என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்

சென்னை: விரைவில் மணநாள் காண இருக்கின்ற பாடகி சின்மயி தனது திருமணத்திற்கு யாரும் அன்பளிப்பு வாங்கி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

பிரபல சினிமாப் பாடகி சின்மயி. இவருக்கும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மிகவும் எளிமையாக ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தனது திருமண நாளில் வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்த சின்மயி, மற்றவர்களுக்கும் உபயோகப் படும் மாதிரியாக எதையாவது செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, தனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே தயவு செய்து பரிசுப் பொருள் வாங்கி வர வேண்டாம் என தெரிவித்து விட்டாராம்.

என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்

ஆனால், பரிசுப் பொருள் வேண்டாம் என மறுத்த அதே சமயத்தில் மொய் எழுதக் கூடாது எனக் கூறவில்லை. காரணம் தனது திருமணத்திற்கு தர நினைக்கும் பணத்தை லடாக்கில் உள்ள 17 ஆயிரம் அடி பவுண்டேஷனுக்கு நிதியாக அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

இது தொடர்பாக சின்மயியின் தாயார் கூறும் போது, ‘இன்றைய விலைவாசியில் சாதாரண பூங்கொத்து என்பதன் விலையே ரூ 500ஐத் தொடுகிறது. மறுநாளே அந்தப் பூங்கொத்துக்கள் வாடி விடுகின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்?

அதனால் தான் சின்மயியின் திருமணத்தை உபயோகமாக இருக்குமாறு செய்ய வேண்டும் என யோசித்து இவ்வாறு திட்டமிட்டோம். இத்தகவலை திருமண அழைப்பிதழிலும் தெரிவித்துள்ளோம். நேரில் பார்ப்பவர்களிடமும் மறக்காமல் கூறி வருகிறோம்' என்றார்.

 

த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

திருவனந்தபுரம்: மோகன்லால் - மீனா நடித்த த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘த்ரிஷ்யம்' மலையாள படம் இதுவரை எந்த மலையாளப் படமும் செய்யாத சாதனைகளைச் செய்துள்ளது.

த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய டைட்டானிக்கின் சாதனையை ‘திரிஷ்யம்' முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை தாண்டி இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

தற்போது ‘த்ரிஷ்யம்' படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பிரபலமான சிறந்த படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘கிரைம் நம்பர் 89', ‘நார்த் 24 காதம்' போன்ற படங்களும் சிறந்த படத்துக்கான கேரள அரசு விருதை பெற்றுள்ளன.

சிறந்த நடிகருக்கான விருது பகத் பாசில், லால் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை ஆன் அகஸ்டின் பெற்றுள்ளார்.

 

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

சென்னை: ஹீரோ அவதாரமெடுத்திருக்கும் காமெடி சந்தானம், அடுத்து ட்விட்டர் களத்திலும் குதித்துவிட்டார்.

முன்பெல்லாம் ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலை.

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

ஆனால் இப்போது, அவர்களே தாங்கள் பல் துலக்குவதில் தொடங்கி, தேர்தலில் ஓட்டுப் போடுவது வரை அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள் ட்விட்டரில். அவ்வப்போது விதவிதமாக படங்கள் எடுத்தும் வெளியிடுகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் நாங்களே ட்விட்டரில் சொல்கிறோம். அதுவரை மீடியாக்காரர்கள் காத்திருக்கவும் என ஸ்டேட்மென்டே விடுகிறார்கள்.

சமூக வலைத் தளங்கள் அந்த அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு வசதியாக உள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர, மற்ற எல்லாரும் ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

இப்போது நடிகர் சந்தானமும் ட்விட்டரில் களமிறங்கியுள்ளார். @iamsanthanam என்ற பெயரில் அவரது ட்விட்டர் பக்கம் அமைந்துள்ளது.

என்னைப் பற்றியும் என் படங்கள் பற்றியும் என அஃபிஷியல் ட்விட்டர் பக்கத்தில் இனி தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன் என்று தகவலும் வெளியிட்டுள்ளார்.

அறிவித்த சில மணி நேரங்களில் 1000 பேருக்கு மேல் அவருக்கு பாலோயர்கள் வந்துள்ளனர். முதல் ட்வீட்டாக தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

 

கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்?

சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தரக்கூடிய செய்தி இது. ஆம்.. கோச்சடையான் வெளியாவதில் மீண்டும் சிக்கல்.

மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பரங்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டன.

கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்?

காரணம்...? ரஜினியோ, சவுந்தர்யாவோ, ரவிக்குமாரோ அல்ல... படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்தான்!

இவர் ஏற்கெனவே எடுத்த, வெளியிட்ட சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடிகளை எடுத்து வைத்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.

சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ 35 கோடியில் பாதியை இந்த வாரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் முரளி மனோகர் இன்னும் பணம் தராததால், கோச்சடையான் விளம்பரங்களை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது ரஜினி படம் என்பதால் வெளிப்படையாக ரெட் போடாமல் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே 9-ல் வெளியாகும். காரணம், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் வேண்டுமல்லவா...

பிரச்சினை தீருமா? என நகம் கடித்தபடி கவலையுடன் காத்திருக்கிறது கோச்சடையான் டீம்!

 

பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?

ரஜினி நடித்த பாட்ஷா கதையைத்தான் சூர்யாவுக்கேற்ற மாதிரி மாற்றி அஞ்சானாக எடுக்கிறார் லிங்குசாமி என்று தகவல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?

வரும் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அஞ்சானின் கதை குறித்து மீடியா பரபரப்பு கிளப்ப ஆரம்பித்துள்ளது.

லிங்குசாமிக்கு ரஜினியின் பாட்ஷா படம் மீது எப்போதும் தனி ஈர்ப்பு. பல மேடைகளில், பாட்ஷா மாதிரி ஒரு ஆக்ஷன் படம் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

அஞ்சான் படத்தை சூர்யாவுக்கு ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட லிங்கு, கிட்டத்தட்ட பாட்ஷாவின் பாணியிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம்.

அதனால்தான் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே வைத்து எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

பிரச்சாரத்திற்கு அழைத்த தேசிய கட்சி: தெறித்து ஓடிய நடிகை

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம்.

ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம்.

அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை பிரச்சாரத்திற்கு அழைக்கிறது. 10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.

 

மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்:

மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தப்புத் தப்பாக இந்த விளையாட்டைக் காட்டியுள்ளனர். அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.

எனவே மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

நடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம்? கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்

சென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது.

மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை.

நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது அவரது கவனம் முழுவதும் அதிலேயே இருக்கிறதாம். எப்போதாவது காதுக்கும் விருந்தளிக்கும் இசைச் சேவையை ஆற்றுகிறாராம்.

இதை கவனித்த அவரது நலம் விரும்பிகள், ‘நடிப்பா, இசையா, இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு. ஒன்று முழுநேர நடிகனாகி விடு அல்லது மீண்டும் இசையமைப்பாளராகி விடு. அதை விட்டுட்டு இப்படி ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்ய நினைப்பது உனது எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என அறிவுரை கூறுகிறார்களாம்.

இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என சிந்தித்து வருகிறாராம் சம்பந்தப்பட்ட நடிகனான இசையமைப்பாளர்.