பாம்புத் தோல் 'ஷூ' போட்ட கிம் கர்தஷியானுக்கு 'பெடா' கொட்டு!

Kim Kardashian Blasted Peta Over Snakeskin Boots

கிம் கர்தஷியான் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. வழக்கமாக பாய் பிரண்டுகளால்தான் அவருக்குப் பிரச்சினை வரும். ஆனால் தற்போது பாம்புத் தோலால் பிரச்சினையாகி விட்டது.

சமீபத்தில் டிவிட்டரில் படு கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதில் கருப்பு நிற உள்ளாடையும், காலில் பாம்புத் தோலால் ஆன ஷூவும் போட்டபடி குண்டக்க மண்டக்க குணிந்து நிற்கிறார் கிம். இது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பி விட்டுள்ளது. ஆனால் பெடா எனப்படும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி விட்டது.

பாம்புத் தோலால் ஆன பூட்ஸை அவர் எப்படி அணியலாம் என்று கேட்டு பஞ்சாயத்துக்கு வந்துள்ளனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

பெடாவுக்கும், கிம்முக்கும் இடையே மோதல் வெடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஒரே நாளில் இரண்டு முறை விலங்குத் தோலால் ஆன கோட்களை அணிந்து பெடாவின் கோபத்தை சம்பாதித்தவர்தான் கிம் என்பது நினைவிருக்கலாம்.

 

எஸ் 2... சத்யம் சினிமாவின் இன்னொரு மல்டிப்ளெக்ஸ் - கமல் திறந்து வைத்தார்!

Kamal Launches Sathyam S New Mall S2

சத்யம் சினிமாஸின் இன்னொரு மல்டிப்ளெக்ஸான எஸ்2 (ஸ்பெக்ட்ரம் மால்) இன்று திறந்து வைக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாஸன் இந்த மல்டிப்ளெக்ஸை திறந்து வைத்தார்.

வட சென்னையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்ற பெருமையை இதன்மூலம் எஸ்32 பெறுகிறது. இதில் 5 திரையரங்குகள் உள்ளன.

ஷாப்பிங் செய்ய வசதியாக ஏராளமான கடைகள், உணவகங்கள் இந்த மாலில் உண்டு.

முன்பு வீனஸ் என்ற பெயரில் இருந்த திரையரங்கம்தான் இப்போது எஸ்2 ஆக மாறியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

சத்யம் சினிமாஸ் ஏற்கெனவே அண்ணாசாலையில் 6 அரங்குகளை வைத்துள்ளது. அடுத்து பக்கத்திலேயே எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 8 அரங்குகள் கொண்ட எஸ்கேப் சினிமாவும் சத்யம் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான்.

அடுத்து மூன்றாவதாக இந்த எஸ் 2 வை திறந்துள்ளது.

நடிகர் சங்கக் கட்டடத்தில் 8 திரையரங்குகள் கொண்ட புதிய மல்டிப்ளெக்ஸையும், தென் சென்னையில் தியாகராஜா தியேட்டரை இடித்துவிட்டு 5 அரங்குகள் கொண்ட புதிய மல்டிப்ளெக்ஸையும் சத்யம் சினிமாஸ் உருவாக்கி வருகிறது.

வடசென்னையில் விரைவில் இன்னொரு மாலும் திறக்கப்பட உள்ளது. இது சத்யம் சினிமாஸுக்கு சொந்தமானதல்ல. அது பழைய கிரவுன் தியேட்டர். 4 அரங்குகள் இதில் அமையவிருக்கின்றன!

 

தங்க மோதிரம், நிதி உதவிகள்.. ஒரு அரசியல் தலைவருக்கு நிகரான ஆரவாரத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

vijay celebrates his birthday like political leader   
Close
 


குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.

லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போன்ற ஆதரவற்ற இல்லங்களுக்கு விஜய் தன் கையால் உணவு வழங்கினார்.

தனது வித்யா சாரிடபிள் ட்ரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களை இன்று வழங்கினார் விஜய்.

இவைதவிர, மாநிலம் முழுவதிலும் உள்ள விஜய் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தத்தமது பகுதிகளில் விரிவாக பிறந்த நாள் விழா நற்பணிகளைச் செய்தனர்.

விஜய் தங்கமோதிரம் வழங்கியது போலவே, அவரது ரசிகர்களும் தங்கள் பகுதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் விஜய்யை விட அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் ரொம்ப பிஸி. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் இன்று நடக்கும் அத்தனை விஜய் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர்தான் தலைமை விருந்தினர். எல்லா இடங்களிலும் அப்படியொரு கூட்டம்... ரசிகர்களும் பணத்தை தண்ணீரார செலவழிப்பதைப் பார்க்க முடிந்தது!

பரவாயில்லை... பக்கா ப்ளானோடதான் நடக்குது... அம்மா வெகுண்டெழாத வரைக்கும் ஆபத்தில்ல!

Posted by: Shankar
 

விஜய் விஸிட் - ஏக தள்ளுமுள்ளு... ரசிகர்கள், போலீசாருக்கு காயம்!

Vijay Vist Causes A Stampede At Govt Hospital   

பிறந்த நாளையொட்டி இன்று இலவச மோதிரம் வழங்க வந்த நடிகர் விஜய்யைப் பார்க்க ஏராளமானோர் முண்டியடித்ததால் ரசிகர்கள் - போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் இன்று காலை விஜய் சென்றார். அங்கு இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார்.

இதே மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார் என்பதால் ஆண்டுதோறும் இந்த சென்டிமென்ட் பரிசை அவர் தருகிறார்.

காலை 10.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல்தான் விஜய் மருத்துவமனைக்கு வந்தார்.

அவரின் வருகைக்காக பொதுமக்களுடன் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் காத்திருந்தனர். மருத்துவர்களூம், மருத்துவமனை ஊழியர்களூம் வேலையை கவனிக்காமல் விஜய்யின் வருகைக்காக காத்திருந்ததால் சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

அதைவிடக் கொடுமை, வலியில் துடித்த பிரசவம் ஆன தாய்மார்களை விஜய் வருகிறார் என்று கூறி படுக்கவிடாமல் 1 மணி நேரமாக உட்காரவைத்திருந்தனர். பிரசவம் ஆகி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணை, விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று ஸ்டெச்சரில் வைத்தே நெடு நேரத்திற்கு அலையவிட்டிருக்கிறார்கள்.

விஜய் வந்ததும் பொதுமக்களும், ஊழியர்களும் முட்டிமோதினர். இதனால் மருத்துவமனை கண்ணாடிகள் நொறுங்கின. இதில் சிக்கிய சில ரசிகர்கள் மற்றும் போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டன.

விஜய் பரிசளித்ததில் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், அந்த பரிசுக்காக நடந்த இந்த முட்டல் மோதல் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது பார்வையாளர்களுக்கு.

 

காணாமல் போன பாலிவுட் நடிகை- ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ஒருவர் கைது

Missing Bollywood Starlet Laila Khan Case One Arrested

ஸ்ரீநகர்: பாலிவுட் நடிகையான பாகிஸ்தானைச் சேர்ந்த லைலா கான் மர்மமான முறையில் காணாமல் போன வழக்கில் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகையான லைலா கான் ஏராளமான் சர்ச்சைகளில் சிக்கியவர். அவருக்கும் வங்கதேச தீவிரவாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வந்தது. இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீருக்கு திருமண நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த பின் அவரது தாயார், தங்கை உள்ளிட்ட குடும்பத்தாருடன் காணாமல் போனார்.

அவர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டாரா? அல்லது தலைமறைவாகிவிட்டாரா? அவர் கொலை செய்யப்படாரா? என்பது தெரியாமலே இருந்து வந்தது. இந்நிலையில் லைலா கான் பயன்படுத்திய கார், அவர் காணாமல் போன வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை உள்ளூர்காரரான பர்வேஷ் அகமது வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார். இந்த வாகனத்தை பறிமுதல் செய்த ஜம்மு காஷ்மீர் போலீசார் அதை பயன்படுத்திய நபரையும் கைது செய்துள்ளனர்.

இந்த வாகனம் லைலா கானின் தாயார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சில குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகவும் இருப்பதை மும்பை போலீசார், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

 

சினிமா எப்போதும் அழியாது... வளரவே செய்யும்! - கமல்

No End Cinema Says Kamal

டிவி வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள்... ஆனால் வளர்ந்தது. விஞ்ஞானம் சினிமாவை வளர்க்கவே செய்கிறது, என்றார் கமல்ஹாஸன்.

வடசென்னையில் பெரம்பூரில் எஸ் 2 எனும் புதிய திரையரங்க வளாகத்தைத் திறந்துவைத்த கமல் பேசுகையில், "பெரம்பூருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பரை பார்க்க நான் அடிக்கடி வருவது உண்டு. இன்று பெரம்பூர் முன்புபோல் இல்லாமல் நிறைய மாறி இருக்கிறது. நண்பரின் வீடு கூட அடையாளம் தெரியவில்லை.

1959-க்கு முன் இந்த இடம் நாடக கொட்டகையாக இருந்தது. அதன்பிறகு வீனஸ் தியேட்டராக மாறியது. தற்போது ‘மால்' ஆகி நவீன தியேட்டர்கள் வந்துள்ளது. சினிமா கலை எத்தனை வேகமாக வளர்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது.

நாடக கொட்டகை இங்கு இருந்தபோது எனது குருநாதர் அவ்வை சண்முகம் நடித்து இருக்கலாம். சிவாஜி நடித்து இருக்கலாம். இப்போது அவர்கள் குழந்தையான இந்த கமல் நடித்த ‘விஸ்வரூபம்' படம் இதே தியேட்டரில் வரப்போகிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.

1980-ல் டி.வி. வந்தபோது தியேட்டர்கள் அழிந்துவிடும் என்றனர். நான் வளரும் என்றேன். நான் சொன்னதுதான் இப்போது நடந்து வருகிறது. டி.வி. மூலம் வீட்டுக்குள் எத்தனை படங்கள் வந்தாலும் மக்கள் வெளியேபோய் படம் பார்ப்பதைதான் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாம் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

‘விஸ்வரூபம்' படத்தில் சவுண்ட் தொழில் நுட்பத்தில் புதுமை செய்யள்ளோம். படங்களில் 5.1, 7.1 அளவுதான் சவுண்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் முதல் முறையாக 11.1 அளவு சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுதத உள்ளோம். இதற்காக அமெரிக்கா செல்லவிருக்கிறேன்," என்றார்.

 

சொதப்பல் சீரியல்களுக்கு உடனுக்குடன் 'ஆப்பு' வைக்கும் சானல்கள்!

Lackluster Serials Get The Axe

தொலைக்காட்சி சீரியல்களின் ஆயுளை நிர்ணயிப்பவை அதன் டிஆர்பி ரேட்டிங்தான். எந்த தொடருக்கு வரவேற்பு இல்லையோ அதை பாதியிலேயே நிறுத்தவும் தயங்கமாட்டார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

சேனல்களுக்கு டிஆர்பிதான் முக்கியம். நெடுந்தொடரோ, நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் மக்களிடம் வரவேற்பு இல்லாத பட்சத்தில் அதை பாதியிலேயே தூக்கிப் போட்டு விடுகின்றனர்.

அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் ராஜேஸ், மீராகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ஆண்பாவம் தொடர். இது இரவு பத்து மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நான்கு ஆண்குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் கதை. ஆராவாரமாக முன்னோட்டத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குநர் தடுமாறிப்போனாரோ என்னவோ எதிர்பாராத விதமாக தொடருக்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

என்ன நடக்கிறது என்பதே இதுவரை யாருக்கும் புரியாத நிலையிலும் கூட, ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் அத்திப்பூக்கள் போன்ற தொடர்களுக்கு மத்தியில், ஆறுமாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஆண்பாவம் தொடர் கடைசியில் அய்யோபாவம் என்றாகிவிட்டது.

இது மட்டுமல்ல நகைச்சுவை என்ற பெயரில் சன் தொலைக்காட்சியில் ஞாயிறுக்கிழமை இரவு ஒளிபரப்பான மாமா மாப்ளே தொடருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. அதேபோல மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பான பொண்டாட்டி தேவை நகைச்சுவை தொடரும் இதே போல் பாதியிலேயே அவசரம் அவசரம் மூடப்பட்டது.

வழக்கமாக இவருக்குப் பதில் இவர் என்று நடிகர்கள் மாறினால் ஒரு டைட்டில் கார்டைப் போட்டு விட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பார்கள். ஆனால் இந்த சீரியல்களை தூக்கிப் போட்டதற்கு என்ன காரணம் என்பதை அந்த சீரியலை இயக்கியவர்களும் சரி, நடித்தவர்களும் சரி, தயாரித்தவர்களும் சரி, சானல்காரர்களும் சரி யாருமே சொல்லவில்லை...

இப்பொழுது தொடங்கியுள்ள சில நகைச்சுவை நிகழ்ச்சிகளும் கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பினை பெற்றதாக தெரியவில்லை. எனவே விரைவில் இவையும் கூட குப்பைக் கூடைக்குப் போகலாம் என்கிறார்கள்.

நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் பஞ்சம் ஏற்பட்டால் மட்டுமே சன் தொலைக்காட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மீண்டும் தொடர் தயாரிப்பாளர்கள் ஏதாவது ஸ்லாட் பேச ஆரம்பிக்கும் பட்சத்தில் இந்த தொடர்கள் சத்தமில்லாமல் காணமல் போகவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிர்வாகிகள்.

 

தூம் 3: ரஜினிக்கு எத்தனை கோடி சம்பளம் தரவும் தயாராக நிற்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள்!!

Aamir Khan Keen Have Rajinikanth Dhoom 3   

கடந்த ஆண்டிலிருந்தே தூம் 3 குறித்து பல செய்திகள். இந்தப் படத்தில் ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறினார்கள்.

ஆனால் ரஜினி தரப்பிலிருந்தே, இந்தப் படத்தில் அவர் நடிப்பதாக இல்லை என்று விளக்கம் வெளியானது. அடுத்த சில தினங்களில் இந்தப் படத்தில் அமீர்கான் அந்த வில்லன் வேடத்தில் நடிப்பார் என அறிவித்தனர்.

இப்போது மீண்டும் தூம் 3 உடன் ரஜினியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்பாளர் தரப்பில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து ரஜினியுடன் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் விசாரித்தபோது, "ரஜினி சார்தான் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும். இப்போது எங்கள் அளவில் சொல்வதற்கு எதுவும் இல்லை," என்றனர்.

ரஜினி நடித்தால் இந்தப் படம் பெரிய ரேஞ்சுக்குப் போய்விடும் என்பது அமீர்கானின் எதிர்ப்பார்ப்பாம். தயாரிப்பாளரிடம் தொடர்ந்து இதை அவர் வலியுறுத்துவதால், ரஜினிக்கு சம்பளமாக எத்தனை கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்... அதாவது அமீர்கான் சம்பளத்தைப் போல ஒன்றரை மடங்கு!

ஆனால்... கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!

 

த்ரிஷா செல் நம்பர் என நினைத்து தோழிகளுக்கு ரசிகர்கள் தொல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
த்ரிஷா செல் நம்பர் என நினைத்து அவரது  தோழிகளுக்கு ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் செல்ல பிராணிகளை வளர்க்கும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் ப்ளு கிராஸ் அமைப்பிற்கு சென்று அங்கிருந்த செல்ல நாய்களுக்கு உணவளித்தார் த்ரிஷா. பின்னர் சில ரசிகர்கள் அவரது கையால் செல்ல நாய்களை வீட்டில் வளர்ப்பதற்காக பெற்று சென்றனர். இதுபோல் நாய்க்குட்டிகள் பராமரித்து வளர்க்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்று த்ரிஷா தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது த்ரிஷா நம்பர் என நினைத்து பல ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுக்க தொடங்கினர். மறுமுனையில் த்ரிஷா பேசாததால் எரிச்சல் அடைந்தனர். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறும்போது,'கைவிடப்பட்ட நாயக்குட்டிகளை வளர்க்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் குறிப்பிட்ட செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள். இது என்னுடைய பர்சனல் நம்பர் இல்லை. சக தோழிகளின் நம்பர். நான் பேசுவதாக நினைத்து ரசிகர்கள் அவர்களுக்கு தொல்லை தர வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.


 

மாற்று திறனாளி படத்தில் மோனிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மாற்றுத்திறனாளி இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மோனிகா. மனோஜ்குமார், லாரன்ஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் டி.சாமிதுரை. போலியோவால் பாதிக்கப்பட்டவர். இவர் குறும்புக்கார பசங்க என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது: சஞ்சீவ் உள்பட 4 நண்பர்கள் உயிருக்கு உயிராக பழகுகின்றனர். இவர்களுடன் பழகும் தோழி மோனிகாவிடம் யதார்த்தமாக ஒரு பொய் சொல்கிறார் சஞ்சீவ். இது பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. அதில் இருந்து அவர்கள் மீள்கிறார்களா என்பது கதை. சஞ்சீவுடன் கிட்டு, வைரவன், கோவிந்தன் நண்பர்களாகவும், வில்லனாக ரவி ராஜனும் நடிக்கின்றனர். அஜீத் ரசிகையாக நடிக்கிறார் மோனிகா. மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு படம் கிடைப்பது சிரமமாக இருந்தது. பல தயாரிப்பாளர்களை அணுகினேன். வீல் சேரில் அமர்ந்திருந்த எனக்கு யாரும் படம் தர முன்வரவில்லை. மனோஜ்குமார், லாரன்ஸ்தான் ஊக்கம் கொடுத்து என்னை தனது படங்களில் பணியாற்ற வைத்தனர். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் என்னால் தனித்து செயல்பட முடியும். அந்த நம்பிக்கையில் நானும், நண்பர் ரவிராஜனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறோம். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒளிப்பதிவு கே.பாண்டியன். இசை அருள்ராஜ். கள்ளக்குறிச்சி, கட்றாபாளையும் தண்டளை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது.


 

பிடித்த ஹீரோ இருந்தால்தான் படங்களை ஏற்பேன்: சார்மி அடம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோவை பிடித்தால்தான் படங்களை ஏற்பேன் என்றார் சார்மி. இதுபற்றி அவர் கூறியதாவது: மம்முட்டியுடன் 'தப்பன்னா' மலையாள படத்தில் மல்லிகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அமைதியான அதேநேரத்தில் உறுதியான மனம் படைத்த கேரக்டர். அந்த வேடத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறேன். அவர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் எல்லோருடனும் சகஜமாக பழகினார். 'சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'புரொபைல்' என்ற படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?' என்று கேட்கிறார்கள். அப்படத்தில் பல காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஒரு ஹீரோயின் என்றால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக இதுபோன்ற வேடங்களை ஏற்க விரும்பவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. அடுத்து இந்தியில் 'ஜில்லா காசியபாத்' படத்தில் நடிக்கிறேன். விவேக் ஓபராய் ஹீரோ. என்னுடைய உடை மற்றும் பேச்சு வழக்கு எல்லாமே காஸியாபாத் பகுதியை சேர்ந்த பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் 'சேவகுடு' என்ற படம் விரைவில் வரவிருக்கிறது. மீண்டும் மலையாளத்தில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எந்த படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பும் தயாரிப்பாளர், உடன் நடிக்கும் ஹீரோ, எனது வேடம் என மூன்று அம்சமும் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாக ஏற்க மாட்டேன். குறிப்பிட்ட வேடம் என்னை கவர வேண்டும். பேசும்படி இருக்க வேண்டும்.


 

ஷங்கரின் "ஐ"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நண்பன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கவுள்ள இப் படத்தை ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக ஷங்கருடன் கைகோக்கிறார்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார். ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை அமைக்கிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.

சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.


 

வில்லன் வேடத்தில் நடிக்க தயக்கம் இல்லை: விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு தயக்கம் இல்லை என்றார் விவேக். இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி வேடங்களிலேயே என்னை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு 'வழிப்போக்கன்' என்ற படம் ஒரு 'ஷாக்'காக இருக்கும். தமிழ், கன்னடம் இருமொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் வில்லன் வேடம் ஏற்பது வித்தியாசம். வழக்கமான வில்லன்கள் இந்த வேடத்துக்கு பொருந்தமாட்டார்கள் என்பதால் என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். த்ரில்லர் படமான இதில் ஆரம்பம் முதல் எனது கேரக்டர் நெகடிவ் குணம் கொண்டது என்பது தெரியாது. பிளாஷ்பேக்கில்தான் இந்த விஷயம் வெளிப்படும். 'வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?' என்கிறார்கள். வில்லன் வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. காமெடி, வில்லத்தனம் எல்லாமே நடிப்பு என்ற கோணத்திலேயே அணுகுகிறேன். சுந்தர்.சியுடன் முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறேன். இந்த வேடமும் ஒரு வகையில் சஸ்பென்ஸ் அம்சம் கொண்டது. திருநங்கையாக நடிப்பதற்கு முன் பல்வேறு ஆய்வுகளை செய்தேன். அதன்பிறகுதான் நடித்தேன். தொடர்ந்து ஹரி இயக்கும் 'சிங்கம் 2', வி.சேகர் இயக்கும் 'சரவணப் பொய்கை', 'மச்சான்', 'பத்தாயிரம் கோடி' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன்.
இவ்வாறு விவேக் கூறினார்.


 

லண்டன் இசை அமைப்பாளருடன் தமிழ் பட ஹீரோயின் டும்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் பட ஹீரோயின் ராதிகா ஆப்தே லண்டன் இசை அமைப்பாளரை மணக்கிறார். 'வெற்றிச் செல்வன்' படத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே. இவருக்கும் லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனடிக்ட் டைலருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது: வெற்றிச் செல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக்கிறேன். வக்கீல் வேடம் என்பதால் அதற்கான ஒத்திகை பார்த்தேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் கதாபாத்திரம் ஹீரோவை சார்ந்த கதாபாத்திரங்களாகவே இருக்கும். இப்படத்தை பொறுத்தவரை அதில் வித்தியாசம் இருக்கிறது. இதில் ஹீரோயின் வேடம் என்றாலும் அது ஹீரோவை சார்ந்ததாக இருக்காது. தனித்து இயங்கும் கேரக்டர். இதில் நடிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காகவும், ஷூட்டிங்கிற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்துகொண்டிருக்கிறேன். இது எனக்கு அமைதியற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அதை ரசனையோடு ஏற்கிறேன். திட்டமிட்டு செய்வதால் எதிலும் சிக்கல் ஏற்படுவதில்லை. இதையொரு புகாராக சொல்லவில்லை. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். சமீபத்தில் ராதிகா ஆப்தேக்கும் லண்டன் இசை அமைப்பாளர் பெனடிக் டைலருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.


 

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
1981ல் வெளியான ராம் லட்சுமண் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'நான்தான் உங்கப்பன்டா' என்ற பாடல் லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்கான தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.


 

அமுதாவை எல்லோருக்கும் பிடிச்சிருக்கு – ரேணுகா

Amutha Oru Achraya Kuri Renuka

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமுதா ஒரு ஆச்சர்யக்குறி! சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ரேணுகா. இந்த சீரியலில் கதாநாயகி அமுதாவாக போல்டாகவும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் இருக்கும் கதாபாத்திரம் அவருக்கு.

அம்மா கதாபாத்திரத்திற்கு கூப்பிட்டவர்களுக்கு மத்தியில் இயக்குநர் பாலசந்தர் கதாநாயகி கதாபாத்திரம் அளித்துள்ளார். சீரியல் பற்றி விமர்சனம் நல்ல முறையில் வருவதில் மகிழ்ச்சிப் பூரிப்பில் இருந்த அமுதாவிடம் (ரேணுகா) பேசினோம்.

பாலசந்தரின் சஹானா தொடருக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாலச்சந்தர் சாரோட தொடர்ல நடிக்கிறேன். முதல் வார எபிசோடை பார்த்துட்டு இப்படி ஒரு அமுதா கேரக்டராதான் நாங்களும் மாறணும்ங்கிற அளவிற்கு உன் கேரக்டர் தூள் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் போன் பண்றாங்க என்று பூரிப்போடு தொடங்கினார் ரேணுகா.

சம்சார சங்கீதம் படத்தில அறிமுகமாகி, 80க்கும் மேற்பட்ட மலையாள படங்கள்ல நடித்து கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல என்னோட மீடியா கேரியர் போயிட்டு இருக்கு. சினிமாவோ, சீரியலோ நல்ல நடிகைன்னு பெயரெடுத்த திருப்தி இருக்கு என்றார்.

ஒரு சின்ன தகவல் ரேணுகாவும் அவரது கணவரும் சென்னை கடற்கரை சாலையில் ஜி.டி அலோகா வித்யா மந்திர் என்ற பெயரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்துகிறார்களாம். அது முழுக்க முழுக்க கணவரின் நிர்வாகம்தானாம். சைதாப்பேட்டையில் குழந்தைகளுக்கு அபாகஸ் கற்றுக்கொடுக்கும் சைனீஸ் பள்ளியும் நடத்துகின்றனராம்.

 

ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?

Kochadaiyaan Story Leaked   

இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.

ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!

இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.

கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.

இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.

இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

ட்ராபிக் ரீமேக் - தயாரிப்பு ராதிகா; ஹீரோ சரத்குமார்!

Sarathkumar Tamil Remake Traffic

ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகி பெரும் வெற்றி பெற்ற படம் ட்ராபிக்.

விறுவிறு த்ரில்லர் படமான இதைப் பார்த்த கமல், பெரிதும் பாராட்டினார். கமல் முக்கிய வேடத்தில் நடிக்க, மேலும் பிரபல நட்சத்திரங்களை வைத்து இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தார் ராஜேஷ்.

ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. அதனால் இந்தியில் எடுக்கிறார் ராஜேஷ்பிள்ளை. ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இந்த நிலையில் ட்ராபிக்கை தமிழில் ரீமேக் செய்கிறார் ராதிகா. அவரது ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஹீரோவாக சரத்குமார் நடிக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சேரன் மற்றும் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று வியாழக்கிழமை சென்னையில் நடந்தது. ஷஹீத் காமத் இயக்குகிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை.

 

லண்டன் மாப்பிள்ளையுடன் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு நிச்சயதார்த்தம்!

Radhika Apte Engaged   

நல்ல அழகு. அதைவிட அழகான நடிப்பு எனப் பெயர்பெற்ற நடிகை ராதிகா ஆப்தேவுக்கு.... விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்ற இசைக் கலைஞருடன் அவருக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ராதிகா.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், இசை நடனம், நாடகங்கள் என வித்தியாசமான நடிகையாகத் திகழ்பவர்.

இப்போது அஜ்மல் ஜோடியாக வெற்றிச் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

நிறைய படங்கள் நடிக்க வேண்டும், நம்பர் ஒன் நாயகியாக வேண்டும் என்றெல்லாம் தனக்கு லட்சியமில்லை என்றும், மனசுக்குப் பிடித்த மாதிரி நடிக்கணும் என்றும் கூறுகிறார் ராதிகா.

"குடும்பம் - தொழில் இரண்டுமே முக்கியம் எனக்கு. இரண்டையும் பேலன்ஸ் பண்ணி வருகிறேன். பெனடிக்ட்டும் நானும் நண்பர்களாக பழக ஆரம்பித்து காதலர்களானோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவிருக்கிறோம். சமீபத்தில்தான் எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண அறிவிப்பு விரைவில்," என்றார்.

 

சினிமா வேண்டாம் டிவியே போதும்! : சரண்யா

Small Screen My Choice Tenmozhi Saranya

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் ரிப்போர்ட்டராக பணிபுரியும் சரண்யா ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். சினிமாவை விட சின்னத்திரையில் வருவதைத்தான் வீட்டினர் விரும்புகின்றனராம்.

மதியம், மாலை, இரவு என விடாமல் செய்திகளில் கலக்கும் சரண்யா படித்தது பிராட்காஸ்ட் கம்யூனிகேசனாம். டப்பிங், சீரியல் வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் நியூஸ் செக்சனுக்கே ஷெட்யூல் சரியா இருக்கு அதனால் எதையும் கமிட் செய்துக்கலை என்று கூறினார் சரண்யா. சினிமாவை விட சேனலில் வருவதைத்தான் எங்க வீட்ல விரும்புறாங்க. அதனால் சினிமாவுக்கு நோ சொல்லிட்டேன் என்கிறார் ஆயிரம் முத்தங்களுடன் சரண்யா சாரி தேன்மொழி.

 

ஷங்கரின் 'ஐ' யில் ராம்குமார் - சுரேஷ் கோபி - முழு விவரம்!

Shankar Reveals The Complete Cast Crew I

ஷங்கரின் அடுத்த படத் தலைப்பு 'ஐ'. இந்த செய்தியை முதலில் தெரிவித்தது ஒன்இந்தியா தமிழ்தான். படம் தொடர்பான மற்ற விவரங்களை இப்போது ஷங்கரின் செய்தித் தொடர்பாளர் அனுப்பியுள்ளார்.

ஐ படத்தில் விக்ரம் - சமந்தா ஜோடி. இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது. ராம்குமார் இதற்கு முன் அறுவடை நாள் படத்தில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.

பரடத்தின் இன்னொரு பிரதான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் முதல்முறையாக ஷங்கர் இணையும் படம் இது.

காமெடிக்கு சந்தானம் கைகோர்க்கிறார்.

ஐ என்பதற்கு - ஐந்து என்பதைத் தவிர, அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகிறது, என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.

ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை உருவாக்குகிறது.

ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.

சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள்.

இது அரசியல் படம் அல்ல... ரொமான்ட்டிக் த்ரில்லர் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.