'அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங்': அஞ்சான் துவக்கப் பாடல் இது

சென்னை: அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங் என்பது தான் அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலாகும்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படமான அஞ்சான் சுதந்திர தினத்தன்று ரிலீஸாகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

'அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங்': அஞ்சான் துவக்கப் பாடல் இது

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பட்டையை கிளப்பும்படி இசையமைத்துள்ளதாக லிங்குசாமி நினைக்கிறார்.

அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அந்த துவக்க பாடலின் சில வரிகளை பார்ப்போம்.

அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே

பேங் பேங் பேங்

ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே

பேங் பேங் பேங்

ராஜு பாய் வந்து முன்னால நின்னா

பேங் பேங் பேங்

அஞ்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சோனியா மகளை விட நவாஸ் ஷெரீப் மகள்தான் கவர்ச்சி... ராம் கோபால் வர்மாவின் அடுத்த ஏடாகூடம்!

சர்ச்சை கிளம்ப வேண்டும் என்பதற்காகவே சமூக வலைத் தளத்தில் கருத்துப் பதிவு செய்பவர் ராம் கோபால் வர்மா.

சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில், 'ரஜினியிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார்' என்று கமெண்ட் போட்டு, ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள இன்னொரு பதிவு அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

சோனியா மகளை விட நவாஸ் ஷெரீப் மகள்தான் கவர்ச்சி... ராம் கோபால் வர்மாவின் அடுத்த ஏடாகூடம்!

அதில் 'சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்,' என்று எழுதியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி பதவியேற்பு விழா ஒரு அரசியல் விழாவா அல்லது சினிமா விழாவா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தார்கள் என்று கேலி செய்திருக்கும் அவர், மோடி பதவி ஏற்பையொட்டி இலங்கை, பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதையும் கிண்டலடித்துள்ளார் அவர்.

 

சூர்யாவின் அஞ்சான் ட்ரைலர்... ஜூன் 12-ல் வெளியாகிறது!

நடிகர் சூர்யாவின் அஞ்சான் பட முன்னோட்டக் காட்சி வரும் 12-ம் தேதி வெளியாகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் என பாலிவுட் நடிகர்கள் நிறைய பேர் இதில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சூர்யாவின் அஞ்சான் ட்ரைலர்... ஜூன் 12-ல் வெளியாகிறது!

சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிடப் போவதாக லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இதன் டிரெய்லரை வருகிற 12-ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜூன் இறுதியில் பாடல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

'லெஜன்ட்' பாலகிருஷ்ணாவுடன் டூயட் பாடப்போகும் த்ரிஷா

சென்னை: த்ரிஷா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

த்ரிஷா கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தவர். அவர் தெலுங்கு திரை உலகில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண், பிரபாஸ், வெங்கடேஷ், நாகர்ஜுனா என்று பெத்த பெத்த நடிகர்களுடன் நடித்தார். ஆனால் அவரால் பாலகிருஷ்ணாவுடன் மட்டும் நடிக்க முடியாமல் இருந்தது.

'லெஜன்ட்' பாலகிருஷ்ணாவுடன் டூயட் பாடப்போகும் த்ரிஷா

பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட மாட்டோமா என்று நினைத்து காத்திருந்தார் த்ரிஷா. அவரது ஆசை நிறைவேறிவிட்டது. ஆம் லெஜன்ட் படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் த்ரிஷா தான் நாயகி. சொல்லவா வேண்டும் த்ரிஷா தற்போது குஷியாக உள்ளார்.

புதுமுகம் சத்யதேவ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்குகிறது. படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பெத்த ஹீரோ, பெரிய தொகை, பெத்த படம் த்ரிஷா மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

 

ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?

ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா.

நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.

ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?

இந்த விழாவுக்கு நடிகர் ஷாமும் வந்திருந்தார். பாலா படத்தில் நடிக்கும் கனவு தனக்கும் இருப்பதாகக் கூறினார் ஷாம்.

இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார்.

அத்துடன் ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன் என்றும், அவர் பட்ட சிரமத்துக்காகவே அடுத்த படத்தில் ஷாமுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்றும் கூறினார்.

ஜெயம் ரவிக்கும் நிச்சயம் வாய்ப்பு தருவதாகக் கூறிய பாலா, அவரது கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன், என்றும் தெரிவித்தார்.

ஆக ஜெயம் ரவியும் ஷாமும்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள்...

 

விஜய் அப்படியே தான் இருக்கிறார்: ஆனால் அவர் லுக்கும், மாஸும்...- மதி

சென்னை: இத்தனை ஆண்டுகளில் விஜய் அப்படியே தான் உள்ளார். ஆனால் அவரது லுக்கும், மாஸும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது என்று ஒளிப்பதிவாளரான மதி தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் மதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மிர்ச்சி, பாண்டியநாடு மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்கள் ஹிட்டாகின.

விஜய் அப்படியே தான் இருக்கிறார்: ஆனால் அவர் லுக்கும், மாஸும்...- மதி

முன்னதாக கேமராமேன் சரவணனிடம் அவர் வேலை பார்த்தார். அப்போது அவர் விஜய்யின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் சரவணனுக்கு உதவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் விஜய் பற்றி கூறுகையில்,

நேரம் தவறாதவர் விஜய். அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது பற்றி நான் அசிஸ்டெண்டாக இருக்கையிலேயே கேள்விப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலாயுதம் படத்திற்காக டெஸ் ஷூட்டில் இருந்தேன். இத்தனை ஆண்டுகளில் விஜய் சற்றும் மாறாமல் அப்படியே தான் இருந்தார். அவருக்கு தலைக்கணம், பெரிய ஸ்டார் என்ற நினைப்பே இல்லை. அவர் கூலாக இருந்தார். ஆனால் அவரது லுக், மாஸ் ஆகியவை அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டன என்றார்.

 

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன்! - அடங்காத களஞ்சியம்

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன்! - அடங்காத களஞ்சியம்

என் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காவிட்டால், வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அஞ்சலியை நடிக்க விடமாட்டேன், என்று ஆவேசப்பட்டுள்ளார் இயக்குநர் மு களஞ்சியம்.

சமீபத்தில் களவு தொழிற்சாலை படத்தின் டப்பிங் பேச வந்திருந்த மு.களஞ்சியத்திடம் பேசினோம்...

"நான் இயக்கிய பூமணி படத்தை மராத்தியில் அதுல் குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளேன்..அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருகிறது. இந்த களவு தொழிற்சாலை படத்தில் உளவுதுறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும் கோடைமழை என்ற படத்தில் வெள்ளைத்துறை என்ற என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன் என்றார்.

அவரை இடைமறித்து அது சரி நீங்கள் ஹீரோவாக அஞ்சலி ஹீரோயினாக நடித்த 'ஊர் சுற்றி புராணம்' என்ன ஆச்சு? என்று கேட்டோம்.

இந்த பேர் வெச்சதாலோ என்னவோம் அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக் கிட்டுருகேன். போன வருஷம் மார்ச் மாதம் 12 நாட்கள் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார்.அதற்க்கு பிறகு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார். நானும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர், கில்டு , பெப்சி, இயக்குனர் சங்கம் என்று புகார் கொடுத்தேன் விடிவுகாலம் வரவில்லை.

தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் ஊர் சுற்றி புராணம் படத்தை மட்டும் தவிர்க்கிறார். இப்போது மீண்டு தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்து விட்டு மற்ற படங்களில் நடிக்கலாம்.

இது பற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதி கொடுத்திருக்கிறேன். முடிவு தெரியவில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும்... எனக்கு வேறு வழி தெரியவில்ல," என்றார்.

ஆக, அஞ்சலியை கோடம்பாக்கம் பக்கம் இப்போதைக்கு பார்க்க முடியாது போலிருக்கே!

 

ஆரம்பத்தில் பத்து.. அப்புறம் முப்பது... கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி!

தமிழில் சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

ஆரி, ஷிவதா நடித்து கிருஷ்ணா இயக்கத்தில் தமிழில் வெளியான படம் நெடுஞ்சாலை. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்க கிடைத்தன.

இந்தப் படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸானது.

ஆரம்பத்தில் பத்து.. அப்புறம் முப்பது... கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி!  

ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் மட்டும்தான் திரையிட்டிருக்கிறார்கள். படம் நன்றாக இருப்பதாக செய்தி பரவ, சட்டென்று பிக்கப்பாகிவிட்டது படம்.

ரசிகர்களின் அமோக வரவேற்பால் இப்போது முப்பது தியேட்டர்களில் திரையிடவிருக்கிறார்களாம் நெடுஞ்சாலையை.

இதுகுறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், "இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது," என்றார்.

 

நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம் – தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம் – தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

சென்னை: நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர சிகிச் சைக்குள்ளேயே வைக்கப்பட்டு இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனோரமாவுக்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். மூட்டுவலிக்கு அறுவைசிகிச்சை செய்தார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.