சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் சேட்டைக்கார நடிகை

சென்னை: சேட்டைக்கார நடிகையா, ஆமாம் சமத்து நடிகை செய்வதை எல்லாம் பார்ப்பவர்கள் அவரை அவ்வாறு தான் கூறுகிறார்கள். சமத்தான நடிகை படுத்தும் பாட்டை நினைத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.

தெலுங்கு திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் சமத்தான நடிகை. தற்போது அவருக்கு தெலுங்கில் மவுசு குறைந்துவிட்டது. இத்தனை நாளாக அவர் கோலிவுட்டில் வெற்றி பெற துடித்துக் கொண்டிருந்தார். அவர் ஆசைப்படி ஒரு படம் வெற்றியும் அடைந்துள்ளது(?).

இதையடுத்து தற்போது அவர் கையில் 3 தமிழ் படங்கள் உள்ளன. இந்நிலையில் அம்மணி தேவையில்லாத பல அலப்பரைகளை செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

படப்பிடிப்புக்கு வருகையில் கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வந்து அவருக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டுகிறாராம். மேலும் தற்போது ஒரு ஜிம் மாஸ்டரை அழைத்து வந்து அவர் தங்க, சாப்பிட, பயணம் செய்ய என அனைத்து செலவையும் தயாரிப்பாளரை ஏற்க வைக்கிறாராம் நடிகை.

இந்த சேட்டை எல்லாம் போதாது என்று தமிழில் முன்னணி நடிகையாக உள்ள ஒருவருடன் வேறு மோதல்.

ஒத்த படம் ஹிட்டானதுக்கே இந்த அலப்பரையா. இதே போன்று தொடர்ந்து செய்தால் நடிகையின் கோலிவுட் கனவில் மண் தான் விழும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

500 அரங்குகளில் விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தம்!

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது என அதன் தயாரிப்பாளர் எல்கே சுதீப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், "எங்கள் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுகநாயகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது.

500 அரங்குகளில் விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தம்!

இப்படம் தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ஆந்திரா,கர்நாடகா,கேரளா, மும்பை, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளனர்.

சகாப்தம் படத்தை சுரேந்திரன் இயக்கியுள்ளார். நேஹா, சுப்ரா என இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடித்துள்ளனர். விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

 

கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

மும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் அறுவை சிகிச்சை மூலம் தனது உதடுகளை அழகாக ஆக்கியுள்ளார்.

ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். பாலிவுட்டில் நுழைந்த புதிதில் பலரின் கவனத்தை ஈர்த்த வாணிக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை. அதனால் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

இந்நிலையில் அண்மையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வாணி கபூர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். ரிலையன்ஸ் காலணிகளுக்காக ராம்ப் வாக் செய்தார் வாணி.

அவர் ஒய்யாரமாக நடந்தபோது மக்களின் கவனம் அவரது காலணிகளில் அல்லாமல் உதட்டில் இருந்தது. காரணம் அவர் அறுவை சிகிச்சை செய்து உதடுகளை அழகாக்கியுள்ளார். ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

முன்னதாக கத்ரீனா கைப், கங்கனா ரனாவத், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை அழகாக்கியுள்ளனர்.

 

நல்ல பிள்ளையான பிக் அப் நடிகர்… பொண்ணு பாக்குறாங்களாம்!

இப்பல்லாம் பிக் அப் நடிகரைப் பற்றி எந்தவித சேதியும் வருவதில்லை. காரணம் வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க பாஸ்... அதனால் எதுக்கு வம்பு என்று யாரையும் பிக் அப், டிராப் செய்வதில்லை என்கின்றனர்.

நம்பர் நடிகையோ, யோகா நடிகையோ முன்பு போல இப்போது பிக்அப்பை கண்டு கொள்வதில்லை என்பதால் வீட்டில் பெண் பார்க்க சம்மதம் சொல்லி விட்டாராம்.

அநாவசியமான கேள்விகள் வேண்டாம்... பிளேபாய் இமேஜூம் வேண்டாம். என்று தவிர்த்து விடும் பிக்அப் இனியாவது பொறுப்போடு இருப்போம் பாஸ் என்று கூறியுள்ளாராம்.

இப்போ கைவசம் சில படங்கள் இருக்கிறது, அதில் பிஸியாக இருக்கும் பிக் அப் கூட நடிக்கும் நடிகைகளுடன் நல்லப்பிள்ளையாக நடிக்கிறாராம்.

 

ஒரு நிமிட விளம்பரத்துக்கு ரூ பத்து கோடி... ஆமீர்கான் வாங்கும் அடேங்கப்பா சம்பளம்

ஒரு நிமிட விளம்பரப் படத்தில் நடிக்க ரூ 1 கோடி சம்பளமாக வாங்கி வாய் பிளக்க வைத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்.

பாலிவுட்டில் சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பளம் பெறுகிறார்கள் நடிகர் நடிகைகள்.

ஒரு நிமிட விளம்பரத்துக்கு ரூ பத்து கோடி... ஆமீர்கான் வாங்கும் அடேங்கப்பா சம்பளம்

ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கத்ரீனை கைஃப், சல்மான்கான், ஷாரூக்கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்கள் எக்கச்சக்கமாக வாங்குகிறார்கள்.

அழகு சாதனப் பொருட்கள், ஜவுளிக் கடைகள், கார் விற்பனையாளர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்கின்றன.

சமீபத்தில் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று அமீர்கானை விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.10 கோடியை அமீர்கானுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளது.

பாலிவுட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ள முதல் மாடல் ஆமீர்கான்தானாம்.

 

பிரபு மகன் வெள்ளக்கார துரை... அடுத்து சத்யராஜ் மகன் ஜாக்சன் துரை!

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்கார துரை சமீபத்தில் வந்து ஓரளவு வெற்றியும் பெற்றது.

வெற்றி பெற்ற படங்களின் தலைப்பை நகலெடுப்பதுதானே தமிழ் சினிமா வழக்கம். அந்த வகையில், இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் அடுத்து நடிக்கும் படத்துக்கு ஜாக்சன் துரை என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்.

பிரபு மகன் வெள்ளக்கார துரை... அடுத்து சத்யராஜ் மகன் ஜாக்சன் துரை!

மாசாணி, சலீம் படங்களைத் தயாரித்ததோடு, வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிசட்டை, கயல் போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்த நிறுவனம் இது.

"நாய்கள் ஜாக்கிரதை" வெற்றிக்கு பிறகு கவனம் பெற்றுள்ள சிபிராஜ் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அவர் தந்தை சத்யராஜ் நடிக்கிறார்.

பெயர்தான் ஜாக்சன் துரை. மற்றபடி இது தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரெண்டான பேய்ப் படமாக உருவாகிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய தரணிதரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். விபின் சித்தார்த் இசையமைக்கிறார்.

 

டர்ட்டி பாலிட்டிக்ஸ் பட இயக்குநர் மீது நடவடிக்கை : ராஜஸ்தான் அரசு உத்தரவு

ஜெய்ப்பூர்: அரசு அனுமதியின்றி மாநில சட்டசபையை படம் பிடித்ததாக டர்ட்டி பாலிடிக்ஸ் பட இயக்குநர் மீது ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த பன்வாரி தேவி வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்'.

மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில் உரிய அனுமதியின்றி படமாக்கப்பட்டதால், படத்தின் இயக்குனர் கே.சி. பொகாடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

டர்ட்டி பாலிட்டிக்ஸ் பட இயக்குநர் மீது நடவடிக்கை : ராஜஸ்தான் அரசு உத்தரவு

இது குறித்து சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் ரத்தோர், ராஜஸ்தான் திரைப்பட படப்பிடிப்பு சட்டம், தேசிய சின்ன சட்டம் மற்றும் பெயர் சட்டம் என்று எந்த சட்டத்தையும் இயக்குனர் பின்பற்றவில்லையென்றும், அவரது இந்த செய்கை, விதான் பவனின் கவுரவத்தை காயப்படுத்திவிட்டதாகவும், அதன் கண்ணியத்தை குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த படம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமோ, போலீஸ் கமிஷனரிடமோ முன் அனுமதி வாங்காமல் விதான் சபா கட்டிடத்தை வெளியிலிருந்து படம் பிடித்த குற்றத்திற்காக திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'டர்ட்டி பாலிடிக்ஸ்' படத்தில் அரசியல்வாதிகளின் கறுப்பு பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதால் தன்மீது அரசியல்வாதிகளின் கோபம் திரும்பியுள்ளது என்கிறார் படத்தின் இயக்குநர்.

 

மே ஹூன் ரஜினிகாந்த் வழக்கு... விசாரணை தள்ளி வைப்பு

'மே ஹூன் ரஜினிகாந்த்' (நான்தான் ரஜினி காந்த்) என்ற படத்தின் தலைப்பில் தன் பெயரைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தப் படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்' என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

மே ஹூன் ரஜினிகாந்த் வழக்கு... விசாரணை தள்ளி வைப்பு

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த 11-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதில், வடமாநிலத்தில் வெளியாகும் திரைப்படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால், அவரது சம்பந்தி கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் பெயரை கடன் வாங்கி அதை திருப்பித்தராமல் உள்ளார். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியும், ரஜினிகாந்த் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதாமல் உள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்' என்ற கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தன் கட்சிகாரர் ரஜினிகாந்தை தொடர்புக் கொள்ள முடிய வில்லை என்றும் அவரது கருத்தை கேட்டு பதில் மனு தாக்கல் செய்வதாக' கூறினார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்- சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த "லிங்கா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியானது.

வெளியான முதல் வாரத்திலிருந்து இந்தப் படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் விநியோகஸ்தர்கள் சிலர் ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் தங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிச்சைப் போராட்டம் அறிவித்தனர்.

லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!

இப்பிரச்னையில் ரஜினிகாந்த் நேரடியாகத் தலையிட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து நஷ்டத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இப்பிரச்னையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து "லிங்கா' திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே "லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது.

இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ருத்ரமாதேவி இசை வெளியீடு.. நாளை விசாகப்பட்டினத்தில்... நாளை மறுநாள் வராங்கலில்!

இளையராஜா இசையில் உருவாகியுள்ள பிரமாண்ட சரித்திரப் படமான ருத்ரமாதேவி இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் இரு நகரங்களில் நடக்கவிருக்கிறது.

குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள ருத்ரமாதேவி, தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

ருத்ரமாதேவி இசை வெளியீடு.. நாளை விசாகப்பட்டினத்தில்... நாளை மறுநாள் வராங்கலில்!  

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தமிழ், தெலுங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டை இரு நகரங்களில் நடத்துகின்றனர். நாளை மார்ச் 21-ம் தேதி மாலை விசாகப்பட்டினத்திலும், நாளை மறுநாள் 22-ம் தேதி வராங்கல் நகரிலும் இசை வெளியீடு நடக்கிறது.

நாளை தெலுங்கு ஆண்டு பிறப்பாகும். இதைக் கொண்டாடும் வகையில் 3 பாடல்களை விசாகப்பட்டினத்தில் வெளியிடுகிறார்கள்.

அடுத்த மூன்று பாடல்களை வராங்கலில் வெளியிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இளையராஜாவும் பங்கேற்கவிருக்கிறார்.

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் ஆர் பிரசாத்தின் குறும்படத்தை படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayers Corporations) என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் 2015 திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!

இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில், "ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய தேடுதல் உடையவர். பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும் படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.

படத்தை இயக்கிய ரத்திந்திரன் கூறுகையில், "ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும் ஜிப்ரான் இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் கே பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது," என்றார்.

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

"பெக்கர்" படத்தில் நடித்து "பிக்கர்" ஆன புத்திசாலி நடிகர்!

சென்னை: அதிர்ஷ்டம் அந்தப் பக்கம் வந்தா சிலருக்கு துரதிர்ஷ்டம் இந்தப் பக்கமாக வரும். சிலருக்கு மட்டும்தான் நாலாபக்கமும் கான்க்ரீட்டையும் உடைத்துக் கொண்டு லட்சுமி முற்றுகையிடும் நிலை ஏற்படும். அப்படி ஒரு யோகக்காரராக மாறியிருக்கிறார் இந்த நடிகர்.

இசை வழியாக சினிமாவில் நுழைந்து இன்று நடிகராக உயர்ந்திருப்பவர் இந்த பாட்ஷாவின் எதிரி நடிகர்.

விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களே நடித்திருந்தாலும், வித்தியாசமான படங்களாக நடிப்பதால் நடிகருக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே தான் போகிறது. தற்போது கைவசம் மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வைத்துள்ளார் நடிகர்.

இந்நிலையில், தனது வருமானத்தைக் கொண்டு தற்போது பிரபல ஸ்டூடியோவில் ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளாராம் நடிகர். மண்ணுல போட்டக் காசு பொன்னாகும் என நடிகர் எண்ணுகிறாராம்.

ரொம்பப் பிரமாதம்ய்யா.. ரொம்பப் பிரமாதம்!