அஜீத் படத்தில் பாடும் கானா பாலா

Gana Bala Song Ajith

நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா? என்று அட்டகத்தி படத்தில் பிரபலமடைந்த கானா பாலா தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி பாடி வருகிறார்.

தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் அஜீத் நடிக்கும் படத்தில் கானா பாலா பாடல் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடிக்கும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடலை கானா பாலா பாடப்போகிறாராம். ‘தல' படத்தில் பாடவேண்டும் என்பது தன்னுடைய கனவு அது இப்போது நிறைவேறப்போகிறது என்று மகிழும் பாலா அவரது ஸ்டைலுக்கு ஏற்ப பாடல்களை எழுது பாடுவேன் என்கிறார்.

 

93 வயது இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா.. கவர்னர்கள், ரஜினி, கமலுக்கு அழைப்பு!

சென்னை: பழம்பெரும் இசையமைப்பாளர் வி தட்சிணா மூர்த்திக்கு வரும் ஜூலை 28-ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு 3 மாநில கவர்னர்கள் மற்றும் இந்திய சினிமா ஜாம்பவான்கள் ரஜினி - கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நல்ல தங்காள் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 800 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் வி தட்சிணாமூர்த்தி.

தமிழில் ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது படத்தில் இடம்பெற்ற 'நல்ல மனம் வாழ்க' பாடல் இவர் இசையமைத்ததுதான்.

felicitation veteran musician dhakshinamurthy

ஜீவநாடி, ஒரு கோவிலில் இரு தீபங்கள், நந்தா என் நிலா, ஜகத்குரு ஆதிசங்கரர் உள்ளிட்ட என தமிழில் பல‌ படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில்தான் இவர் அதிகப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1919-ல் கேரளாவில் ஆழப்புலாவில் பிறந்த இவர் தனது 13வது வயதில் சினிமாவுக்கு வந்தார். இப்போது அவருக்கு, தற்போது 93 வயது ஆகிறது. இப்போதும் மலையாளப் படங்களுக்கு இசையமைக்கிறார்.

80 வருடங்களாக சினிமாவில் இருக்கும் தட்சிணா மூர்த்திக்கு ஜுலை 28ஆம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்ஷினா அமைப்பு செய்து வருகிறது.

இந்த பாராட்டு விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மேற்கு வங்க கவர்னர்கள் பங்கேற்கின்றனர்.

ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் போன்றோரையும் அழைத்துள்ளனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

தட்சிணாமூர்த்தியுடன் பணியாற்றிய இசை நிகழ்ச்சியில் கே.ஜே.ஏ.ஜேசுதாஸ், பி.அகிலா, ஜானகி, வாணி ஜெயராம் என அனைத்து பாடகர்களும் பாடுகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசைத் துறை சாதனையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் தட்சிணாமூர்த்திக்கு 108 தங்க புஷ்பங்களில் சொர்ணாபிஷேகம் நடத்தப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விமான நிலைய கடையில் லிப்ஸ்டிக் திருடி மாட்டிக்கொண்ட பிரபல தமிழ் நடிகை!

என்னதான் கோடிகளில் சம்பளம் பெற்றாலும், சகல செல்வமும் கொட்டிக் கிடந்தாலும் அல்பமாக எதையாவது திருடி மாட்டிக் கொள்வது சில பிரபலங்களின் வாடிக்கை.

அப்படித்தான் மாட்டிக் கொண்டாராம் தமிழ் - தெலுங்கில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை.

சமீபத்தில் அவர் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள டூட்டி ப்ரீ கடையில் நுழைந்திருக்கிறார். ஒரு விலை உயர்ந்த லிப்ஸ்டிக்கை திருடி பையில் போட்டுக் கொண்டு வெளியேறினாராம்.

அப்போது கடையின் பாதுகாவலர் நடிகையை மறித்து நிறுத்தி, பையில் உள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து கொடுத்துவிட்டு போகவும் என்றாராம்.

நடிகையோ, கடைக்குள் சர்க்யூட் கேமரா இருப்பது கூட தெரியாமல், 'நான் எதுவும் எடுக்கவே இல்லை. என்னை யார்னு நினைச்சே... தமிழ்-தெலுங்கில் நான் பிரபல நடிகையாக்கும்," என்று குதித்துள்ளார்.

உடனே கடையில் பதிவான வீடியோ க்ளிப்பை எடுத்துப் போட்டுக் காட்டியதும், வழிந்தபடி எடுத்துக் கொடுத்தாராம். மேற்கொண்டு எதுவும் செய்துவிட வேண்டாம் என கெஞ்சிய நடிகை, பலமுறை மன்னிப்புக் கேட்டுள்ளார். இதை உடனிருந்த சில பயணிகள் மகா கேவலாகப் பார்த்தார்களாம்!

 

சினிமாவில் ரவுடி... நிஜத்தில் செயின் பறிப்பு, திருட்டுத் தொழில்.. - துணை நடிகர் கைது!

சென்னை: திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட ஸ்டன்ட் துணை நடிகர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு குற்றங்கள், பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் உதவி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் ராமாபுரம் சாந்தி நகர் மெயின் ரோடு பகுதியின் சீனிவாசன் என்பவரை வழிமறித்து செயினை பறித்து கொண்டு தப்பி ஓடும் போது அந்தப் பகுதியின் பணியில் இருந்து தனிப்படை போலீசார் மடக்கி கைது செய்தனர். மேலும் விசாரனையில் 6 வழக்குகளில் வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஆழ்வார்த்திருநகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுத்து சென்றதாகவும், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும், பின்னர் திருவள்ளுவர் சாலையில் பெண்ணிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டார் சீனிவாசன்.

தனக்கு திருமணம் ஆகி 12 வயதுள்ள மகன் இருப்பதாகவும், சின்னத்திரை மற்றும் சினிமாவில் ரவுடி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறிய அவர், வருமானம் சரிவர கிடைக்காததால் சினிமா கேரக்டர் மாதிரியே நிஜத்திலும் வாழ முடிவு செய்துள்ளார். செயின் பறிப்பு, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் துணை நடிகர்.

அவரிடமிருந்து 25 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 

ரொமான்ஸ் இமேஜிலிருந்து ஆன்மீகத்துக்கு மாறிய சிம்பு.. இமயமலை பயணம்!

Simbu Changes His Route Spirituality

சென்னை: சிம்பு என்றாலே கண்ணுக்கு முன்னால் நிற்கும் ப்ளே பாய் இமேஜை சுத்தமாக துடைத்தெறிய ஆசை வந்துவிட்டது அவருக்கு.

விளைவு.... பட்டாயா, பார்ட்டி, டான்ஸ், தோழிகள் என்ற வட்டத்திலிருந்து சப்ஜாடாக விலகிக் கொண்ட சிம்பு, இப்போது ஆன்மீக வழியில் செல்கிறாராம்.

தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுப்பட்டு வந்த சிம்பு அதன் தொடர்ச்சியாக இப்போது புனித ஸ்தலங்கான ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று தரிசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

சமீபத்தில் 'இங்க என்னா சொல்லுது' படப்பிடிப்பின்போது இந்த பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளார்.

இதைப் பற்றி பேசும் போது, 'ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும்.

ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல... ஞானம் தேடுதல். நான் அந்த தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன். இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும் மெருகேற்ற உதவும் என நம்புகிறேன்," என்கிறார்.

அட..!

 

சிங்கம் 2 - ஜூன் 2-ம் தேதி இசை வெளியீடு

Singam 2 Audio From June 2   

சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 2-ம் தேதி சென்னையில் வெளியாகிறது.

சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக வருகிறது சிங்கம் 2 படம். ஹரி இயக்கியுள்ளார். சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் தொடங்கி, தென் ஆப்ரிக்கா வரை நடந்தது.

சிங்கம் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே சிங்கம் 2-ன் பாடல்களுக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கம் 2 படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் இரண்டாம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது.

படம் வெளியாகும் தேதி முன்பே அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஜூன் 14-ம் தேதி உலகம் முழுவதும் சிங்கம் 2 வெளியாகிறது.

 

சத்தியம் டிவியின் ‘திரையும் கறையும்’...

Tiraiyum Karaiyum On Sathiyam Tv

சினிமாவில் உள்ள சம்பவங்களை உள்ளது உள்ளபடி விமர்ச்சிப்பது திரை விமர்ச்சனம். ஆனால் லாஜிக் இல்லாத சினிமாக்களை தேர்ந்தெடுந்து பிரித்து மேய்கின்றனர் இந்த ‘திரையும் கரையும்' நிகழ்ச்சியில் சினிமாக்களில் உள்ள சீர்கேடுகள், காட்சிகள், வசனங்கள், உடை அலங்காரங்களையும் கண்டிக்கிறது.

புதுப்படங்கள்தான் என்றில்லை, கடந்த ஆண்டு ரிலீசான படங்கள், பழைய படங்களைக்கூட எடுத்து விமர்ச்சிக்கின்றனர். சனிக்கிழமை தோறும் சத்தியம் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது "திரையும் கறையும்" என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சி.

இவர்கள் விமர்ச்சிப்பது இருக்கட்டும் சினிமாவை விமர்ச்சிக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேச்சுதான் கொஞ்சம் வெறுப்பேற்றுவதாக இருக்கிறது. அடுத்த முறை கொஞ்சம் கூலிங்கிளாசை கழட்டுங்க சார்.

 

கிரிக்கெட் சூதாட்டம் - ஸ்ரீசாந்தின் கதை சினிமாவாகிறது!

Twists Turns Sreesanth Life Be Filmed

சென்னை: சூதாட்ட சர்ச்சையில் கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்தின் கதையை சினிமாவாக எடுக்கிறார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறதுய. அந்த படத்துக்கு 'கிரிக்கெட்' என்றே பெயரிட்டுள்ளனர். மலையாளத்தில் முன்னணி படத் தயாரிப்பாளர்கள் சாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். கதை- வசனத்தை சாஜன் எழுதுகிறார்.

இதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன. கிரிக்கெட் கதை பற்றி படத் தயாரிப்பாளர் சாஜி கைலாஸ் கூறுகையில், "இது ஸ்ரீசாந்தின் கதைதான். கேரள இளைஞன் ஒருவன் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டராக இருக்கிறான். கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான்.

புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதைத்தான் படமாக தயாரிக்கப் போகிறோம்.

ஸ்ரீசாந்தின் இந்த செயலால், ரோல் மாடலாக இருக்க வேண்டிய அவர், தன்னைத்தானே அழித்துக் கொண்டுள்ளார். இதற்கு பேராசையே காரணமாகும். இதற்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீசாந்த் மட்டுமே இதற்கு பொறுப்பு. இன்றைய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை நிறை வேற்ற இப்படி மாறி விடுகிறார்கள்.

இதனை கற்பனைக் கதை என்றெல்லாம் கூறாமல், கிரிக்கெட் படத்தில் நேரடியாகவே சொல்லப் போகிறோம்," என்றார்.