ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்!

Vijay Celebrates His 20th Year Kollywood

தான் நடிக்க வந்து 20 ஆண்டுகளானதை கேக் வெட்டி, அமலா பால் உள்ளிட்டோருக்கு ஊட்டி கொண்டாடினார் நடிகர் விஜய்.

1992-ல் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 20 ஆண்டுகளில் 53 படங்களில் நடித்துமுடித்துள்ளார்.

திரையுலகில் தனது 20ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் அவர் கேக் வெட்டினார்.

ஏஎல் விஜய் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில், விஜய்க்காக பெரிய கேக் வரவழைத்த தயாரிப்பாளர், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் முன்னிலையில் விஜய்யை கேக் வெட்ட வைத்தார்.

உடன் நடிக்கும் ஹீரோயின் அமலா பால், இயக்குநர் விஜய் ஆகியோருக்கு கேக்கை ஊட்டினார் விஜய்.

 

கொசுக்கடியில் புவனேஸ்வரி... பாய்ந்தது 3வது வழக்கு!

3rd Case Against Actress Buvaneswari

சென்னை: புழல் சிறையில் கொசுக்கடிக்கு மத்தியில் பெரும் புழுக்கத்தி்ல தவித்து வருகிறாராம் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி. ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைதாகியுள்ள அவர் தற்போது 3வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போன புவனேஸ்வரி தனது அடியாட்களுடன் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தரையில்தான் படுக்கிறாராம். கொடுக்கும் உணவை வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறாராம். கொசுக்கடி தாங்க முடியவில்லையாம். பெரும் அவஸ்தையிலும், புழுக்கத்திலும் தவித்து வருகிறாராம்.

தியேட்டர் வன்முறையைத் தொடர்ந்து அவர், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் காரை விற்று விட்டு பின்னர் மீண்டும் திருப்பி எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது 3வது வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் வசிக்கும் குருநாதன் என்ற ரியல் எஸ்டேட் அதிபர், நடிகை புவனேஸ்வரி மீது ஒரு புகார் மனுவை கொடுத்தார். டி.வி. தொடர் தயாரிப்பதாக கூறி, புவனேஸ்வரி தன்னிடம் ரூ.1.5 கோடி வாங்கியதாகவும், பின்னர் அந்த பணத்தை திருப்பித்தராமல் மிரட்டியதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு மீது, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். நேற்று இந்த புதிய வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விவரத்தை போலீசார் ஜெயிலுக்கு சென்று நடிகை புவனேஸ்வரியிடம் நேற்று பகல் தெரிவித்தனர்.

இந்த புதிய வழக்கில் புவனேஸ்வரி இன்று சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபோக புவனேஸ்வரி மீ்து மேலும் சில வழக்குகள் போடப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தன் முயற்சியில் மனம் தளராத கமல்... விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

Vishwaroopam On Dth Before Theater Release

சென்னை: விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.

தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

 

பிரியாணியில் பிரேம்ஜியுடன் இணைந்து பாட்டு பாடுகிறார் கார்த்தி

 

கிசு கிசு - புரளி கிளப்பும் நடிகை

 

‘கஷ்டப்பட்டேன்’ என்ற வார்த்தையை ஹீரோக்கள் சொல்ல கூடாது : அமீர்

 

இந்தியில் தனுஷ் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை : ஐஸ்வர்யா வருத்தம்

 

விக்ரம் பிரபுவின் அடுத்த படம்

 

10 ஆண்டுக்கு பிறகும் த்ரிஷா ஹீரோயினாக நீடிப்பது எப்படி? : இயக்குனர் விளக்கம்

 

விஜய் படத்துக்கு பெயர் தங்கமகன்?

 

நடிப்பில் பியாவுடன் போட்டி: பிந்து மாதவி

 

நட்சத்திர கிரிக்கெட் தூதரானார் காஜல்

 

டாப் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம்: அசின்

 

குறையொன்றுமில்லை பாடல்கள் பென்டிரைவில் வெளியீடு

 

யாருடா மகேஷ் பாடல் வெளியீடு

 

நடிகர்களுக்கு துணிச்சல் வேண்டும்: சுதீப்

 

சங்கீதாவுக்கு பெண் குழந்தை

 

10 நிமிட டான்ஸுக்கு 50 லட்சம்

 

ஹீரோயின்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை: விஷால்