புலி படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 84 நாட்கள்! - சூப்பர் சுப்புராயன் பேட்டி

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சினிமா பிரியர்களுக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும், சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும், இன்னும் சிலருக்கு காதல் காட்சிகளும் பிடிக்கும், ஆனால் இன்றுவரை இந்த இரண்டுக்குமே பெயர் பெற்ற இடம் ஹாலிவுட் மட்டுமே.

இன்றளவும் உலகின் சந்து பொந்துகளிலும் ஹாலிவுட் படங்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சரி, இப்ப நம்ம இந்திய சினிமாவுக்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்திய சினிமாவில் சண்டைக் காட்சி என்பது நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்தும், 15வது மாடியிலிருந்து ஹீரோ குதித்து சண்டைப்போடுவதுமான காட்சிகளை வைத்து ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தந்த படங்களின் ஸ்டண்ட் இயக்குநர்கள்.

Puli stunt scenes shot in 84 days, says Super Subbarayan

இந்த மாதிரியான காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனும் 'இது இவனுக்கே ஓவரா இல்ல' என்ற கேட்குமளவுக்குத்தான் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆமாங்க.. இந்திய சினிமாவுல சண்டைக் காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

எங்கள மாதிரி ஸ்டண்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்‌ஷன் சீன் எடுக்கணும்னா அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கு, ஹாலிவுட்ல வர்ற மாதிரி எங்களால் சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும் அந்தளவுக்கு திறமையும் எங்களிடமிருக்கு, அதைத்தான் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'புலி' படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம்.

புலி படத்துல சண்டைக்காட்சிக்கு மட்டும் 84 நாட்கள் நாங்க செலவழிச்சிருக்கோம், இந்த படத்துல வர்ற சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதை நீங்க தியேட்டர்ல பார்த்தா உங்களுக்கு தெரியும்," என்றார்.

 

விஷால் தாராளமாக போட்டியிட்டு தலைவராகட்டும்.. ஆனாலும் நானும் மோதுவேன்! - சரத்குமார்

சென்னை: நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நானும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன், என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.

இதுகுறித்து திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

Vishal can contest Nadigar Sangam election, says Sarath Kumar

"தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளே ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.

நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். அதே நேரம் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன். அதில் மாற்றமில்லை," என்றார்.

 

புதிய தலைமுறை நடத்தும் 'புகை உயிருக்குப் பகை' குறும்படப்போட்டி

புகை பிடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு குறிப்புகளை அடங்கிய அறிவிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பியதுடன் 'புகை உயிருக்குப் பகை' என்ற தலைப்பில் குறும்படங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

Puthiya Thalaimurai TV's anti tobacco short film competition

புகைப் பிடித்தலின் தீமையை வெளிக்காட்டும் வகையிலும், புகையைத் தவிர்ப்பதை வலியுறுத்தவும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படங்கள் வரவேற்கப்பட்டன.

அந்தவகையில் சுமார் 300 குறும்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தகுதியானவை என 85 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

அந்த 85 படங்களில் புதிய தலைமுறையின் நடுவர் குழு 25 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த 25 படங்களின் படைப்பாளிகளை அரங்கத்திற்கு அழைத்து இயக்குனர் சரண் முன்னிலையில் அந்தப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறும்படங்களும், 10 ஊக்கப்பரிசு பெற்ற குறும்படங்களையும் இயக்குனர் சரண் தேர்ந்தெடுத்து அறிவித்ததுடன், அவர்களுக்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் பரிசுகள் அளித்து கவுரவித்தார்.ஞ

மேலும் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற உதவி இயக்குனர்கள் வாய்ப்பையும் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சூர்யா, பிரேம்ஜி, நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி

ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

எழுத்து - இயக்கம்: வெங்கட்பிரபு


இன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.

நண்பன் பிரேம்ஜி துணையுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து கொண்டு, நயன்தாராவை லவ்விக் கொண்டிருக்கும் சூர்யா, ஒரு பெரிய திருட்டின் போது கார் விபத்தில் சிக்குகிறார். தலை பட்ட அடியால் அவருக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. ஆவி, பேய்களைக் காணும் சக்தி. அந்தப் பேய்களை வைத்தே கொஞ்ச காலம் பிழைப்பை ஓட்டுகிறார். பேய்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சூர்யா மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றன.

Masssu Engira Masilamani Review  

அப்போதுதான் தன்னைப் போன்ற உருவ அமைப்புடன் உள்ள ஒரு பேய் (இன்னொரு சூர்யா) அவரிடம் வருகிறது. அந்தப் பேய் சிலரைப் பழி வாங்க மனித சூர்யாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது புரிந்து அந்தப் பேயை விரட்டியடிக்கிறார் சூர்யா. உடனிருக்கும் மற்ற பேய்களின் இறுதி ஆசைகளை நிறைவேற்றுகிறார்.

சூர்யா விரட்டியடித்த பேய் யார்? எதற்காக அந்தப் பேய் சூர்யா மூலம் சிலரை போட்டுத் தள்ளுகிறது? என்பதெல்லாம் திரையில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

Masssu Engira Masilamani Review

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், அதை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. சம கால சினிமா, அதில் வந்த பாத்திரங்கள், காட்சிகளையெல்லாம் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் விபத்து மற்றும் ஜெய் பாத்திரத்தைப் பயன்படுத்திய விதம், க்ளாமாக்ஸ் சண்டையில் பார்த்திபனைப் பார்த்து கருணாஸ் கூறும் அந்த ஒற்றை வசனம், படம் முழுக்க வரும் பிரேம்ஜியின் டைமிங் வசனங்கள்.. -வெங்கட் பிரபுவின் அக்மார்க் பார்முலா இது.

Masssu Engira Masilamani Review

ஈழத்துக்கு இளைஞராக வரும் இன்னொரு சூர்யா, மண்ணைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனின் பிரதிநிதியாக ஜொலிக்கிறார். 'அயல்நாட்டில் வாழும் தமிழன் சொந்த மண்ணுக்கு வந்தால் ஊரைச் சுற்றிப் பார்த்து போட்டோ புடிச்சிக் கொண்டு போயிடுவான்னு நினைச்சியா?' என்ற வசனம் இன்றைய நிலையின் நிதர்சனம்.

சூர்யாவை அத்தனை பரிமாணங்களிலும் ஜொலிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஒரு ஜாலி திருடனாக, தன்னை வைத்து பழிவாங்கும் தன் உருவ பேயிடம் சீறும் சிங்கமாக, இருபது முரடர்கள் மல்லுக் கட்ட அவர்களை வெளுத்து வாங்கும் அதிரடி நாயகனாக, துறுதுறு காதலாக, அன்பான கணவனாக.. இறுதியில் வெகுண்டு எழும் கோபக்கார மகனாக... மனசை அள்ளுகிறார் மனிதர்.

Masssu Engira Masilamani Review

பிரேம்ஜிக்கும் சூர்யாவுக்குமான நட்பு அருமை. உனக்கு என்னடா கடைசி ஆசை என பிரேம்ஜியிடம் கேட்க, அதற்கு அவர் தமாஷாகத் தரும் பதில் மனசைப் பிசையும் காட்சி.

நாயகிகளில் நயன்தாரா சும்மா ஒப்புக்கு வந்து போகிறார். அவரது நர்ஸ் வேடம் ஒரே ஒரு காட்சிக்குதான் ரொம்ப உதவியாக இருக்கிறது.

Masssu Engira Masilamani Review

ப்ரணிதாவின் அழகும், அந்த அகன்ற விழிகளில் கண்களில் வழியும் காதலும் ரசிக்க வைக்கின்றன. இருவரின் மகளாக வரும் அந்த சுட்டிப் பெண் ஒரு கவிதை.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட அத்தனை சிரத்தை காட்டியுள்ள வெங்கட் பிரபு, ரசிகர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலோ என்னமோ இரு பெரிய தவறுகளை சரிப்படுத்தாமலே விட்டிருக்கிறார்.

Masssu Engira Masilamani Review

பேய்களால் எந்தப் பொருளையும் தொட முடியாது.. எதுவும் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்தில் சொல்லும் அவர், பின்னர் அதே பேய்கள் கிரேனை இயக்குவது போலவும், கன்டெய்னர் கதவுகளை தூக்கி அடிப்பதுபோலவும் காட்டியிருக்கிறார்.

Masssu Engira Masilamani Review

ஒரு விபத்தில் வந்த பேய்களைக் காணும் சக்தி, அடுத்த விபத்தில் போயிடுச்சி என்ற மெகா காமெடி வசனத்தை சூர்யாவை விட்டு சீரியசாகப் பேச வைத்திருக்கிறார்.

'ஒண்ணுமே புடுங்கலன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்ல..' என்று பஞ்ச் அடித்தபடி, கைதியின் கண்ணாடியைப் பிடுங்கி, அதை சக போலீசிடம் லஞ்சமாகத் தரும் பார்த்திபன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், அவரை இன்னும்கூட சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

சமுத்திரக்கனியை இத்தனை கொடூர வில்லனாகப் பார்க்க முடியவில்லை. ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன், ரியாஸ், கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம், ஞானவேல் என அத்தனைப் பேரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

Masssu Engira Masilamani Review

படத்துக்கு பெரிய பலம் ராஜசேகரின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும். குறிப்பாக பின்னணி இசை.

வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!

 

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னை குறித்து கேள்விகள் எழுப்பி நடிகர் நாசர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதம்:

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன்.

Nasser's open letter to Nadigar Sangam Chief Sarath Kumar

இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் - திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தில் பேசிய பேச்சின் தொடர்பாக தாங்கள் வரைந்த அறிக்கையை படிக்க நேர்ந்தது. ஒரே கேள்விதான் எழுகிறது? "என்ன நடக்கிறது சங்கத்தில்" சில உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் மீது கீழ்த்தரமான வார்த்தைகள் நிரம்பிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். நியாயமான முறையில் சந்தேகங்களை எழுப்பியவர்களுக்கு மிரட்டலும் அவலமும் கலந்த மொட்டை கடிதாசிகள் வருகின்றன.

தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துணைத்தலைவர் திருச்சியில் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றி பேசியதுமல்லாமல் ஒட்டு மொத்தமாக சினிமா நடிகர்களை ‘மானமற்ற நாய்கள்" என்கிறார். பொதுச் செயலாளரோ தன் சங்கத்தைச் சார்ந்த ஒரு உறுப்பினரை பெரிய மயிறா? என்று கேள்வி எழுப்புகிறார். சங்கத்தை பிளக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்.

இவர் இருவரின் செய்கையின் புகார் கொடுத்து பதில் வராததால் பக்கம் பக்கமாய் மீண்டும் எழுதியதால் .. .. காரணம் ஏதும் விளக்கப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமென செயற்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு தங்கள் கையொப்பமிட்ட பதில் வருகிறது. திருவாளர்கள் துணைத்தலைவர், பொதுச் செயலாளர் மீது நான் கொடுத்த புகாரின் பேரில் நீங்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. அதற்க நான் ஏன் பதிலளிக்கவில்லையென்றால் சில செயற்குழு உறுப்பினர்களின் தேவையற்ற கட்டுக்கதைகளும், அவதூறுகளும், மூன்றாம் தர வ்ய+யகங்களாய் ப்ரயோகித்ததின் காரணமாகத்தான். பிடிக்காதவர்களின் மீது அற்பத்தனமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு நிலைகுலைய செய்யலாமென்று அவர்கள் நினைத்தால் அது நடக்காதென்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

நீங்களும் தீர விசாரிக்காமல் அக்கடிதங்களை எனக்கு அனுப்பிவைத்தீர்கள் என்பதுதான் என் வருத்தம். (நிர்வாகிகளையும் சேர்த்து 27 பேர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு எனக்கு எதிராக 11 பேரே பதிலளித்தனர். மற்ற 16 பேரின் கருத்துக்களை நான் நன்கறிவேன்) விஷால் அவர்கள் புதுக்கோட்டையில் பேசியதை கண்டித்து இன்று தங்கள் அறிக்கை வந்திருக்கிறது. புதுக்கோட்டையில் எழுபதுற்கும் மேற்பட்ட கலந்து கொண்ட நாடக நடிகர்களை வாக்கில்லாதவர்கள் என்று குறிப்பிடுவது தேர்தல் கவலையோடு என்பதை நான் உணர்கிறேன். ஒரு உறுப்பினர் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையென்று நான் நினைக்கிறேன். பத்திரிகை அறிக்கை மூலமாக எச்சரிப்பது புதிய அணுகுமுறையாக இருக்கிறது. (இந்த புதிய அணுகுமுறையை முன்வைத்து தங்களுக்கு எழுதிய இந்த கடிதத்தையும் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளேன்) யார் யாரையும் பழித்தும் இழித்தும் பேசலாம். நடவடிக்கைகள் எடுக்கப்படாது ஆனால் நிர்வாகம் தன்னை காத்துக்கொள்ள அறிக்கைகள் மட்டும் விடும். ஐயா சில மாதங்களுக்கு முன் நடந்தேறிய சிறப்பு செயற்குழு கூட்டத்தில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதே சிறப்பு கூட்டத்தில் ‘தை மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வரும் அப்படியில்லாவிட்டால் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு எல்லோரையும் கலந்தாலோசித்து புதுக்கட்டிடம் துவங்கப்படும்" என்று செயற்குழு உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் கரவொலி எழுப்ப அறிவித்தீர்கள். இன்று தை கடந்து வைகாசியும் முடியப்போகிறது.

எப்போது கூடப்போகிறோம், எங்கே கலந்தாலோசிக்கப் போகிறோம். ப+ச்சி முருகன் வழக்கு தொடுத்ததால் கட்டிடம் நின்று போனதாக காலம் காலமாக சொல்லி வருகிறீர்களே தவிர அவ்வழக்கின் தன்மையை ஏன் வெளிச்சத்துக்கு கொண்டு வர மாட்டேன் என்கிறீர்கள். ‘ஒன்பது பேர் கொண்டு செயல்பட வேண்டிய அறக்கட்டளை பத்தாண்டுகளுக்கு மேலாக மற்ற ஏழு பேரை நியமிக்காமல் இருவரால் மட்டுமே செயல்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எப்படி செல்லுபடியாகும்" என்பதுதான் வழக்கின் சாரம். அதுமட்டுமில்லாமல் ஒப்பந்தம் கையொழுத்திட்ட பின்னரே செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து தங்களால் ளுPஐ சினிமாவோடு ஒப்பந்தம் கையெழுத்திட்ட தேதியையும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட தேதியையும் தயவு கூர்ந்து சொல்லமுடியுமா?

ஐயா .. .. .. நடிகர் சங்கம் சார்பாக கையெழுத்திட்ட பத்திரங்களின் நகல்களை நான் பார்க்க நேரிட்டது. அதில் ஆயுட்கால அறங்காவலர்கள் என்று தங்களையும் பொதுச் செயலாளர் ராதாரவியையும் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறீர்கள். எந்தச் சூழலில், என்ன காரணத்தினால் யார் ஒப்புதல் பெற்று எந்த சட்ட விதியின் கீழ் தாங்கள் இருவரும் ஆயுட்கால அறங்காவலராக நியமிக்கப்பட்டீர்கள் என்பதற்கான சான்றுகள் உறுப்பினனாகிய எனக்கு கிடைக்குமா?

ஐயா.. .. .. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில், ஒரு கட்டத்தில் தாங்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘வருங்காலத்தில் இந்த நாட்டு பிரதம மந்திரி ஆவதற்கான லட்சியத்தை வைத்திருக்கிறேன். அதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இச்சங்க விஷயத்தில் ஆதாயம் தேடுவேனா" என்றீர்கள். உண்மையில் என் மனம் சங்கடப்பட்டது. இதுவரை முதலமைச்சர்களை மட்டுமே சமுதாயத்திற்கு அளித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு பிரதமரையும் அளிக்கச் செய்கிறது என்கிற பெருமை எனக்கும் உண்டு. ஐயா, நாங்கள் எக்காலத்திலும் உங்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை.. .. சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவே விழைகிறோம். எங்களை நாய் என்றழைத்துக் கொள்ளட்டும். நான் சிறிய கேசமோ அல்லது சின்ன முடியாகவோ இருந்துவிட்டுப் போகிறேன்.சங்க ஒற்றுமையை காக்க வேண்டியே மதிப்பிற்குரிய நிர்வாகிகள் பேசியதாகவே எடுத்துக் கொள்வோம். வேண்டுமென்றால் சங்க ஒற்றுமை காத்திட சங்க நாதமென கர்ஜித்த சிங்கங்கள் என பாராட்டு விழா கூட ஏற்பாடு செய்வோம். ஆனால் ஐயா, குழம்பி கிடக்கும் இக்கட்டிடப் பிரச்சினை குறித்து மட்டுமே ஒரு சிறப்பு கூட்டம் கூட்டி உள்ளும் புறமும் தெளிவாய் தெரியும் வகையில் வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டாலே போதும் தங்கள் மீதும் மற்ற நிர்வாகிகள் மீதும் பனியென சூழ்ந்திருக்கும் சந்தேகங்கள் மறைந்துவிடும்.

வீண் பேச்சுக்கள் அறிக்கை கணைகள் எல்லாம் தேவையற்று போகும். தாங்கள் இரவும் பகலுமாய் கவலைப்படுகிற சங்க ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். ஐயா திரையுலகப் பிரச்சினைகளில் நம் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் பங்கெடுத்து தீர்வு காண்கிறது என்பதை நான் நன்கறிவேன். நிச்சயமாய் அதற்காக மன நிறைவான பாராட்டுதல்கள் உண்டு. அதே தீவிரம் சங்கப் பிரச்சினைகளிலும் சார்பற்று, பாராபட்சமற்று செயல்களில் இருக்க வேண்டுமென்பதுதான் எல்லா சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாகும். தங்களைப் போலவே சங்கத்தின் முன்னேற்றத்தையும், ஒற்றுமையையும் மனதில் வைத்து, தங்கள் உண்மையுள்ள

(ம. நாசர்)

இவ்வாறு அந்தக் கடிதத்தில் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

 

துடி- தீவிரவாதிகளின் கதை

சென்னை: சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் குடும்பப் படங்களை விட பேய்ப் படங்களும் திகில் படங்களும் அதிக அளவில் வரத் துவங்கிவிட்டன. இதனை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டதால் புதிதாக படம் இயக்க வரும் அறிமுக இயக்குனர்களும் வித்தியாசமான கதைகளையே கையில் எடுக்கத் துவங்கி விட்டனர் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள படம் துடி, ஹலோ நான் ஒன்னும் படத்தோட பாதிப் பெயர மட்டும் சொல்லல படத்தோட முழுப் பெயரே துடி தான்.

Thudi  Terrorist attack story in Tamil

படத்துல வர்றவங்க யாருக்காக துடிக்கிறாங்க அப்படிங்கிறது தான் கதை போல இருங்க இருங்க எதுக்கும் செக் பண்ணி பாத்துக்கலாம் அதாவது தமிழ்ல ஒரு பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த கதைதான் இந்த துடி யாம். அறிமுக இயக்குனர் ரிதுன் சாகர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்தப் படத்தை தைரியமா இயக்குறதோட இல்லாம படத்தோட தயாரிப்பாளாராகவும் மாறி இருக்காரு.

நிறையக் குறும்படங்கள் இயக்கிய கையோட படத்த இயக்க வந்திருக்கும் இவர் விஷுவல் கம்யூனிகேசன் முடிச்சிருக்காரு, படத்துல நடிகை அபிநயா, சுமன், பிரம்மானந்தம் இவங்களோட சூது கவ்வும் ரமேஷ் மற்றும் நளினி நடிச்சிருக்காங்க. படத்தோட கதை என்னென்னா ஒரு நட்சத்திர ஹோட்டல்ல நடக்கிற தீவிரவாதிகளின் தாக்குதல் தான் தானாம் ( லைட்டா சலீம் மாதிரி இருக்குல்ல) மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை நடக்கிற விசயங்கள் தான் கதையாம்.

டைட்டில்க்கு ஏத்த மாதிரி படம் " துடி" ப்பா வந்தா சரி...