2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா!

2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா!

சென்னை: தனக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிறுவனத்துக்கு 2டி என்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஏற்கெனவே சூர்யாவின் குடும்பத்தினர் ஸ்டுடியோ கிரீன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகின்றனர்.

இதனை சூர்யாவுக்கு தம்பி முறையான ஞானவேல் ராஜா நடத்தி வருகிறார். சூர்யா - கார்த்தியின் சமீப காலப் படங்களில் பெரும்பாலானவற்றை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

இன்னொரு பக்கம் ஸ்டுடியோ கிரீன் கிட்டத்தட்ட கார்த்தியின் சொந்தப் பட நிறுவனம் மாதிரி மாறிவிட்டது. அவரது அனைத்துப் படங்களையுமே ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது.

எனவே சூர்யா தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 2டி என்டர்டெயின்மென்ட் ('2D Entertainment') என்று தலைப்பிட்டு இருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறாராம். சூர்யாவின் முதல் குழந்தை பெயர் தியா. இரண்டாவது குழந்தை பெயர் தேவ்.

இந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா.

 

போலீசுக்கும் நீதிமன்றத்துக்கும் வெட்டி வேலை வைக்கும் அஞ்சலி - பாரதிதேவி!

சென்னை: அஞ்சலியை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரை அழைத்துவர போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.

கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி, தன் சித்தி பாரதி தேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார்.

அப்போது அவரை யாரோ கடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

போலீசுக்கும் நீதிமன்றத்துக்கும் வெட்டி வேலை வைக்கும் அஞ்சலி - பாரதிதேவி!

அஞ்சலியின் சகோதரரும் போலீசில் புகார் செய்தார். தமிழக, ஆந்திர போலீசார் அஞ்சலியை தேடி வந்த நிலையில், ஹைதராபாத் போலீசில் அஞ்சலி திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவரை தேடுவதை போலீசார் கைவிட்டனர். பின்னர் தெலுங்கு படங்களில் அஞ்சலி நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஹேபியஸ் கார்பஸ் வழக்கு விசாரணையில் அஞ்சலி மர்ம நபர் பிடியில் இருப்பதாக பாரதி தேவியின் வக்கீல் வாதிட்டார். அவரை கோர்ட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இதையடுத்து 9-ந் தேதி அஞ்சலியை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அஞ்சலியை தேடி பிடித்து அழைத்து வருவதற்காக போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.

சித்தியுடன் சமரசமாகி, ஹைதராபாதில் நிகழ்ச்சிகளுக்கு அவருடனே திரிகிறார் அஞ்சலி. அதேபோல ஹேபியஸ் கார்ப்பஸ் மனு கொடுத்துள்ள சித்தி பாரதிதேவியும் அஞ்சலியுடன்தான் இருக்கிறார். இருவருக்கும் சென்னை வரத் தெரியாதா... போலீசாருக்கும் நீதிமன்றத்துக்கும் வேறு வேலையே இல்லையா?

 

சிறந்த விளம்பரங்களுக்கான TEA விருதுகள்

சென்னை: சிறந்த தொலைக்காட்சி மற்றும் ஊடக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவிருக்கிறது.

சிறந்த விளம்பரங்களுக்கான விருதுகள் வெளிநாடுகளில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தென்னிந்தியாவில், தமிழில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த விளம்பரங்களுக்கான TEA விருதுகள்

தொலைக்காட்சிகளில் இன்றைக்கு நிகழ்ச்சிகளை விட மிக சுவாரஸ்யமாகத் திகழ்வது விளம்பரங்களே. காரணம், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பர இடைவெளியில் பார்வையாளர்கள் வேறு சேனல்களுக்கு தாவிவிடாத அளவுக்கு சுவாரஸ்யமாக விளம்பரங்களைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து TEA (Thomas Edison Advertisement Award) விருதினை வழங்குகிறது ஜெசெல்வகுமாரின் எடிசன் விருது நிறுவனம்.

இந்த நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த விளம்பரங்களுக்கான TEA 2013 விருது குறித்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் லோகோ அறிமுகம் புதன்கிழமை ஷெல்ட்டர் ஹோட்டலில் நடந்தது.

இந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ரா தேவி ராமையா, நடிகைகள் வரலட்சுமி, காதல் சரண்யா, அர்ச்சனா, நடிகர் வின்சென்ட் அசோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, TEA 2013 லோகோவை அறிமுகப்படுத்தினர்.

விளம்பரங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் வாக்களிப்பை நடிகர் வின்சென்ட் அசோகன் தொடங்கி வைத்தார். www.edisonawards.in என்ற இணைய தளத்தில் பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்த விளம்பரங்கள் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு வாக்களிக்கலாம்.

 

அன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

அன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: அன்னக்கொடி படத்தை கண்டித்து சில அமைப்புகள் இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுமுகம் லட்சுமண், கார்த்திகா, மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அன்னக்கொடி. படத்தில் தலித் பையனான லட்சுமண், தேவர் வீட்டு பெண்ணான கார்த்திகாவை காதலிக்கிறார். இந்த சாதி கலப்புக்கு படம் வெளியாகும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது.

தேவர் அமைப்பு சார்பில் படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தவிர படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்புகள் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

கன்னட நடிகர் ஹேமந்த் குமார் 24 வயதில் மரணம்!

கன்னட நடிகர் ஹேமந்த் குமார் 24 வயதில் மரணம்!

பெங்களூர்: கன்னட நடிகர் ஹேமந்த் குமார் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 24.

நேனபினங்களா என்ற கன்னடப் படத்தில் சுப்ரிதா, ரமேஷ் பட், கரிபசவய்யா, சுதா பெலவாடி ஆகியோருடன் நடித்தவர் ஹேமந்த் குமார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடித்திருந்தார்.

தொட்டபெல்லபுதூரில் பிறந்த ஹேந்த் குமார் குறித்து, அவரை இயக்கிய தனுச்சந்திர மவினகுன்டே கூறுகையில், "நல்ல திறமையான நடிகர். செட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பார். கன்னடத் திரையுலகுக்கு அவரை மாதிரி நிறைய இளம் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அவரை என் அடுத்த படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருந்தேன். படத்துக்கு தலைப்பை அறிவிக்க திட்டமிட்டிருந்த போது அவர் இப்படி அகாலமாக இறந்துவிட்டார்," என்றார்.

மாரடைப்பு காரணமாகவே ஹேந்த் குமார் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read in English: Actor Hemanth Kumar dead
 

மீண்டும் நடிக்க வருவாரா குல்பி?

சென்னை: திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டிலான குல்பி நடிகையை மீண்டும் நடிக்க வருமாறு இயக்குனர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளாராம்.

குல்பி என்று கோலிவுட்டில் அழைக்கப்பட்ட நடிகை ஒருவரின் பெயரைக் கூறினால் அவரது சிரிப்பும், அப்பாவித் தனமாக பேச்சும் தான் நமக்கு ஞாபகம் வரும். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரை தனது படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவருக்கு பெயரும் வாங்கிக் கொடுத்தவர் பால் இயக்குனர்.

நடிகை உச்சத்தில் இருக்கையிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அந்த பால் இயக்குனர் தான் எடுக்கும் புதிய படம் ஒன்றில் செம வெயிட்டான ரோலில் நடிக்க குல்பியை அழைத்துள்ளாராம். குல்பியோ நான் படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன், நடிப்பில்... என்று இழுத்துள்ளாராம்.

பின்னர் கேட்டது தனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனராச்சே என்று கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்துக் கூறுகிறேன் என்றாராம் நடிகை.

 

கொஞ்சமாவது ரகசியம் வேணுங்க!- நடிகர் விஜய்

சென்னை: மேக்கிங், புரமோஷன் என்ற பெயரில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் வெளியில் விடுவது சரியல்ல, கொஞ்சமாவது ரகசியம் வேணும், என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா ரொம்ப எமோஷனல் மீடியம். ஒரு ரசிகன் தியேட்டருக்கு வந்தா, அவனை நாம தியேட்டர் சீட்ல உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத்துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக்.

கொஞ்சமாவது ரகசியம் வேணுங்க!- நடிகர் விஜய்

ஆனா இப்போ, 'மேக்கிங்', 'புரமோஷன்'னு படப்பிடிப்பு ரகசியங்களை ஜஸ்ட் லைக் தட் ஷேர் பண்ணிடுறாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் ரகசியமா வெச்சிருப்பாங்க. ரசிகர்களும் தியேட்டர் ஸ்க்ரீன்ல அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு ரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை.

ஷூட்டிங்கில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்'கிற பேர்ல ஓப்பனா எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை தியேட்டர்ல பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது. 'இந்த சீனா? இதை எப்படி எடுத்தாங்கன்னு நான் நெட்லயே பார்த்துட்டேனே'னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க. அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா! மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கங்ணா!', என்று குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்சமாவது ரகசியம் வேணுங்க!- நடிகர் விஜய்
 

சித்தியோடு கத்தி கத்தி சண்டை போட்டு குண்டான நடிகை

சென்னை: சமீபத்தில் மீடியாக்களுக்கு தொடர்ந்து நல்ல ஹாட் நியூஸ்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தவர் அங்காடி நடிகை.

ஊர் ஊராக ஓடி ஒளிந்ததில் கண்டதையும் சாப்பிட்டு கொழுப்பு ஓவராகப் போட்டு விட்டதாம். ஏற்கனவே இயக்குநருடனான சண்டையால் இவரை தங்களுடய படத்தில் நடிக்க வைக்கவே இயக்குநர்களும், நடிகர்களும் அஞ்சுகின்றனர்.

இருந்தாலும் அடி மனதில் அங்காடி மீது கொஞ்சமாவது அன்பு வைத்துள்ள சில நல்ல உள்ளங்கள் அவரை படத்திற்காக அணுகச் சென்றாலும் அம்மணியின் தற்போதைய உடலைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்களாம்.

தனது பெருத்த உடலைக் கண்டு அம்மணிக்கே அழுகை அழுகையாக வருகிறதாம். இந்த பெருத்த உடலால் எந்த உடையும் அம்மணிக்கு பொருந்த மாட்டேன்கிறதாம். அதனால், படப்பிடிப்பில் ஓய்வில் இருக்கும் நேரங்களில் யாராவது சக நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு ஷட்டில் விளையாடக் கிளம்பி விடுகிறாராம்.

ஆனால், உடம்பு தான் இன்னும் குறைந்த பாடில்லையாம்.