவுக்கு 107 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அங்கு முதல் ஷோ காலை 7.15 மணிக்கு ஆரம்பித்தது.

படம் பார்த்த ரசிகர்கள் அனைவரின் கருத்துமே, படம் தெறி மாஸ் என்பதுதான். வேறு வார்த்தைகள் ரசிகர்கள் வாயில் இருந்து வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. சத்யதேவ் கதாப்பாத்திரம் கர்ஜிப்பதாக பெருமைப்படுகின்றனர் ரசிகர்கள். கவுதம் மேனன் படத்திற்கே உரிய ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமில்லையாம். திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு அருமையாம்.

ஒரே படத்தில், காதல் மன்னனாகவும், அடித்து நொறுக்கும் தலயாகவும் அஜித்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். இதுவரை கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக வசூலை வாரிக்குவிக்கும் படம் என்னை அறிந்தாலாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. அப்போ.. அஜித்துக்கு ஹாட்ரிக்தான்..

 

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கிய அருண் விஜய்!

சென்னை: என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ள அருண் விஜய் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித், திரிஷா, அனுஷ்கா, பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகன், அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் (அது சஸ்பென்ஸ்). இன்று அதிகாலை ஷோவை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து தியேட்டரிலேயே கண் கலங்கி அழுதார்.

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கிய அருண் விஜய்!

இதை ரசிகர்கள் பார்த்து போட்டோ எடுத்தனர். தடயற தாக்க திரைப்படத்தில் உடலை வருத்தி நடித்த போதே அருண் விஜய் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதில் கிடைக்காத அங்கீகாரம், எனக்கு தல படத்தில் கிடைத்துவிட்டது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அருண் விஜய்.

தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து அருண் விஜய் கூறுகையில், "அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை" என்றும், மற்றொரு டிவிட்டில் "எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கவுதம் மேனனுக்கு பெரிய நன்றி" என்றும் கூறியுள்ளார்.