டான்ஸ் மாஸ்டர் வீட்டில் பார்ட்டி : வாரம்தோறும் நடிகைகள் சந்திப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வாரம்தோறும் பிரபல நடிகைகள் தனி பார்ட்டி நடத்தி, தங்கள் வாழ்க்கை ரகசியங்களை விவாதிக்கும் புது டிரெண்ட் கோலிவுட்டில் பரவி உள்ளது. ஹீரோயின்கள் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு விலகிய காலம் மாறி இப்போது வாரம்தோறும் தனி பங்களாவில் சந்தித்து பார்ட்டி கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதுபோல் ஒரு பார்ட்டி, சத்தம் இல்லாமல் சமீபகாலமாக சென்னையில் டான்ஸ் மாஸடர் பிருந்தாவின் பங்களாவில் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த பார்ட்டியில் குஷ்பு, த்ரிஷா, சுகாசினி, பிரியா ஆனந்த், ஐஸ்வர்யா தனுஷ், நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி அணைத்து வரவேற்றுக்கொண்டவர்கள், பின்னர் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்குள் விளையாட்டு நடத்தி ஜாலியாக பொழுதை கழித்தனர். பின்னர் நடந்த விருந்தில் கலந்துகொண்டனர். இது குறித்து த்ரிஷா கூறும்போது, 'எனக்கு சில நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அவர்களை எனக்கு தெரியும். அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள்.  இந்த சந்திப்பின்போது விருந்து உண்டு ஜாலியாக இருப்போம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பகிர்ந்துகொள்வோம். சீனியர் நடிகைகள் அதற்கேற்ப அட்வைஸ் தருவார்கள். ஆனால் சினிமா பற்றி இதில் பேச மாட்டோம்' என்றார்.


 

மற்ற நடிகைகள் படத்தை பார்க்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆக்ஷன் வேடத்துக்காக மற்ற நடிகைகள் நடித்த படங்களை பார்க்க மாட்டேன் என்றார் ஹன்சிகா மோத்வானி. இது பற்றி ஹன்சிகா கூறியதாவது: மற்ற படங்களில் சிரித்த முகத்துடன் என்னை பார்த்திருப்பீர்கள்.  'வேட்டை மன்னன்Õ படத்தில் சிம்புவுடன்  முறைத்தபடிதான் நடிக்கிறேன். ஆக்ஷன் ஹீரோயினாக துப்பாக்கியும் கையுமாக வில்லன்களுடன் மோதும் பாத்திரம். இதனால் சிரிக்கக்கூடாது என்று இயக்குனர் கூறிவிட்டார். 'ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்காக மற்ற நடிகைகள் நடித்த ஆக்ஷன் படங்களை பார்ப்பீர்களா?Õ என கேட்கிறார்கள். யார் படத்தையும் பார்க்க மாட்டேன். அதைப்பார்த்தால் அந்த பாணியில் நடிக்கவே எண்ணம்போகும்.  என் பாணியில் எப்படி நடிக்க வருமோ அதுபோல் நடிப்பேன். கன்னட படத்தில் நடிக்க ஆசை. ஆனால் ஏற்கனவே தமிழ், தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கன்னட படம் ஏற்க முடியவில்லை. இதுதவிர 'சிங்கம் 2Õ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். 'மற்ற ஹீரோயின்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதுபோல் நீங்களும் பாலிவுட்டுக்கு போய்விடுவீர்களா?Õ என்கிறார்கள். எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை. சிறுவயதில் நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் நடிக்க ஆசைதான். ஆனால் இந்தி படங்களில் நடிக்க இப்போதைக்கு எனக்கு அவசரம் இல்லை. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.