அமலா பால் அவ்ளோ வெட்டியாவா இருக்காப்ல?

What Happened Amala Paul   

சென்னை: அமலா பால் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கும் ஒரு மெசேஜைப் பார்த்தால் அம்மணி நல்லா தானே இருந்தாங்க என்று படிப்பவர்களை நினைக்கத் தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பாமரன் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது. காலையில் எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரை நான் அது செய்து கொண்டிருக்கிறேன், இது செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்டேட் செய்கிறார்கள். இந்நிலையில் அமலா பால் ஃபேஸ்புக்கில் ஒரு மெசேஜ் போட்டுள்ளார்.

அந்த மெசேஜ் இது தான்,

"தங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தருணத்தில் 88 சதவீத மக்கல், ப்ரிட்ஜின் கதவை மெதுவாக மூடியிருக்கிறார்கள். எதற்கு தெரியுமா? ப்ரிட்ஜில் இருக்கும் விளக்கு எப்பொழுது அணைகிறது என்று பார்க்கத் தான்..." சமீபத்தில் படித்த இந்த புள்ளிவிவரம் குறித்து தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜம் தான் இல்லாயா?!

இதைப் பார்க்கையில் அமலா அவ்வளவு வெட்டியாவா இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

ஸ்ரீசாந்துடன் ஒரு நாள் இரவு... ஒரே ரூமில்... ஏதும் சிக்கல் வருமா?- படபடப்பில் டாப் நடிகை!

பெயரில் ப்ரியம் இருந்ததாலோ என்னமோ, கொஞ்சம் ஆம்பிளை மாதிரி இருந்தாலும் தமிழ், தெலுங்கில் பிரபலமான இந்த அம்மணியை எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது போலிருக்கிறது. முதல் முறை பழகியதுமே, அவருடன் முக்கிய டிஸ்கஷனுக்கு போகத் துடிப்பது வழக்கம்.

சினிமாக்காரர்களே இப்படி என்றால்... மைதானத்தில் காய்ந்து கிடக்கும் கிரிக்கெட் வீரர்களைச் சொல்ல வேண்டுமா... சூதாட்டத்தில் மாட்டும் வரை காதல் இளவரசன் கமல் ரேஞ்சுக்கு தன்னை ஃபீல் பண்ணிக்கொண்டு கிடைத்த சினிமா ஹீரோயின்களோடெல்லாம் நிஜமாக டூயட் பாடியவர் ஸ்ரீசாந்த்.

அவர் டூயட் பாடிய சினிமா நாயகிகளுள் இந்த ப்ரியமும் ஒருவர். இருவரும் கொச்சி, சென்னை, பெங்களூரு என தென்னிந்திய நகரங்கள் அனைத்திலும் ஜோடியாக சுற்றித் திரிந்தனர். ஆடி ஓடி களைத்துப் போய் ஒரு நாள் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்கி 'இளைப்பாறினார்களாம்'.

அதன் பிறகும் கூட இருவரின் நெருக்கமும் தொடர்ந்தாலும், இளைப்பாறல் மட்டும் ஒரு நாள்தான் நடந்ததாம்.

நடிகை இப்போது ஐபிஎல் பக்கம் வருவதில்லை. சினிமா வேறு டல்லடித்துவிட்டதால், நல்ல தொழிலதிபர் கிடைத்தால் தேவலை என்று தேடலைத் தொடங்கியிருந்த நேரம் பார்த்து, ஸ்ரீசாந்த் வசமாக மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கெரகம்...அதோடு போகும்னு பாத்தா...இப்போ கூட சுத்தினது எந்த நடிகை, பார்ட்டிகளில் புக்கிகள் விருந்தானது எந்த நடிகை.. என்றெல்லாம் போலீஸ் வெவரமாக ஆராய... பயத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட நடிகைகள். அதில் அதிகமாக பயந்திருப்பது இந்த ப்ரியம்தானாம்.

எப்படியாவது பிரச்சினையிலிருந்து தப்பிக்க, தன்னை கிரிக்கெட்டர்களுடன் கோர்த்துவிட்ட நபர்களைத் தேடினால்... ஒருவர் கூட தொடர்பு கொள்ளும் தொலைவில் இல்லையாம்!!

 

காதலனை கெஸ்ட் ரூமில் படுக்க விட்டு மாஸ்டர் பெட்ரூமில் படுக்கும் மைலி சைரஸ்!

separate bedrooms cyrus liam hemsworth
லாஸ் ஏஞ்சலெஸ்: பாடகியும், நடிகையுமான மைலி சைரஸுக்கும், அவரது காதலர் லியாம் ஹெம்ஸ்வொர்த்துக்கும் இடையே நேரம் சரியில்லையாம். இருவரும் அடிக்கடி சண்டை போடுகிறார்களாம்.ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்- ஆனால் பெட்ரூம் மட்டும் தனித் தனியாம்.

மைலி சைரஸும், லியாமும் நெருங்கிய நண்பர்கள், நல்ல காதலர்கள் - கொஞ்ச நாளைக்கு முன்பு வரை. இப்போது இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறதாம்.

இருவரும் சேர்ந்து வசித்து வந்தாலும் கூட படுக்கை தனித் தனிதானாம். லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள மைலியின் வீட்டில்தான் லியாமும் தங்கியுள்ளார். இருப்பினும் மாஸ்டர் பெட்ரூமில் மைலி படுத்துக் கொள்கிறாராம். கெஸ்ட் ரூம் ஒன்றில் லியாம் புகுந்து கொள்கிறாராம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் தனித் தனியாக படுப்பார்கள், சண்டை எப்போது தீரும் என்று தெரியவில்லை.

 

யாரு.. டோனி, ஸ்ரீசாந்தா... அவங்க கூட பேசியே ரொம்ப நாளாச்சே! - இது லட்சுமிராய் ரியாக்ஷன்

Lakshmi Rai Denies Her Link Ipl Cricketers

சென்னை: சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய்.

சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய்பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார்.

டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், "கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.

ஸ்ரீசாந்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. டோனியுடன் பேசியே பல வருடங்கள் ஆகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பித்த போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தூதராக இருந்தேன். நான் மட்டுமா இருந்தேன்... நயன்தாராவும்தான் அப்பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு ஐ.பி.எல். அணியில் நான் இல்லை.

யாருடனும் எந்தத் தொடர்பிலும் இல்லை. டோனியுடன் என்னை இணைத்து பேசுவது சரியல்ல.

கேரள கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருந்தது உண்மைதான். டைரக்டர் பிரியதர்ஷன் அழைத்ததால் அங்கு சென்றேன்.

கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. நான் தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன். சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. பொது நிகழ்ச்சியில் சந்தித்தோம். நட்பாக பழகினோம். பின்னர் காதலிக்க ஆரம்பித்துள்ளோம். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். எங்களுக்கு திருமணம் நடக்கப் போகிறது. எனவே தேவையற்ற வதந்திகளை வெளியிடவேண்டாம்," என்றார் லட்சுமி ராய்.

 

கமலுடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா!

கமல் ஹாஸனுடன் யுவன் சங்கர் ராஜா கை கோர்க்கக் கூடும் என்று சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா...

நாம் சொன்னது நடந்திருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் கமல் நடித்து இயக்கும் புதிய படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கமல்ஹாஸனின் ஆஸ்தான இசையமைப்பாளர் எனும் அளவுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் இந்தியனுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. ஏஆர் ரஹ்மான், சங்கர் எசான் லாய், ஹிமேஷ் ரேஷம்மியா, தேவா என பலரும் இசையமைத்தனர்.

yuvan shankar raja join hands with kamal

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா கூட காதலா காதலா படத்துக்கு இசையமைத்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கோடம்பாக்கத்தில் உச்சம் தொட்டார் யுவன் சங்கர் ராஜா. இன்றைக்கு வாங்கும் சம்பளம், இசையமைக்கும் படங்கள் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் யுவன் சங்கர் ராஜா முதலிடத்தில் உள்ளார்.

ஆனாலும் அவர் இதுவரை ரஜினி, கமல் படங்களுக்கு மட்டும் இசையமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. அந்தக் குறையில் பாதி இப்போது தீர்ந்திருக்கிறது. லிங்குசாமியைப் பொறுத்தவரை, அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்தான். கமலை வைத்து அவர் தயாரிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்பதில் லிங்குசாமி தீவிரமாக இருந்தாராம். இதைக் கேள்விப்பட்ட கமலும், என் பட்ததுக்கு யுவன் இசையமைக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். அது நடந்திருப்பதில் எனக்குத்தான் மிக்க மகிழ்ச்சி, என்றாராம்.

கமல் மாதிரி மிமிக்ரி செய்வதில் யுவன் கில்லாடி. கமல் குரலில் அப்படியே அச்சு அசலாக மேடைகளில் பாடியிருக்கிறார் யுவன். அந்த அளவு கமலின் ரசிகர் அவர். இப்போது கமல் படத்துக்கே இசையமைப்பதை மிக சந்தோஷமாக சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

 

விஜய் விலகிய அதே பகலவனில் ஜெயம் ரவி... சீமான் இயக்குகிறார்!

விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய அதே பகலவன் படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஜெயம் ரவி.

கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம் இது.

இப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் சீமான் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்ட சீமான், வெளியில் வந்ததும் தனி அலுவலகம் எல்லாம் அமைத்து, அனைத்து படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், விஜய் விலகிவிட்டார்.

now jayam ravi joins with seeman pagalavan

அதன் பிறகு சீமான் இந்தப் படம் குறித்து யாரிடமும் பேசுவதைத் தவிர்த்து, கட்சிப் பணிகளில் மும்முரமானார்.

ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு முறை சீமான் கூறினார். ஜீவாவும் கதையைக் கேட்டார். ஆனால் பின்னர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார்.

இப்போது படத்தின் கதையைக் கேள்விப்பட்ட ஜெயம் ரவி, இந்தக் கதையில் நான் நடிக்கிறேன். முழுக் கதையையும் கூறுங்கள் என்று சீமானிடம் கேட்டிருக்கிறார்.

கோவையில் வைத்து 3 மணிநேரம் கதையைக் கேட்டுள்ளார். கதை சொல்லும் கலையில் சீமான் ஒரு நிபுணர். கிட்டத்தட்ட சினிமாவை நேரில் பார்ப்பது போலவே அவர் சொல்வார். நிச்சயம் நானே நடிக்கிறேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்கள் முடிந்ததும் அடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் என்றாராம்.

சீமான் - ஜெயம் ரவி இணையும் 'பகலவன்' படத்தினைத் தயாரிக்கப் போவது கலைப்புலி தாணு தான். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

'பூலோகம்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டுத்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனப் படத்தை நடிக்கப் போகிறாராம்.

பூலோகமும், நிமிர்ந்து நில்லும் கிட்டத்தட்ட படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பீட்சா இயக்குநரின் கதாநாயகியாகும் லட்சுமி மேனன்

Karthik Subbaraj Gets Super Hit Heroine For His Next

பீட்சா என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்தினை மதுரை நகரை களமாக்கி படமாக்கப் போகிறாராம்.

ஹீரோ சித்தார்த் என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் கதாநாயகி தேடுதல் வேட்டையில் இயக்குநர் மனதில் கிளிக் ஆனது லட்சுமி மேனன் என்கின்றனர்.

கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றவர் லட்சுமி மேனன். சுந்தபாண்டியன், கும்கி ஆகிய இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடியவை. திரைக்கு வரப்போகும் குட்டிப்புலி படமும் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

எனவேதான் மதுரை சப்ஜெக்ட் என்ற உடன் லட்சுமி மேனனை தேர்வு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது பற்றி கருத்து கூறியுள்ள லட்சுமி மேனன், கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லும் விதம் ‘சம்திங் ஸ்பெசல்' என்று கூறியுள்ளார்.

 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்.. வீணா மாலிக்குக்கும் அதிர்ச்சியாம்!

Self Proclaimed Whistleblower Veena Mallik Turns Heat

ஜென்டில் மேன் ஆட்டம் என்று கூறப்படும் கிரிக்கெட்டில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது இது ஜென்டில்மேன் விளையாட்டா என்று சந்தேகமளிக்கிறது என்று கவர்ச்சிப் புயல் வீணா மாலிக் கூறியுள்ளார்.

பாலிவுட் நாயகி வீணா மாலிக், சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முகம்மது ஆசிப் உடன் காதலில் இருந்தவர். சூதாட்ட புகாரில் சிக்கிய போது ஆதரங்களுடன் வெளியிடத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இப்போது ஐ.பி.எல் 6 போட்டியில் சூதாட்ட சர்ச்சை கிளம்பியதை அடுத்து இது பற்றி கருத்து கூறியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் வீணா மாலிக் கூறியதாவது,

வெளிநாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் சட்டப்படி தவறு. பணத்திற்காக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்திய மீடியாக்களில் நுழைந்த வீணா மாலிக் பின்னர் பரபரப்பாக எதையாவது செய்து பிரபலமடைந்தார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் சூதாட்ட புகார் சர்ச்சையில் சிக்கிய போது அந்த நேரத்தில் ஆசிப் உடன் இருந்தவர் வீணா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா-ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் அழைப்பு

Film Chamber Invites Cm Jaya

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலவ்வர் ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் நேரில் அழைப்பு விடுத்தது.

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் தலைமையில் சங்க நிர்வாகிகள் நடிகர் சிவகுமார், ரவி கோட்டகரா, பொன் தேவராஜன், எடிட்டர் மோகன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.பிரசாத் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

விழாவில் கலந்து கொள்ள முயற்சிப்பதாக முதல்வர் கூறியதாக பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

கும்கியை தொடர்ந்து சுனாமியை களமாக்கும் பிரபு சாலமன்

Prabhu Solomon S Stunning Tsunami

காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் கதை சுனாமியை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ங

கதையை மட்டுமே நம்பும் பிரபு சாலமன் மிகப்பெரிய கதாநாயகர்களை தேடாமல் புதுமுகங்களை அறிமுகம் செய்வார். அதேபோல் புதிய படத்தில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான ‘நானி' தான் ஹீரோ என்கின்றனர்.

கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி கதை இருந்தது. அதேபோல் புதிய படத்தில் 40 நிமிடத்திற்கு சுனாமியை மையமாக வைத்து பிரம்மாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ள பிரபு சாலமன், ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்களையும் தனது குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளாராம். சுனாமிக்கு பிந்தைய வாழ்க்கைச் சூழலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.