விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் கூட்டணியில் ஷங்கரின் '3இடியட்ஸ்'! - முதல் பாடல் கம்போஸிங் முடிந்துவிட்டது

http://way2online.com/wp-content/uploads/2010/07/Shankar1.jpg
ஒரு வழியாக 3 இடியட்ஸ் ரீமேக்கை உறுதி செய்தார் ஷங்கர். இந்தப் படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்துவிட்டது.

ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து ஷங்கர் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஷங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார்.

இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஷங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி துவங்குகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல்முறை.

நாயகியாக இலியானா நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.

 

அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் -ரஜினி ஏற்பாடு!

http://1.bp.blogspot.com/_iTwpjOELp_0/STs6Wv7NRdI/AAAAAAAABgg/yHjYb1BncyM/s400/Temple.jpg
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலையாரின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார்.

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.

இந்த விஷயம் ரஜினியிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார் ரஜினி. மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.

இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.

தற்போது மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் ரஜினி. அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் ரஜினி.

அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன.

 

ஹ்ரித்திக்குடன் கிளுகிளு காட்சிகள்...ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் சிக்கல்?

Aishwarya Rai and  Hrithik
குஜாரிஷ் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் படு நெருக்கமாக நடித்துள்ளதால் ஐஸ்வர்யா ராய்க்கு குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மனநலம் பாதித்தவராகவும் ஐஸ்வர்யாராய் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாகவும் வருகின்றனர்.

இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்துள்ளனர். இருவரின் படுக்கை அறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளனவாம். ஐஸ்வர்யாராய் இதுபோல் நடித்ததற்கு அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மனைவி மேல் அபிஷேக்பச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

இதுபற்றி ஐஸ்வர்யாராயிடம் கேட்டபோது, “படங்களில் இரு கேரக்டர்களுக்குள் நடப்பவைகளை நிஜத்தில் ஒப்பிடக் கூடாது. எல்லா படங்களிலுமே நாயகனும் நாயகியும் திரையில்தான் காதல் செய்கிறார்கள்.

இதில் என் குடும்பத்தார் என் மேல் கோபமாக இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லாததவை. வெறும் புரளிதான். ஆனால் எப்போதுமே எனக்கு விருப்பமில்லாத காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்….”, என்றார்.

ஏற்கெனவே தூம் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் லிப் டு லிப் கிஸ்ஸடித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.

 

மன்மதன் அம்பு இசை வெளியீடு...விஜய் டிவிக்கு ஒளிபரப்பு உரிமை!!

http://fresh.cinesnacks.in/wp-content/uploads/2010/11/manmadhan-ambu-stills-003.jpg
கமல் – த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய்டிவி பெரும் விலைக்கு வாங்கியுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமாக கலைஞர் டிவி உள்ளிட்ட சேனல்கள் இருக்க, மன்மதன் அம்பு நிகழ்ச்சி உரிமையை விஜய் டிவிக்குக் கொடுத்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில், மிகப் பெரிய சொகுசு கப்பலில் 2 தினங்கள் நடக்கும் மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.

விழாவில் கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.

நவம்பர் 20-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் விஜய் டிவியோ, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இதற்கான முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்புகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

7000 பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் – தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும், ஏராளமான பிரேசில் மற்றும் சீன கலைஞர்களுடன் இணைந்து பாடுகின்றனர்.

 

கவர்ச்சி தோற்றம்:புது நடிகைக்கு ஆர்யா டிப்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ். இவரது சகோதரி பிரீத்திகா, சிக்கு புக்கு படத்தில் நடிக்கிறார்.அவர் கூறியது:

மும்பையில் மாடலிங் செய்து வந்த நான், சினிமா இதழ் ஒன்றுக்கு கட்டுரைகள் எழுதி வந்தேன். அதில் என்னுடைய புகைப்படம் இடம்பெற்றது. அதைப்பார்த்த 'சிக்கு புக்கு இயக்குனர் மணிகண்டன் இதழின் ஆசிரியரை அணுகி, என்னுடைய முகவரியை வாங்கினார். பிறகு என்னை நேரில் சந்தித்தவர், 'சிக்கு புக்கு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்த வேடத்தில் நடிக்க கேட்டார். அவரது கால்ஷீட் இல்லாததால் அந்த வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கிறது. இது படத்தில் சர்ப்ரைஸ் தரும் கேரக்டர். நடிக்கிறீர்களா எனக் கேட்டார். தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு என்பதாலும் கேரக்டர் பிடித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். ஊட்டி, மைசூர், காரைக்குடியில் ஷூட்டிங் நடந்தது. ஹீரோ ஆர்யா நட்பாக பழகினார். எனது உடற்கட்டை, கவர்ச்சி தோற்றத்துக்காக எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது..


Source: Dinakaran
 

டாப்சியால் தயாரிப்பாளர் அப்செட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் ட்விட்டரில், தனது அடுத்த தெலுங்கு படம் மிஸ்டர் பர்ஃபக்ட் என குறிப்பிட்டிருந்தார் டாப்சி. இவர் இப்படி படத்தின் தலைப்பை வெளியிட்டதால் அப்பட தயாரிப்பாளர் தில் ராஜு அப்செட் ஆகிவிட்டாராம். இதே தலைப்பை ஐதராபாத் பிலிம்சேம்பரில் இன்னொரு தயாரிப்பாளரும் பதிவு செய்திருக்கிறார். அவரிடமிருந்து தலைப்பை வாங்க ராஜு முயற்சித்து வந்தாராம். இதில் இரு தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தலைப்பை பற்றி எதுவும் முடிவு செய்ய வேண்டாம் என ராஜுக்கு பிலிம்சேம்பர் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பை டாப்சி சொல்லியிருப்பதால் அப்செட்டான ராஜு, அவரை சத்தம் போட்டாராம்.


Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகை மீது டைரக்டர்கள் கோபம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…

நல்ல காலம் பொறக்குது…

விவாகரத்துக்கு பிறகு மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்தாரு சோனி நடிகை. வாய்ப்புகள் கொட்டும்னு நம்பியிருந்தாரு. ஆனா பெரிசா எதுவும் வாய்ப்பு வராததால மனசு உடைஞ்சிட்டாராம்… உடைஞ்சிட்டாராம்… திரும்ப தெலுங்கு தேசம் பக்கமா சான்ஸ் வேட்டைக்கு போய¤ருக்கிறாராம்… போயிருக்கிறாராம்…

உச்ச நடிகர் பொண்ணு பேர்ல யாரோ போலியா வெப்சைட் தொடங்கி இருக்காங்களாம்… இருக்காங்களாம்… இதனால பொண்ணு அப்செட் ஆயிட்டாராம். போலி பேர்வழிய கண்டுபிடிக்க ரகசிய ஏற்பாடு செஞ்சிருக்க¤றாராம்… செஞ்சிருக்காறாராம்…

ஐதராபாத்துல பேட்டி கொடுத்த சமந்த நடிகை மேல தமிழ் இயக்குனருங்க கடுப்புல இருக்கிறாங்களாம். நடிச்ச சில தமிழ் படங்கள்ல என்னை அழகா காட்டல. தெலுங்குலதான் என்னோட அழகும் திறமையும் ரசிகர்களுக்கு தெரிஞ்சிருக்குன்னு சொன்னாராம்… சொன்னாராம்…சம்பந்தப்பட்ட இயக்குனருங்க நடிகை மேலே கோபமா இருக்கிறாங்களாம்… இருக்கிறாங்களாம்…


Source: Dinakaran
 

மகனின் லவ்வை உளவு பார்க்கும் நாகார்ஜுனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் 'ரட்சகன் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் நாகார்ஜுனா. அவர் தனது பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள். நிச்சயம் இருக்கிறார்கள். எனது மகனான அவனுக்கு எப்படி கேர்ள் பிரெண்ட் இல்லாமல் போவார்கள்? இது பற்றி அவனிடம் கேட்டால், 'அப்படி யாரும் இல்லைÕ என்றுதான் சொல்கிறான். அதை நான் நம்பத் தயாராக இல்லை. அவன் யாருடன் வீட்டுக்கு வருகிறான், வெளியே போகிறான் என்பதையெல்லாம் வாட்ச்மேனிடம் கண்காணிக்கச் சொல்லி இருக்கிறேன். அடுத்த மாதத்திலிருந்து தனி வீடு எடுத்து தங்கப் போவதாக என்னிடம் அனுமதி கேட்டபோது ஆச்சரியம் அடைந்தேன். எதற்காக அவன் தனியாக போகிறான் என்பது தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய கேர்ள் பிரெண்டுடன் வசிக்க விரும்பலாம். அதை விரைவில் கண்டு பிடித்து விடுவேன்.

Source: Dinakaran
 

உத்தமபுத்திரன் - விமர்சனம்

Uthama Puthiran Review in Tamil, Uthama Puthiran Tamil Review
http://tamilasia.com/wp-content/uploads/2010/10/uthama-puthiran-tamilasia.jpg
நடிகர் : தனுஷ்
நடிகை : ஜெனிலியா
இயக்குனர் :மித்ரன் ஆர்.ஜவஹர்

குட்டி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட தெலுங்கு ரீ-மேக் படங்களில் இணைந்த தனுஷும், டைரக்டர் மித்ரன் ஆர்.ஜவஹரும் மீண்டும் இணைந்து ரீ-மேக் செய்திருக்கும் ஒரு தெலுங்கு படம்தான் உத்தமபுத்திரன் தமிழ்படம்.

கதைப்படி தனுஷும், ஜெனிலியாவும் காதலர்கள். இந்த காதலுக்கு தனுஷ் குடும்பம் ஏகப்பட்ட உதவிகளை செய்கிறது. ஆனால் இவர்களது காதல் கைகூடக் கூடாது என உபத்திரவம் செய்கின்றனர் வில்லன்கள். அவர்கள் யார்? அவர்களை தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதை காமெடியாகவும், கலக்கலாகவும் சொல்கிறது உத்தமபுத்திரன் படத்தின் மொத்த கதையும்.

தனுஷ் வழக்கம்போலவே அப்பாவி இளைஞராகவும், அடிதடி ஹீரோவாகவும் அசத்தியிருக்கிறார். ஜெனிலியா பொம்மை மாதிரி வந்து போனாலும் தன் பெண்மையால் ரசிகர்களை கவருகிறார். இரண்டு டஜன் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இதமான இசையும், பாலசுப்பிரமணியத்தின் அழகிய ஒளிப்பதிவும் குளுமை. தீபாவளிக்கு வந்த படங்களிலேயே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம் என்பதால் உத்தமபுத்திரன் ஓ.கே.

உத்தமபுத்திரன் - ஓ.கே. மித்ரன்!
 

மைனா - விமர்சனம்

Mynaa Tamil Review, Mynaa review in Tamil
http://www.moviesongsdownload.com/images/mynaa.jpg
நடிகர் : வித்தார்த்
நடிகை : அமலா பால்
இயக்குனர் :பிரபு சாலமன்

மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ. பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்! இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு. அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.

மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!
 

'தம்' அடிக்கும் ஐஸ்வர்யா-மகளிர் அமைப்புகள் போர்க்கொடி!

http://static.indianexpress.com/m-images/Mon%20Nov%2015%202010,%2014:52%20hrs/M_Id_185362_Aishwarya_Rai.jpg
ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள குஸாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போல நடித்திருக்கும் காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரோஷனும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ள இப்படம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரோஷனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா புகை பிடிப்பது போல காட்சி வருகிறது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஸாரிஷ் படத்தில் வரும் காட்சிகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.

நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன்.

உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் ஐஸ்வர்யா.