நான் சுத்தமான தமிழ்ப் பெண்-கூறுகிறார் ஃபிரன்ட்ஸ் விஜயலட்சுமி

http://reviews.in.88db.com/images/boss/boss-engira-baskaran4.jpg

ஏராளமான கன்னடப் படங்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான தமிழ்ப் படங்களிலும் நடித்தவரான விஜயலட்சுமி இப்போது டிவி நடிகையாகி விட்டார்.
கன்னடத்தில் ஒரு காலத்தில் பிசியாக இருந்தவர் விஜயலட்சுமி. பின்னர் தமிழில் ஃபிரன்ட்ஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை.
இடையில் டிவி சீரியல் ஒன்றில் நடித்தார். பிறகு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து அளித்தார். அப்போது சில சர்ச்சைகள் எழவே அதிலிருந்தும் மாயமானார். இந்தநிலையில் மீண்டும் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் திரம்பி வந்துள்ளார் விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒரு சுத்தமான தமிழ்ப பெண்தான். சென்னையில்தான் பிறந்தேன். கர்நாடகத்தில் படித்தேன். அங்கு பட வாய்ப்புகள் வரவே அங்குசில காலம் செட்டிலாகி விட்டேன். ஆனாலும் எனது இதயம் தமிழுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது.
இப்போது கடந்த ஐந்து வருடங்களாக நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன். இங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்றார்.
சரி உங்களுக்கு கல்யாணமாகி விட்டதாமே என்று கேட்டால், பளபளவென வாய் விட்டுச் சிரித்தார் விஜயலட்சுமி. நான் நீண்ட காலமாக கோலிவுட்டில் இல்லாததால் பலரும் நான் கல்யாணமாகி செட்டிலாகி விட்டதாக கூறத் தொடங்கி விட்டனர். உண்மையில் நான் இன்னும் சிங்கிள்தான். தொடர்ந்து நடிக்க காத்திருக்கிறேன், நடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்கிறார் விஜயலட்சுமி.
 

மலையாளப் படத்தில் பாக்.கிரிக்கெட் வீரர்

Mohammad Hafeez
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தின் பெயர் மழவில்லினாட்டம் வரே. பிரபலமான மலையாளப் பாடலாசிரியர், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரிதான் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.
அதாவது கதைப்படி ஒரு பாகிஸ்தான் வீரர் கேரக்டர் இப்படத்தில் வருகிறது. இதற்காக முன்பு முகம்மது ஆசிப்பை தேர்வு செய்து வைத்திருந்தார் கைதப்புரம். ஆனால் அந்த நேரம் பார்த்து ஆசிப் ஸ்பாட் பிக்ஸிங் செய்து இங்கிலாந்தில் சிக்கிக் கொண்டார். இதனால் வேறு வழியில்லாமல் ஆசிப்பை கழற்றி விட்டு விட்டார் கைதப்புரம். இதுதான் அந்தப் பின்னணிக் கதை.
இப்போது அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் ஹபீஸ். தற்போது நடிக்க ஆள் கிடைத்து விட்டதால் நவம்பர் 24ம் தேதி வள்ளுவன் கடவு முத்தப்பன் வில்லேஜ் என்ற இடத்தில் வைத்து ஷூட்டிங்கைத் தொடங்குகிறார் கைதப்புரம்.
இப்படத்தில் கபில்தேவும் கூட நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி, மது, அர்ச்சனா கவி, கிருஷ்ணா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனராம்.
 

நடிப்பது ஆனந்தம்,தாயாக இருப்பது பேரானந்தம்:ஹேமமாலினி

Hema Malini
சண்டிகர்: நடிகையாக இருப்பதை விட எனது இரண்டு மகள்களுக்கும் தாயாக இருப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
நகை அறிமுக விழாவிற்காக தனது மகள் ஈஷா தியோல் மற்றும் பாலிவுட்டின் அந்நாள் ‘கெட்ட பையனான’ ரஞ்சித்துடன் சண்டிகர் வந்திருந்தார் ஹேமமாலினி.
அப்போது அவர் கூறுகையில், எனக்குப் படங்களில் பலவேறு விதமான கதாபாத்திரங்கள் கிடைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் எனது 2 மகள்களுக்கும் தாயாக இருப்பது தான் பேரானந்தம் என்றார் ஹேமா.
காலத்திற்கேற்ப பாலிவுட்டும் மாறிவருவதாக தாயும், மகளும் தெரிவித்தனர். கதாநாயகன், கதாநாயகி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், வில்லன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழைய நியதி எல்லாம் போய்விட்டது.
தற்போதுள்ள இயக்குநர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை அழகாக படமாக்குகிறார்கள் என்று ஹேமமாலினி கூறினார். தற்போது உள்ளவர்கள் புதிது புதிதாக எதையாவது சோதனை செய்வதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

‘இது ஒரு மெண்டல் படம்!’-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!

Lekha Washington
வ குவார்ட்டர் கட்டிங் படம் குறித்து அந்தப் படத்தின் நாயகி லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் தளத்தில் அடித்துள்ள கமெண்ட்தான், நீங்கள் மேலே படித்தது!
ஏன் இப்படி?
இந்தப் படத்தைத்தான் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தார் லேகா வாஷிங்டன். படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரம், ரிலீஸ் செய்யப்பட்ட விதம் எல்லாமே அவரது எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் கிளறிவிட்டிருந்தது.
ஆனால் படத்தில் அவரது காட்சிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாம். இடைவேளைக்கு முன் ஒரு காட்சியில் வரும் லேகா, அதன்பிறகு சில காட்சிகளில் வருவதோடு சரி.
தனது ட்விட்டரில் படம் குறித்து இப்படி எழுதியுள்ளார் லேகா:
“வ குவார்ட்டர் கட்டிங் ஒரு மெண்டல் படம். பைத்தியக்கார ஜனங்களைப் பற்றி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இது…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றியுள்ளது. ஆனால் படத்தை வாங்கியவர்களோ, “யாரைக் குறை சொல்லி என்ன பயன்…? படத்தை ஒழுங்கா எடுங்கய்யா” என்கிறார்கள் கடுப்புடன்!
 

தென்காசி தியேட்டரில் 'மைனா' படத்தைப் பார்த்து ரசித்த விஷால்

Vishal
தென்காசி:  தென்காசி திரையங்கில் திரையிடப்பட்டுள்ள மைனா திரைப்படத்தினை நடிகர் விஷால் ரசித்து பார்த்தார்.
தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பாலா இயக்கத்தில் அவன்..இவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நேற்று நடிகர் விஷால் தென்காசி பரதன் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள தீபாவளி வெளியிடான மைனா படத்திற்கு தனது சகாக்களுடன் வந்தார். எப்போதும் மாலை 6.15க்கு படம் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் விஷாலுக்காக 6.45க்கு படம் திரையிடப்பட்டது.
டீசார்ட், ஜீன்ஸ்-பேண்ட், தொப்பி அணிந்து பால்கனியில் ரசிகர்களோடு அமர்ந்து மைனாவை ரசித்து பார்த்த விஷால் படம் முடியும் வரை ரசித்து பார்த்தார். பின் படம் முடிவடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன் இரவு 9.05 அவர், தனது டிரைவர் ஜெய்குமாருடன் பின் வாசல் வழியாக சொகுசு காரில் குற்றாலம்-ஐந்தருவி சாலையில் அவர் தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
விஷாலுடன் ஒரு இளம் பெண்ணும் வந்திருந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. வி்ஷால் மைனா படம் பார்க்க வந்த தகவல் அதன்பின்புதான் தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தெரிய வந்து, ‘அடடா வடை போச்சே’ என்று விஷாலைப் பார்க்க முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டனர்.
 

நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி - ஐஸ்வர்யா ராய்

Aishwarya Rai
எனக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்குத்தொடர்ந்து நல்ல படங்களும், ரோல்களும், கேரக்டர்களும் கிடைக்கின்றன. இதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
குறிப்பாக நல்ல கேரக்டர்களைக் கொண்ட பீரியட் படங்கள் சரியான இடைவெளியில் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சி தருகிறது. அதுபோன்ற படங்களில் பழைய நடிகைகள் யாரையும் இமிடேட் செய்து நடிக்க நான் முயல்வதில்லை. நானாகவே அதில் தெரிய ஆசைப்படுகிறேன்.
ஆக்ஷன் ரீப்ளே படத்திலும் கூட எந்த பழைய நடிகையையும் நான் காப்பி அடிக்கவில்லை. நானேதான் அதில்தெரிந்தேன்.
70களில் உள்ள கதைக் களம் அது. அதற்கேற்ப மேக்கப், வசன உச்சரிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளது. இது கடினமான படம் என்பதை படத்தை ஒப்புக் கொண்ட போதே உணர்ந்தேன். இருந்தாலும் என்னால் முடிந்தவரை செய்துள்ளேன்.
இது காமெடிப் படமாக இருந்தாலும் எனது நடிப்புத் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன என்றார் ஐஸ்வர்யா ராய்.
 

குத்துச்சண்டை கற்கிறார் ஜீவா

http://www.tamildoor.com/wp-content/uploads/2010/09/Vandhan-Vendran-300x200.jpg

'வந்தான் வென்றான்' படத்துக்காக, ஜீவா குத்துச்சண்டை கற்று வருகிறார்.வாசன் விஷுவல் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம் 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது: 'வந்தான் வென்றான்' எல்லா அம்சங்களும் நிறைந்த ஆக்ஷன் படம். படத்தின் ஹீரோ ஜீவா குத்துச்சண்டை வீரர். அவரை ஒரு சம்பவம் மும்பை வரை துரத்துகிறது. அதை அவர் எப்படி வென்று திரும்புகிறார் என்பது கதை. ஜீவாவின் தொழில் குத்துச்சண்டை என்பதை தவிர, படத்தில் குத்துச்சண்டைக்கென்று பெரிய முக்கியத்துவம் எதுவுமில்லை. ஆனாலும் ஒரு குத்துச்சண்டை வீரனின் பாடி லாங்குவேஜ், சண்டைகளில் அந்த சாயல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜீவா குத்துச்சண்டை பற்றிய அடிப்படை விஷயங்களை மாஸ்டர் ஒருவரிடம் கற்று வருகிறார். ஹீரோயின் டாப்ஸிக்கு சென்னை பெண்ணின் சாயல் இருக்கிறது. படத்துக்காக முன்பை விட ஸ்லிம்மாகியிருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் ஒரு மாதம் நடக்க இருக்கிறது.


Source: Dinakaran
 

வல்லக்கோட்டை - விமர்சனம்

வல்லக்கோட்டை - விமர்சனம் Vallakottai Review in Tamil வல்லக்கோட்டை - விமர்சனம் Vallakottai Review in Tamil
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8Mzwm8LAxoeXUNY6nYnlr9nHpDCGMSR382o7lK7pdAETrk2xKDErq2kBozdmDluzqxLQAwLDswtxx60bE-U_Y0sn-cYI6ndWZhUavi5E8D0lLbRRJLEH6lHR2fmVN33eyj6E_yRTVoJCE/s400/17921_17_Vallakottai.jpg
நடிகர் : அர்ஜூன்

நடிகை : ஹரிப்ரியா

இயக்குனர் :ஏ.வெங்கடேஷ்


எம்.ஜி.ஆர். காலத்து கதை! சமீபத்திய கந்தசாமி படத்தின் உல்டா!! என ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் படம்தான் வல்லக்கோட்டை.

கதைப்படி சில்லறை கேஸ் ஒன்றிற்காக சிறையில் இருக்கும் அர்ஜூன், அங்கு சந்திக்கும் ஒரு கைதியின் தம்பிக்கு உயிர் சிகிச்சை அளிக்க பணம் புரட்டித்தர ஒப்புக் கொள்கிறார். அதன்படி அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து ரீலிஸ் ஆகும் அர்ஜூன், வல்லக்கோட்டைக்கு வருகிறார். அங்கு நடக்க இருக்கும் ஒரு கொலையை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு மீண்டும் ஜெயிலுக்கு போக சம்மதிக்கிறார். அதற்காக வரும் லட்சக்கணக்கான பணத்தில் தன் சிறை நண்பனின் தம்பிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடும் அர்ஜூன், பெண் (நாயகி) ஒருவரால் சந்திக்கும் பிரச்னைகளும், அதற்கு வாயுபுத்ரனாக அளிக்கும் தீர்வுகளும்தான் வல்லக்கோட்டை படத்தின் மொத்த கதையும். அர்ஜூன் திட்டமிட்டபடி கொலைப்பழியை ஏற்று வாங்கப்போகும் பணத்துக்கு வஞ்சகமில்லாமல் சிறைக்கு சென்றாரா? அவரது கொலை பழியை ஏற்க இவரை கூலிக்கு அமர்த்துபவர்களின் முகமுடியை கிழித்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரிக்கப்பட்டிருக்கிறது வல்லகோட்டையின் மீதிக்கதை!

அர்ஜூன் வழக்கம்போலவே ஆடுகிறார், பாடுகிறார், ஆக்ஷனில் தூள் பறத்துகிறார். அடிக்கடி கதாநாயகி ஹரிப்ரியா உள்ளிட்டவர்களை விட்டு உங்க ஆர்ம்ஸூம், மூக்கும் முழியும் அழகோ அழகென்று புகழ்பாட விடுகிறார். ஆனால் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் அர்ஜூனுக்கு வயசாகி போனது சீன் பை சீன் தெரிவதை தவிர்க்க தவறி இருப்பது வேதனை. அதேமாதிரி அடிக்கடி மாறுவேடத்தில் வரும் அர்ஜூனை ரசிகர்களுக்கு அ‌டையாளம் தெரிவதும், எதிராளிகளுக்கு தெரியாததும் காமெடி!!

புதுமுகம் ஹரிப்ரியா அர்ஜூனுக்கு ஈடுகொடுத்து ஆடிப்பாடி ரசிகர்களை தன் கவர்ச்சியால் கவிழ்க்கிறார். சுரேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, கஞ்சா கருப்பு, லதா, வின்சென்ட் அசோகன், சத்யன், லிவிங்ஸ்டன், பிரேம், ஓ.ஏ.கே. சுந்தர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தும் சிரிப்பும், சிறப்பும் வர மறுக்கிறது.

வல்லக்கோட்டை என முருகன் தள பெயரையும், வேல் கம்பையும் டைட்டில் ஆக்கிவிட்டு, படம் முழுக்க அர்ஜூனை வாயுபுத்ரன் என்று கூறி ஆஞ்சநேயர் பாடலை பாட விடுவது கோட்டையா... குறட்டையா? என்பதை டைரக்டர் ஏ.வெங்கடேஷ்தான் சொல்ல வேண்டும்.

தினாவின் இச‌ை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், அர்ஜூனின் மாறுவேடங்களில் விட்ட கோட்டை, காமெடி எனும் ‌பெயரில் கஞ்சா கருப்பும், சத்யனும் விடும் குரட்டை உள்ளிட்டவைகளால் வல்லக்கோட்டை வல்லிய கோட்டை (விட்டிருக்கின்றனர்) என்றே தெரிகிறது.
 

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம் VA Quarter Cutting Movie Review in Tamil வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம் VA Quarter Cutting Movie Review in Tamil
http://tamilworl.wen.ru/VA-Quarter-Cutting.jpg
நடிகர் : சிவா, எஸ்.பி.பி.சரண்

நடிகை : லேகா வாஷிங்டன்

இயக்குனர் :புஷ்கர் - காயத்ரி

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வெளியிட்டிருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். அவரது தயாரிப்பில் இதே பட ஹீரோ நடித்து சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட தமிழ்ப்படம் மாதிரி தரமான படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. படத்தின் டைட்டிலில் கடைசி நேரத்தில் ஒட்டிக் கொண்ட `வ` மாதிரியே படமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்பது கொடுமை. மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் கதை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவதுதான் வ படத்தின் ஒரே ஹைலைட்.

கதைப்படி ஹீரோ சிவா ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார், துபாய்க்கு விமானம் ஏறுவதற்காக... வந்த இடத்தில் தன் அக்காள் கணவர் எஸ்.பி.பி.சரணுடன் வண்டியில் கிளம்பி ஒரு குவாட்டருக்கும், கட்டிங்கிற்காகவும் அலைவதுதான் வ படத்தின் மொத்த கதையும்! இதை சுவாரஸ்யமாக சொல்கிறேன்பேர்வழி என சொதப்பி எடுத்திருக்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி இருவரும். இவர்களது முதல் படமான ஆட்டோ எனும் ஓரம்போ படத்திலாவது ஸ்கிரீன்ப்ளே சுமார் என்றாலும் ‌டேக்கிங்ஸ் பிரமாதமாக இருந்தது. இதில் ஸ்டோரி, ஸ்கிரீன்ப்ளே, டேக்கிங்ஸ் எல்லாமே வீக்! டயலாக் மட்டுமே சில இடங்களில் ஆறுதல்.

துபாய்க்கு ப்ளைட் ஏற வந்த ஹீரோ குறைந்தபட்சம் குவாட்டர் - கட்டிங் இல்லாமல் அந்த இரவை கழிக்க முடியாது எனும் நிலையில் காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி போன்ற மதுவிடுதிகளுக்கு விடுமுறையான ஒரு நாளில் தன் அக்காள் புருஷனையும் கூட்டிக் கொண்டு அலைவது காமெடிக்கு வேண்டுமானால் ஓ.கே. ஆனால் அதையே ஒரு முழு படக் கதையாக நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றாலும் அதுதான் வ படத்தின் மொத்தக் கதையும் என்பது வேதனை!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJpQNDqqBUSGkL245NIz-uzptu8SU2kbilhxK5C-JD7HOELhwVynaUIBmW6pG5cbN-msQmgEFrwls5jX67_i5K_CX6U0sTOnKp4aSLgg_tCP8VwQVEsTwXDPIQdfO7v5UdQ4zqyLS2Ae0S/s1600/Va_Quarter_Cutting_Movie_Stills_photos_12.jpg
ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டத்தில் குவாட்டரும், பிரியாணி பொட்டலமும் தருகிறார்கள் என ஹீரோ சிவா ஓடுவதும், அங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போலீசுக்கு ‌பயந்து ஓடுவதும், ஸ்டார் ஓட்டலில் எப்படியும் கட்டிங்காவது கிடைக்கும் என பேரருக்கு பணம் கொடுத்து பிரச்னையில் சிக்கி, பின் விரட்டியடிக்கப்படுவதும், அப்படியும் அடங்காமல் ஹீரோவே பேரர் வேஷத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து சரக்கு தேடிப்பார்த்து கிடைக்காமல் ஏமாறுவதும், இறுதியாய் சூதாட்ட கிளப்பில் கிடைக்குமென சீட்டாடப் போய் வசமாய் சிக்குவதும், பின் மாமன் சரண் புண்ணியத்தில் ஹீரோ தப்புவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள். ஆனாலும் இதெல்லாம் ஒரு படத்தில் வடடிவேலுவோ, வையாபுரியோ நடிக்க ‌வேண்டிய காமெடி காட்சிகள் என்ற அளவில் ரசிக்க வேண்டியவை என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆனால் இதையே முழுப்படத்திற்கும் கதையாக்கி, காட்சிகளாக்கி இருக்கும் இயக்குனர்களின் துணிச்சல், ரசிகர்களுக்கு இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

சிவா, எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட நான்கைந்து கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த நட்சத்திரங்கள் என்பது ஒரு விதத்தில் பலமாக தெரிந்தாலும், ஒரு விதத்தில் பலவீனமாகவும் தெரிகிறது. சிவா, சரண் இருவது நல்ல நடிப்பும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ஆண்டனியின் படத்தொகுப்பும் வ படத்திற்கு பெரிய பலம்!

புஷ்கர் - காயத்ரி தம்பதியரின் எழுத்தும், இயக்கமும் வ படத்தை பார்த்து வாவ் என்று வாய்பிளக்கவும் விடவில்லை! உவ்வே என்று வாய்திறக்கவும் விடவில்லை!
 

திரைப்பட விழாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கினார் கருணாநிதி!

http://www.chennaifilmfest.com/wp-content/uploads/2010/07/slide1.jpg
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவதற்காக முதல்வர் கருணாநிதி தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியும், டைரக்டர் மணிரத்னம் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளனர். கோவாவில் நடைபெறுவது போல சென்னையிலேயே சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து ‌கொண்டிருக்கின்றன. இந்த விழாவை சென்னையில் நடத்த தமிழக அரசு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் உள்ளிட்ட சினிமா சங்கங்கள் கோரி‌க்கை விடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். சர்வதேச விழா நடத்த இந்த தொகை போதாது என்பதால் முதல்வரிடம் மேலும் நிதி கேட்க விழாக்குழுவினர் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், டைரக்டர் மணிரத்னம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

சென்னையில் டிசம்பர் 15ம்தேதி முதல் 23ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 130 படங்கள் திரையிடப்பட உள்ளன. இவற்றில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.ஒன்றரை லட்சமும் வழங்கப்பட உள்ளது.