சென்னை: நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.
நாடு முழுக்க அன்றாடம் நிகழ்ந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கோபமடைந்துள்ள டாப்சி, இதுகுறித்து கூறுகையில், "பாலியல் பலாத்கார குற்றங்கள் தினசரி அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது. சிறுமிகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள் இந்த கொடூர மனம் படைத்தவர்கள்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தில் இவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தாமதமானால் மேலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும்.
நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதிகமான அபராதமும் விதிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது," என்றார்.