பெங்களூர்: பழம்பெரும் நடிகை சுமித்ராவின் கணவரும், கன்னட திரைப்பட இயக்குநருமான ராஜேந்திர பாபு மரணமடைந்தார்.
கணவர் மரணமடைந்த போது சுமித்ரா வீட்டில் இல்லை. வெளியூர் போயுள்ள அவர் தகவல் அறிந்து பெங்களூர் விரைந்துள்ளார்.
திருச்சூரைச் சேர்ந்த ராகவ நாயருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தவர் சுமித்ரா. இவரது முதல் கணவர் பெயர் ரவிக்குமார். இவர் பிரபலமான மலையாள நடிகராக திகழ்ந்தவர். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அதன் பிறகு கன்னட இயக்குநரான ராஜேந்திர பாபுவைக் காதலித்து மறுமணம் புரிந்தார் சுமித்ரா.
இந்தத் தம்பதிக்கு உமாசங்கரி என்கிற நடிகை உமா, நட்சத்திரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். அக்காவைப் போலவே நட்சத்திராவும் கன்னடத்தில் நடித்து வருகிறார்.
ராஜேந்திர பாபு கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். பெங்களூரில் கணவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார் சுமித்ரா. தற்போது வெளியூர் போயிருந்தார் சுமித்ரா. வீட்டில் ராஜேந்திர பாபு காலையில் குளியலறைக்குப் போனபோது அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வெளியூர் போயுள்ள சுமித்ராவுக்கு தகவல் போயுள்ளது. அவர் பெங்களூர் விரைந்துள்ளார்.