ஸ்ரீகாந்த் - ஜனனி அய்யர் நடிக்கும் 'பாகன்'!


பெரிய இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்த படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது ஸ்ரீகாந்துக்கு. சமீபத்தில் அவர் நடித்த சதுரங்கம் படம் வெளியாகி நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.

பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.

முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர்கள் சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.

"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம்.

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா். ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார். ஸ்டன்ட் சுப்ரீம் சுந்தர், பாடல்கள்- யுகபாரதி, சூர்யா, அறிமுகம் விருச்சிகா. பிஆர்ஓ ஜான்.

முருகானந்தம் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர் விஸ்வாஸ் யு லாட் மற்றும் வி புருஷோத்தம்.

மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்.
 

'தலைவலி' இல்ல.. 'ரெண்டாவது படம்'!


தமிழ்ப் படம் இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கும் அடுத்த படத்துக்கு 'ரெண்டாவது படம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் வெளிவந்த படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது 'தமிழ் படம்'. மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். 'க்ளவுட் நைன்' நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினி, கமல், பாக்யராஜா என ஒருவரை விடாமல் கிண்டலடித்த இந்தப் படம் ஓஹோவென ஓடியது.

இந்த நிலையில் இவரது இரண்டாவது படத்துக்கு தலவலி என்று பெயரிட்டிருப்பதாகவும், இதில் அஜீத், விஜய்யை கிண்டலடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது தனது இரண்டாவது படத்துக்கு 'ரெண்டாவது படம்' என்றே பெயரிட்டுள்ளனர்.

இதில் விமல், அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை படத்தின் பிஆர்ஓ மவுனம் ரவி இன்று வெளியிட்டுள்ளார்.

ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கண்ணன் இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரும் இந்தப் படம் விஞ்ஞானமும் சரித்திரமும் இணைந்த காதல் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுவே பெரிய ஸ்பூப்தானே!
 

நான்கு புதிய ஜோடிகள் அறிமுகமாகும் 'செ‌ங்‌கா‌டு'!


செங்காடு என்ற புதிய படத்தில் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.

எச்‌.எம்‌.டி‌. பி‌க்‌சர்‌ஸ் நி‌றுவனம் சா‌ர்‌பி‌ல்‌ வி‌.இரா‌வணன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள படம் 'செ‌ங்‌கா‌டு'. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ அறி‌முக இயக்‌குநர்‌ ரமே‌ஷ்‌ ரா‌மசா‌மி.

இந்தப் படத்தில் மொத்தம் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.

பு‌துமுகங்‌கள்‌ அருண்‌பி‌ரகா‌ஷ்‌ - ரூபா‌, சுரே‌ஷ்‌‌ - நகி‌னா‌, உத்‌தம்‌ - வி‌மலா‌, வி‌க்‌கி‌ - ப்‌ரி‌யா‌ என நா‌ன்‌கு ஜோ‌டி‌களுடன்‌ முத்‌துக்‌கருப்‌பன்‌, அன்‌பழகன்‌, வே‌ணுகோ‌பா‌ல், ரகுநா‌த்‌ ஆகி‌யோ‌ரும்‌ நடி‌த்‌துள்‌ளனர். இதி‌ல்‌ ரூ‌பா‌, ஐந்‌து தெ‌லுங்‌கு படங்‌களி‌ல்‌ கதா‌நா‌யகி‌யா‌க நடி‌த்‌தவர்‌ என்‌பது குறி‌ப்‌பி‌த்‌தக்‌கது.

ஜெ‌ரோ‌ம்‌ பு‌ஷ்‌பரா‌ஜ்‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ இளை‌யகம்‌பன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர். மணி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, பீ‌ட்‌டர்‌ பா‌பி‌யா‌ எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. நி‌ர்‌மல்‌ நடனம் அமைக்க, கலையை பூ‌பதி‌ கவனிக்கிறார். பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இது வரை‌ சினிமா படப்‌பி‌டி‌ப்‌பு‌ என்றால் என்னவென்றே தெரியாத தஞ்‌சா‌வூ‌ர்‌, ஒரத்‌தநா‌டு, மன்‌னா‌ர்‌குடி‌, வே‌தா‌ரண்‌யம்‌ பகுதியில் உள்ள அழகிய கிழகி‌ய கி‌ரா‌மங்‌களி‌ல்‌ செங்காடு படப்பிடிப்பு நடந்தது.

செங்காடு குறித்து இயக்குநர் ரமேஷ் ராமசாமி கூறுகையில், "இது நா‌ன்‌கு நண்‌பர்‌களுக்‌குள்‌ நடக்‌கும் கா‌தல் கதை. நண்‌பர்‌களுக்‌குள் துரோ‌கம் நடந்‌தா‌ல்‌ அது என்‌ன மா‌தி‌ரி‌ வி‌ளை‌வு‌களை‌ ஏற்‌படுத்‌தும்‌ என்‌கி‌ற அழுத்‌தமா‌ன தி‌ரை‌க்‌கதை‌தான் இந்தப் படத்துக்கு முக்கிய பலம்.

கா‌தல், கவர்‌ச்‌சி, நட்‌பு, பா‌சம், சென்‌டி‌மெ‌ண்‌ட், நகை‌ச்‌சுவை, என எல்‌லா‌ உணர்‌வு‌களை‌யு‌ம் வெ‌ளி‌ப்‌படுத்‌தும்‌ ஜனரஞ்சகப் படமா‌க செங்காடு அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. மற்‌ற மொ‌ழி‌களி‌லும்‌ வெ‌ளி‌யி‌டுகி‌ற அளவு‌க்‌கு இது கமர்‌சி‌யல்‌ படமாக உருவா‌கி‌ உள்‌ளது.

பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல் தி‌ரை‌க்‌கதை அமை‌த்‌து சி‌னி‌மா‌த்‌தனம்‌ இல்‌லா‌த சி‌னி‌மா‌வா‌க உருவா‌கி‌ உள்‌ளது. ஒரு இடத்‌தி‌ல்‌ கூட போ‌ரடி‌க்‌கா‌மல்‌, கா‌ட்‌சி‌க்‌கு கா‌ட்‌சி‌ அடுத்‌து என்‌ன நடக்‌கும்‌ என்‌று யூ‌கி‌க்‌க முடி‌யாத சம்‌பவங்‌களோ‌டு படு‌‌ வேகமா‌ன தி‌ரை‌க்‌கதை‌, பரபரப்‌பு‌ம்‌, வி‌றுவி‌றுப்‌பு‌ம் கொ‌ண்‌ட கா‌ட்‌சி‌கள்‌, எதி‌ர்‌பா‌ரா‌த க்‌ளை‌மா‌க்ஸ்‌ என படம் ரசி‌கர்‌களை இருக்‌கை‌யி‌ல்‌ கட்‌டி‌ப்‌போ‌டும்‌ அளவுக்கு உருவா‌கி‌ உள்‌ளது..." என்‌றார்.

பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌து படம்‌ இயக்‌க கா‌ரணம் என்ன‌? என்‌று அவரி‌டம்‌ கே‌ட்‌டதற்‌கு, "இந்‌த கதை‌யில் யா‌ர் நடி‌த்‌தா‌லும்‌ சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌து. இதி‌ல்‌ கதை‌தா‌ன்‌ ஹீ‌ரோ‌. பி‌ரபல கதா‌நா‌யகர்‌களை‌ தே‌டி‌ச்‌ செ‌ன்‌று நான்‌கு கதா‌நா‌யகர்‌களை‌ இணை‌த்‌து படமெ‌டுப்‌பது இந்‌த கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ சா‌த்‌தி‌யமா சொல்லுங்க.... அதனா‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ நடித்தால் சரி‌யா‌க இருக்‌கும் என்‌று நி‌னை‌த்‌தே‌ன்‌. எல்‌லோ‌ரும் நன்‌றாக பயி‌ற்‌சி‌ எடுத்‌துக்‌ கொ‌ண்‌டு நடி‌த்‌தா‌ர்‌கள்‌. அவர்‌கள்‌ பு‌துமுகங்‌கள்‌ என்‌பதை‌ வி‌ட அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு பொ‌ருத்‌தமா‌க இருந்‌தா‌ர்‌கள். படமும்‌ பா‌ர்‌ப்‌பதற்‌கும்‌ பு‌துசா‌க இருக்‌கும்.

அதே‌ போ‌ல யதா‌ர்‌த்‌தம்‌ இருக்‌க வே‌ண்‌டும்‌ என்‌று கி‌ரா‌மங்‌களை‌ நோ‌க்‌கி‌ச் செ‌ன்‌றே‌ன்‌. அதுவு‌ம்‌ படத்‌தி‌ற்‌கு பெ‌ரி‌ய ப்‌ளஸா‌க அமை‌ந்‌தி‌ருக்கி‌றது. கற்‌பனை‌ கதை‌யா‌க இருந்‌தா‌லும்‌ யதா‌ர்‌த்‌தம்‌ அதன்‌ அழகு கெ‌டா‌மல்‌ இருக்‌கும்‌. இப்‌போ‌து படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ முடி‌வடை‌ந்‌து பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ர்‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌ன்றன. இம்மாத இறுதி‌யி‌ல்‌ பா‌டல்‌ இசை‌ வெ‌ளி‌யி‌டுகி‌றோ‌ம்‌. அதன்‌ பி‌றகு படத்‌தை‌ வெ‌ளி‌யி‌ட தி‌ட்‌டமி‌ட்‌டுள்‌ளோ‌ம்‌...," என்றார்.
 

குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியைச் சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள்!


சென்னை: குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதும் பாதிப்புக்குள்ளாவதும் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலிருந்தே சத்தான உணவுகளைத் தருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

இதற்காக மக்களின் அபிமானம் பெற்ற முன்னணிக் கலைஞரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த அமைச்சகம் கைகோர்க்கிறது. இந்தி நடிகர் ஆமீர்கானும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

எண்பதுகளில் போலியோ ஒழிப்புப் பிரச்சாரத்துக்கான விளம்பரப் படத்தில் நடித்த ரஜினி, அதன் பிறகு இப்போது மீண்டும் குழந்தைகளுக்கான முக்கிய விளம்பரப் படத்தில் நடிக்கிறாரா. வட இந்திய நகரங்களில் அவர் இதுகுறித்து பிரச்சாரம் செய்யவும், கருத்தரங்குகளில் பங்கேற்கவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த பிரச்சாரத்தை எப்படி மேற்கொள்வதென ஆலோசனை செய்வதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் நேற்று ரஜினியைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை நேற்று எங்கள் அமைச்சக உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினார்கள். அவரது ஒவ்வொரு வார்த்தையும் சர்வதேச அளவில் மக்களை வேகமாக சென்றடையும் சக்தி மிக்கவை. அவர் உண்மையான சாதனையாளர். அவர் எங்களுடன் இணைந்து செயல்படும்போது, இந்த பிரச்சாரத்துக்கே புதிய வேகம் கிடைத்துவிடும்," என்றார்.
 

பார்ட்டியில் கமல்-விஜய் நடனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கடந்த 7ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன. இந்நிலையில், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் கமல் ஒரு ரகசிய பார்ட்டி அளித்திருக்கிறார்.  இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

பார்ட்டியின் இடையே திடீரென கமல்  விஜய்யை அழைத்து தனக்காக நடனமாட வேண்டும் என கேட்டிருக்கிறார். அதிர்ச்சியில் உரைந்து போன விஜய் சற்று சுதாரித்துக் கொண்டு பின்னர் அடக்கமாக சில ஸ்டெப்களை போட்டிருக்கிறார். கமலும் அவருடன் இணைந்து ஆடி இருக்கிறார். கமலின் பிறந்த நாளன்று விஜய் நடனமாடியது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என கூறப்படுகிறது.



 

நீலாங்கரை பீச்சில் நள்ளிரவில் டான்ஸ் : இளம்பெண்ணை அழைத்த சிம்பு நண்பர்கள் கைது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை: இளம்பெண்ணை கிண்டல் செய்து அவரது கணவரை தாக்கிய நடிகர் சிம்புவின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் நீலாங்கரையில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் நடிகர் சிம்பு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள 'பப்'புக்கு நண்பர்களுடன் சென்றார் சிம்பு. வசதி படைத்தவர்கள் ஜாலியாக இங்கு வந்துபோவது வழக்கம். இப்போது சினிமா நட்சத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கமாக இரவு 10 மணிக்கெல்லாம் மூடப்படும் இந்த பப், சினிமா நட்சத்திரங்கள் வருகைக்கு பிறகு நள்ளிரவு வரை இயங்குவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவன மேலாளர் நவீன் என்பவர், தன் மனைவியுடன் அதே பப்புக்கு சென்றிருக்கிறார். அங்கு நடந்த ஆட்ட விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது சிம்புவுடன் வந்திருந்த நண்பர்கள், நவீன் மனைவியின் அழகில் மயங்கி அவருடன் நடனம் ஆட விரும்பினார்கள். பின்னர் வம்படியாக அந்த பெண்ணை டான்ஸ் ஆட அழைத்தனர். இதற்கு நவீன் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது. சிம்புவும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன், அவர்களிடம் சத்தம் போட்டு தகராறு செய்தார். பின்னர் 'பப்'பில் இருந்து கார் பார்க்கிங் சென்று சிம்புவின் நண்பர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு ஆட்டம் முடிந்து நவீன் வருவதை பார்த்த அவர்கள் மீண்டும் கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. நவீன் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனே உதவி உதவி என்று சத்தம் போடவே பப் ஊழியர்கள் அந்த இடத்துக்கு ஓடிவந்தனர். கூட்டமும் கூடியது. அவர்களை பார்த்ததும் சிம்புவின் நண்பர்கள் ஓடிவிட்டனர். அதற்கு முன்பே சிம்பு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுபற்றி நீலாங்கரை போலீசில் நவீன் புகார் கொடுத்தார். சிம்புவின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக நீலாங்கரை சப் இன்ஸ்பெக்டர் பாலரத்னம் கூறும்போது, ''புகாரின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகிறோம்" என்றனர்.


 

புவனேஸ்வரியிடம் ரூ 1 கோடி கடன்பட்ட தயாரிப்பாளர்... திருப்பிக் கேட்டு வழக்கு!


சென்னை: கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தைத் தயாரிக்க நடிகை புவனேஸ்வரி ரூ 1 கோடி கடன் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திருப்பித் தரப்படாததால், அதன் தயாரிப்பாளர் சம்பூர்ணம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் புவனேஸ்வரி.

தமிழ் சினிமா ஆயுசுக்கும் மறக்கமுடியாத நடிகை புவனேஸ்வரி. இவரை சில ஆண்டுகளுக்கு முன் விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்ய, அதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் மீது திரையுலகம் பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக சினிமாவும் பத்திரிகையுலகமும் மோதியது நினைவிருக்கலாம்.

அதன் பிறகு ஜாமீனில் வந்த புவனேஸ்வரி சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவும் பைனான்ஸ் பண்ணவும் ஆரம்பித்துள்ளார். அப்படி அவரிடம் பைனான்ஸ் பெற்று தயாரான படம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்.

படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் தயாரிப்பாளர் புவனேஸ்வரிக்கு தரவேண்டிய பணத்தை தரவில்லையாம்.

எனவே சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி. அதில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' சினிமா தயாரிப்பாளர் சம்பூர்ணம் என்னிடம் படம் தயாரிப்பதற்காக ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து முத்திரை தாளில் எழுதிக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் 'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' படம் விரைவில் வெளியிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்ததும் தயாரிப்பாளர் சம்பூர்ணத்தை தொடர்பு கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டேன். ஆனால் தயாரிப்பாளர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

எனக்கு சேர வேண்டிய கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை என்றால் நான் மிகவும் பாதிக்கப்படுவேன். ஆகவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கோர்ட்டு அவருக்கு உத்தர விட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மனுவை சென்னை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்து தயாரிப்பாளர் சம்பூர்ணத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். படம் வெளியாக ஏற்கெனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

மெகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் மாளவிகா!


வெள்ளித்திரையில் குத்தாட்டம் போட்டாலும், சின்னத்திரைக்கு வரும்போது குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவது தமிழ் நடிகைகள் வழக்கம்.

அந்த லிஸ்டில் சேருகிறார் நடிகை மாளவிகா.

கவர்ச்சி ஆட்டம் போட்டு, களைத்துப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட மாளவிகாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது.

ஆனால் பெரிய திரையில் நடிக்க உடம்பு இடம் கொடுக்கவில்லையாம். இரண்டு குழந்தைகளை வேறு கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை என்பதால், சின்னத்திரையில் ஏதாவது மெகா சீரியல் வாய்ப்பிருந்தா சொல்லுங்க என்று தனது பிஆர்ஓ மூலம் கேட்டு வந்தார்.

இப்போது அவருக்கு விளம்பரப் படம் ஒன்றிலும், ஒரு மெகா சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இவற்றில் நடிப்பதற்காக தனது ஒன்றரை வயது மகளுடன் சென்னையில் கேம்ப் போடப் போகிறாராம் மாளவிகா!
 

ட்விட்டரில் சௌந்தர்யா ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா, இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார்.

பிரபலங்களின் இப்போதைய விருப்பமான சமூக தளம் பேஸ்புக் கூட இல்லை. ட்விட்டர்தான். சுருக்கமான செய்தி, மொபைலிலிருந்தே அப்டேட் செய்யும் வசதி என்பதால் ட்விட்டரை தேர்வு செய்கின்றனர்.

கிட்டத்தட்ட தங்களுக்கு வசதியான பிஆர்ஓ மாதிரி ஆக்கிக் கொண்டுள்ளனர் ட்விட்டரை.

ரஜினி வீட்டில் ஏற்கெனவே ஐஸ்வர்யா, தனுஷ் போன்றவர்கள் ட்விட்டர் தளம் மூலம் தங்கள் கருத்துக்கள், தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தெரிவிக்கின்றனர். ரஜினி பற்றி தெரிந்து கொள்ள பலர் இப்போதெல்லாம் தனுஷ் அல்லது ஐஸ்வர்யாவின் ட்விட்டரை தேடிப் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இப்போது சௌந்தர்யா ரஜினியும் ட்விட்டரில் இணைந்துள்ளார். தனது முதல் ட்வீட்டில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

'ஒரு வழியாக நானும் ட்விட்டருக்கு வந்துவிட்டேன்!'