சின்னத்திரையில் நவ்யா நாயர்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial

சின்னத்திரையில் நவ்யா நாயர்

8/25/2011 3:51:38 PM

கேமரா வெளிச்சத்தில் இருந்தவர்களுக்கு அதை நீங்குவதென்பது கஷ்டம். திருமணம் செய்து திரையுலகிலிருந்து முற்றிலுமாக விலகிய பல நடிகைகள் போpளம் பெண்ணாக சினிமாவுக்கே திரும்பி வருகிறார்கள். அவர்கள் வழியில் இப்போது நவ்யா நாயர். மாறுதலாக இவர் திரும்பியிருப்பது சின்னத்திரைக்கு. தொழிலதிபரை திருமணம் செய்து குட்பை சொன்ன நவ்யா தற்போது மலையாள சேனலான ஏசியாநெட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பொறுப்பேற்றிருக்கிறார். டான்ஸ் டான்ஸ் என்ற அந்த நிகழ்ச்சி நமது மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒத்தது. இதற்கு நவ்யா நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சின்னத் திரைக்கு வந்துவிட்டார். விரைவில் நவ்யாவை பெ‌ரிய திரையிலும் பார்க்கலாம்.

 

க‌ரிகாலன் - சோழர் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

க‌ரிகாலன் – சோழர் கதை

8/25/2011 3:50:07 PM

ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதைதான் காரணம். சுசீந்திரன் இயக்கத்தில் ராஜபாட்டை படத்தில் நடித்து வரும் விக்ரம், கண்ணன் இயக்கத்தில் க‌ரிகாலன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதி‌ரியான ச‌ரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். நேற்று படத்தின் விளம்பரத்தை வெளியிட்டாலும் பட வேலைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ம்… ஒரே நேரத்தில் விக்ரம் இரண்டு படங்களில் நடித்து எவ்வளவு நாளாகிறது.

 

படுவேகத்தில் வேட்டை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படுவேகத்தில் வேட்டை!

8/25/2011 3:47:02 PM

லிங்குசாமியின் வேட்டை பற்றிய தகவல்கள் படத்தின் மீதான ஆவலை‌த் தூண்டும்படி உள்ளன. மாதவனும், ஆர்யாவும் அண்ணன், தம்பிகள். இவர்களின் ஜோடிகளான சமீரா ரெட்டியும், அமலா பாலும் அக்கா, தங்கைகள். இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய லிங்குசாமி தற்போது லேண்ட் ஆகியிருப்பது ஆந்திராவின் சித்தூர் மாவட்டம். இங்குள்ள மதனபள்ளியில் முக்கியமான சில காட்சிகளை படமாக்கியுள்ளார். வேட்டை ஆக்சன் படம். இதில் ரயில் குண்டுவெடிப்பு காட்சி பிரதானமாக வருகிறது. இந்தக் காட்சியை அவர் மதனபள்ளியில் படமாக்கியிருக்கிறார். வேட்டை தீபாவளிக்கு வெளிவருகிறது.

 

ஒரு பாட்டுக்கு ஆடினால் ஒரு கோடி சம்பளம் : சிம்பு தகவல்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாட்டுக்கு ஆடினால் ஒரு கோடி சம்பளம் : சிம்பு தகவல்?

8/25/2011 3:44:51 PM

தபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. ஒஸ்தியில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறது. தபாங்கில் இந்தப் பாடல்தான் மிகப் பிரபலம். இதில் சிம்புவுடன் ஆட இந்தியின் முன்னணி ஹீரோயினுக்கு வலை வீசியிருக்கிறார்கள். காஸ்ட்லி வலை. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. கத்‌ரினா கைஃபில் இருந்து பிபாசா பாசு, தீபிகா படுகோன் என்று அனைவரையும் அப்ரோச் செய்ய தீர்மானித்திருக்கிறார்கள் சிம்புவும், தரணியும். ஆட சம்மதம் தருகிறவர்களுக்கு ஒரு கோடி வரை கொடுக்க தீர்மானித்திருக்கிறார்களாம்.

 

மங்காத்தாவுக்கு யு/ஏ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மங்காத்தாவுக்கு யு/ஏ சான்றிதழ்

8/25/2011 3:42:23 PM

அ‌‌ஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் மிக கெட்டவராக நடித்திருக்கிறார். தவிர இது வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம். நேற்று படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர்.

 

மயங்கினேன் தயங்கினேன்... திகட்ட திகட்ட திஷா பாண்டேயின் கவர்ச்சி!


தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது மயங்கினேன் தயங்கினேன் படத்தைத்தான்.

திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நிதின் சத்யா.

எஸ்டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். போதாக்குறைக்கு தேஜாஸ்ரீயும் படத்தில் உண்டு. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.

கால் டாக்ஸி டிரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஆபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாவலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.

தமிழ்ப்படம் படத்துக்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்துக்கும் இசை. ஜான் மக்கள் தொடர்பை கவனிக்க சுடர் முருகையா, ராணி ஜீவானந்தனம், எஸ்டி வேந்தன் மற்றும் மகாதேவன் தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
 

முதல் இடம் - சினிமா விமர்சனம்


நடிப்பு: விசார்த், கவிதா, இளவரசு, மயில்சாமி, கிஷோர், 'யோகி' தேவராஜ்
இசை: டி இமான்
இயக்கம்: ஆர் குமரன்
தயாரிப்பு: எம் சரவணன், எம் எஸ் குகன்

ஏவிஎம் தயாரிப்பில் வந்திருக்கும் 175 வது படம் முதல் இடம். தலைப்புக்கேற்ற இடத்தைப் பிடித்திருக்கிறதா என்பதை கடைசியில் பார்ப்போம்!

மகேஷ் என்கிற எமகுஞ்சுக்கு (விதார்த்) வாழ்க்கையில் ஒரே லட்சியம் தஞ்சை காவல் நிலையத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள தன் பெயர் முதலிடத்துக்கு வரவேண்டும் என்பது.

இதற்காக அல்லும் பகலும் 'அயராது உழைக்கிறார்', தனது நண்பர்கள் மயில்சாமி, அப்புக்குட்டி துணையுடன். ஒருநாள் ப்ளஸ்டூ மாணவியான மைதிலி (கவிதா)யைச் சந்திக்கிறார். அடுத்த இரு சந்திப்புகளில் இருவரும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

இதற்கிடையில் உள்ளூர் தாதா கிஷோர் (இவர் பெயர்தான் காவல் நிலையத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்துக்கு வரத்தான் ஹீரோ விரும்புவதாக கதை) ஜெயிலிலிருந்து வெளியாகிறார். அரசியலில் எம்எல்ஏவாகத் துடிக்கும் இவரது தம்பி திருமுருகனுக்கும் நமோ நாராயணனுக்கும் கட்சிக்குள் கோஷ்டித் தகராறு. இந்த தகராறில் விதார்த் சிக்கிக் கொள்கிறார்.

இந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார், வெறும் ரவுடியாக இருக்கும் அவர் எப்படி காதலியை கைப்பிடித்து முதல் இடத்தை அடைகிறார் என்பது மீதிக் கதை.

கதையில் புதுமை என்று எதுவும் இல்லை. எத்தனையோ படங்களில் பார்த்த ரவுடிகள், அதில் ஒருவர் நல்லவர், உள்ளூர் அரசியல் தகராறு, இடையில் ஹீரோவுக்கு மிடில் கிளாஸ் பெண் மீது காதல்...

நாயகன் விதார்த்துக்கு இதில் ஆல்ரவுண்டர் வேடம். அசப்பில் விக்ரமின் க்ளோன் மாதிரி தெரிகிறார். நகைச்சுவை, ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை அவருக்கே இந்தப் படத்தில் முதலிடம்.

நாயகி கவிதா சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளில் அவரிடம் விதார்த்தை விட முதிர்ச்சி... முகத்தில்தான். இயக்குநர் கவனித்திருக்க வேண்டும்.

மயில்சாமி, அப்புக்குட்டி காமெடி படத்துக்கு ஒன்றல்ல... டபுள் ப்ளஸ்.

கிஷோர், யோகி தேவராஜ், திருமுருகன், நமோ நாராயணன் என அனைவரும் கதைக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்கள். இளவரசு கைதட்டல்களை அள்ளுகிறார், பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் சார்பில் ஒரு வசனம் பேசுவாரே, அந்த காட்சியில்!

பார்ப்பவர்களுக்கு படம் ஜாலியாக இருந்தால் மட்டும் போதும் என முடிவு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நோக்கம் சரிதான். ஆனால், இன்னும் திருத்தமாக காட்சிகளை அமைத்திருக்கலாம். நகைச்சுவைதான் படத்தின் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு, அதற்குத் தோதாக காட்சிகளை அமைத்திருந்தால் நிச்சயம் முதலிடம் கிடைத்திருக்கும்!
 

சூப்பர் ஸ்டார்கள் பாணியில் ஷேர் கேட்ட ஹீரோயின்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

சூப்பர் ஸ்டார்கள் பாணியில் ஷேர் கேட்ட ஹீரோயின்!

8/25/2011 3:27:43 PM

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான் ஆகியோர் லாபத்தில் பங்கு என்ற முறையில் தங்களது சம்பளத்தை பெறுகின்றனர். இந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோயின் கரீனா கபூர். 'ஹீரோயின்’ என்ற படத்தில் கரீனாவின் கால்ஷீட் கேட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள், 'தனக்கு சம்பளமாக 8 கோடி தர வேண்டும்Õ என்றதும் அதிர்ந்துபோனார்கள். சம்பளத்தை குறைத்துக்கொள்ளச் சொல்லி எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார். வேறுவழியே இல்லையா என்றபோது மற்றொரு யோசனைக்கு ஒப்புக்கொண்டார். சம்பளமே வாங்காமல் நடிக்கிறேன். பிறகு படம் எவ்வளவு கோடிக்கு விற்கிறதோ அதற்கு ஏற்ப பங்கு கொடுத்தால்போதும் என்றார். இந்த டீலுக்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதில் 8 கோடிக்கு மேலும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது பாலிவுட் வட்டாரம். நம்பர் ஒன் ஹீரோயினாக கரீனா இருக்கிறார். 'ஹீரோயின்Õ படத்தில் தலைப்புக்கான கேரக்டரில் அவர் நடிக்கிறார். இதனால் அவருக்காகவே படம் பிசினஸ் ஆகும் என்கிறார்கள். இதுவரை சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மட்டுமே பட விற்பனையில் ஷேர் பெற்றுவந்த நிலையில் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சூப்பர் ஹீரோயின் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் கரீனா கபூர்.

 

'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!'


சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.

மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.

படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

 

'வேட்டை'யில் காயமடைந்த சமீரா!


லிங்குசாமியின் வேட்டை பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக காயமடைந்தார் நடிகை சமீரா ரெட்டி.

லிங்குசாமி இயக்கும் வேட்டை படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. சமீரா ரெட்டி – அமலா பால் சகோதரிகளாக நடிக்கிறார்கள் இந்தப் படத்தில்.

இருவரும் பாவாடை தாவணியில் ஆடிப் பாடுவது போன்ற பாடல் காட்சியை இங்கு படமாக்கினார் லிங்குசாமி. ஒரு காட்சியில் இருவரும் மொபட்டுகளில் வருவது போல எடுத்தனர். அப்போது தடுமாறி விழுந்துவிட்டார் சமீரா ரெட்டி. இதில் அவருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துப் போய் முதலுதவி செய்தனர் யூனிட்டிலுள்ளவர்கள். இதனால் சில மணி நேரம் பாதிக்கப்பட்ட ஷூட்டி பின்னர் தொடர்ந்தது.

வேட்டை படத்தில் மாதவன் – ஆர்யா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

 

3200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்ட பின்னணியில் உருவாகும் தனுஷின் மாரீசன்!


தனுஷை வைத்து சிம்புதேவன் ஒரு படம் இயக்குவதாக முன்பே தெரிவித்திருந்தோம். அதற்கான வேலைகள் துவங்கிவிட்டன.

இந்தப் படத்துக்கு 'மாரீசன்' என்று தலைப்பிட்டுள்ளனர். யுடிவி நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் படம் இது. ரூ 30 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இது உண்மையாக இருந்தால் தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் இந்தப் படத்துக்குதான்!

கிமு 12-ம் நூற்றாண்டில் (அதாவது 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம்) நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்பதால்தான் இந்த அளவு பட்ஜெட்டாம்.

சிம்பு தேவனின் கதையைக் கேட்ட யுடிவியின் இப்போதைய உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இந்தக் கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் கச்சிதமாக உள்ளது. தாராளமாக படமெடுங்கள் என பாராட்டினார்களாம்.

டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மாரீசனுக்கு இசை ஜி வி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு கதிர்.
 

ஊழல் ஒழிப்பு: ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்


ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.
 

உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?- விஜயகாந்த்


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 3 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று ( 25-ம் தேதி) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கினார்.

அவர் வழங்கிய நலத்திட்ட உதவித் தொகை விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 55 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்கள்

விரும்பாக்கம் பகுதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ்

படுகொலை செய்யப்பட்ட தென்சென்னை மாவட்ட 138-வது வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ. 1.25 லட்சம் நிதியுதவி

எம். ஜி. ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை

விபத்தில் பலியான ஆரணி சட்டசபை தொகுதி தேமுதிக தொண்டர் நாராயணசாமி குடும்பத்துக்கு ரூ. 40 ஆயிரம் நிதியுதவி

மொத்தம் ரூ. 3 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, மாவட்ட தலைவர்கள் யுவராஜ், செந்தாமரைக்கண்ணன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது:

முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது தேமுதிக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு,

புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பிறக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும். உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. திருமணமாகி, குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகிறது. அந்தக் குழந்தை எழுந்து நடப்பதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதுபோல் எதற்கும் ஒரு கால அவகாசம் உண்டு.

குறைந்தது 6 மாதங்கள் வரையாவது அரசின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் போது, இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவாக கருத்து சொல்கிறேன் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்று கேட்டதற்கு, அந்தத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், கூட்டணி குறித்தும் இப்போது கருத்து சொல்ல முடியாது என்றார்.

 

தொப்பி கொடுக்கச் சென்ற அன்னா ஆதரவாளர்களை தாக்கிய சல்மான் பாடிகார்ட்ஸ்


கான்பூர்: அன்னா ஆதரவாளர்களை தாக்கியதற்காக நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சல்மான் கான் கான்பூரில் உள்ள ககதியோவில் நடந்த விழா ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவுடன் சேருமாறு சல்மானை அழைக்க அன்னா ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.

அன்னாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, கைகளில் கொடியுடன் வந்தவர்கள் சல்மான் காரை நோக்கிச் சென்றனர். உடனே சல்மானின் மெய்க்காப்பாளர்கள் அன்னா ஆதரவாளர்கள் மீது பாய்ந்து விட்டனர். அவர்கள் தாக்கியதில் ஜன் ராஜ்ய கட்சியின் பொதுச் செயலாளர் ஓமேந்திரா பாரத் அதே இடத்தில் மயக்கம்போட்டு விழுந்தார்.

இது குறித்து ஜன் ராஜ்ய கட்சித் தலைவர் தீபக் பாரத் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கூறுகையில்,

சல்மானின் கார் அருகே சென்றவுடன் அவரது மெய்க்காப்பாளர்கள் எங்களை தாக்கத் துவங்கிவிட்டனர். அவருக்கு அன்னா தொப்பியும், ஊழலுக்கு எதிரான வாசனங்கள் அடங்கிய பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கவும் தான் சென்றோம். வேறு எந்த தூண்டுதலின்பேரிலும் நாங்கள் செல்லவில்லை என்றார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் சல்மானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அன்னா தொப்பியை பரிசளிக்க சென்ற ஆதராவளர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சல்மான் மீதும், அவரது மெய்க்காப்பாளர்கள் மீது ஓமேந்திரா போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது உண்மை என்று தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்று இன்ஸ்பெக்டர் உபேந்திரா சிங் ரத்தி தெரிவித்தார்.

விழாவில் இருந்து வெளியே வந்த சல்மானைப் பார்ப்பதற்காக மக்கள் முந்தியடித்துக் கொண்டு வந்தனர் என்று அன்னா ஆதரவாளரான உபன்ஷு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

 

வில்லன் அரவிந்தசாமி!


ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக கருதப்பட்ட அரவிந்தசாமி, இப்போது மீண்டும் தனது நடிப்பைத் தொடர்கிறார்… ஆனால் வில்லனாக!

விஷால் – த்ரிஷா நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் வில்லன் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் தளபதி படத்தில் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்த சாமி. தொடர்ந்து ரோஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு நிறைய படங்களில் அரவிந்தசாமி நடித்தார். இந்தியிலும் ஒரு படம் பண்ணார்.

உயர்நடுத்தட்டு ரசிகர்கள் இவரை தங்களது அபிமான நாயகனாக வரித்துக் கொண்டனர். மீடியாவும் அப்படியே இவர் போகஸ் செய்ய கொஞ்ச நாட்கள் வண்டி ஓடியது. இடையில் அவரும் ஆக்ஷன், காமெடி அவதாரம் எடுத்துப் பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. பின்னர் வியாபாரத்தை கவனிக்கப் போய்விட்டார்.

1994-ல் காதலியை கைப்பிடித்த அரவிந்தசாமி, சமீபத்தில்தான் விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆனாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இப்போது திரு இயக்கும் விஷால் படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.

 

டெல்லியில் இன்று அன்னாவை சந்திக்கிறார் நடிகர் விஜய்-உண்ணாவிரதத்தில் பங்கேற்பு


டெல்லி: டெல்லியில் இன்று காலை அன்னா ஹஸாரேவை நடிகர் விஜய் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். பின்னர் மாலை வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்.

சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார்.

இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

என் கணவர் மீது பொய் நில அபகரிப்பு புகார்: நடிகர் விக்னேஷ் மனைவி மனு


சென்னை:  என் கணவர் மீது வீரம்மாள் வேண்டும் என்றே பொய் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார் என்று நடிகர் விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வீரம்மாள் என்ற 80 வயது மூதாட்டி நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ஆலந்தூரில் திருவிக இன்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட் என்ற பெயரில், எனக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை எனது அம்மா சுதா எனக்கு எழுதி வைத்தார்.

இந்நிலையில் வீரம்மாள் என்பவர் என் மீதும், எனது கணவர் விக்னேஷ் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த இடம் வீரம்மாளின் மூத்த மகனான சின்னதம்பிக்கு சொந்தமானது. கடந்த 2001-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார்.

பல்வேறு வங்கிகளில் சின்னதம்பி கடன் வாங்கியிருந்தார். இதனை அடைக்க முடியாமல் அவரது மனைவி கீதா கஷ்டப்பட்டார்.

இந்நிலையில் கீதாவின் அக்காள் என்ற முறையில் எனது தாய் சுதா அக்கடன்களை அடைத்தார். இதற்கு பிரதிபலனாக அந்த சொத்தை கீதாவும், அவரது மகன்களும் சேர்ந்து எனது தாயின் பெயருக்கு எழுதி வைத்தனர்.

இந்த சொத்தை எனது தாய் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த சொத்து சம்பந்தமாக எனக்கும், வீரம்மாளுக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வீரம்மாளும், அவரது மகன்களான ராஜு, தங்கராஜ் ஆகியோர் சொத்து தொடர்பாக புகார் அளித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனது கணவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீரம்மாள் மற்றும் அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.