சிவகார்த்திகேயன் மீது அடிக்கப் பாய்ந்த கமல் ரசிகர்கள்.. மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

மதுரை: பிரபல நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான காக்கிச் சட்டை என்ற பெயரில் நடித்தவர் சிவகார்த்திகேயன். இதனால் கமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் விளாசி தள்ளி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்தார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அடிக்கப் பாய்ந்தனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து ஒருவழியாக வெளியேறினார் அவர். இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் என்னவோ சிவகார்த்திகேயனுடன் பாதுகாவலர்களும் உடன் வந்தனர். அவர்கள் கமல் ரசிகர்களைத் தடுத்து சிவகார்த்திகேயனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

டுவிட்டரில் ரசிகர்கள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தாக்குதலுக்கு கமல் ரசிகர்கள் கண்டனம்

இதனிடையே, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம், இது போன்ற செயல்களை கமல் ரசிகர்கள் தயவு செய்து செய்யாதீர்கள். அது நம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்படும் அவமானமாகும். இந்த செயல்களை எங்கள் புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

 

எந்திரன் 2... முன்னோட்ட வேலைகளை தொடங்கினார் ஷங்கர்

சென்னை: எந்திரன் 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்க்ஷன் (முன்னோட்ட வேலைகள்) பணிகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதனை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். கபாலி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தவுடன் ரஜினி எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Rajinikanth's 'Endhiran' 2  Pre-Production Work Begins

All the best to @shankarshanmugh & @srinivas_mohan 4 kick starting the pre-production work of #Robot2 (#Enthiran2)",

தற்போது எந்திரன் 2 படத்தின் இயக்குநர் ஷங்கர் படத்திற்கான ப்ரீப்ரொடக்க்ஷன் வேலைகளை விஎப்எக்ஸ் பணிகளில் சிறந்தவரான ஸ்ரீநிவாஸ் மோகனுடன் இணைந்து தொடங்கியிருக்கிறார்.

எந்திரன் 2 படத்தில் நடிகை தீபிகா படுகோனா நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர் ஆனால் படத்தின் இயக்குனரான ஷங்கர் இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.

ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 படத்தின் பூஜை மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி படம் 2016 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

தொடர்ந்து 2017 ம் ஆண்டு பொங்கலுக்கு எந்திரன் 2 படத்தை வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

 

'புலி'யைக் குடும்பம் குடும்பமாக சென்று பாருங்கள் - ஸ்ரீதேவி

சென்னை: புலி திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள் என்று நடிகை ஸ்ரீதேவி தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி திரைப்படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Puli Watch With Your Kids & Friends to the Nearest Theater - says Sridevi

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. இவர் புலி திரைப்படத்தில்
ராணி வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியை மையப்படுத்தி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டரை தனது டுவிட்டர் இணையதளத்தில் ஸ்ரீதேவி பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.


"அக்டோபர் முதல் தேதி வெளியாகும் ‘புலி' படத்தை உங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 

தல 56: மீண்டும் "ரெட்" ஸ்டைலுக்குத் திரும்பிய அஜீத்

சென்னை: தல 56 படத்தில் அஜீத் மொட்டைத் தலையுடன் நடித்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ரெட் படத்தில் அஜீத் நடித்தது போன்று இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

சிறுத்தை சிவா இயக்கும் தல 56 படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடிப்பதாகத்தான் முதலில் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த கெட்டப்பில் அஜீத் நடித்த புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது.

Ajith's New Look In Thala 56

இந்நிலையில் தற்போது மொட்டை தலையுடனும் அஜித் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறுகின்றனர். அஜித் மொட்டை தலையுடன் நடிக்கும் காட்சிகள் படத்தில் "பிளாஷ்பேக்" காட்சிகளாக வருமாம்.

இந்த கெட்டப்புடன் எடுக்கப்பட்ட காட்சிகளை கொல்கத்தாவில் ரகசியமாக படம் பிடித்துள்ளார் சிறுத்தை சிவா. ஏற்கெனவே அஜித் மொட்டை தலையுடன் ‘ரெட்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல 56 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க பாசமான தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். மேலும் அஸ்வின்,சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிட "தல 56" படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தல 56 எதிர்பார்ப்பு அதிகமாகிட்டே போகுது போல...