
சென்னை: சினிமா இயக்குநர் செல்வராகவன்-கீதாஞ்சலி திருமண வரவேற்பு, சென்னையில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
இயக்குநர் செல்வராகவனுக்கும், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்-பத்மினி ராமன் தம்பதிகளின் மகள் கீதாஞ்சலிக்கும் சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நடிகர்-நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
செல்வராகவன்-கீதாஞ்சலி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நேற்று மாலை 6-30 மணிக்கு நடந்தது.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் செல்வராகவன்-கீதாஞ்சலி இருவரும் கருணாநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார்கள்.
முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், மற்றும் நீதிபதிகள் கே.வெங்கட்ராமன், ஆர்.எஸ்.ராமநாதன், கே.கே.சசிதரன், வி.ராமசுப்பிரமணியன், வி.தனபாலன், டி.எஸ்.சிவஞானம், கே.பி.கே.வாசுகி, எம்.ஜெயச்சந்திரன், கே.என்.பாஷா, பால் வசந்தகுமார், பெரிய கருப்பன், கே.சந்துரு, கிருபாகரன், ராஜா, சிவகுமார், முருகேசன், மோகன்ராம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.மோகன், பாஸ்கரன், வி.ராமசாமி, ஏ.கே.ராஜன், என்.வி.பாலசுப்பிரமணியம்,
இயக்குநர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், வசந்த், ஜெயேந்திரா, பட அதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், கே.முரளிதரன், சாமிநாதன், எடிட்டர் மோகன், அல்லு அரவிந்த், மோசர்பேர் தனஞ்செயன், நடிகர்கள் ஜெயம் ரவி, பார்த்திபன், சுந்தர் சி, அப்பாஸ், நடிகைகள் சுஹாசினி, கவுதமி, கஸ்தூரி, மனோரமா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மணமகள் கீதாஞ்சலியின் தந்தை பிஎஸ் ராமன், திமுக ஆட்சிக் காலத்தில் அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் முதல் சினிமாக்காரர்கள் நிகழ்ச்சி இது.
பொதுவாக முன்பெல்லாம் கருணாநிதி வந்தால், முண்டியடித்துக் கொண்டு அவர் பக்கத்தில் நின்று போஸ் கொடுக்க ஆஜராகும் சினிமாக்காரர்கள், இந்த முறை அவரைப் பார்த்ததும் பம்மிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.