ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனம் போன்ற படங்களெடுத்துப் பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்...

ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறிய அவரது சில பினாமி தமிழர்கள், அந்த இனப் படுகொலையை மறைக்க திரைத்துறையில் கோடிகளைப் பாய்ச்சும் ஈனத்தனம் மறுபக்கம்..

ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

இந்த இரண்டு வகை துரோகங்களையும் புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவுக்கு தமிழர்களை அறிவிலிகளாக நினைத்துக் கொண்டு வித விதமான துரோகங்களை அரங்கேற்றிக் கொணடிருக்கின்றன இந்தக் கூட்டங்கள்.

சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமாக்காரர் மூலம் தமிழர்களை மிக அசிங்கமாகச் சித்தரித்து இனம் என்ற பெயரில் படமெடுத்தனர், ராஜபக்சே கூட்டத்தினர். அதற்கு தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாகிப் போனார் லிங்குசாமி.

இப்போது ராஜபக்சேவின் நேரடிக் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனத்தினர் விஜய் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கின்றனர்.

லைக்கா மொபைல் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனம். ராஜபக்சே மகன் நமல்ராஜபக்சே இதன் பார்ட்னர். லைக்கா மொபைல் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர். இது தெரியாத ஈழத் தமிழர் யாருமிருக்க முடியாது.

இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது.

சர்வதேசம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதனை கவனத்துடன் பார்த்து வருகின்றன.

தன்னை ஈழத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக் கொண்ட (ஒரு காலத்தில்) விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா? என்ற கேள்வியோடு இந்தப் படத்தை எதிரக்க தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன், "எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாதான் எங்கள் சேர்மனின் நண்பர். எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல.

மேற் கொண்டு பேச முடியாது," என்கிறார்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... விஜய்க்கு இந்தப் படம் தலைவாவை விட ஆயிரம் மடங்கு பெரும் தலைவலியாக அமையப் போகிறது என்பது மட்டும் நிஜம்!!

 

மீண்டும் தள்ளிப்போனது கோச்சடையான் ரிலீஸ்... மே 1 அல்லது 16-ல் ரிலீஸ்?

மீண்டும் தள்ளிப்போனது கோச்சடையான் ரிலீஸ்... மே 1 அல்லது 16-ல் ரிலீஸ்?  

இதற்காக யாரும் சவுந்தர்யாவையோ ரஜினியையோ அல்லது தயாரிப்பாளர்களையோ குற்றம் சொல்லவில்லை.

இந்தப் படத்தின் இயல்பு இப்படித்தான்... இவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே அதைத் தெளிவாக அறிவிக்காமல், தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும், இதோ ஏப்ரலில் ரிலீஸ் என்றெல்லாம் அறிவித்து, தேதிகளை மாற்றிக் கொண்டிருப்பதுதான் ரசிகர்களை கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறது, விமர்சகர்களை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.

கடைசியாக, ஏப்ரல் 11-ம் தேதி படம் நிச்சயம் வெளியாகும்... 6000 ப்ளஸ் தியேட்டர்களில் கன்பர்ம் என்று சில தினங்களுக்கு முன்புதான் ஈராஸ் நிறுவனம் அறிவித்தது.

தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவை நடத்தி, ஏப்ரலில் படம் நிச்சயம் என்றனர்.

இதனால் மற்ற படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளனர் கோச்சடையான் தயாரிப்பாளர்கள்.

ஏப்ரல் 11-ல் படம் வெளியாவது சாத்தியமில்லை என்றும், வரும் மே மாதம் படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர்.

மே 1-ம் தேதி அல்லது 16-ம் தேதி வெளியாகக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

மே 16-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் கோச்சடையானும் வெளியாகும் என்கிறார்கள்.

ரஹ்மானும் ஒரு காரணம்..

இந்தப் படத்தின் தமிழ்ப் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படம் ஏன் தள்ளிப் போகிறது என விசாரித்தபோது, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இன்னும் பின்னணி இசை முடிக்காததுதான் முக்கிய காரணம் என்றார்கள்.

 

படமும் ஓடலை, கிசுகிசுவும் அடங்கலையே: கடவுளிடம் கோரிக்கை வைத்த நடிகை

சென்னை: மாவட்ட நாயகி தனது படங்கள் வெற்றி பெறவும், காதல் கிசுகிசுக்கள் அடங்கவும் வேண்டி காளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மாவட்ட படம் ஹிட் என்று வெளியே கூறினாலும் படம் ஊத்திக் கொண்டதாக ஒரு பெரிய தயாரிப்பாளர் மேடையில் பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பிறகு தான் பலருக்கும் படம் பப்படமான விஷயமே தெரிய வந்தது. அந்த படத்தின் நாயகிக்கு அண்மையில் எந்த படங்களும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அவருக்கும் ஆந்திராவில் உள்ள பெத்த மனிதர் ஒருவருக்கும் காதல் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வேறு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கவலை அடைந்த அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று தனது கெரியர் டாப் கியரில் செல்ல அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம்.

அம்மணி கோவிலுக்கு சென்ற வேகத்தில் திரும்பிவிடாமல் நிதானமாக சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார்.

 

ஆடுகளம் முருகதாசுக்கு திருமணம்!

இளம் குணச்சித்திர நடிகர்களில் முன்னணியில் உள்ள முருகதாஸுக்கு இந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணமாகும்.

ஆடுகளம், மவுன குரு, குக்கூ போன்ற படங்களில் நடித்தவர் முருகதாஸ். கடந்த இரு ஆண்டுகளில் 15 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

சிறந்த நடிகர் என பரவலான பாராட்டுகளைப் பெற்ற முருகதாஸுக்கு வரும் ஏப்ரல் 27-ம் தேதி திருமணம்.

ஆடுகளம் முருகதாசுக்கு திருமணம்!

பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம்தான் என்றாலும், பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, புதிய காதல் உண்டாகிவிட, இப்போது காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆமாம், வரும் ஏப்ரல் 27- ம் தேதி திருமணம். இப்போதான் என் வருங்கால மனைவியிடம் கொஞ்ச கொஞ்சமாப் பேசி லவ்வை டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அவங்க ரொம்ப அப்பாவி. என்னுடைய படங்களைப் பார்க்கும்போது 'என்னங்க தண்ணிெல்லாம் அடிக்கிறீங்க? எல்லார்கிட்டயும் அடி வாங்கிக்கிட்டு இருக்கிறீங்க?'னு எல்லாமே நிஜமா நடக்கிறதாகவே நினைச்சுடுறாங்க!', என்றார்.

 

தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை

தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன.

இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் உண்மையாகவே தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அதனை முறைப்படி சொல்லி தகுந்த விதத்தில் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, படத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பதே தெரியாமல் அடிப்போம் உதைப்போம் என ஆவேசம் பாடுவது எந்த விதத்தில் நியாயம்?

கிருஷ்ண தேவராயர் பாத்திரம் குறித்து குரல் எழுப்புபவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம். எந்த இனத்தவர்களின் மனதையும் புண்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடையாது.

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கபடவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராக கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனை புண்படுத்தும் செயல்.

ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு செயல்கள் நடக்கிறபோது அம்மாநிலக் கலைஞர்கள் எவரையேனும் எதிர்த்து அங்கு பெருமளவில் வாழும் தமிழர்கள் ஒருமித்து திரண்டுவிட முடியுமா? அங்கிருக்கும் ஒரு கலைஞனுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலும், அது எத்தகைய விளைவுகளை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தும்?

ஆனால், மண்ணின் மைந்தனாக பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வடிவேலுவை சில அமைப்புகள் இங்கே மிரட்டுவது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல். தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல்.

தமிழினத்தின் பெருமைமிகுந்த கலைஞன் வடிவேலு. அவரை எவ்வித இக்கட்டும் சூழாதபடி காப்பாற்ற வேண்டியது நம் இனத்தின் கடமை. திரையில் வேண்டுமானால் வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகராக இருக்கலாம்; ஆனால், உண்மையில் எங்கள் இனத்தின் கதாநாயகன் வடிவேலு.

பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணியவைத்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.

 

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. காரணம் இளையராஜா, அவரது இசை!- பிரகாஷ் ராஜ்

மதுரை: இன்று நான் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு அய்யா இளையராஜாவும் அவரது இசையும்தான் காரணம் என்றார் நடிகர் - இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார்.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. காரணம் இளையராஜா, அவரது இசை!- பிரகாஷ் ராஜ்

மதுரை மண்ணில் இதுவரை நடந்திராத அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியது. அத்தனை பேரும் ராஜாவின் இசை - வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்து இசையை ரசித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ‘‘நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...'' என்று கார்த்திக் ராஜா பாட, இசை நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர் பலத்த கரவொலிகளுக்கிடையே தோன்றிய இளையராஜா ‘‘ஜனனி ... ஜனனி..' பாடலைப் பாட ஆரம்பிக்க மக்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன், யுவன் சங்கர் ராஜா, பாடகிகள் சித்ரா, பவதாரிணி, பிரியா உள்பட பல பாடகர், பாடகிகள் இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை பாடி அரங்கையே அதிர வைத்தனர்.

மொத்தம் 32 பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டன. கடைசி நிமிடம் வரை அமர்ந்திருந்து பாடல்களை ரசித்துக் கேட்டனர் மதுரை ரசிகர்கள்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, ‘‘அய்யாவின் (இளையராஜா) பாடலை நேரடியாக கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். நடிகராக இருந்து டைரக்டராகியும் இருக்கிறேன். நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் மதுரை மல்லிகை பூ, இட்லி பற்றி பாட்டு போட்டு இருக்கிறார்.

தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார். இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார்,' என்றார்.

 

இளையராஜா எங்கள் பெருமை, பாக்கியம்! - பாலா

மதுரை: இளையராஜா எங்கள் பெருமை, அவரது இசை நமது பாக்கியம் என பெருமிதப்பட்டார் இயக்குநர் பாலா.

மதுரையில் நடந்த இளையரஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் இடையிடையே நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரமுகர்களை அழைத்துப் பேச வைத்தனர்.

இதில் இயக்குநர் பாலா பேசுகையில் இளையராஜாவை தன் தந்தைக்கு நிகராக வைத்துப் புகழ்ந்தார்.

இளையராஜா எங்கள் பெருமை, பாக்கியம்! - பாலா

கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு அப்பா, தாய். இசையாக அப்பா பிறந்து இருக்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?" என்றார்.

இயக்குநர் பாலா பேசும்போது, ‘‘நான் அடுத்து பண்ணபோகிற படம் ‘தாரை தப்பட்டை' இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இது அவருக்கு ஆயிரமாவது படமாகும். நான் மதுரைகாரன். இப்படத்தில் மதுரைகாரன் சசிகுமார் நடித்துள்ளார். மதுரைகாரர் இசையமைத்துள்ளார். மதுரைகாரன் நான் டைரக்ட் செய்கிறேன்.

இதைவிட நான் என்ன பாக்கியம் செய்து இருக்க முடியும்.. இளையராஜா இந்த மண்ணின் பெருமை," என்றார்.

 

வாய்ப்பு தேடி பார்ட்டி, பார்ட்டியாக செல்லும் இளம் நடிகை

சென்னை: படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி ஆஸ்திரேலியாவில் இருந்து நடிக்க வந்த நடிகை பார்ட்டி, பார்ட்டியாக செல்கிறாராம்.

ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் குடும்பத்தில் பிறந்த அந்த நடிகை உண்மைக்கு எதிரான வார்த்தை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். பின்னர் ஒரு வாய்ப்பு கிடைத்து தமிழுக்கு வந்தார். அந்த படத்திற்கு பிறகு அவரை யாருமே கோலிவுட்டில் கண்டுகொள்ளவில்லை.

இதனால் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடிக்க சென்றார். தற்போது கோலிவுட்டில் சுத்தமாக வாய்ப்பு இல்லாததால் வாய்ப்பு தேடி அவர் பார்ட்டி பார்ட்டியாக செல்கிறாராம்.

மகள் படும் பாட்டை பார்த்த பெற்றோர் மகளை ஆஸ்திரேலியாவுக்கே திரும்பி வருமாறு கூறுகிறார்களாம்.