இந்த காதல் முறிவுக்கு காரணம் நயனம்-விரல் நடிகரின் டீலா?

இந்த காதல் முறிவுக்கு காரணம் நயனம்-விரல் நடிகரின் டீலா?

சென்னை: புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் பிரிந்து செல்ல ஒரு வேளை அந்த டீல் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

விரல் வித்தை நடிகர் என்றைக்கு தனது முன்னாள் காதலியான நயன நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க துவங்கினாரோ அன்றைக்கே அவருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டது.

ஆனால் அவர் யாருடன் நடித்தாலும் அது தொழில் அதை எல்லாம் தான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று புஸு புஸு நடிகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையே காதலும் இல்லை ஒன்றும் இல்லை தான் சிங்கிள் தான் என்று நடிகர் அறிவித்தார்.

முன்னதாக அவருடன் நடிக்க நயனம் போட்ட கன்டிஷனே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தானாம். அதற்கு நடிகரும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். இந்நிலையில் புஸு புஸு நடிகையுடனான காதல் முறிவுக்கு ஒரு வேளை நயனம் மற்றும் நடிகருக்கு இடையேயான திருணம டீல் தான் காரணமோ என்று பலர் கிசுகிசுக்கின்றனர்.

 

நலமுடன் இருக்கும் சமுத்திரக்கனி பற்றி திடீர் வதந்தி!

சென்னை: முன்னணி இயக்குநர் சமுத்திரக் கனி குறித்து இன்று சமூக வலைத் தளங்களில் திடீர் வதந்தி கிளம்பியது.

ஆனால் அவை பொய் என்பது சிறிது நேரத்தில் அம்பலமானது. சமுத்திரக் கனி நலமுடன் உள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடித்த நிமிர்ந்து நில் படம் இன்று வெளியாவதாக இருந்தது.

நலமுடன் இருக்கும் சமுத்திரக்கனி பற்றி திடீர் வதந்தி!

ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக இந்தப் படம் தள்ளிப் போய்விட்டது. பெரிய படம் என்பதால், இந்த தீடீர் ரத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 கோடி ரூபாய் நிதிப் பிரச்சினை படத்தை முடக்கிவிட்ட தகவல் இப்போது கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி குறித்து சமூக வலைத் தலங்களில் சிலர் வதந்தி பரப்பினர்.

உடனடியாக இதுகுறித்து விசாரித்தபோது, சமுத்திரக்கனி தன் அலுவலகத்தில் நண்பர்கள் சுப்பிரமணிய சிவா, கரு பழனியப்பன் போன்றவர்களுடன் படம் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை அவரது அலுவலகத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த வதந்தியால் சினிமா ஆர்வலர்கள் ஒரு கணம் ஆடிப்போய்விட்டனர். தேவையற்ற வதந்திகளைப் பரப்புமுன் ஒரு நிமிடம் பொறுமை காத்தால், நல்ல படைப்பாளிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம் அல்லவா!

 

ரஜினியிடம் ஆசி பெற்ற தெலுங்கு நடிகர் ராஜா - அம்ரிதா!

சென்னை: தெலுங்கு நடிகர் ராஜா, தன் திருமணத்தையொட்டி ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றார்.

தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா. ஹிட் படங்களான ஆனந்த், வெண்ணிலா, ஆ நலுகுறு உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ராஜா.

ரஜினியிடம் ஆசி பெற்ற தெலுங்கு நடிகர் ராஜா - அம்ரிதா!

தமிழில் கண்ணா, ஜெகன் மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரமௌலி -உமா சந்திரமௌலி ஆகியோரின் அண்ணன் மகன் இவர்.

ரஜினியிடம் ஆசி பெற்ற தெலுங்கு நடிகர் ராஜா - அம்ரிதா!

ராஜாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரெடெரிக் வின்சென்ட்- கமலினி வின்சென்ட் அவர்களின் மகளான அம்ரிதாவுக்கும் மார்ச் 3ஆம் தேதி சென்னையில் ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து பெற்றோர்களால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெறுகிறது.

மணமகளின் தந்தையான பிரெடெரிக் வின்சென்ட் தனது நீண்டகால நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திருமணத்திற்கு அழைப்பதற்காக போயஸ் கார்டனில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். மணமக்களை ஆசிர்வதித்ததோடு திருமணத்திற்கும் வந்து வாழ்த்துவதாக உறுதியளித்தார் சூப்பர் ஸ்டார்..

ரஜினியிடம் ஆசி பெற்ற தெலுங்கு நடிகர் ராஜா - அம்ரிதா!

தன் நண்பரை ஆரத் தழுவி தனது பழைய நினைவுகளையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார். அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நலம் விசாரித்து நெகிழ வைத்தார் சூப்பர் ஸ்டார்.

 

தள்ளிப் போடத் திட்டமில்லை... ஏப்ரல் 11-ல் நான் சிகப்பு மனிதன்

விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தை ஏப்ரல் 11-ம் தேதி வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

விஷால் தனது சொந்தப் பட நிறுவனம் சார்பில், யுடிவியுடன் இணைந்து தயாரிக்கும் படம் நான் சிகப்பு மனிதன்.

திரு இயக்க, விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

தள்ளிப் போடத் திட்டமில்லை... ஏப்ரல் 11-ல் நான் சிகப்பு மனிதன்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. கூடவே போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருகின்றன. படத்தின் இசை வெளியீடு வரும் மார்ச் 13-ம் தேதி நடக்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இதற்கிடையில், தேர்தல் அறிவிப்பு காரணமாக படத்தை ஒரு மாதம் தள்ளிப் போட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

ஏற்கெனவே வெளியாகத் தயாராக இருந்த சில பெரிய படங்களும் தள்ளிப் போடப்படுவதால், இந்தப் படமும் அதே பாணியில் தள்ளிப் போகும் என்றனர்.

ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் நான் சிகப்பு மனிதன் வெளியாவது உறுதி என நான் சிகப்பு மனிதன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ், தெலுங்கில் 50 படங்கள் தயாரித்த மதனகோபால் மரணம்

சென்னை: பிரபல தமிழ்ப் படத் தயாரிப்பாளர் பி நந்தகோபால் நாயுடு இன்று சென்னையில் காலமானார்.

ஆடிப் பெருக்கு, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, புருஷ லட்சணம், புதுமாப்பிள்ளை, பத்தினி போன்ற படங்களைத் தயாரித்தவர் நந்தகோபால் நாயுடு. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு படங்களை வாங்கி விற்பதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 91 வயதான மதனகோபால் நாயுடு, சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

இன்று காலை உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவர் உயிர் பிரிந்தது.

மதனகோபால் நாயுடுவுக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

மேற்கு தாம்பரம் முத்துலிங்க செட்டி தெருவில் உள்ள வீட்டில் திரையுலகினர் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாலையில் தாம்பரம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு: மகேந்திரன், சுரேந்திரன் (மகன்கள்) - 9600014023, 9003494973.

 

வாலு பட பாடல்கள் இரவோடு இரவாக இன்டர்நெட்டில் லீக்: செய்தது யாரோ?

சென்னை: சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு பட பாடல்கள் இரவோடு இரவாக இன்டர்நெட்டில் லீக்: செய்தது யாரோ?  

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக வாலு படத்தின் 5 பாடல்களும் இணையதளத்தில் கசிந்துள்ளது. பாடல்களின் தரம் நன்றாக இருப்பதால் படக்குழுவைச் சேர்ந்த யாரோ இந்த வேலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்த பிரியாணி படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையதளத்தில் கசிந்தது.

ஹன்சிகாவின் பட பாடல்கள் அடுத்தடுத்து கசிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!

இன்று வெளியாகவிருந்த நிமிர்ந்து நில் படம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில், சமுத்திரக் கனி இயக்கத்தில் உருவான படம் நிமிர்ந்து நில். கே எஸ் சீனிவாசன் தனது வாசன் விசுவல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தியேட்டர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!    

இந்த நிலையில் படம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ஜெயம் ரவிக்கு சம்பள பாக்கி

ஜெயம் ரவிக்கு இன்னும் சம்பளம் செட்டில் செய்ய வேண்டியிருப்பதால், அதைத் தரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என அவர் கடிதம் கொடுத்துவிட்டதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த படம் நிமிர்ந்து நில். தமிழ் சினிமா இப்போதுள்ள மோசமான சூழலில் இதுபோல படங்கள் கடைசி நேரத்தில் ரத்தாவது அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

 

'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்

சென்னை: உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார்

சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்

சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார்.

காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெள்ளிங்கிரி மலையில் மாயமான ஆர்ட் டைரக்டர்… 7 வது நாளாக தேடுதல் வேட்டை

கோவை: மகாசிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி மலையில் மாயமான திரைப்பட ஆர்ட் டைரக்டரை தேடும் பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஆர்ட் டைரக்டராக உள்ளவர் வினோத் என்ற வினோ மிர்தார்த் (வயது 35). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை கே.கே.நகரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.

மதுபானக்கடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். மேலும் சில படங்களில் பணியாற்றி வருகிறார்.

மகா சிவராத்திரிக்காக கடந்த கோவை பூண்டி அருகே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தார். மலை இறங்கியபோது 6-வது மலையில் பாதை மாறிவிட்டதாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. நண்பர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆதிவாசி மக்களின் உதவியுடன் மிர்தார்த்தை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. செல்போன் இணைப்பும் சுவிட்ச் ஆப் என்று தெரிவிக்கிறது.

வினோத் மிர்தார்த்தின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கோவை மாவட்ட எஸ்.பி. சுதாகரிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் வினோத் மிர்தார்த்தின் நண்பர்கள், மலைவாழ் மக்கள், போலீசார் மற்றும் வனத்துறையினர் அடங்கிய 70 பேர் கொண்ட குழுவினர் மலைப்பகுதியில் வினோத் மிர்தார்த்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள எல்லைப்பகுதியான மன்னார்காடு, சோலையூர் உள்ளிட்ட பகுதியிலும் தேடுதல் பணி தொடங்கியது. இதுகுறித்து கேரள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் மிர்தார்த் மாயமாகி இன்றுடன் 7 நாள் ஆகிறது. வழிதெரியாமல் சென்ற அவர் பசியால் எங்காவது மயங்கி கிடக்கிறாரா? அல்லது வனவிலங்குகள் தாக்குதலில் காயம் அடைந்துள்ளாரா? என்று தேடி வருகிறார்கள்.