குற்றம் கடிதல்... வெளியாகும் முன்பே விருது, பாராட்டுக்கு நன்றி! - தயாரிப்பாளர் கிறிஸ்டி

சென்னை: குற்றம் கடிதல் படம் வெளியாகும் முன்பே அதற்கு விருதும் பாராட்டுகளும் குவிவதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிறிஸ்டி.

'குற்றம் கடிதல்' எனும் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதினை வென்றுள்ளது. ஜேஎஸ்கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தை க்றிஸ் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மா ஜி இயக்கியுள்ளார்.

குற்றம் கடிதல்... வெளியாகும் முன்பே விருது, பாராட்டுக்கு நன்றி! - தயாரிப்பாளர் கிறிஸ்டி

ஏற்கெனவே இப்படம் கோவா, ஜிம்பாப்வே, பெங்களூர், மும்பை ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது.

கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்' திரைப்படத்திற்கு அடுத்து, இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையை பெற்றுள்ளது ஜேஎஸ்கே நிறுவனம்.

இதனிடையே குற்றம் கடிதல் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ்டி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "குற்றம் கடிதல் திரைப்படம் வெளியாகும் முன்னரே எனக்கும், எங்களின் படத்திற்கும் தாங்கள் அளித்த உற்சாகத்திற்கும் உறுதுணைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கும், ஜே சதீஷ் குமார் அவர்களுக்கும் குற்றம் கடிதல் படத்திற்காக 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது தாங்கள் அறிந்ததே. தற்போது எங்களுக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக, தமிழ் படத்திற்கான தேசிய விருது குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். இத்தருணத்தில், உங்களுக்கும், தேசிய விருது தேர்வு குழுவினருக்கும், படக்குழுவினருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

 

கொம்பன் ரிலீசானால் சாதிக் கலவரம் வரும்.. காட்சிகளை நீக்குங்க! - தணிக்கைக் குழுவில் புகார்

சென்னை: கொம்பன் படம் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளதால் அந்தப் படத்தை நிறுத்த வேண்டும் என்று தணிக்கைக் குழுவில் புகார் தரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜே.அந்தோணி லிவிங்ஸ்டன் என்பவர், வக்கீல் ஜி.விஜயகுமார் மூலம் திரைப்படம் தணிக்கை குழு தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், "நடிகர் கார்த்தி, லட்சுமிமேனன் ஆகியோர் நடித்துள்ள ‘கொம்பன்' திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை புகழ்ந்தும், உயர்வாகவும் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

கொம்பன் ரிலீசானால் சாதிக் கலவரம் வரும்.. காட்சிகளை நீக்குங்க! - தணிக்கைக் குழுவில் புகார்

தென் மாவட்டங்களில் ஒரு சிறு வார்த்தைக்காக மிகப்பெரிய சாதி கலவரம் ஏற்பட்டு விடும். கடந்த ஓராண்டில் மட்டும் தென் மாவட்டத்தில் நடந்த சாதி மோதலில் 105 கொலைகள் நடந்துள்ளது.

'கொம்பன்' படத்தில் வில்லன் கதாபாத்திரம் ‘நாடார்' சமுதாயத்தை சேர்ந்தவர் போலவும், கதாநாயகன் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவும், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்மை எதிர்த்து போராட யார் இருக்கிறார்?' என்ற வசனத்தை கதாநாயகன் கார்த்தி பேசுகிறார்.

இது தேவையில்லாத சாதி மோதலை தென் மாவட்டங்களில் ஏற்படுத்தும். திராவிட இனத்தில், மிகப்பெரிய சமுதாயம் நாடார் சமுதாயமாகும். ராஜ பரம்பரையை சேர்ந்த இந்த சமுதாய மக்கள், கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.

சிறந்த நிர்வாகிகளாகவும், தொழிலதிபர்களாகவும், கல்வியாளராகவும் திகழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்களை தரம் தாழ்த்தி, ‘கொம்பன்' படத்தில் கதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது எடுக்கப்பட்டுள்ள காட்சிகள், வசனங்களுடன் இந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டால், அது சாதி மற்றும் மதக்கலவரத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் பெற்ற சினிமா துறையை சேர்ந்தவர்கள், சமுதாய அக்கறை எதுவும் இல்லாமல், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கின்றனர். எனவே, ‘கொம்பன்' படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காட்சிகளை மாற்றி அமைக்கவும், மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இந்த மாற்றங்களை செய்யாமல் ‘கொம்பன்' படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது," என்றார்.

 

இந்தியா தோத்ததுக்கு காரணம் அனுஷ்கா சர்மாதான்.. வீடு மீது கல் எறிங்க.. - இது கமல்கான்

உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்கு காரணம். எனவே அவர் வீட்டு மீது கல்லெறியுங்கள் என்று தேஷ்துரோகி பட நடிகர் கமல் ரஷித் கான் ரசிகர்களைத் தூண்டியுள்ளார். மேலும் கேவலமான கமெண்டுகளையும் அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டு பார்க்கும் நபர்தான் இந்த கமல் கான்.

இந்தியா தோத்ததுக்கு காரணம் அனுஷ்கா சர்மாதான்.. வீடு மீது கல் எறிங்க.. - இது கமல்கான்

இந்திப் பட உலகில் முதல்நிலை நடிகையான அனுஷ்கா சர்மாவை இப்போது வம்புக்கிழுத்துள்ளார்.

அவர் சிட்னி போனதால்தான் விராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை என்றும், அதனால் அனுஷ்கா வீட்டின் மீது ரசிகர்கள் கல்லெறிய வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி அனுஷ்கா சர்மா நடிக்கும் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

விராட் கோஹ்லியை மிக மட்டமாக கிண்டலடித்துள்ளார்.

"சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோஹ்லி என மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் ஏன் விளையாடப் போகிறார்?"

-இதெல்லாம் டூ டூ மச்!

 

ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாதில் இயங்கிவரும் பிவிபி நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு

இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். வம்சி இயக்குகிறார்.

இந்தப் படத்திலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

பாதிப் படம் முடிந்த நிலையில் தன்னிடம் தேதிகள் இல்லை எனவே நடிக்க முடியாது என இமெயிலில் தகவல் அனுப்பிவிட்டாராம் ஸ்ருதி.

உடனே ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது பிவிபி நிறுவனம்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஸ்ருதிஹாஸன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம். இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது.

இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது. ஸ்ருதிஹாஸன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது.

மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று கூறியிருந்தது பிவிபி நிறுவனம்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஸ்ருதி ஹாஸன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது; அவரை எந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்யவும் கூடாது என்றும், இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஸ்ருதி ஹாஸனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

 

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரங்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது பெற்ற குழந்தைகள் ரமேஷ், விக்னேஷுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்தார் நடிகர் தனுஷ்.

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரங்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

62-வது தேசிய விருதுக்கான அறிவிப்பில் காக்கா முட்டை படத்துக்கு சிறந்த குழந்தைகளுக்கான படம் மற்றும் அதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரங்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

எம்.மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிமும், ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோசும் இணைந்து தயாரித்துள்ளது.

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரங்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக தனுஷ் இந்த படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன், மற்றும் சிறுவர்களுக்கு தங்க சங்கிலிளைப் பரிசளித்துள்ளார்.

மேலும் வெற்றிமாறன் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து கேக் வெட்டி இதனைக் கொண்டாடியுள்ளார்.

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரங்களுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

காக்கா முட்டை படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

‘சைவம்' படத்தில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி, நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றுத் தந்த பாடல் வரிகள்... இதோ..

இந்தப் பாடலைப் பாடிய உத்ரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு !

சரணம் 1

குயிலிசை அது பாடிட - ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட - ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித் துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு !

சரணம் 2

இதயமும் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்...

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே...

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டிப் பேசும் நம் நேசம் ரொம்ப அழகு !

 

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'அராத்து'

விஜய்யை வைத்து ‘ப்ரியமுடன்', ‘யூத்' போன்ற படங்களையும், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றிக் கொண்டு, அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'அராத்து'

இந்தப் படத்துக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் அராத்து.

அதென்ன அராத்து...? இயக்குநர் ஷெல்வா பேசுகையில், "உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்கத் திட்டமிட்டுளோம்.

அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து'.

படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி' புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து' கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் போட்டுள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்," என்றார்.

 

கார்த்தியின் கொம்பனுக்கு தடைவிதியுங்கள்: ஓ.பி.எஸ்.ஸுக்கு மனு

சென்னை: கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மனு அனுப்பியுள்ளது.

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொம்பன். முத்தையா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொம்பன் ரிலீஸானால் கலவரம் வெடிக்கும்: தடை கோரி ஓ.பி.எஸ்.ஸுக்கு மனு

இந்நிலையில் கொம்பன் படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

சுதந்திர போராட்ட தியாகி வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. (ஆதாரம் 7-.11.-1936, தி ஹிந்து)

'கொம்பன்' பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்க்கு அவர் தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

படத்தின் தலைப்பே (ஆப்பநாட்டு மறவன்) 'கொம்பன்' என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

கடந்த 6 மாதங்களில் தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நண்பேன்டா படத்துக்கும் வரி விலக்கு இல்லை... வழக்குத் தொடரப் போகிறேன் - உதயநிதி

சென்னை: தனது படங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க மறுப்பால், வரி விலக்கு குழு மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம் ‘நண்பேன்டா'. ஏ.ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வெளியாகிறது.

அனைத்துத் தரப்பினரும் பார்க்கத் தக்க படம் என சென்சார் சான்று அளிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசின் வரிவிலக்குச் சலுகை கிடைக்கவில்லை.

நண்பேன்டா படத்துக்கும் வரி விலக்கு இல்லை... வழக்குத் தொடரப் போகிறேன் - உதயநிதி

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்துக் கூறுகையில், "நண்பேன்டா' படம் காமெடி படமாக தயாராகி உள்ளது. நயன்தாரா மீண்டும் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்தானம் ஜோடியாக ஷெரின் நடித்துள்ளார்.

இந்த படத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தைப் பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே என் படங்களுக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர்.

இவர்கள் மீது ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது ‘நண்பேன்டா' படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30-ந்தேதி புதிய வழக்கு தொடருவேன்," என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் விருது

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் என்ற விருதினை வழங்கி உள்ளது மதுரை கல்லூரி.

125 வருடம் பாரம்பரியம் மிக்கது மதுரைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டும் விருதும் அளித்தனர் கல்லூரியின் முதல்வர் முரளி மற்றும் பேராசிரியர்கள்.

மேடையில், "சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர்.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் விருது

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய சீனு ராமசாமிக்கு அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது," என்ற விருது பட்டயம் வாசிக்கப்பட்டது.

ஏற்புரையில் இயக்குனர் சீனு ராமசாமி, "வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விதத்தில் மக்கள் தரும் பட்டப் பெயர்களே நிரந்தரமானவை.

ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக் குழுமம் வழங்கும் இவ்விருதினை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது," என்றார்.

இவ்விழாவில் கல்லூரியின் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

டோணி பாய்ஸ் ஜெயிச்சிருந்தால் இந்த கொசுத் தொல்லை தீர்ந்திருக்கும்!!!

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த நடிகர் கேஆர்கே ட்விட்டரை விட்டே விலகியிருந்திருப்பார், பாலிவுட்டும் நிம்மதி அடைந்திருக்கும்.

காலையில் எழுந்த உடன் இன்று எந்த நடிகர், நடிகையை ட்விட்டரில் வம்புக்கு இழுப்பது என்பதை பிழைப்பாக வைத்துள்ளவர் தான் இந்தி நடிகர் கேஆர்கே. நடிகரா? ஆமாம் அவர் தான் அப்படி சொல்லிக் கொள்கிறார். ட்விட்டரில் அவர் தெரிவிப்பதை பார்த்து சண்டைக்கு பாய்ந்தவர்களும் உண்டு, இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை என்று கண்டுகொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.

டோணி பாய்ஸ் ஜெயிச்சிருந்தால் இந்த கொசுத் தொல்லை தீர்ந்திருக்கும்!!!

இந்நிலையில் தான் பாலிவுட்காரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் கேஆர்கே ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் ட்விட்டரில் இருந்து விலகிவிடுவதாக தெரிவித்தார்.

அவரின் நல்ல நேரம், பாலிவுட்காரர்களின் கெட்ட நேரம் இந்தியா அரையிறுதிப் போட்டியில் தோற்றுவிட்டது. விளைவு கேஆர்கேவின் ட்விட்டர் ஆட்டம் இன்னும் அதிகரித்துவிட்டது.