கோச்சடையானில் வெறும் 2 நாட்கள் நடிக்க ரூ. 3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே

சென்னை: கோச்சடையான் படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

சௌந்தர்யா அஸ்வின் தனது தந்தை ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக கோச்சடையானில் தான் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா இரண்டு நாட்கள் தான் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளை வெறும் 48 மணிநேரத்தில் படமாக்கப்பட்டதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்கள் நடித்ததற்கு அம்மணிக்கு ரூ. 3 கோடி சம்பளமாம்.

கோச்சடையானில் வெறும் 2 நாட்கள் நடிக்க ரூ. 3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே

கோச்சடையானில் நடிக்க பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், கத்ரீனா கைஃப், நம்ம அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது. இது தான் தீபிகா நடித்துள்ள முதல் தமிழ் படம் ஆகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான கோச்சடையான் டீஸரை இதுவரை 2 மில்லியன் பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை

சென்னை: தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சரண்யா நாக் அஜீத் குமாரிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக். அதன் பிறகு சந்தியா சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தற்போது 4 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.

நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை

சரண்யாவுக்கு அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம். சரண்யா அஜீத், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவர் விளையாட்டுத் தனமாக அஜீத்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று கூறியுள்ளார்.

 

நம்பர் ஒன்னாக இருந்துவிட்டு ஜாகையை மாற்றியதால் அல்லாடும் நடிகை

மும்பை: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஒருவர் பாலிவுட் சென்று அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.

டோலிவுட்டில் ஒரு நடிகை கொடிகட்டிப் பறந்தார். இஞ்சி இடுப்பழகியான அவர் கோலிவுட்டிலும் தலையைக் காட்டியுள்ளார். இளைய தளபதியுடன் அவர் நடித்த படம் ஹிட்டானது. அவரது கால்களில் கோடிகளை கொட்ட டோலிவுட் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தனர். கோடிகளை கொட்டியும் வந்தனர்.

இந்நிலையில் அம்மணிக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவ்வளவு தான் நான் பாலிவுட் போகிறேன், அங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்று ஹைதராபாத்தில் இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். அவர் நடித்த முதல் படம் ஹிட் என்றாலும் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தான் வருகின்றன. பாலிவுட்டில் பெரிய ஆளாகிவிடலாம் என்று சென்றவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.

டோலிவுட்டில் அவரை தலையில் வைத்து கொண்டாடினர். இப்போது பாலிவுட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறார் அம்மணி.

 

அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

சென்னை: நடிகை அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனது சித்தி பாரதி தேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டி தலைமறைவாக இருந்தார் அஞ்சலி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் திரும்பி வந்தார். தற்போது ஹைதராபாத்திலேயே இருந்து வருகிறார். அவரும் அவரது சித்தியும் சமசரமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அஞ்சலி தன் மீது கூறியபுகார் அவதூறானது என்றும், பொயயான புகாரைக் கூறிய அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கோரி இயக்குநர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 177வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு அஞ்சலி வரவில்லை. இதையடுத்து கடந்த 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி.

இதையடுத்து அஞ்சலியின் வழக்கறிஞர் முருகன் ஒரு மனு செய்தார். அதில், அஞ்தசலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதை ஏற்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும், வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

 

ஆரம்பம் படத்தில் முக்கியமானது இல்லையேப்பா: 'தல' ரசிகர்கள் கவலை

சென்னை: ஆரம்பம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது அஜீத் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆரம்பம் பட பாடல்களை கேட்க அஜீத் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆரம்பம் படத்தில் முக்கியமானது இல்லையேப்பா: 'தல' ரசிகர்கள் கவலை  

இந்நிலையில் அவர்களுக்கு ஒரு வருத்தமும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது தான். ஆரம்பம் படத்தை போன்று அஜீத்தின் முந்தைய படங்களான பில்லா, மங்காத்தா மற்றும் பில்லா 2 படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார்.

அந்த படங்களில் எல்லாம் தீம் மியூசிக் வைத்தவர் ஆரம்பம் படத்தில் மட்டும் அதை வைக்காதது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் சர்பிரைஸாக தீம் மியூசிக் வைப்பார்கள் என்று ரசிகர்கள் இன்னும் நம்புகின்றனர்.

யுவன் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.