4/23/2011 9:57:20 AM
சன் பிக்சர்ஸ் வெளியிடும், 'எங்கேயும் காதல்' படம், மே மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, சுமன், ராஜு சுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், 'எங்கேயும் காதல்'. பிரபுதேவா பிரமாண்டமாக இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியான நாள்முதலே மெகா ஹிட்டாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. இதுவரை அங்கு படம் பிடிக்காத பல புதிய லொகேஷன்களில் பிரபுதேவா ஷூட்டிங் நடத்தியுள்ளார்.
படம் பற்றி பிரபுதேவா கூறும்போது, 'இது எளிமையான காதல் கதைதான். ஆனால், இதன் திரைக்கதை புதியதாகவும் பரபரப்பாகவும் இருக்கும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் புருவங்களை உயர வைப்பதாக இருக்கும். ஹாரிஸ் இசையில் ஒவ்வொரு பாடலும் ஆர்ப்பாட்டமாக வந்துள்ளது. அந்தப் பாடல்களுக்கான நடன அமைப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளோம்' என்றார். மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் மே 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.