12/25/2010 3:56:22 PM
நடன இயக்குனர் ‘காதல் கந்தாஸ்’ திருமணம்
12/25/2010 3:56:22 PM
கிசு கிசு -கையை விரிச்ச இயக்கம்
12/25/2010 4:04:13 PM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
பீச் ஊர்பேர்ல படம் எடுத்த இயக்குனரு, பலபேருட்ட கோடிக்கணக்குல அட்வான்ஸ் வாங்கி குவிச்சிருக்காராம்… குவிச்சிருக்காராம்… 'படம் பண்றேன், பண்றேன்'ன்னு இயக்கம் இழுத்தடிக்கிறதால ஒரு தயாரிப்பு அட்வான்ஸை திருப்பி கேட்டாராம்… கேட்டாராம்… 'காசு இல்லே'ன்னு கைய விரிச்சாராம் இயக்கம்… விஷயம் வில்லங்கமாகிப்போச்சாம்… போச்சாம்… இயக்கம் மேல புகார் கொடுக்க, தயாரிப்பு ரெடியாயிட்டு வர்றாராம்… வர்றாராம்…
'சிங்கம்' ஹீரோயினு, ஒருத்தரை லவ் பண்றேன்னு வெளிப்படையா சொன்னதுல சந்த் ஆன தெலுங்கு கோபி ஹீரோ குஷியா இருக்காராம்… இருக்காராம்… நடிகையை ரொம்ப நேசிக்கிறவரு இந்த ஹீரோதானாம்… தானா வெளியில சொல்றதுக்கு தயக்கமா இருந்தாராம்… இப்ப நடிகையே ஒப்புக்கிட்டதால, சீக்கிரமா பளார்னு வர்ற மாதிரி பெரிய பேட்டிக்கொடுக்க ரெடியாகிட்டு இருக்காராம்… நடிகரு ரெடியாகிட்டு இருக்காராம்…
வெளிநாட்டு கம்பெனியோட கைகோர்த்திருக்கிற இயக்கம் தயாரிக்கிற படத்துக்கு, எல்லாருக்கும் சம்பளத்தை
அநியாயத்துக்குகுறைக்கிறாங்களாம்… குறைக்கிறாங்களாம்… 'வெளிநாட்டு நிறுவனத்துக்கிட்ட நல்லா பணம் வாங்கிட்டு எங்களுக்கு குறைக்கிறது என்ன நியாயம்?'னு வெளிப்படையாவே பேசுறாங்களாம்… நடிக்கிறவங்க பேசுறாங்களாம்…
சினிமா நடிகர்களின் காலண்டர்
12/25/2010 3:50:46 PM
சினிமா போட்டோகிராபர் வெங்கட்ராம், தமிழ் திரையுலக நட்சத்திரங்களை படமாக்கி, 2011&ம் வருட காலண்டரை உருவாக்கியுள்ளார். இதில் விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், சிலம்பரசன், தமன்னா, நாகார்ஜூனா, ஜெனிலியா, நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போஸ் கொடுத்துள்ளனர். இந்த காலண்டரின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின், ராதிகா சரத்குமார் முன்னிலையில் மணிரத்னம் வெளியிட்டார். முதல் பிரதியை த்ரிஷா பெற்றார். எம்.எஸ்.குகன், சுரேஷ் பாலாஜி, சுரேஷ் மேனன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உமா பத்மநாபன் தொகுத்து வழங்கினார். வெங்கட்ராம் நன்றி கூறினார்.
சினிமா நடிகர்களின் காலண்டர்
தெலுங்கில் மட்டும் கிளாமரா?
12/25/2010 3:49:22 PM
தெலுங்கில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்பதை ஏற்க முடியாது என்றார் பாவனா. இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் கிளாமரும் ஒரு பகுதி. அதை மறுக்க முடியாது. ஆனால், கதைக்கு தேவையில்லாமல் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தெலுங்கு, கன்னட படங்களில் மட்டும் கிளாமராக நடித்து வருகிறேன் என்பதில் உண்மையில்லை. மலையாளத்தில் வெளியான டி20 படத்தில் கொஞ்சம் கிளாமராக நடித்திருந்தேன்.
அந்த கேரக்டருக்கு கிளாமர் தேவையாக இருந்தது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஒரு நாளைக்கு 5 படங்கள் பார்க்கிறேன். படங்கள் பார்த்துதான் என் நடிப்பை நானே மெருகேற்றிக்கொண்டேன். யாரையும் காதலிக்கிறீர்களா என்கிறார்கள். காதல் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். அதை தவிர்த்துவிட்டு வாழ முடியாது. ஆனால், இப்போது அதற்கான நேரம் இல்லை. எனக்கு ஏதாவது சொந்த பிரச்னை என்றால் அதற்கு பலர் உதவி செய்ய வருவார்கள். எனது தொழிலில் பிரச்னை என்றால் எனக்கு உதவ யாரும் இல்லை. அதனால், சினிமாவில் பிரச்னை வராமல் கவனமாக இருந்து வருகிறேன்.
சிக்ஸ்பேக் முயற்சியில் விவேக்
12/25/2010 3:50:07 PM
பிரபுதேவா இயக்கும் படத்துக்காக, சிக்ஸ்பேக் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக். இந்தி நடிகர்கள் எப்போது உடற்கட்டில் கவனம் செலுத்தி வருபவர்கள். சல்மான் கான், ஆமீர்கான் உட்பட பெரும்பாலான இந்தி நடிகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் இருக்கிறார்கள். தமிழில், 'வாரணம் ஆயிரம்' படத்துக்காக சூர்யா, 'சத்யம்' படத்துக்காக விஷால் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வந்தனர். ஹீரோக்களின் வழியில் காமெடி நடிகரான விவேக்கும் இப்போது 'சிக்ஸ்பேக்'கில் இறங்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் ஜிம் மாஸ்டர் வேடம். இதனால், சிக்ஸ்பேக் உடற்கட்டில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் பிரபுதேவா. இதையடுத்து உடல் எடையை ஏற்றி, சிக்ஸ்பேக்குக்கு பயிற்சி செய்து வருகிறேன். கஷ்டமானதாகவே இருக்கிறது' என்றார்.
சகிப்புத்தன்மை உள்ள கணவன் :சதா ஆசை
12/25/2010 3:51:32 PM
சகிப்புத்தன்மை கொண்டவர் கணவராக வர வேண்டும் என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'புலி வேஷம்' அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என நினைக்கிறேன். கன்னடம் மற்றும் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில் சில படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள். இதனால், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் 'சந்திரமுகி', 'ஆப்தரக்ஷகா' போன்ற நல்ல வாய்ப்புகளை இழந்ததுதான். கன்னடத்தில் ரவிச்சந்திரனுடன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் இப்போது முடிந்துவிட்டது. வரும் மாதத்தை குடும்பத்துடன் கழிக்க விரும்புகிறேன். எப்போது திருமணம் என்கிறார்கள். சகிப்புத்தன்மை கொண்ட, என்னை புரிந்துகொள்கிற, நேர்மையான ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் திருமணம்தான். இவ்வாறு சதா கூறினார்.