மதுர முரளி ஆல்பம் ஜேசுதாஸ் வெளியிட்டார்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மதுர முரளி ஆல்பம் ஜேசுதாஸ் வெளியிட்டார்!

5/23/2011 2:22:29 PM

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா எழுதி, இசையமைத்துள்ள கர்நாடக இசை ஆல்பம், 'மதுர முரளி'. டைம்ஸ் மியூசிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அனைத்து பாடல்களையும் பாடியிருக்கும் வேலூர் கிரிதரன், ஆல்பத்தை தனது குரு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சமர்ப்பித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதல் ஆல்பத்தை கே.ஜே.ஜேசுதாஸ் வெளியிட, 'தமிழ்ப்படம்' சிவா பெற்றார்.




 

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் "மன்னார் வளைகுடா"!

Tags: quot, quot quot

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் 'மன்னார் வளைகுடா'!

5/23/2011 2:31:52 PM

லக்ஷயா புரொடக்ஷன்ஸ் சார்பில், சிவக்குமார், ஏனஸ்டீன், சண்முகசுந்தரம், கோவிந்தன், ஷேக் அமீர், காளிதாஸ், முத்துக்குமார் தயாரிக்கும் படம் 'மன்னார் வளைகுடா'. இதில் கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பெங்களூர் மாடல் யோகா நடிக்கிறார். தனசேகரன் இயக்குகிறார். இவர் இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஒளிப்பதிவு என்.வெங்கட், இசை எஸ்.சிவப்பிரகாசம், பாடல்கள் சினேகன், வசனம், கே.எஸ்.பழனி, நெய்வேலி பாரதிகுமார், சக்தி. முழுக்க முழுக்க காமெடி படமான இதன் ஷூட்டிங் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.




 

கமர்சியல் ஹீரோயின் திகட்டிவிட்டது : த்ரிஷா

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமர்சியல் ஹீரோயின் திகட்டிவிட்டது : த்ரிஷா

5/23/2011 2:24:38 PM

கமர்சியல் ஹீரோயினாக நடித்து திகட்டி விட்டது என்று த்ரிஷா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இப்போது 'பாடிகார்ட்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுடன் நடித்து வருகிறேன். தெலுங்குக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தமிழில் அஜீத்துடன் நடித்த 'மங்காத்தா' முடிந்துவிட்டது. அடுத்து சில படங்களுக்கு பேசி வருகிறேன். ஹீரோக்களோடு டூயட் பாடி, அவர்களுக்காகச் சிரித்து அழும் வழக்கமான கமர்சியல் பட ஹீரோயின் கேரக்டர் திகட்டி விட்டது. நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆசை. நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஒரே மாதிரி நடிக்க வேண்டுமா? என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த தேதியில் அவர்களால் படம் எடுக்க முடியவில்லை. பிறகு அவர்கள் கேட்ட தேதியை என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதில் எனக்கும் வருத்தம், அவர்களுக்கும் வருத்தம். இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. இந்தியில் நடித்தால் நிறைய நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். வட இந்திய மீடியாக்களின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனாலும் நல்ல வாய்ப்பு வந்தபோது நடிக்க மறுக்கவும் முடியாது. அப்படி வந்த ஒரு வாய்ப்பில் நடித்தேன். இனி வரும்போது நடிப்பேன்.




 

ரஜினி நலம் பெற வேண்டி, ராகவேந்திரா லாரன்ஸ் 108 பால் குடம் அபிஷேகம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி நலம் பெற வேண்டி, ராகவேந்திரா லாரன்ஸ் 108 பால் குடம் அபிஷேகம்!

5/23/2011 2:29:52 PM

நுரையீரல் பாதிப்பால் உடல் நலம் குன்றிய ரஜினிகாந்த், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ மனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராகவேந்திரா லாரன்ஸ், ஆவடியில் தான் கட்டியுள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினி குணம் அடைய வேண்டி 108 பால்குட அபிஷேகம் செய்தார். பின்னர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி லாரன்ஸ் கூறும்போது, 'ரஜினி குணமடைய வேண்டுமென்று 108 பால்குட அபிஷேகம் நடந்தது. 2000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சரத்குமார் உட்பட பலர் பிரர்த்தனையில் கலந்துகொண்டனர்' என்றார். பாலிவுட் பிரார்த்தனை: ரஜினி விரைவில் குணம் அடைய வேண்டி பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஷாருக்கான், பாபி தியோல், பிரியங்கா சோப்ரா ஆகியோர் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். Ôரஜினிக்கு உடல்நலமில்லை என்று அறிந்து அப்செட் ஆகிவிட்டேன். அவர் விரைவில் குணம் அடைய நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும். 6 நாட்களுக்கு முன்பு அவருடன் தொலைபேசியில் பேசினேன். நன்றாக இருப்பதாக கூறினார்ÕÕ என்றார் தர்மேந்திரா.




 

வில்லனாக நடிக்க தயங்குவது ஏன்?

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லனாக நடிக்க தயங்குவது ஏன்?

5/23/2011 2:35:30 PM

கிஷோர், சில படங்களில் வில்லனாக நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அது உண்மைதான். தவறான குணங்களை கொண்ட கேரக்டர் ரோல்களில் நடிக்க தயக்கம் இல்லை.  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று கொடூரமான வில்லனாக நடிக்கத் தயக்கம். அப்படி வந்த வாய்ப்புகளைத்தான் மறுத்தேன். காரணம் நான் கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். பெங்களூர் உள்ளிட்ட  நகரங்களில் தமிழ்ப் படங்கள் ஓடுகிறது. அதை கன்னடத்து மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். நான் தமிழ் படத்தில் கொடூர வில்லனாக நடித்தால் கன்னடத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதனால் தவிர்க்கிறேன்.




 

சூர்யாவுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம்!

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூர்யாவுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம்!

5/23/2011 2:38:40 PM

ஸ்ருதி ஹாசன் கூறியது: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் '7ஆம் அறிவு' ஷூட்டிங்கில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவம்.  சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறேன் என்று தெரிந்ததும் சந்தோஷப்பட்டேன். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது அருகில் இருந்து அவரது நடிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவொரு பாடமாகவே எனக்கிருந்தது. 'அடுத்த கமல்Õ என்று சூர்யாவை குறிப்பிடுகிறார்களே என்கிறார்கள். இதுபோல் கூறும்போது எனது அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். சித்தார்த்துடன் உங்களுக்கு என்ன உறவு? என கேட்கிறார்கள். ஏற்கனவே இதற்கு பதில் அளித்திருக்கிறேன். என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. மற்றவர்கள் என்னுடைய வேலையை பற்றி மட்டும் பேசுவதே எனக்கு சந்தோஷம். மணிக்கணக்கில் அதைப்பற்றி பேசுவேன். ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி நான் ஏன் பேச வேண்டும். அதில் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை.




 

நடிக்க தெரியாத புதுமுகங்கள், இயக்குனர் தாக்கு!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிக்க தெரியாத புதுமுகங்கள், இயக்குனர் தாக்கு!

5/23/2011 2:43:44 PM

'உதயன்' பட இயக்குனர் சாப்ளின் கூறியது: கரு. பழனியப்பன், பாண்டியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். 'உதயன்' படம் வித்தியாசமான கதை அல்ல. ஒரு புது இயக்குனருக்கு வித்தியாசமான முயற்சி என்பது ரிஸ்க். இதனாலேயே கமர்சியல் அம்சங்களுடன் கூடிய லவ் சப்ஜெக்ட்டை இயக்குகிறேன். அருள்நிதி ஹீரோ. ப்ரணிதா ஹீரோயின். இப்படத்துக்கு ஹீரோயின் தேர்வின்போது கவனமாக இருந்தேன். பல புதுமுகங்களை ஹீரோயின் வேடத்துக்காக தேர்வு நடத்தியபோது செயற்கைத்தனமாக நடித்துக் காட்டினார்கள். ஹீரோயின் அழகாக மட்டும் இருந்து நடிக்க தெரியாவிட்டால் வேஸ்ட். அதனாலேயே பலரை நிராகரிக்க வேண்டியதானது. ஏற்கனவே தெலுங்கில் 'பாவா' கன்னடத்தில் 'போக்கிரி' படங்களில் நடித்த ப்ரணிதாவின் நடிப்பு யதார்த்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். மனதை கவர்ந்த பெண்ணை பார்க்கும் ஹீரோ தனது காதலை சொல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று முதல் சந்திப்பிலேயே கேட்கிறார். அதுவே அவர்களுக்குள் காதலை உருவாக்குகிறது. இந்த காதலுக்கு ரவுடி கூட்டத்திடமிருந்து எதிர்ப்பு வருகிறது. அது ஏன் என்பதுதான் கதை.




 

சிம்புவிடம் மிஷ்கின் சொன்ன ஒரு வரி கதை!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவிடம் மிஷ்கின் சொன்ன ஒரு வரி கதை!

5/23/2011 2:52:22 PM

யுத்தம் செய் படத்திற்கு பிறகு கதை விவாதத்தில் இருக்கும் மிஷ்கின்இ சிம்புவை வைத்து படம் ஒன்று இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சிம்புவை சந்தித்த மிஷ்கின், அவரிடம் ஒரு வரி கதையை மட்டும் கூறியிருக்கிறாராம். கதையும் சிம்புவுக்கு பிடித்து போனதால், நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.




 

'சன்'னை விட்டு கைநழுவிப் போனது அவன் இவன்!

Tags:


சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்த பாலாவின் அவன் இவன் படத்தை இப்போது அதன் தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு திரையுலகில் காட்சிகள் படுவேகமாக மாறிக் கொண்டே உள்ளன.

கருணாநிதி குடும்ப வாரிசுகளின் சன் பிக்சர்ஸ், ரெட்ஜெயன்ட், கிளவுட் நைன் போன்ற கம்பெனிகளுக்கு விற்றது போக மீதம் உள்ள படங்கள்தான் மற்றவர்களுக்கு என்ற நிலையில் தமிழ் சினிமாக்காரர்கள் போன மாதம் வரை இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.

கருணாநிதி குடும்பத்தாரிடம் கியூ வரிசையில் காத்திருந்து படங்களை விற்று வந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது ஜகா வாங்க ஆரம்பித்துள்ளனர். இனிமேல் இந்த கம்பெனிகளிடம் படங்களை விற்க வேண்டிய கட்டாயமோ, நெருக்கடியோ, நிர்ப்பந்தமோ, மிரட்டலோ இல்லை என்பதால் படு சுதந்திரமாக பழைய பாணியில் படங்களை விற்க, விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

வழக்கமான விநியோகஸ்தர்கள் மூலம் அல்லது சொந்தமாக ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் இனியும் இவர்கள் மூலம் படங்களை வெளியிட்டால் அது படத்துக்கே எதிராக முடிந்துவிடும் என்ற பயமும் தயாரிப்பாளர்களிடம் எழுந்துள்ளதாம்.

ஏற்கெனவே உதயநிதி அழகிரி வசமிருந்த மாவீரன் படத்தை, இப்போது அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸே வெளியிடுகிறது.

அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் படம். இதனை ஏஜிஎஸ் மூவீஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸுக்கு படத்தை விற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே தனது எங்கேயும் காதல் படத்தையும் சன்னுக்குதான் இவர் விற்றிருந்தார்.

இந்த நிலையில், இப்போது படத்தை தானே சொந்தமாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளார் கல்பாத்தி அகோரம்.
 

'தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தாவிட்டால் போராட்டம் தொடரும்!'

Tags:


சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உடனடியாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன், செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன் ஆகியோர் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தலைமையிலான குழு, கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென சில நாள்களாக வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் அக்குழுவின் செயற்குழு வெள்ளிக்கிழமை (மே 20) அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. தயாரிப்பாளர் கேயார் தலைமையில் சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில், 'தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். திடீர் தலைவராக வலம் வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் பலரை மிரட்டி வருகிறார். அவரது போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந் நிலையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உட்பட்டு நடப்பேன், நான் தாற்காலிக தலைவர் மட்டுமே, என்றார்.
 

ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!

Tags:


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும் இன்று சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன் உள்பட 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார். "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் அன்பிற்கினியவன், மனிதருள் பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்," என்று அறிவித்தார்.

உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

தமிழ் திரையுலகில் குறிப்பாக இயக்குநர்கள் சார்பில் இதுபோன்ற பிரார்த்தனை நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.
 

சித்தார்த்துடன் குடித்தனம்: 'அது என் தனிப்பட்ட வாழ்க்கை' - ஸ்ருதி ஹாஸன்

Tags:


சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை, என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி.

இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.

அதற்கு அவர், "மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம்," என்றார்.
 

கிசு கிசு - காஜலான நாயகி மீது வாரிசு நடிகை கோபம்

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மகேசான டோலிவுட் நடிகர் படத்துல அவருக்கு ஜோடியா உலக ஹீரோவோட வாரிசு நடிக்க இருந்தாராம்... இருந்தாராம்... திடீர்னு டிஸ்கஷன்ல வாரிசு நடிகை பொருத்தமா இருக்க மாட்டாருன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்... பண்ணிட்டாங்களாம்... அந்த வாய்ப்பு தங்களுக்கு வரும்ன்னு பெரிய ஹீரோயினுங்க எதிர்பார்த்தப்போ காஜல் நடிகைக்கு யோகம் அடிச்சிருக்காம். வாரிசு நடிகை மாற்றத்துல காஜலானவருக்கு பங்கு இருக்குன்னு சொல்றாங்களாம். இதனால காஜலான நடிகை மேல வாரிசு நடிகை கோபமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

குழந்தை பிறந்த பிறகும் வெயிட் போடக்கூடாதுன்னு நிறைய நடிகைங்க டயட்ல இருக்கிறாங்க. மீனு நடிகை மட்டும் அதுக்கு எதிர்மாறா இருக்காராம்... இருக்காராம்... இதனால அக்கா, அண்ணி வேஷத்துக்கும் அவரை கூப்பிட கோடம்பாக்கம் தயங்குதாம்... தயங்குதாம்... இதனால நடிகை கவலையில இருக்காராம். இனி டயட்டை கடைப்பிடிக்கவும் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

கவுதம இயக்கம் தயாரிச்ச ஹிட்டான படத்தை வாங்க வினியோகஸ்தருங்க பின்வாங்குறாங்களாம்... பின்வாங்குறாங்களாம்... ஹீரோ வேல்யூ இல்லாததால இயக்கம் சொல்ற ரேட்டுல படத்தை வாங்க மறுக்கிறாங்களாம். இதனால பட யூனிட் சோகத்துல இருக்காம்... இருக்காம்...
 

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி வார்டுக்கு திரும்பினார் ரஜினி-ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்த்தார்

Tags:


சென்னை: நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை வேகமாக முன்னேறிவருகிறது. வைரஸ் தொற்று அகற்றப்பட்டுள்ளது. சுவாசம் சீரடைந்ததால், சிறுநீரகங்களின் செயல்பாடும் வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினமே அவரது உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பினாலும், தொடர்ந்து விவிஐபி பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக மேலும் ஒரு நாள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருந்தனர்.

இப்போது அவருக்கு நோய்த் தொற்று அபாயம் நீங்கியபடியால், அவர் முன்பு தங்கியிருந்த சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

"ரஜினி உற்சாகமாக உள்ளார். இன்று மாலை சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஆர்வத்துடன் டிவியில் பார்த்தார் ரஜினி. அவருடன் அவரது குடும்பத்தினர் உள்ளனர்," என ராமச்சந்திரா மருத்துவமனை சிறப்பு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பார்வையாளர்களுக்கு மேலும் சில நாட்கள் அனுமதியில்லை என்றும், அவருக்கு நோய்த் தொற்று அபாயம் இனி இல்லை என மருத்துவ நிபுணர் குழு உறுதிசெய்த பிறகே பார்வையாளர்கள் வரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 தினங்களாக ஐசியுவில் இருந்தார் ரஜினி. எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

மாண்டலின் ராஜேசுடன் திருமணம்: மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு குட்பை!

Tags:


மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக உள்ளதால், இனி சினிமாவில் நடிப்பதில்லை என நடிகை மீரா ஜாஸ்மின் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் இளைஞன்.

மீரா ஜாஸ்மினும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். படங்களில் நடித்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

ஆனால் தற்போது அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் நடந்த மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் 'அம்மா'வின் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இனி யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. காரணம் இனி சினிமாவில் நடிப்பதாகவும் இல்லை," என்றார்.
 

லண்டனில் சோனாக்ஷியுடன் டூயட் பாடும் கமல்!

Tags:


விஸ்வரூபம் பட ஷூட்டிங்குக்கு கனடா விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், லண்டன் போகிறது செல்வராகவனின் குழு.

கமல் நடிக்க செல்வராகவன் இயக்கும் படம் விஸ்வரூபம். இந்தப் படத்துக்காக முதலில் அமெரிக்கா செல்வதாக இருந்தனர். ஆனால் அமெரிக்க விசா கிடைக்கவில்லை.

இதனால் கனடா செல்லப் போவதாகவும், அதற்கான விசா கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் செல்வராகவன்.

ஆனால் இப்போது கனடா விசாவும் கிடைக்கவில்லையாம். எனவே லண்டன் போகிறது செல்வராகவனின் விஸ்வரூபம் குழு. இங்கு 35 நாட்கள் கமல் - சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கும் டூயட் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்கள்.

மும்பையில் தன்னைப் பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது ஒரு கிசுகிசுவை வெளியிட்டு வருவதால், தற்காலிகமாக லண்டனில் நிம்மதியாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

உடனிருப்பது கமலாச்சே... இப்போதும் பரபர வதந்திகளுக்குப் பஞ்சமிருக்காதே!
 

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Tags:


தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.

அடடா ஒரு 'ஃப்ளோல' சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.

ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.

நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.