எனக்கு கல்யாணம், சும்மா ஜோக்கடிச்சேன்: டுவிட்டரில் நடிகை அடித்த கூத்து

Raima Sen Tweets About Her Wedding   

மும்பை: முதல் நாள் இரவு டுவிட்டரில் தனக்கு திருமணம் என்று தெரிவித்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து திருமணம் செய்துகொள்ளவில்லை ,சும்மா ஜோக்கடித்தேன் என்று பாலிவுட் நடிகை ரைமா சென் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ரியா சென்னின் அக்கா நடிகை ரைமா சென்(32). அவர் டுவிட்டரில் அடித்த கூத்து தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.அம்மணி கடந்த சனிக்கிழமை இரவு டுவிட்டரில், நான் எனது நண்பர் வருண் தாபாரை மணக்கவிருக்கிறேன் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் வருண் முழங்காலிட்டு அவருக்கு மோதிரம் போடுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இதைப் பார்த்தவர்கள் ரைமாவுக்கு திருமணம் என்று நினைத்துவிட்டனர். இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்த ரைமா டுவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டார்.

அவரது டுவீட்,

நேற்றிரவு நான் சும்மா ஜோக்கடித்தேன். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு நாள் நிச்சயம் அந்த வருணைத் தான் மணப்பேன் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

 

கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்படி, வரும் அக்டோபரில் கமலுடன் மோதுகிறார் சூர்யா!

Kamal Vs Surya    | மாற்றான்  

அக்டோபர் 12-ம் தேதி மாற்றான் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தேதியில்தான் கமல் தனது விஸ்வரூபத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம்.

இது கமல், சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரண்டுமே பெரிய படங்கள். சர்வதேச அளவில் அதிக அரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டவை.

இந்த இரு படங்களும் மோதினால், நிச்சயம் தியேட்டர் பிரச்சினை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த 'மோதலை' விரும்பவில்லை. இதுகுறித்து விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், "மாற்றான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. விஸ்வரூபம் இன்னும் இசை வெளியீடு நடத்தப்படவில்லை. கமல் சார் சினிமா வர்த்தகம் தெரிந்தவர். எனவே இந்தப் போட்டியை அவர் தவிர்த்துவிடுவார்," என்றார்.

விஸ்வரூபம் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உலகெங்கும் 2000 அரங்குகளுக்கு மேல் வெளியிட வேண்டும் என கமல் திட்டமிட்டுள்ளாராம்.

சூர்யாவின் மாற்றான் படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை 1500 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

 

ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்!'

Hansika Undegone Liposuction   

'ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி...' என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.

விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.

பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...

போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.

இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.

இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!

இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!

 

பெருகி வரும் பின்புறம்.. கவலையில் கிம் கர்தஷியான்

Kim Kardashian Worries Over Her Too Big Curvy Rear

நியூயார்க்: அழகி கிம் கர்தஷியானுக்கு அவரது பின்புறம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளாராம் அவர்.

உலக அளவில் கிம்முக்கு செமத்தியான ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது அழகுக்கு அழகு சேர்ப்பது எடுப்பான அவரது பின்புறம்தான். ஆனால் அது இப்போது எல்லை மீறி விரிவடைந்து வருவதால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளாராம் கிம்.

இதையடுத்து தற்போது தனது பின்புறத்தின் அகலத்தையும், உருவத்தையும் குறைத்து ஸ்மார்ட் ஆக முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக சில உடற் பயிற்சி முறைகளை அவர் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

தினசரி காலை சீக்கிரமே எழுந்து ஜிம்முக்கு ஓடுகிறார் கிம். அங்கு கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். பின்புறத்தைக் குறி வைத்து அவருக்காக சிறப்பு பயிற்சி தருகிறார்களாம் ஜி்ம்மில்.

தனது எடுப்பான பின்புறத்தின் படத்தை டிவிட்டரில் போட்டுள்ள கிம், ஜீன்ஸில் எனது பின்புறம் மிகப் பெரிதாக தெரிவதைப் பாருங்கள். இதுகுறித்து உங்களது கருத்துக்களை அனுப்புங்களேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தன்னைப் போன்ற எடுப்பான பின்புறம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பெண்களுக்காகவே புதிய ஆடைகளை வடிவமைத்து அதை மார்க்கெட்டிலும் இறக்கியுள்ளார் கிம் தனது சகோதரியுடன் சேர்ந்து. அந்த ஆடைகளுக்கு கிம் கர்தஷியான் கர்வ்ஸ் என்றே பெயரிட்டுள்ளார் கிம்.

கிம்முக்குத்தான் அவரது பின்புறம் குறித்துக் கவலையாக உள்ளதாம். ஆனால் அவரது காதலர் கென்யே வெஸ்டுக்கு கிம்மின் பின்புறம் ரொம்பப் பிடிக்குமாம்.

'ஜிம்'முக்குப் போய் மறுபடியும் 'கும்' ஆகும் வழியைப் பாருங்க 'கிம்'...!

 

நெருக்கமான சீனில் நடிப்பதற்கு முன் நடிகர்களின் 'டாக்டர் சர்டிபிகேட்' கேட்ட சன்னி!

Jism 2 Sunny Leone Asked Randeep   

மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு, அப்படத்தில் தான் நெருக்கமாக நடித்த நடிகர்கள் ரந்தீப் ஹூடா மற்றும் அருணோதய் சிங் ஆகியோரின் மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்களை கேட்டாராம்.

ஜிஸ்ம் 2 படம் குப்பைப் படமாகி ரொம்ப நாளாகி விட்டது. படம் படு டப்பா என்றாகி விட்ட நிலையில் அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவதற்கு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்துள்ளாராம் அதன் நாயகி சன்னி லியோன்.

அதாவது படத்தின் ஹீரோக்களான அருணோதய் சிங் மற்றும் ரந்தீப் ஹூடா ஆகியோரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக படத்தின் இயக்குநரான நடிகை பூஜா பட்டுக்கு இமெயில் அனுப்பி இதுகுறித்துக் கூறியுள்ளார். அதில், நான் நெருக்கமாக நடிக்க வேண்டிய நடிகர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை எனக்குத் தேவை என்று கூறியுள்ளார் சன்னி. மேலும் தனது மருத்துவப் பரிசோதனை அறிக்கையையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்குக் காரணம், எய்ட்ஸ் நோய் தன்னை தொற்றி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வுதான் காரணமாம்.

ஆனால் பாலிவுட்டில் இப்படியெல்லாம் டாக்டர் சர்டிபிகேட் கேட்டு எந்த ஹீரோயினும் பேசியதில்லை என்று சன்னியிடம் கூறினாராம். மேலும் அந்த அளவுக்கு 'டீப்'பான சீன் ஏதும் படத்தில் இல்லை என்றும் விளக்கியுள்ளார். இதையடுத்து சன்னி சமாதானமானதாக தெரிகிறது. எனவே ஹூடா மற்றும் சிங்கின் மருத்துவ சர்டிபிகேட் எதுவும் சன்னிக்குத் தரப்படவில்லையாம்.

ஆபாசப் படங்களில் நடித்துப் பெயர் போனவர் சன்னி. ஆபாசப் படங்களில் கிளைமேக்ஸ் வரை போய் விடுவார்கள். ஜிஸ்ம் படத்தையும் அந்த ரேஞ்சுக்கு நினைத்து சர்டிபிகேட் கேட்டு விட்டார் போல சன்னி.

என்னத்தைச் சொல்ல...!

 

நடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்,4வது திருமணத்திற்கு முயற்சி: 3வது மனைவி புகார்

Actor S Third Wife Complaints About

சென்னை: சினிமா நடிகர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் தற்போது 4வதாக திருமணம் செய்ய முயற்சிப்பதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24). அவரும் ஒரு சித்த மருத்துவர்.

இந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,
செல்வராஜா தனது மருத்துவமனையில் வேலைக்கு டாக்டர் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். அதைப் பார்த்து வேலைக்கு சேர்ந்தேன். அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி என்னிடம் பழகினார். இதனால் அவரை நம்பி காதலித்தேன். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து கிளினிக் நடத்தி வந்தோம்.

நான் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளிப்பேன். இதனால் அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது. யாரோடு பேசினாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்க தொடங்கினார். வீட்டிற்குள் கேமரா பொருத்தி கண்காணித்தார்.

வீட்டிற்குள் தனி அறையில் அடைத்து 'செக்ஸ்' தொந்தரவும் கொடுத்தார். இதனால் எனக்கு அவரோடு வாழ பிடிக்கவில்லை. அவரோடு வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் நரகம் போல் ஆகிவிட்டது. எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன். அவரால் எனக்கு தொந்தரவு ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருக்கிறார். முதல் மனைவி பெமிலா. அவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியில் வசித்து வருகிறார். 2வதாக தேவிகா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அவர் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.

ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்துதான் என்னை ஏமாற்றி 3வது மனைவியாக்கி இருக்கிறார். இப்போது 4வதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். என்னோடு அவரது திருமண மோசடி வித்தைகள் முடிந்து போகட்டும். வேறு எந்த பெண்ணும் ஏமாந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் குழலி ரகசியமாக விசாரணை நடத்தி வந்தார்.

இந் நிலையில் செல்வராஜா எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் அனைத்து பொருட்களையும் அள்ளி சென்று விட்டனர். அதோடு எனது மனைவி அன்னை ரீட்டாவையும், மாமியாரையும் கடத்தி சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அன்னை ரீட்டா வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் செல்வராஜா பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அவரது 4வது திருமணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையைப் பொறுத்து தான் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம் என்றார்.

 

கிரிஷ் 3 முடிந்தால் என் கையில் படங்களே இல்லை: ரித்திக் ரோஷன்

Im Out Of Work After Krrish 3 Hrithik

மும்பை: பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ரித்திக் ரோஷனின் வசம் க்ரிஷ் 3 படம் தவிர வேறு எதுவும் இல்லை.

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ரித்திக் ரோஷன். அவர் தற்போது அவரது தந்தை ராகேஷ் ரோஷனின் க்ரிஷ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பட வேலைகள் முடிந்துவிட்டால் அவரது வசம் ஒரு படம் கூட இல்லை. தி இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா என்ற நாவலைத் தழுவி கரண் ஜோஹார் எடுக்கும் படத்தில் ரித்திக் ரோஷன் நடிக்கிறார் என்றும், கரணின் மேலும் ஒரு படம், கபீர் கானின் படம் மற்றும் சேகர் கபூரீன் பானி ஆகிய படங்களிலும் அவர் நடிக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில்,

க்ரிஷ் 3 தவிர நான் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. அதனால் க்ரிஷ் 3 முடிந்த பிறகு எனக்கு வேலையில்லாமல் போய்விடும். இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா பற்றி வெறும் பேச்சுவார்த்தை தான் நடைபெறுகிறது. அடுத்து என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை.

நான் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். நல்ல திரைக்கதை உள்ளவர்கள் என்னிடம் வரவில்லை என்றார்.

கரிஷ் 3 படத்தில் ரித்திக்குடன் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனௌத், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

 

திட்டமிட்டபடி திருமணம் - சுஜிபாலாவை மணக்க ரவிக்குமார் சம்மதம்!

Ravikumar Accepts Marry Actress Sujibala

சென்னை: நடிகை சுஜிபாலாவை மணக்க புதிய இயக்குநர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே திட்டமிட்டபடி திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடக்கிறது.

நடிகை சுஜிபாலாவுக்கும், இயக்குனர் ரவிக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருச்செந்தூர் கோவிலில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்தைய நாள் சுஜிபாலா திடீரென அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று மயங்கி விழுந்தார்.

அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் பிடிக்காமல்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

இன்னும் சிலர் சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் மறுத்து விட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறினார்.

அதற்கு வலு சேர்ப்பது போல மருத்துவமனையில் இருந்த சுஜிபாலாவை ரவிக்குமார் நேரில் போய் உடல் நலம் கூட விசாரிக்கவில்லை.

இருமாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சுஜிபாலா சிகிச்சை முடிந்து நிருபர்களைச் சந்தித்தார்.

தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், தெரியாமல் மாத்திரைகளை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறினார்.

"டைரக்டர் ரவிக்குமாருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் திருமணம் அக்டோபரில் நடக்கும். திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்", என்றும் சுஜிபாலா கூறினார்.

இதற்கிடையே,சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள இயக்குனர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தனக்காக தூக்க மாத்திரை சாப்பிடும் அளவுக்குப் போன சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் என்று அவர் கூறியுள்ளாராம்.

 

இப்ப காலம் மாறிப்போச்சு: அஞ்சலி தேவியின் அசத்தல் பேட்டி

Actress Anjalidevi S Interview

பழங்காலத்தில் சினிமா நடிகைகள் அழகாக மட்டுமல்ல அசத்தலாக நடிக்கவும் செய்வார்கள். வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, ஜமுனா, சரோஜாதேவி, பத்மினி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களின் அழகினாலும், அசத்தலான நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தனர்.

அதிலும் அஞ்சலிதேவியின் அழகும் நடிப்பும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் பாங்கும் அவருக்கு என்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தெய்வீக அழகு கொண்டவர் என்பதாலேயே இவருடைய அழகையும், திறமையையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாக அமைந்தன. தேவதையாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தேவதையாக உயர்ந்தவர்.

அழகான நடிகைகள் வயதானலும் அதே அழகோடு இருப்பது ஒரு சிலர்தான். அதில் அஞ்சலி தேவியும் ஒருவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்தொலைக்காட்சியில் சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் தன்னுடைய திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சலிதேவி.

இன்றைய சினிமாவை அன்றைய கால கட்ட சினிமா உடன் ஒப்பிடவே முடியாது என்று கூறினார் அஞ்சலி தேவி. அன்றைய கால கட்டத்தில் ஒரு அன்பான அணுகுமுறை இருக்கும். கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகள் அதிகம் வரும். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. காலம் மாறிவிட்டது. இன்றைய காலத்திய ரசிகர்களுக்கு ஏற்ப கதையும், திரைப்படம் எடுக்கும் விதமும் மாறிவிட்டது என்று கூறினார் அஞ்சலிதேவி. அவர் சொல்லவதென்னவோ உண்மைதான்.

பேட்டியின் இடை இடையே அஞ்சலி தேவி நடித்த திரைப்படங்களில் இருந்து காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுவும் அந்த அழைக்காதே பாடலுக்கு அஞ்சலிதேவியின் நடனம் என்றைக்கும் ரசிக்கக்கூடிய வகையில் படம்பிடிக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சிகளில் புதிய திரைப்பட நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதை விட இதுபோன்ற பழைய திரைப்பட நடிகைகளின் பேட்டிக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

 

இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

No Adult Films Be Aired Govt    | பில்லா 2  

சென்னை: ஏ படங்களை இனி டிவியில் ஒளிபரப்பக் கூடாது என மத்திய தணிக்கைக் குழு திடீர் தடை விதித்துவிட்டதால், பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட பில்லா 2, தி டர்ட்டி பிக்சர் போன்ற படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு ஏ சான்றிதழ் பெற்ற படங்களை இரவு 12 மணிக்கு மேல் ஒளிபரப்ப அனுமதி அளித்திருந்தது மத்திய தணிக்கைக் குழு.

ஆனால் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி 'ஏ' சர்டிபிகேட் உள்ள படங்களை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் 'பில்லா-2' படம் 'ஏ' சர்டிபிகேட் பெற்ற படம். எனவே தணிக்கை குழு நடவடிக்கையால் பில்லா-2 படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தப் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனம், பணத்தை திரும்பக் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' இந்தி படத்தையும் டி.வி.யில் ஒளிபரப்ப ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ 20 கோடி வரை போனது நினைவிருக்கலாம்.

அமீர்கான் தயாரித்த டெல்லி பெல்லி மற்றும் கேங்ஸ் ஆப் வசேபூர் படங்கள் 'ஏ' சான்றிதழ் பெற்றவைதான். இனி அவற்றை ஒளிபரப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

திரைப்படத்துறையினருக்கு டி.வி. உரிமை மூலம் பெருந்தொகை கிடைக்கிறது. கிட்டத்தட்ட 20 சதவீத வருவாய் டிவி மூலம்தான் கிடைத்து வருகிறது.

இந்த புதிய கட்டுப்பாட்டால் இனிமேல் 'ஏ' படங்களை சேனல்கள் வாங்க மறுத்து விடும். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

தணிக்கை குழுவின் புதிய விதிமுறைகளால் திரையுலகினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கோடம்பாக்கத்தில் சமீப காலமாக ஏ வகை படங்கள்தான் தயாராகி வருகின்றன. பாலிவுட்டில் கேட்கவே வேண்டாம்!

இனி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்களினழ் முதல் நிபந்தனையே, ஏ மேட்டர் எதுவும் இல்லாம படம் எடுங்க, என்பதாகத்தான் இருக்கும்!!

 

50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடும் நான் ஈ

Sudeep S Eega Completes 50 Days Run   

எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த ஈகா ( நான் ஈ) திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக à®'டிக்கொண்டிருக்கிறது.

கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா. இது தமிழில் நான் ஈ ஆகா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் ஈ தான் ஹீரோ என்றாலும் வில்லன் சுதீப் ஈயிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதனால் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களைக்கூட எடுத்துவிட்டு தமிழ்நாட்டில் நான் ஈ திரைப்படங்களை திரையிட்டனர்.

இந்த திரைப்படம் ஆந்திராவிலும், தமிழிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக à®"டிக்கொண்டிருக்கிறாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது நான் ஈ. கன்னட நடிகரான கிச்சா சுதீப் பிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் மன்றம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்கு ரசிகர்கள்.

 

தற்கொலை முயற்சியா... இல்லயில்ல.. தலைவலிக்காக ரெண்டு மாத்திரை போட்டேன்.! - சுஜிபாலா பல்டி

Sujibala Denies Suicidal Attempt   

சென்னை: நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தலைவலிக்காக மருத்துவமனைக்குப் போனதை, தற்கொலை முயற்சி என்று சொல்லிவிட்டார்கள் தடாலடியாகக் கூறியுள்ளார் நடிகை சுஜிபாலா.

அய்யாவழி, சந்திரமுகி உள்ளிட்ட சுஜிபாலா, நேற்று அளவுக்கதிகமாக தூக்கமாத்திரைகள் சாப்பிட்டதாகக் கூறி நாகர்கோயிலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த இவர் 'உண்மை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் கடந்த ஜுலை 5-ந்தேதி குமரி மாவட்டம் ஈத்தாமொழியில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தில் பிரச்சினை என்பதால்தான் சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்த சுஜிபாலா நிருபர்களிடம் கூறியதாவது:

நான் தற்கொலை செய்ய முயலவில்லை. தலைவலி மற்றும் காய்ச்சலாக இருந்ததால் எனது தாயாரிடம் மாத்திரை கேட்டேன். அவர் நீயே எடுத்துக்கொள் என கூறிவிட்டார். நான் மாத்திரை தெரியாமல் பவர் கூடிய 2 மாத்திரைகளை தின்றுவிட்டேன். இதனால் மயக்கமடைந்து விழுந்தேன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டேன்.

சினிமா துறையில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கும், நடன இயக்குனர் à®'ருவருக்கும் காதல் என்பதெல்லாம் உண்மை இல்லை. எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாகவில்லை. முடிவானதும் பத்திரிகைகள், மீடியாக்களிடம் தெரிவிப்போம். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.

நான் தற்போது டைரக்டர் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

என்னப்பா நடக்குது!!

 

இது ஒரு கவுன்சிலிங் நிகழ்ச்சிதான்: நிர்மலா பெரியசாமி

Solvathellam Unmai Is Counseling Programme

திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக்கிய நிகழ்ச்சி, காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந்த பெற்றோர்கள் என நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி.

செய்தி வாசிப்பாளராக வணக்க்க்கம் என்று ஆரம்பித்து இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச்சியின் à®'ருங்கிணைப்பாளராக மாறியிருக்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்த நிகழ்ச்சி உருவான விதம் பற்றியும், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு மொழிகளில் ஜி'டிவியில் முன்பே வந்துகொண்டுதான் இருந்தது. தமிழிலும் எடுக்கலாம் என்று யோசித்த போது அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என் தோழி, "நிர்மலாவைப் போடலாம்' என்று சொல்லியிருக்கிறாள். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன்.

சிலர் இதை கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. சொல்வதெல்லாம்' உண்மை நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் பிரச்னையோடு வருகிறவர்களை அக்கறையாக, அன்பாக அணுகுகிறேன். என் வீட்டிற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் நான் எப்படி நடந்துகொள்வேனோ அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை ஆர்த்தமார்த்தமாக செய்கிறேன். இந்த நிகழ்ச்சி à®'ரு கவுன்ஸிங் மாதிரிதான். à®'ரு மன ஆறுதலுக்கான விஷயம். குறைந்தபட்ச தீர்வுக்கான அல்லது பிரச்னையை முளையிலேயே கிள்ளியெறிவதற்கானது. இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொன்னால் எப்படி?

நிறைய பேர் போன் பண்ணுவார்கள். சிலர் நேரடியாக நிறுவனத்துக்கே வந்து பிரச்னையைச் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கென்று à®'ரு பெரிய குழுவே இருக்கிறது. அவர்கள் பிரச்னையின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து நிகழ்ச்சிக்கு கொண்டு வருவார்கள். ஆனால் எனக்கு நிகழ்ச்சியில் உட்காரும் வரை இதுதான் பிரச்னை என்றோ.. இவர்தான் பிரச்னைக்குரியவர் என்றோ எதுவுமே தெரியாது. ரொம்ப கெட்டவர்கள்கூட இங்கே வந்தவுடன் அடங்கித்தான் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நிறையபேர் பாராட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியால டிஆர்பி ரேட்டிங் ஏறியிருக்கிறது. பார்க்கிற இடத்தில் எல்லாம் என்னை ரொம்ப பெரிய மனுஷியாக மக்கள் பேசுகிறார்கள். மற்ற டிவி நிகழ்ச்சிகளைவிட இது மாறுபட்டதாக இருக்கிறது. பிரச்னைக்குரிய மனிதர்களை அணுகி அவர்களுக்குத் தீர்வு தருகிறோம் என்பது எவ்வளவு பெரிய பணி? இது எனக்கு மிகப் பெரிய மனதிருப்தியைத் தருகிறது. பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைக்கும் போது அவர்கள் காட்டும் நன்றிக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

கொலை கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

பார்க்கிறவங்களும் "இதுமாதிரியெல்லாம் பண்றீங்களே "பயமா இல்லையா?' என்பார்கள். அவர்களும் மனிதர்கள்தானே.. அவர்களை அன்பாகவும், அரவணைப்பாகவும் அணுகினால் போதும் என்று நினைக்கிறேன். இதுவரை அப்படித்தான் செய்து வருகிறேன்.

மக்கள் பிரச்னையைக் கையிலெடுக்கும் சமூக நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நிறைய வரவேண்டும். மக்களும் அழுகைத் தொடர்களை விட்டு வெளியே வந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அன்போடு கட்டளை இட்டார் நிர்மலா பெரியசாமி.