பாலக்காட்டில் நடிகர் பிருத்விராஜ் திடீர் திருமணம்! 4/26/2011 10:10:22 AM கேரளாவில் மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ். இவர், நந்தனம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கனாகண்டேன், மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் உருமி என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். ராவணன் படத்தில் நடித்த போது, பிருத்விராஜிடம் மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி சார்பில் பிரதிக்ஷா என்ற பெண் நிருபருக்கும், பிருத்விராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது பிருத்விராஜ் மறுத்து வந்தார். ஆனாலும், பிரதிக்ஷா என்ற சுப்ரியாமேனனுடன் நெருங்கி பழகி வந்தார். மே 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென நேற்று நடிகர் பிருதிவிராஜ் - சுப்ரியா மேனன் திருமணம் நடந்தது. சுப்ரியா மேனனின் சொந்த ஊரான பாலக்காடு தேக்குறிச்சியில் நடந்த திருமணத்தில் பிருத்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன், அண்ணனும் நடிகருமான இந்திரஜித் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மே 1ம் தேதி கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.