ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ செப்டம்பரில் ரிலீஸ் ?

Sridevi S Comeback Film English Vin

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ தேவி நடித்துள்ள ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக இங்கிலீசை தப்பும் தவறுமாக பேசி நடித்துள்ளாராம் ஸ்ரீதேவி.

போனிகபூருடன் திருமணம், குழந்தைகள் என சினிமாவிற்கு குட்பை சொன்ன நடிகை ஸ்ரீ தேவி 14 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்'. இயக்குநர் பால்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தினை அவரது மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் கதைப்படி ஸ்ரீதேவி நடுத்தர குடும்பத் தலைவியாக வருகிறார்.

அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர் போல் முதலில் நடிக்க வேண்டும். பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அமெரிக்கா சென்று அங்கு மொழிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் அங்குள்ளவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

இதையே சவாலாக ஏற்றுக்கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக்கொள்கிறார். பின்னர் ஆங்கிலம் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

இதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் அமெரிக்க ஆங்கிலத்தை முறைப்படியாக கற்றாராம் ஸ்ரீதேவி.

இந்த திரைப்படம் செப்டம்பரில் ரீலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் விளம்பர காட்சிக்காக அரைகுறையாக ஆங்கிலத்தில் பேசி நடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாராம் ஸ்ரீ தேவி.

சினிமாவுக்கே லாயக்கில்லாதவர் பிராச்சி தேசாய் - மகிழ்திருமேனி தாக்கு

Magizh Thirumeni Blasted Prachi

நடிகை பிராச்சி தேசாய் விவகாரம் மீண்டும் பெரிதாகிறது. தடையறத் தாக்க படத்தில் முதலில் ஒப்பந்தமாகி, பின், அட்வான்ஸைக் கூட திருப்பித் தராமல் ஓடிப்போன பிராச்சி, சினிமாவுக்கே லாயக்கில்லை என்று படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி. இப்படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். அவர் திடீரென நடிக்க மறுத்து படப்பிடிப்பில் இருந்து ஓடியதால் மம்தா மோகன்தாஸ் நாயகியானார்.

பிராச்சி தேசாய் ஓடியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் மகிழ்திருமேனி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக நடிக்க பிராச்சி தேசாயை தேர்வு செய்ததும் அவர் வீட்டுக்கு போய் முழு கதையையும் சொன்னேன். அவருக்கு பிடித்தது.

'முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன்' என்றார். அட்வான்சும் வாங்கினார்.

சென்னையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. பிராச்சி தேசாயும் அதில் நடிக்க மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்தார். இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்தோம். மறுநாள் காலை படப்பிடிப்பை திடீரென ரத்து செய்து விட்டு மும்பை போய்விட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியவில்லை.

அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்தார். பிராச்சி தேசாய் சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை.

அவர் நடிக்காவிட்டால் என்ன... 'தடையற தாக்க' படம் நன்றாக ஓடுகிறது," என்றார்.

கடலுக்கு வருவாரா நயன்தாரா? - காத்திருக்கிறார் மணிரத்னம்!

Mani S Offer Nayan Is Big Dilemma   

கடல் படத்திலிருந்து சமந்தா விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய ஹீரோயினாக நடிகை ராதாவின் இளம் மகள் துளசி அறிமுகமாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா இல்லாத குறையைப் போக்க முன்னணி நடிகை ஒருவரை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்து, அந்த வேடத்துக்கு நயன்தாராவை அழைத்துள்ளார்.

அநேகமாக அர்ஜுனுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மணிரத்னம் படத்தில் நடிக்க வந்துள்ள அழைப்பு நயன்தாராவுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்தப் படத்தால் தனக்கு நன்மையா.... அல்லது கேரக்டர் ஆர்டிஸ்ட் என்ற இமேஜுக்குள் தள்ளிவிடுவார்களா என்ற யோசனையில் மூழ்கியுள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா இப்போது அஜீத் ஜோடியாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கும் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு திருமண விருந்தளித்த சிரஞ்சீவி, ராம்சரண்!

Chiranjeevi Ram Charan Give Mega   

ராம்சரண் - உபாசனா திருமணத்தையொட்டி, தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் விருந்து தரப்பட்டது.

சிரஞ்சீவியும், அவர் மகன் ராம்சரணும் இந்த விருந்துக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கும் அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி பேத்தி உபாசனாவுக்கும் ஹைதராபாத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

மாலையில் அங்குள்ள நோவா நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடந்தது.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக நடந்தன. தெலுங்கு சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவு செலவழிக்கப்பட்டது.

50 வகை அறுசுவை உணவுகள், பல ஏக்கரில் அமைக்கப்பட்ட மணமேடை, சினிமா ஆர்ட் கலைஞர்களை வைத்து போடப்பட்ட திருமண பந்தல், மணமகன் மணமகளின் ராஜகம்பீர உடைகள் என ஒரு அரச கல்யாணமாக ஜொலித்தது.

திருமணத்துக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வருத்தமடைய கூடாது என்பதற்காக இன்று பிரத்யேக விருந்து நிகழ்ச்சிக்கு சிரஞ்சீவியும், ராம்சரணும் ஏற்பாடு செய்தனர்.

ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்த மொய்னாபாத் பண்ணை வீட்டில் இந்த விருந்து நடந்தது. இதில் ரசிகர்கள் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் பஸ், வேன்களில் வந்திருந்தனர். திருமண பந்தல் அலங்காரங்கள் கலைக்கப்படாமல் இருந்ததால், ரசிகர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர்.

நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!

Actress Chaya Singh Married Artist Krishna

பிரபல நடிகை சாயா சிங்குக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடந்தது.

தமிழில் திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி உள்பட 6 மொழிகளில் 25க்கும் அதிகமான படங்களில் நடித்தார். டிவி தொடர்களிலும் நடித்தார்.

அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது சாயா சிங்குக்கும், அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்தது. ஈரம், இதயத் திருடன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணா.

இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமண உறவாக மலந்துள்ளது.

சாயா சிங் - கிருஷ்ணா திருமணம் இருவரது பெற்றோர் சம்மதத்துடனும் சென்னையில் நடந்தது.

டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்.. ஆனா நான் டர்ட்டி பொண்ணு இல்ல! - சனா கான் பளிச் பேட்டி!

I M Acting Dirty Picture But I Am Not

நடிகை சனா கான்... போன மாதம் ஒரு நாள் திடீரென்று மீடியாவில் பரபரத்த பெயர். பெங்களூர் விபச்சார ரெய்டில் பிரபல சிலம்பாட்டம் பட புகழ் நடிகை சனா கான் கைது என்று செய்தி வெளியாக (ஒன்இந்தியா அல்ல), சினிமா உலகம் பதறியடித்துக் கொண்டு விசாரித்தது.

ஆனால் சிக்கியது இந்த சனா கான் அல்ல, அவர் மும்பையைச் சேர்ந்த துணை நடிகை என்பது தெளிவானது. இந்த விஷயத்தை அடுத்த நாளே பெங்களூர் சிந்தாபுரி சப் இன்ஸ்பெக்டர் ரவிஷங்கர் புகைப்பட ஆதாரத்தோடு வெளியிட்டார்.

தன் படத்தைப் போட்டு இந்த செய்தியை வெளியிட்ட மீடியாக்களுக்கெல்லாம் சனாகான் வக்கீல் நோட்டீசும் விட்டார்.

ஆனாலும் தன்னைப் பற்றிய தப்பான எண்ணம் இன்னும் இருக்குமோ என்ற சந்தேகத்தில், சென்னையில் வந்து நிருபர்களைச் சந்தித்து இன்று விளக்கமும் அளித்தார்.

அவர் கூறுகையில், "சனா கான் விபச்சார வழக்கில் கைது என்ற செய்தி வெளியான போது, நான் மும்பையில் எனது வீட்டை வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்த போன்கால்கள். என் தோழிகள், மேனேஜர் எல்லாம் விஷயத்தைச் சொன்னார்கள்.

அன்று நான் பட்ட வலி, அவமானம் கொஞ்சமல்ல. செய்யாத தவறுக்கு தண்டனையா என மனதில் அழுதேன். அடுத்த நாளே, பெங்களூர் போலீசார் கைதான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டாலும், மீடியா அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த செய்தி வெளியான அடுத்த நாளே நான் தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அன்றைக்கு அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை... 'இவள் அப்படித்தான் இருப்பாளோ.. பணம் இருப்பதால் தப்பி வந்துவிட்டாளோ' என்பதைப் போலிருந்தது.

இந்த சோதனையான கட்டத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்," என்றார்.

சனா கான் இப்போது மலையாளத்தில் தயாராகும் தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வந்த படத்தின் தழுவல் அல்ல... மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய ஆன்டனி ஈஸ்ட்மேன் எடுக்கும் ஒரிஜினல் கதையாம். சில்க் பற்றி தனக்குத் தெரிந்த உண்மைகளை இதில் காட்சிப்படுத்துகிறாராம் ஆன்டனி.

இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடிக்கிறார் சனா கான். இதுகுறித்து அவர் அடித்த கமெண்ட்: நான் டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்... ஆனா நிஜத்தில் ட்ர்ட்டி பொண்ணு இல்லே... ரொம்ப க்ளீன்!

அப்புறம்... சனா கான் நல்லா தமிழ் பேசறார்னு நிறைய கதைகளை மீடியாவில் அடித்துவிட்டிருந்தார்கள். அந்தப் பொண்ணுக்கோ தமிழில் பேச சுட்டுப்போட்டாலும் வரவில்லை!

துப்பாக்கியை இந்தியிலும் ரிலீஸ் செய்யும் ஏ ஆர் முருகதாஸ்!

Ar Murugadass Remake Thuppakki Bollywood   

படமே ரிலீசாகவில்லை... அதற்குள் விஜய்யின் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு ஏக போட்டி.

காரணம், படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்தான்.

இவர் ஏற்கெனவே தமிழில் ஹிட்டடித்த தன் கஜினி படத்தை இந்திக்கு கொண்டு சென்றார். அமீர்கானை வைத்து, அதே தலைப்பில் இயக்கி பெரிய வெற்றிப் படமாக்கினார்.

இப்போது விஜய்யை வைத்து எடுக்கும் துப்பாக்கி, கஜினியை விட பலவகையிலும் மேம்பட்ட படைப்பாக வரும் என்று முருகதாஸ் கூறி வருகிறார்.

எனவே இந்தப் படத்தை இந்தியில் அப்படியே ரீமேக் செய்து கொடுத்துவிடுங்கள் என முருகதாஸை நிரப்பந்திக்க ஆரம்பித்துவிட்டார்களாம் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் - தயாரிப்பாளர்கள்.

இதைத் தொடர்ந்து துப்பாக்கி ரீமேக் வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் முருகதாஸ் என்கிறார்கள்.

விஜய் வேடத்தில் இந்தியில் நடிக்கவிருப்பவர் அக்ஷய் குமார்!

மனோபாலாவின் காதல் கதை: 'நேயர் விருப்பம்'!

777 Manobala S Neyarviruppam

காதல் கதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது அதுபோலத்தான் காதலை மையமாக கொண்ட சினிமாவோ, சீரியலோ எத்தனை முறை பார்த்தாலும் புதிது போலவே இருக்கும்.

இதுபோல ஒரு காதல் கதைதான் பாலிமர் டிவியில் '777' தொடரில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றும் செந்தில் ஒரு பெண் நேயரின் விருப்பத்தை நிறைவேற்ற போடும் பாடலே அவரின் காதலுக்கு அடித்தளமாகிறது.

இந்த தொடர் செயற்கைத்தனமில்லாத அக்மார்க் காதல் கதை என்பதை நிச்சயமாக சொல்லலாம். காதலியுடன் தொலைபேசியில் பேசுவதாகட்டும், காதலை சொல்ல தனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடலை ஒளிபரப்புவதாகட்டும் எதிலுமே ஒரு செயற்கைத்தனமில்லை. நாமே அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போவதுபோல கதை நகர்கிறது.

இந்த தொடரில் எம்.எம் ஜாக்கியாக ரேடியோ மிர்ச்சி செந்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் ஒன்றும் புதிதாக மெனக்கெடத் தேவையில்லை. தினசரி அவருடைய நிகழ்ச்சிகளையே படம்பிடித்துக்கொள்ளலாம். செம ஹாட் மச்சி என செந்தில் கூறுவதே தனி ஸ்டைல்தான். அவரின் காதலியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். ஆதித்யா சேனலின் காமெடி தொகுப்பாளர் ஆதவனும் இதில் நடித்துள்ளார்.

ஸ்ரீவித்யாவில் உதடு பேசுவதை விட கண்கள் அதிகமாக பேசும். இது காதல் கதை என்பதால் உதடுகள் பேசும் வசனங்களை விட கண்கள் பேசும் வசனங்கள்தான் அதிகம் இருக்கின்றன. அடுத்தவர் நிகழ்ச்சிக்குள் புகுந்து காதலிக்கு பிடித்தமான பாடலை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டும் செந்திலுக்கு சிஇஓ விடம் டோஸ் கிடைத்ததா? இல்லை தப்பித்தாரா என்ற சஸ்பென்ஸ்சோடு நிற்கிறது கதை. காதலை கவிதையாய் சொல்லும் மனோபாலா இன்னமும் தான் சிறந்த இயக்குநர்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா... ? - லட்சுமி ராய் விளக்கம்

I Never Miffed With Hotel Staffs

கடந்த வாரம் முழுவதும் லட்சுமி ராய் பற்றிய ஒரு செய்தி மீடியாவில் பிரதானமாக இடம்பிடித்தது.

அது, 'தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் ரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்' என்பதுதான்.

இந்த செய்தி உண்மைதானா என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தல் கூட செய்யாமல் அவசர அவசரமாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் லட்சுமி ராய்க்கு கொஞ்சமல்ல... ரொம்பவே வருத்தம்.

உண்மையில் நடந்தது என்ன?

லட்சுமி ராயே சொல்கிறார்...

"நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்து கொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா..

உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை. எனவே எனக்கான அறையைத் தருமாறு அவர்களிடம் கூறிவிட்டு, வரவேற்பரையில் காத்திருந்தேன்.

அப்படியும் கூட அந்த அறை கிடைக்கவில்லை. வேறு ஹோட்டலில் வேறு அறையைத்தான் தந்தார்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் அதில்தான் தங்கினேன்.

ஆனால் அதற்குள் யார் என்ன சொன்னார்களோ... விஷயம் வேறு மாதிரி பரவி, என்னமோ நான் சண்டைக்காரி என்பதுபோல சித்தரித்து செய்தி வந்துவிட்டது.

இப்படித்தான் நான் ஏதோ தனி விமானத்தில் சென்னை வந்ததாக சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். அப்புறம் உண்மையைச் சொன்ன பின் அமைதியானார்கள்," என்றார்.

யானை தந்தம் விவகாரம்: நடிகர் மோகன்லால் விரைவில் கைது?

Mohanlal Get Arrested

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது கேரள வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை வீடுகளில் கடந்தாணடு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் சிக்கன. மேலும் எர்ணாகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்கள் ஆன பிறகும் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட தந்தங்கள் குறித்தோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தோ எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மோகன்லால் வீட்டில் கைப்பற்றிய தந்தங்கள் உண்மையான தந்தங்கள் தானா என கேட்டு தகவல் உரி்மை ஆணையத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் விண்ணபித்தார். இதற்கு பதில் அளித்த கேரள வனத்துறை மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்டது உண்மையான தந்தங்கள் தான் என்றும், அதை வைத்திருக்க அவர் லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலிடம் விசாரணை நடத்தும்படி கேரள டிஜிபி ஜேக்கப் புன்னுவிடம் அனில்குமார் புகார் அளித்தார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொச்சி திருக்காகரை உதவி போலீஸ் கமிஷனர் பிஜோ அலெக்சாண்டருக்கு டிஜிபி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதையடு்த்து மோகன்லாலிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். கடந்த இரண்டு தினங்களாக மோகன்லால் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு அவர் வீட்டில் இல்லை என்றதால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையே முறையான அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருந்ததாக மோகன்லால் மீது கோடநாடு வனச்சரக அதிகாரி நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து மோகன்லால் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்த லேகா ரத்னகுமார்!

Lekha Rathnakumar Composes Telugu Flick

விளம்பரப் படங்கள் இயக்குவதில் தனி முத்திரைப் பதித்த லேகா ரத்னகுமார், பின்னணி இசையமைப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், ஒரு ஆங்கிலப் படத்துக்கும் பின்னணி இசை அமைத்து வந்த லேகா ரத்னகுமார், தற்போது '6' என்ற தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

'கிரியேட்டிவ் மைன்ட் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் லிங்கட் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ஆர்.ஜே.சதாட்சரன், இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

ஜெகபதிபாபுவின் 100வது படம் இது. ஹீரோயினாக காயத்ரி அய்யர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகும் இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்திற்கு பின்னணி இசை தேவைப்பட்டதாகவும், அதனை தனது ஸ்டுடியோவில் வைத்து முடித்துக் கொடுத்ததாகவும் லேகா ரத்னகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "பக்கா த்ரில்லர் படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்பது சில காட்சிகளிலேயே புரிந்தது. அதனால் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இந்தப் படத்திற்கு இசை தந்திருக்கிறேன். பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

உடனிருந்த படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் லிங்கட் கூறுகையில், "லேகா ரதனகுமாரின் பின்னணி இசை நிச்சயம் ஆடியன்ஸை மிரட்டும். நான் எடுத்தபோது பார்த்ததைவிட, பின்னணி இசையுடன் படத்தைப் பார்த்த போது ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த உணர்வு இருந்தது," என்றார்.

ஸ்ரீகாந்த் லிங்கட் இயக்கும் அடுத்த தெலுங்குப் படத்துக்கும் லேகா ரத்னகுமார்தான் இசை தருகிறார் என்பது கூடுதல் செய்தி!

'அடடா இந்தப் படத்தை விட்டுவிட்டோமே என விஜய் வருந்தும் காலம் வரும்!' - சீமான்

Seeman Blasts Vijay Withdrawing From Pagalavan

பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.

விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.

பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.

ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

Kaka Radhakrishnan Passes Away

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: ராஜவேலு-. 92822 44040.

எக்கச்சக்க 'கட்'.. பில்லா 2 படத்துக்கு 'ஏ' - அதிருப்தியில் தயாரிப்பாளர் - ஜுன் 21-ல் ரிலீஸ் ஆகுமா?

Billa Gets A Producer Not Happy With The Cuts    | அஜீத்  

அஜீத் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.

இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை.

படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். இன்றுதான் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகுதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவிக்கவிருக்கிறோம். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை," என்றார்.

இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாமல் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

கலக்கல் யூகிசேது: 'யூகியுடன் யூகியுங்கள்'!

Yugisethu Yugiyudan Yugiyungal

சின்னத்திரையில் ஏதாவது ஒரு சேனலில் நையாண்டித்தனமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ நிகழ்ச்சிகளை வழங்குவது யூகிசேதுவின் ஸ்பெசல். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி யூகிசேதுவிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது.

இப்பொழுது ஜெயா டிவியில் யூகியுடன் யூகியுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறப்பான தோற்றத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற விஐபிக்கள் மட்டும்தான் சின்னத்திரையில் பேட்டி கொடுக்கவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்களை இனம் காட்டுகிறார் யூகிசேது. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடத்திலிட்ட விளக்காய் இருந்தவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்.

கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. பெற்ற தாயால் கைவிடப்பட்ட வாய்பேச முடியாத பெண் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியதோடு மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது, அதுபோல பாட்டிலில் படம் வரையும் டிரம்மர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவை தவிர, உலகம் முழுவதும் அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் யூகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு யூகியுடன் யூகியுங்கள் நிகழ்ச்சியை உங்கள் ஜெயாடிவியில் கண்டு ரசிக்கலாம். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர்.

நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?

How Veteran Actor Radhakrishnan Got Title Kaka

மறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக்.

இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு அவர் அளித்த பதிலில், "மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும்.

மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க..." என்றார்.

காகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.