இன்னும் அந்த க்ளப்ல சேரலையே..! - ப்ரியா ஆனந்த் ஏக்கம்

Priya Aanand Is Not Rs 1 Cr Club

ரூ ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் க்ளப்பில் நான் இன்னும் சேரவில்லை என ஏக்கத்துடன் கூறியுள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த்.

தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராசியான நாயகியாகிவிட்டார்.

எதிர்நீச்சல் படம் ஹிட்டானதால் அதில் நாயகியாக நடித்த பிரியா ஆனந்த் சம்பளத்தை ரூ.1 கோடி உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியாகின.

புதுப்படங்களுக்கு கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ரூ.1 கோடி வைத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம்.

இப்போதைக்கு நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, அமலா பால் மற்றும் அஞ்சலி ஆகியோர் 1 கோடி சம்பளம் வாங்குவோர் க்ளப்பில் உள்ளனர்.

இந்த நடிகைகள் பட்டியலில் தற்போது பிரியா ஆனந்தும் சேர்ந்துவிட்டார் என்றனர். ஒரே ஒரு படம் ஓடியதற்கே இப்படியா என அவர் மீது புகார்ப் பட்டியல் வாசிக்கத் தொடங்கினர் சில தயாரிப்பாளர்கள்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், "திறமைக்கேற்பத்தான் யாரும் சம்பளம் தருவார்கள். அதுவும் சினிமாவில் ஆதாயமில்லாமல் யாரும் செயல்பட மாட்டார்கள். இப்போது நான் சில பெரிய படங்களில் நடித்து வருகிறேன். அதற்கேற்ப சம்பளம் வாங்குகிறேன். ஆனால் இன்னும் ரூ 1 கோடி வாங்கும் ரேஞ்சுக்குப் போகவில்லை. அந்தக் க்ளப்பில் சேர இன்னும் சிறிது நாளாகும் என நம்புகிறேன்," என்றார்.

வேறென்ன.. அடுத்த படம் ஓடிச்சின்னா கொடுத்துடப் போறாங்க!

 

ரஜினி பற்றி வதந்தி: அந்த ட்விட்டரை நான் அனுப்பவே இல்லை! - விடிவி கணேஷ்

Vtv Ganesh Denies Tweet On Rajini

ரஜினி உடல் நிலை குறித்து தன் பெயரில் வெளியான ட்வீட் பொய்யானது, இந்த வேலையைச் செய்தவர்கள் மீது விரைவில் போலீசில் புகார் செய்வேன் என்று நடிகர் விடிவி கணேஷ் கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று மாலை இவரது பெயரில் வெளியான ட்வீட்டில், "ரஜினிக்கு மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் கவலைக்குள்ளாகி, பரபரப்போடு விசாரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த ட்வீட்டை தான் அனுப்பவில்லை என்றும், தன் பெயரைப் பயன்படுத்தி சிலர் இந்த மோசடியைச் செய்துள்ளனர் என்றும் அறிக்கைவிட்டார் விடிவி கணேஷ். தான் ட்விட்டரில் இல்லவே இல்லை என்றும் கூறினார்.

ஆனால் விடிவி கணேஷ் என்ற பெயரில் இயங்கும் இந்த கணக்கு கடந்த ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் உள்ளது. சிம்பு போன்றவர்கள் அதைத் தொடர்வது தெரிய வந்துள்ளது.

ஆனால், தொடர்ந்து மறுத்து வரும் கணேஷ், விரைவில் சைபர் க்ரைம் பிரிவில் இதுகுறித்து புகார் தரவிருப்பதாகக் கூறியுள்ளார்.

 

லட்சுமிமேனன்... சினிமாவிலும் பாஸ்.. எஸ்எஸ்எல்சி பரீட்சையிலும் பாஸ்!!

Lakshmi Menon Passed Sslc   

நடிகை லட்சுமி மேனன் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சுந்தரபாண்டியன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். பின்னர் கும்கி, இப்போது வெளியாகியுள்ள குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கைவசம் மேலும் ஆறு படங்களை வைத்துள்ளார்.

லட்சுமி மேனன் நடிக்க வந்தபோது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த ஆண்டு அவர் பத்தாம் வகுப்புக்கு வீட்டிலிருந்து படித்தார்.

மஞ்சப்பை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன், படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்த ஊரான கொச்சிக்குப் போய் ஒரு மாதம் படித்து தேர்வு எழுதினார்.

இந்தத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார் லட்சுமி மேனன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ரொம்ப லக்கி. சினிமாவில் அதிர்ஷ்டம் இருந்தது, நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றன. அந்த அதிர்ஷ்டம் எனக்கு படிப்பிலும் இருக்கிறது. நான் சாதாரணமாகத்தான் படித்தேன். சுமாராக எழுதினேன். நல்ல மார்க் வந்திருக்கிறது. மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

 

குளுகுளு நாட்கள் - இளமை ததும்பும் புதிய படம்!

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு குளுகுளு நாட்கள் என தலைப்பிட்டுள்ளனர்.

காதர்ஹாசன் இயக்கும் இந்தப் படம் கல்லூரி காதலை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் காதர்ஹாஸன் கூறுகையில், "காதலைப் பொருத்தவரை ஆண்களுக்கு ஜாலியாக அல்லது விளையாட்டாகக் கூட இருக்கலாம். பெண்களுக்கு அது நேர் எதிர். சாமான்யமாக ஒருத்தனைக் காதலித்துவிட மாட்டார்கள். அப்படி காதலித்துவிட்டால், அதில் தீவிரமாக இருப்பார்கள். காதலை உயிர் மாதிரி பார்ப்பார்கள்.

kulu kulu naatkal on college campus

இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பசங்க ஒரு பெண்ணை காதலிக்கும் போது கூட, வளைவு நெளிவுகளுடன் இன்னொருத்தியை பார்த்துவிட்டால் ட்ரை பண்ணலாமான்னு நினைப்பார்கள். ஆனால் பெண்கள் ஒருத்தனை காதலித்துவிட்டால் அதன்பிறகு எவ்வளவு பெரிய மன்மதன் வந்து நின்றாலும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். அந்தமாதிரி ஒரு கருவை மையப்படுத்தி நகர்வதுதான் குளு குளு நாட்கள்," என்றார்.

ஸ்ரீஜித் விஜய், ஹ்ரிஷ், ஷாஃபி, அர்ஜூன், மாளவிகா, சுபிக்ஷா, தீபா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் அறிமுகமாகின்றனர்.

எம். எஸ். பாஸ்கர், யுவராணி, டி பி. கஜேந்திரன் ஆகிய அனுபவஸ்தர்களும் உண்டு.

போக்கிரி படப் புகழ் வசனகர்த்தா வி. பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். கதை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் காதர்ஹாசன். சென்னை மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

 

கணவன் ஆஞ்சநேயலுவைப் பிரிந்தார் அனன்யா?

Ananya Separates From Husband Anjan

நடிகை அனன்யா தன் கணவர் ஆஞ்சநேயலுவைப் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன், எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். அனன்யாவுக்கும் திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயலுவுக்கும் 2012-ல் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பிறகு ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் தெரியவர அனன்யாவின் பெற்றோர் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி அனன்யா திருப்பதியில் ஆஞ்சநேயலுவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

இதுகுறித்து ஒரு படப்பிடிப்பில் அனன்யாவிடம் கேட்டபோது, "அதெல்லாம் என் சொந்த விஷயங்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பத்திரிகைகளிடம் சொல்ல முடியாது. நான் நடிக்கும் படங்கள் பற்றிக் கேளுங்கள் சொல்கிறேன்," என்றார்.

 

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ தென்னாப்பிரிக்காவில் இசை நிகழ்ச்சி - சித்ரா, மனோ பங்கேற்பு!

Chitra Mano Participate South Africa Concert

உலகத் தமிழர்களை உற்சாகமாக வைத்திருப்பதில் எப்போதும் குறை வைத்ததில்லை தமிழ் சினிமாவும் அதை உருவாக்குகிற கலைஞர்களும். அதுவும் காற்றில் மிதந்து இதயத்தில் கலந்த இனிய பாடல்களை தமிழர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிப்போய் லைவ் ஷோ செய்யும் இசைக்கலைஞர்களுக்கு எப்போதும் பேராதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் லோகு இன்னிசை கீதம் வழங்கப்போகும் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக.

எதிர்வரும் ஜுன் 1 ந் தேதி தென்னாப்பிரிக்காவில் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சுமார் இருபதாயிரம் தமிழர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் செரண்டிபிட்டி குழுவினர் இதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.

2001 ல் துவங்கப்பட்டு இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள்.

பாடகி சின்னக்குயில் சித்ரா, எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி புகழ் சுசித்ரா, பாடகர் மனோ, அடடா மழைடா அடை மழைடா புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்களும் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்கள்.

 

நடிகை மனோரமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு - தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Manorama Hospitalised

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர் மனோரமா. திரையுலகினரால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர்.

இப்போதும் கூட நடித்து வருகிறார். சமீப காலமாக அடிக்கடி உடல் நலக் குறைவுக்குள்ளாகி சிகிச்சை் பெற்று வருகிறார்.

முன்பு மாடிப்படியில் தவறி விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டது. பின்னர் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதிலிருந்து ஓரளவு தேறிவந்த அவருக்கு ரஜினி கமல் உள்ளிட்டோர் போனிலும் நேரிலும் ஆறுதல் கூறினர்.

ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த அவர், சமீபத்தில் தன் பேரன் திருமண அழைப்பிதழை மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வழங்கினார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் உடல்நிலை மோசமானது. அவரை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மனோரமாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

ரஜினி உடல்நிலை குறித்து தீயாய் பரவிய வதந்தி!

Rumour On Rajini S Health

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை குறித்து நேற்று மாலை திடீரென மோசமான வதந்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்.

ஆனால் பின்னர் அது முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்தது.

கடந்த மூன்று தினங்களாகவே ரஜினியின் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ரஜினி கோச்சடையான் இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் இந்தி பதிப்புக்காக ஒரு பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து கேன்ஸ் விழாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தவர், கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக தயாரிக்கச் சொல்லிவிட்டு, பயணத்தை ரத்து செய்தார்.

ஆனால் அவர் உடல்நிலை காரணமாகத்தான் பயணம் ரத்து செய்யப்பட்டதாக சிலர் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட, அதை மறுத்து தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று மாலை திடீரென்று மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் ட்விட்டர் வழியாக பரவின. காமெடி நடிகர் விடிவி கணேஷ் அனுப்பியதாக வெளியான ஒரு ட்விட்டை, பேஸ்புக்கில் பலரும் பகிர ஆரம்பித்தனர்.

இதுகுறித்து ரஜினி வீட்டில் விசாரித்த போது, அப்படியா என்று கேட்டவர்கள், ரஜினி சார் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றனர். ஆனாலும் ராகவேந்திரா மண்டபம் அருகே பலரும் திரள ஆரம்பித்தனர்.

நடிகர் விடிவி கணேஷ் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கிலிருந்து இப்படி வதந்தி பரவியிருப்பதாக தெரிந்த பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்கள்.

 

யுவன் கேட்டுக் கொண்டதால் அஜீத்துக்காக குரல் கொடுக்கும் ஏ.ஆர். ரஹ்மான்?

Ar Rahman Croon Ajith

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம்.

மரியான் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடிக் கொடுத்தார். இந்நிலையில் யுவன் தான் இசையமைக்கும் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ரஹ்மானும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் உள்ளனர். அண்மையில் தான் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று முடிந்தது.

முன்னதாக துபாயில் அஜீத்தின் பைக், படகு சாகச காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.