சென்னை: கோச்சடையான் படத்தை தீபாவளி அல்லது டிசம்பர் 12-ல் வெளியிடாமல், பொங்கலுக்கே வெளியிடலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோச்சடையான்' ட்ரெய்லரை யூ டியூப்பில் இருபத்தோரு லட்சம் மக்கள் பார்த்ததால் மகிழ்ச்சியில் உள்ள சவுந்தர்யா, படத்தை முடிந்த வரை சீக்கிரமே வெளியிட முடிவு செய்து ரஜினியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் ரஜினி அதை ஒப்புக் கொள்ளவில்லையாம்.
காரணம் தீபாவளிக்கு என சில படங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கமல் வேறு தன் விஸ்வரூபம் 2-ஐ தீபாவளிக்கு வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம்.
எனவே கோச்சடையானை தீபாவளிக்கும் வேண்டாம், தன் பிறந்த நாளன்றும் வெளியிட வேண்டாம். பொங்கலுக்கு வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினாராம்.
அக்டோபரில் ஆடியோ ரிலீஸ், நவம்பர் அல்லது டிசம்பரில் மேலும் ஒரு ட்ரைலர், ஜனவரியில் படம் என திட்டமிட்டுக் கொள்ளச் சொன்னாராம் ரஜினி.
படத்தை மெருகேற்ற வேண்டிய பணி இன்னும் கொஞ்சம் இருப்பதால் அப்பாவின் வார்த்தையை அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம் சௌந்தர்யா.