ஜீவா-சமந்தா-கெளதம் மேனனின் 'நீதானே என் பொன் வசந்தம்!


கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிப்பது குறித்து சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது அது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘நீதானே என் பொன்வசந்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல் வரி இது.

இந்தப் படத்தில் எஞ்ஜினீயரிங் கல்லூரி மாணவராக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போன்ற இனிமையான ரொமான்டிக் படம் இது என கவுதம் மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் இசையக்க, எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் கதவும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோவாக ராம் நடிக்கிறார். இந்தப் படத்திலும் ஹீரோயினாக சமந்தாவே நடிக்கிறார்.

ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் மற்றும் கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் இணைந்து தயாரிக்கும் படம் இது.

 

தெலுங்கிலும் அமலா பால்!


முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால்

நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.

மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.

அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.

அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

 

இன்டர்நெட்டில் மங்காத்தா... திரையரங்குகளில் வசூல் பாதிப்பு!


மங்காத்தா படம் வெளியான ஆறாவது நாள் அதன் ‘பக்கா’ பிரிண்ட் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துவிட்டது.

இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக புதிய படங்களை ஒளிபரப்புவது திருட்டு டிவிடியைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மங்காத்தா வெளியான மிகச் சில தினங்களுக்குள் அதன் ஒரிஜினல் பிரிண்டே இணையதளங்களில் வெளியாகிவிட்டது.

இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கும் இளம் தலைமுறையினர், டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமின்றி, வீட்டில் இணையதளம் மூலம் பார்த்துவிடுகின்றனர்.

இது தியேட்டர் ரிசல்டை கடுமையாக பாதித்துள்ளது. மங்காத்தா வெளியானபோது அந்தப் படத்துக்கு தொடர்ந்து 5 நாட்கள் பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே கமலா, காசி, உதயம் உள்ளிட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. மாலை காட்சிக்கு மட்டும் ஓரளவு நல்ல கூட்டம்.

செவ்வாய்க்கிழமையும் நிலைமை இதுதான். இதற்கான பின்னணியில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தை ஒளிபரப்பும் கும்பல் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது மங்காத்தா குழு.

இதனால் ஹிட் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள மங்காத்தாவின் ஒட்டுமொத்த ரிசல்டே பாதிக்கும் நிலை உள்ளதால், நாளை போலீசாரிடம் புகார் தரவும் முடிவு செய்துள்ளார்களாம் வெங்கட் பிரபு மற்றும் குழுவினர்.

 

''நான் இருக்க, கங்கனா எதுக்கு?'' பாரிஸ் ஹில்டன்!!


ஹாலிவுட் நடிகையும், பிரபல தொழில் அதிபருமான பாரிஸ் ஹில்டன் தனது ஆபரணத் தயாரிப்புகளை இந்தியாவில் விளம்பரம் செய்ய கங்கனா ரனோத்தை அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனோத். பாரிஸ் ஹில்டன் நடத்தும் ஆபரண வியாபாரத்திற்கு உலகம் முழுவதும் விளம்பரம் செய்து வருகிறார். இந்தியா மீதும் அவர் கண் உள்ளது. அதற்காக பாரிஸ் தன்னை அணுகியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாஸடர் நான் தான் என்றார் கங்கனா. ஆனால் பாரிஸ் தரப்பு இதை மறுத்துள்ளது.

இது குறித்து பாரிஸின் நகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பிரக்யா நரங் கூறியதாவது,

கங்கனா ரனோத்தை அணுகவேயில்லை என்று பாரிஸ் ஹில்டன் தெரிவித்துள்ளார். அவரது பேஷன் லைனுக்கு பாரிஸ் தான் அம்பாஸடராக இருக்கப் போகிறார். உலக அளவில் பாரி்ஸ் ஹில்டனே ஒரு மெகா ஸ்டார். அப்படி இருக்க அவது பேஷன் லைனுக்கு வேறு யாரையாவது ஏன் தேட வேண்டும். உலகின் எந்த பகுதியிலும் அவரது பேஷன் பொருட்களுக்கு வேறு எந்த ஒருவரின் முகமும் தேவையில்லை என்றார்.

 

இன்டர்நெட்டில் மங்காத்தா... திரையரங்குகளில் வசூல் பாதிப்பு!


மங்காத்தா படம் வெளியான ஆறாவது நாள் அதன் ‘பக்கா’ பிரிண்ட் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துவிட்டது.

இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக புதிய படங்களை ஒளிபரப்புவது திருட்டு டிவிடியைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மங்காத்தா வெளியான மிகச் சில தினங்களுக்குள் அதன் ஒரிஜினல் பிரிண்டே இணையதளங்களில் வெளியாகிவிட்டது.

இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கும் இளம் தலைமுறையினர், டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமின்றி, வீட்டில் இணையதளம் மூலம் பார்த்துவிடுகின்றனர்.

இது தியேட்டர் ரிசல்டை கடுமையாக பாதித்துள்ளது. மங்காத்தா வெளியானபோது அந்தப் படத்துக்கு தொடர்ந்து 5 நாட்கள் பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே கமலா, காசி, உதயம் உள்ளிட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. மாலை காட்சிக்கு மட்டும் ஓரளவு நல்ல கூட்டம்.

செவ்வாய்க்கிழமையும் நிலைமை இதுதான். இதற்கான பின்னணியில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தை ஒளிபரப்பும் கும்பல் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது மங்காத்தா குழு.

இதனால் ஹிட் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள மங்காத்தாவின் ஒட்டுமொத்த ரிசல்டே பாதிக்கும் நிலை உள்ளதால், நாளை போலீசாரிடம் புகார் தரவும் முடிவு செய்துள்ளார்களாம் வெங்கட் பிரபு மற்றும் குழுவினர்.

 

''நான் இருக்க, கங்கனா எதுக்கு?'' பாரிஸ் ஹில்டன்!!


ஹாலிவுட் நடிகையும், பிரபல தொழில் அதிபருமான பாரிஸ் ஹில்டன் தனது ஆபரணத் தயாரிப்புகளை இந்தியாவில் விளம்பரம் செய்ய கங்கனா ரனோத்தை அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனோத். பாரிஸ் ஹில்டன் நடத்தும் ஆபரண வியாபாரத்திற்கு உலகம் முழுவதும் விளம்பரம் செய்து வருகிறார். இந்தியா மீதும் அவர் கண் உள்ளது. அதற்காக பாரிஸ் தன்னை அணுகியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாஸடர் நான் தான் என்றார் கங்கனா. ஆனால் பாரிஸ் தரப்பு இதை மறுத்துள்ளது.

இது குறித்து பாரிஸின் நகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பிரக்யா நரங் கூறியதாவது,

கங்கனா ரனோத்தை அணுகவேயில்லை என்று பாரிஸ் ஹில்டன் தெரிவித்துள்ளார். அவரது பேஷன் லைனுக்கு பாரிஸ் தான் அம்பாஸடராக இருக்கப் போகிறார். உலக அளவில் பாரி்ஸ் ஹில்டனே ஒரு மெகா ஸ்டார். அப்படி இருக்க அவது பேஷன் லைனுக்கு வேறு யாரையாவது ஏன் தேட வேண்டும். உலகின் எந்த பகுதியிலும் அவரது பேஷன் பொருட்களுக்கு வேறு எந்த ஒருவரின் முகமும் தேவையில்லை என்றார்.

 

என் அக்கா டாப்லெஸ் போஸ் கொடுக்கவில்லை... அது மார்ப்பிங்! - காஜல் தங்கை


எப்எச்எம் என்ற ஆங்கில பத்திரிகைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து சிக்கலுக்குள்ளாகியுள்ளார் காஜல் அகர்வால்.

இதிலிருந்து விடுபட வழக்கம்போல பொய் சொல்ல ஆரம்பித்துள்ளார். ‘அப்படி போஸ் கொடுக்கவே இல்லை… அது மார்ப்பிங்’ என்ற பழைய பல்லவியை இவரும் பாடத் தொடங்கிவிட்டார்.

காஜலின் தங்கையும் நடிகையுமான நிஷாஅகர்வால் தன் அக்காளின் அரைநிர்வாணத்துக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், “காஜர் அகர்வால் அரை நிர்வாண போஸ் கொடுத்தாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தப் படத்தில் இருப்பது என் அக்கா இல்லை. அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக இதை செய்து உள்ளனர். ஆபாச படத்தை பார்த்து காஜல் அகர்வால் மனம் நொந்துள்ளார்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் விசாரிக்கிறார்கள். குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்,” என்றார்.

எப்எச்எம் என்பது பெரிய அளவில் புகழ்பெற்ற பத்திரிகை. ஆண்களுக்கான பேஷன் பத்திரிகையான இதன் அட்டையில் டாப் நடிகைகள் போட்டி போடுகின்றனர். பெரும் சம்பளம் அவர்களுக்குத் தரப்படுகிறது.

ஆனால் இந்தப் பத்திரிகை மார்ப்பிங் செய்து காஜல் படத்தை வெளியிட்டதாகக் அவரது தங்கை கூறியிருப்பது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. பத்திரிகைத் தரப்பில், காஜலுடன் போடப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை வெளியிடும் முயற்சியில் உள்ளதாகத் தெரிகிறது.

 

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின்!


'ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணனும், ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கணும்...', இதுதான் திரையுலகில் உள்ள பெரும்பாலானோரின் (ரஜினி விமர்சகர்களையும் சேர்த்து) அதிகபட்ச ஆசை, கனவு என்றால் மிகையல்ல!

நேற்று நடிக்க வந்த 16 வயதுப் பெண்ணும் ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கணும் என்று பெருமையுடன் சொல்வதைக் கேட்கலாம்.

ரஜினியை வைத்து என் பாணியில் வித்தியாசமான படம் பண்ணனும் என்பதே அவரை அவ்வப்போது விமர்சிக்கும் சேரனின் ஆசை!

அந்த வரிசையில் இப்போது பேரரசு.

சமீபத்தில் ஈரோட்டில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு, தன் சொந்த செலவில் இரண்டாயிரம் பள்ளி மாண மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் நிருபர்களைச் சந்தித்த அவர், "நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.

தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. திருத்தணிக்குப் பிறகு நான் இயக்கும் படம் சிவகங்கை.

ரஜினி ரசிகன்...

நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். எல்லோரையும் போல இது ஒரு வழக்கமான கனவு என நினைத்துவிட வேண்டாம். அவருக்கான கதை, திரைக்கதை, வசனம் உள்பட பக்கா ஸ்கிரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது.

ராணா படத்துக்கு பின்னர் ரஜினி சாரை நிச்சயம் சந்திப்பேன்," என்றார்.
 

இதயக் கோளாறு: சல்மானுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை


இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வரும் ஜனவரி மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் சல்மான் கானுக்கு டிரைஜெமினல் நியூரால்ஜியா(Trigeminal Neuralgia) என்னும் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவரது தாடைப் பகுதியில் வலி ஏற்பட்டு அவஸ்தை பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது.

சுமார் 8 மணி நேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சல்மான் குணமடைந்துள்ளார். அடுத்த வாரம் அவர் பழையபடி படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று அவரது தங்கை கணவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சல்மானுக்கு அறுவை சிகிச்சை நடந்த அதே நாளில் வெளியான பாடிகார்ட் படம் சக்கை போடு போடுகிறது. ரிலீஸான முதல் 5 நாட்களில் ரூ. 88 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சல்மான் இதயத்தில் இருந்து பிற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவருக்கு வரும் ஜனவரி மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

ரெட்டியை 'கட்' பண்ணும் ஐடியா இல்லை! - சமீரா


சாதிப் பெயரை வெளியில் சொல்வதே அவமானம் என்ற ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் பலர் தங்கள் பெயருடன் ரெட்டி, மேனன், அய்யர், நாயர், நாயுடு, முதலியார் என சாதிப்பெயரைச் சேர்த்துக் கொண்டு அலப்பறை பண்ணுகிறார்கள்.

கேட்டால் குடும்பப் பெயர் என்று கூறி மழுப்புகிறார்கள். நடிகர்களில் யாருமே சாதிப்பெயரை சுமந்து கொண்டு திரிவதில்லை. தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் கூட கிடையாது.

நடிகைகளின் இந்த சாதிப் பெயர் மோகத்தை கடுமையாக சாடி வருகின்றனர் சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை நடிகைகள்.

இந்த நிலையில் நேற்று நடந்த வெடி பட பிரஸ் மீட்டில் பங்கேற்ற படத்தின் நாயகி சமீரா ரெட்டியிடம், ஏன் உங்களுக்கு இந்த சாதி வெறி? இதை மாற்றிக் கொள்ள மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு சமீரா அளித்த பதில் அவரது 'சாதிப் பெருமை'யை பறைசாற்றுவதாக அமைந்தது. அவர் கூறுகையில், "நான் எதற்காக இந்தப் பெயரை மாற்ற வேண்டும்.

சமீரா ரெட்டி என்பது நான் பிறந்தபோதே வைக்கப் பட்ட பெயர். ரெட்டி என்பது எனது குடும்பத்து பெயர். எங்கள் சமூகத்தின் பெருமை அது. அதை என் பெயருடன் சேர்த்து இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். அதை நீக்கவே மாட்டேன்," என்றார்.
 

பாடிகார்ட்: 5 நாட்களில் ரூ. 88 கோடி வசூல்- புதிய சாதனை


சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பாடிகார்ட் ரிலீஸாகி 5 நாட்களில் ரூ. 88 கோடி வசூலை அள்ளியுள்ளது.

சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவான பாடிகார்ட் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை பற்றி விமர்சனம் ஒன்றும் ஆஹா, ஓஹோ என்றில்லை என்றாலும் வசூல் என்னவோ அமோகமாக உள்ளது. ரிலீஸான 5 நாட்களில் மட்டும் ரூ. 88 கோடி வசூல் என்றால் பாருங்களேன்.

சித்திக் இயக்கிய பாடிகார்ட் ரிலீஸ் ஆகும் வரை தபாங் மற்றும் 3 இடியட்ஸ் தான் வசூலை அள்ளிக்குவித்த படங்களாக இருந்தன. தற்போது அந்த 2 படங்களின் சாதனைகளை பாடிகார்ட் முறியடித்துள்ளது.

சல்மான், சோனாக்ஷி நடித்த தபாங் படத்திற்கு ரிலீஸான முதல் வாரத்தில் ரூ. 81 வசூல் ஆனது. ஆமிர் கானின் 3 இடியட்ஸ் படத்திற்கு ரூ. 80 கோடி வசூல் ஆனது.

பாடிகார்ட் படத்தின் பட்ஜெட்டே ரூ. 60 கோடி தான். முதல் 5 நாட்களிலேயே ரூ. 88 கோடி வசூல் என்றால் படக்குழுவினருக்கு ஜாக்பாட் தான்.
 

ஓட்டல் அதிபருடன் காதல் திருமணம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரீமாசென்!


நடிகை ரீமாசென், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் 2012-ல் நடக்கிறது. இதனை ரீமா சென்னே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.

'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ரீமாசென். செல்லமே, பகவதி, தூள், கிரி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவருக்கும், டெல்லியில் ஓட்டல் நடத்தி வரும் ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் கடந்த 2 வருடங்களாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். ஷிவ்கரன் சிங்கை தனது நண்பர் என்று ரீமாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.

இதுகுறித்து இரு ஆண்டுகளுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அப்போது மறுத்து வந்த ரீமா, இப்போது தனது காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்

அவர் கூறுகையில், "நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம். நாளடைவில் எங்கள் நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக புரிந்து கொண்டோம்.

அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன் சின் கிடைத்தது, என் அதிர்ஷ்டம்.

பெற்றோர் சம்மதத்துடன்...

எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து நானும், ஷிவ்கரன்சிங்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதமும் கிடைத்து விட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப்பின் நடிப்பேனா, மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டெல்லியில் குடியேறி விடுவேன். டெல்லி, எனக்கு மிகவும் பிடித்த நகரம்,'' என்றார்.
 

சசிகுமாரின் 'போராளி'... ஒரு அறிமுகம்!


'ஈசனு'க்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த இயக்குநர் - தயாரிப்பாளர் - வெற்றிகரமான ஹீரோ சசிகுமார், மீண்டும் தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் 'போராளி'யாக!

'உன் படத்தில் நான் ஹீரோ, என் படத்தில் நீ ஹீரோ' என்ற 'சசி - சமுத்திரக்கனி ஒப்பந்தப்படி' சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்டக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது.

படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிஆர்ஓ நிகில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சசிகுமார் பேசுகையில், "அது என்ன போராளி என்ற கேள்வியோடு பலர் வந்திருப்பீர்கள். இது தீவிரவாதம் பற்றியதல்ல. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எவ்வளவோ போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

வீட்டை விட்டு வெளியில் வந்து மீண்டும் வீட்டுக்குள் போவதற்குள் ஆயிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி போராடும் 4 பேரின் கதைதான் 'போராளி.' நான் (சசிகுமார்), அல்லரி நரேஷ், ஸ்வாதி, நிவேதா ஆகிய 4 பேரும்தான் அந்த போராளிகள்.

2 ஆண்டுகளாக வளர்த்த முடி

'போராளி' படத்துக்காக, கடந்த 2 வருடங்களாக நான் தலைமுடியை வளர்த்தேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்தேன். இப்போது நீங்கள் பார்ப்பது வேறு. படத்தில் இந்த ஜடா முடியுடன் எனக்கு இன்னொரு தோற்றமும் இருக்கிறது,'' என்றார்.
 

சம்பள பிரச்சினை... நாளை முதல் புதிய படங்களைத் தொடங்கமாட்டோம்! - தயாரிப்பாளர்கள் அறிவிப்பு


சென்னை: 'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை காரணமாக, நாளை (புதன்கிழமை) முதல் புதிய படங்களை தொடங்க மாட்டோம், என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி)த்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பட அதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய சம்பள விகிதப்படி சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று சில தொழிலாளர்கள் நிபந்தனை விதித்ததால், சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த பட அதிபர்களின் கூட்டுக் கூட்டம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்)யில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தின் முடிவில், 4 மொழி பட அதிபர்கள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை 'பிலிம்சேம்பர்' தலைவர் கல்யாண், நிருபர்கள் மத்தியில் படித்தார்.

அந்த அறிக்கையில், "கடந்த இரண்டு மாதங்களாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மூலம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன், புதிய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இந்த சூழ்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த அமைப்புகள் அதிகபட்சமான, வரைமுறையற்ற ஊதிய உயர்வினை அறிவித்து விட்டார்கள்.

ஆனால், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் நடந்த ஊதிய ஒப்பந்தத்தில் 10 முதல் 28 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வினை அளித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புதிய படங்கள் நிறுத்தம்

மும்பையில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு மட்டும் வரைமுறையற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் வாங்குவதால், தயாரிப்பாளர்கள் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், தென்னிந்திய மொழிகளை (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) சேர்ந்த தயாரிப்பாளர்கள் இணைந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில், வருகிற 7-ந் தேதி (நாளை) முதல் புதிய படங்கள் ஏதும் தொடங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 31-ந் தேதிக்குள்...

தற்போது நடைபெற்று வரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், அதற்கான பணிகளை வருகிற 31-10-2011-ந் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் எங்களுக்கு விருப்பமான எந்த பிரிவை சேர்ந்த தொழிலாளர்களையும் பணியில் அமர்த்திக்கொள்ளவோ அல்லது தேவையான ஆட்களை மட்டும் பணியில் அமர்த்திக்கொள்ளவோ எங்களுக்கு உரிமை உள்ளது.

கர்நாடகாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள புதிய ஊதிய உயர்வை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

நேற்று நடந்த படஅதிபர்களின் கூட்டுக்கூட்டத்தில் பிலிம்சேம்பர் தலைவர் கல்யாணுடன் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவிகொட்டாரக்கரா, துணைத் தலைவர் டி.சிவா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் தலைவர் கேயார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர்கள் கே.முரளிதரன், கதிரேசன், தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் மற்றும் ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.

பெப்சி பதில்

தயாரிப்பாளர்களின் இந்ததீர்மானம் பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளர் ஜி.சிவாவிடம் கேட்டபோது, "நாங்கள் எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்புகளை நிறுத்த மாட்டோம். இப்போது நடைபெறும் படப்பிடிப்புகள் அத்தனையிலும் நாங்கள் கலந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

இந்ததிடீர் முட்டுக் கட்டை காரணமாக தயாரிப்புப் பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விரைவிலேயே சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.