ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் க்ளீன் யு

எட்டு ஆண்டுகள் கழித்து ஜோதிகா நடிக்கும் ‘36 வயதினிலே' படத்துக்கு எந்த கட்டும் இல்லாமல் யு சான்று அளித்துள்ளது தணிக்கைக் குழு.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் ரீமேக்தான் இந்த படம். மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூவ்ஸ் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார்.

ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் க்ளீன் யு

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினர்.

ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் க்ளீன் யு

படம் விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவுக்கு சமீபத்தில் போட்டுக் காட்டினர்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு இடத்தில் கூட வசனத்தை மவுனிக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

அந்த மகிழ்ச்சியோடு வருகிற மே 15-ம் தேதி படத்தை வெளியிட நாள் குறித்துள்ளனர்.

 

விஷால் ரகசிய ஆலோசனைக் கூட்டம்... என்னதான் திட்டம்?

தமிழ் திரையுலகில் இப்போது பெரும்பாலானோரின் கண்கள் விஷாலின் நடவடிக்கைகள் மீதுதான்.

கடந்த இரு ஆண்டுகளாக நடிகர் சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அதற்காக அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார் நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி.

திடீரென்று சில வாரங்களுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தினரைக் கூட்டிய விஷால், மன்றத்தை பலப்படுத்த ஆலோசனை செய்தார்.

விஷால் ரகசிய ஆலோசனைக் கூட்டம்... என்னதான் திட்டம்?

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தன் ஆதரவு நடிகர்களை எல்லாம் அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். விஷால் வீட்டில் இக்கூட்டம் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நடிகர் சிவகுமார் விஷாலுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சமந்தாவிடம் வாயைக் கொடுத்து நொந்து நூடுல்ஸான ஹீரோ

ஹைதராபாத்: இந்த சமந்தா கிட்ட வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோமே என நடிகர் அல்லு அர்ஜுன் நொந்தாராம்.

தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. சமந்தா ஹீரோயினாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று தெலுங்கு திரை உலகினர் கூறி வந்தனர். ஆண்டவன் அருளால் தனது படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதாக சமந்தா தெரிவித்தார்.

சமந்தாவிடம் வாயைக் கொடுத்து நொந்து நூடுல்ஸான ஹீரோ

இந்நிலையில் தான் தெலுங்கு திரை உலகில் இருந்து அவரது கவனம் தமிழ் திரை உலகம் பக்கம் திரும்பியுள்ளது. சமந்தாவை குசும்புக்கார நடிகை என்று ஆந்திர திரை உலகினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் நடந்த தெலுங்கு பட விழாவில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் பேசிய ஹீரோ அல்லு அர்ஜுன் கூறுகையில், சமந்தா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட். அதிர்ஷ்டக்காரரான அவர் என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட சமந்தாவோ, கடந்த ஆண்டு என் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. அப்படி இருக்கையில் நானா அதிர்ஷ்டக்காரி என்று கேட்டு அவரை மடக்கியுள்ளார். வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் இப்படி சமந்தாவை பற்றி பேசி அசிங்கப்பட்டுவிட்டோமே என தலையில் அடித்துக் கொண்டாராம் அல்லு அர்ஜுன்.

 

ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன்: இதில் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தவர் யார்?

சென்னை: லட்சுமி மேனனும், ஸ்ரீதிவ்யாவும் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தாலும் தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவர் லட்சுமி மேனன் தானாம்.

ஆந்திராவில் இருந்து வந்த ஸ்ரீதிவ்யாவும், கேரளாவில் இருந்து வந்த லட்சுமி மேனனும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டனர். இருவரும் பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கின்றனர், குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வருகிறார்கள்.

ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன்: இதில் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தவர் யார்?

லட்சுமி மேனன் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸ்ரீதிவ்யாவும் ஹிட் நாயகியாகவே உள்ளார். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பது ஒரு வரம் என்றும், அது தனக்கு கிடைத்துள்ளது என்றும் ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார்.

லட்சுமி மேனன் பிளஸ் டூ தேர்வு எழுதச் சென்ற வேளையில் ஸ்ரீதிவ்யாவை தேடி பல பட வாய்ப்புகள் சென்றுள்ளன. என்ன தான் ஸ்ரீதிவ்யாவும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தவர் லட்சுமி மேனன் தானாம்.

ஏனென்றால் ஸ்ரீதிவ்யா சம்பளத்தில் கறாராக இருப்பதுடன், சிடுசிடுவென பேசுவாராம். ஆனால் லட்சுமியோ தயாரிப்பாளர்கள் நிலை அறிந்து சம்பளத்தை குறைத்துக் கொள்வதுடன் சாந்தமாக பேசுவாராம்.

 

இது ஆனந்தம் விளையாடும் வீடு... ”ஊருடன் கூடி வாழ” சொந்த ஊரில் வீடு கட்டும் ராஜகுமாரன் – தேவயானி!

சேலம்: உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வருவதாக நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரில் சினிமா நடிகை தேவயானியின் கணவரும், சினிமா இயக்குனருமான ராஜகுமாரனின் உறவினர் வீடு உள்ளது.

இது ஆனந்தம் விளையாடும் வீடு... ”ஊருடன் கூடி வாழ” சொந்த ஊரில் வீடு கட்டும் ராஜகுமாரன் – தேவயானி!

அங்கு வந்த ராஜகுமாரன், "நீ வருவாய் என..., விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட நான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதையை தந்துள்ளேன்.

ராதே பிலிம்ஸ், இனியா மியூசிக்கில் நான் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள "திருமதி தமிழ்" படத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பாடலாக உருவான "திருக்குறள் இடையழகி" பாடலும், "தமிழ் தமிழ்" பாடலும் இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் முதன்மை பாடலாக போடப்பட்டு மாணவ, மாணவிகள் நடனம் ஆடி வருகிறார்கள்.

"விண்ணுக்கும் மண்ணுக்கும்" படத்தில் வரும் காதல் கதையை போல நானும், நடிகை தேவயானியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது எங்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

நான் பல்வேறு மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்று வந்தாலும் சொந்த ஊர், மண்ணில் வந்து தங்கி இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி.

அதற்காக அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் என் சொந்த நிலத்தில் உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக புதிதாக வீடு கட்டியுள்ளேன். இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

 

காஞ்சனாவுக்கு 350 தியேட்டர்கள்‍.. மணிரத்னம் படத்துக்கு 250 அரங்குகள்!

நாளை வெளியாகும் ராகவா லாரன்சின் காஞ்சனா, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு தியேட்டர்கள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

காஞ்சனா 2-க்கு 350 அரங்குகளும், ஓ காதல் கண்மணிக்கு 250 அரங்குகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டு படங்களையுமே பிரபலமான நிறுவனங்கள் விநியோகிப்பதால், நல்ல திரையரங்குகளே கிடைத்துள்ளன.

காஞ்சனாவுக்கு 350 தியேட்டர்கள்‍.. மணிரத்னம் படத்துக்கு 250 அரங்குகள்!

காஞ்சனா 2-ஐ தேனாண்டாள் நிறுவனமும், ஓ காதல் கண்மணியை ஸ்டுடியோ கிரீனும் வெளியிடுகின்றன. ஆனால் மணிரத்னம் படம் என்பதால் ஏ மற்றும் பி சென்டர்களில் மட்டும் அதிக அரங்குகளில் வெளியிட்டால் போதும் என ஸ்டுடியோ கிரீன் முடிவெடுத்துள்ளது.

கிராமப்புறம் சார்ந்த திரையரங்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளது காஞ்சனா 2-க்கு.

 

இது சின்னத்திரை திரைமறைவுகள்... கம்முன்னு படிங்க!....

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி கிசு கிசு போட்டாத்தான் படிப்பீங்களா? சினிமாவைப் போலவே சின்னத்திரையும் பரந்து விரிந்து இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எங்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்... என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதிய பகுதியாக வருகிறது கம்முன்னு படிங்க...

சித்தீ.... நிஜமா?

சினிமா நட்சத்திரங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்புவது பிடிக்காமல் தான் உச்ச நடிகரும்... உலக நாயகன் நடிகரும் இந்த வருட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.

இது ஒருபுறம் இருக்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யமான தொகுப்பாளினிக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லையாம் சித்தி.

நிகழ்ச்சியை சரியாக செய்யவில்லை என்று சித்தி புகார் வாசிக்க... தொகுப்பாளினியோ, தனக்கு சரியான முறையில் புரோகிராம் சார்ட் கொடுக்கவில்லை என்று சித்தி மீது புகார் வாசிக்கிறார்.

இதில் எது நிஜம்?... யாராவது சொல்லுங்களேன்!

நம்பரும் திருமணமும்

விலை பேசப்படும் நம்பர் நடிகையின் திருமணம் அந்த தொலைக்காட்சி சேனலில் நம்பர் நடிகையின் திருமணத்தை எக்ஸ்க்ளூசிவ் ஆக கவர் பண்ண பேச்சு நடக்கிறதாம். இப்படித்தான் சினேகமான நடிகையின் திருமணத்தை வெற்றிச்சேனல் பதிவு பண்ணி ஒளிபரப்பியது. அதன் காரணமாகவே பல பிரபலங்கள் இந்த சினேக நடிகையின் திருமணத்திற்கு போகாமல் தவிர்த்தனர். தற்போது மூனுஷா நடிகையின் திருமணத்தையும் எக்ஸ்க்ளூசிவ் ஆக ஒளிபரப்ப திட்டமிடுகிறதாம். யார் யார் போகாமல் எஸ்கேப் ஆகப்போகிறார்களோ தெரியலையே?

அத அட விடுங்க... முதல்ல நம்பர் என்னைக்கு கல்யாணம் பண்ணப்போறங்கன்னு தேதி தெரியுமா? அதெல்லாம் சொல்லமாட்டோம் என்கிறது கோடம்பாக்கத்து பச்சி...

நாட்டாம ஆள மாத்து....

எதைச் சொன்னாலும் உண்மை என்று கூவும் நடிகை தற்போது மூன்றாவது படத்தை இயக்கி நடிப்பதால் நிகழ்ச்சியை சரியாக நடத்தாமல் இழுத்தடிக்கிறாம். இதனால் தொகுப்பாளினியை மாற்ற முடிவெடுத்துள்ளனராம்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை நடத்திய வணணணணக்கம் தொகுப்பாளினி பண்ணிய இம்சையினால்தான் இவரை அழைத்து வந்தனர். இப்போது புதிதாக வேறு ஆளை எங்கே போய் தேடுவது யோசிக்கின்றதாம் சேனல் தரப்பு....

என்னாம்மா இப்படி பண்றீங்களேம்மா?

காம்பயர் பண்ணு... காச அள்ளு

ஏப்பா வேலை போயுருமே?....

யாருக்கு தெரியும் போக வாய்ப்பு இருக்கு...

வேற என்ன செய்ய?

டிவியில காம்பயர் பண்ணி பொழச்சுக்கலாம்... இது பிரபல படத்தின் வசனம். இந்த வசனம் பேசிய இருவருமே டிவியில் தொகுப்பாளர்கள் வேலை செய்து சினிமாவில் பிரபலமானவர்கள்தான்.

இன்றைக்கு சேனல்களில் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகளாக வலம் வருபவர்கள் சினிமாவிற்கு நடிக்கச் சென்றுவிடுகின்றனர். எனவே தொகுப்பாளர் பணிக்கு போட்டி போட்டுக்கொண்டு அப்ளை செய்கின்றனர். எனவே முன்னணி சேனல்களில் தொகுப்பாளர்களாக வாய்ப்பு பெற்றுத்தர பல லட்சங்கள் வரை இடைத்தரகர்களால் பேரம் பேசப்படுகிறதாம்.