தெனாலிராமனில் யாரையும் வடிவேலு விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ இல்லை - இயக்குநர்

சென்னை: தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை வடிவேலு இழிவுபடுத்தவில்லை என்று இயக்குநர் யுவராஜ் தயாளன் தெரிவித்துள்ளார்.

வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தணிக்கை குழு அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.

தெனாலிராமனில் யாரையும் வடிவேலு விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ இல்லை - இயக்குநர்

இப்படத்தில் வடிவேலு தெனாலிராமனாகவும், கிருஷ்ண தேவராயராகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்புக்கு தெனாலிராமன் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "தெனாலிராமன் படத்துக்கு வீண் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி இருப்பதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்த படத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி காட்சிகளே இல்லை. வடிவேலும் கிருஷ்ண தேவராயரை விமர்சிக்கவில்லை. இந்த படம் தெனாலிராமன் பற்றிய கதை.

படத்தை எதிர்ப்பவர்களுக்கு திரையிட்டுக் காட்ட இருக்கிறேன். படத்தை பார்க்காமலேயே எதிர்ப்புகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தெனாலிராமன் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு படம் ரிலீசாகும் நேரத்தில் எதிர்ப்பு கிளம்புவது இப்போதைய உத்தியாகிவிட்டது," என்றார்.

 

கமல் - வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இன்று 2014-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்.

நடிகர் கமல் ஹாசன் மற்றும் வைரமுத்துவுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

கமல் - வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன்படி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

 

அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு

சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை:

"இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்," என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

 

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார்.

ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது சினிமா ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

 

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

மும்பை: சர்ச்சைக்குரிய இனம் படத்துக்கு எதிராக மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய முற்றுகை காரணமாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இனம் திரைப்படம் தமிழ் உணர்வாளர்களை கொதிப்படை வைத்துள்ளது. அந்தப் படம் முழுக்க தமிழ் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள், தமிழர்களை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகள், ராஜபக்சேயின் ராணுவம் நடத்திய இனப்படுகொலையை நியாயப்படுத்தும் காட்சிளே நிறைந்திருக்கின்றன.

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

இந்தப் படத்துக்கு எதிராக வைகோ மிகக் கடுமையான அறிக்கை வெளியிட்டு எல்லோரையும் அதிர வைத்தார். அடுத்த நாளே படத்தை அனைத்து திரையரங்குகளிலிருந்தும் எடுத்துவிடுவதாக லிங்குசாமி அறிவித்தார்.

இந்நிலையில், லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியாகவிருக்கும் மற்ற படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உலகத் தமிழர் அமைப்புகள் எடுத்துள்ளன.

குறிப்பாக இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் மற்றும் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் போன்ற படங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஷூட்டிங் மும்பையின் விடி பகுதியில் நடந்து வருகிறது. இந்த விஷயம் தெரிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு சென்று பிற்பகல் 3 மணிக்கு படக்குழுவை முற்றுகையிட்டனர்.

படக்குழுவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் இனம் படத்தைத் தயாரித்த லிங்குசாமியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தார் லிங்குசாமி.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த நடிகர் சூர்யா அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறினார்.

இனத்தைக் காட்டிக் கொடுத்து பணம் பார்க்க முயற்சிக்கும் கூட்டத்தில் லிங்குசாமியும் சேர்ந்தது வருத்தத்தைக் கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில நிர்வாகி பொன் கருணாநிதி தெரிவித்தார்.

இனம் படம் அனைத்து திரையரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நேரத்தில் இரண்டா?: இயக்குனரை பார்த்து காண்டாகும் ஹீரோக்கள்

சென்னை: ஒரு இடத்தில் இருக்காதவர்களின் பெயரில் படம் எடுத்த கனி இயக்குனருக்கும், 2 இளம் நாயகிகளுக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

ஒரு இடத்தில் இருக்காதவர்களின் பெயரில் படம் எடுத்த கனி இயக்குனர் எந்த கிசுகிசுவிலும் இதுவரை சிக்காமல் இருந்தார். அண்மையில் அவர் எடுத்த படம் ரிலீஸாகாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து அவர் நான் உயிருடன் தான் இருக்கிறேன், அது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் அவருடைய பெயர் ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது. அவர் அடிக்கடி பெங்களூர் செல்வதாகவும் அங்கு அவர் நேராக நிற்கும் படத்தில் நடித்த கினி நடிகை வீட்டில் தான் தங்குவதாகவும் சாண்டல்வுட்டில் பேச்சாக கிடக்கிறது. இதற்கிடையே மில்க் நடிகை வேறு பேட்டிக்கு பேட்டி கனியை புகழ்ந்து தள்ளுகிறாராம்.

இப்படி இந்த கனி ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோயின்களோடு நெருக்கமாக உள்ளாரே என்று பல ஹீரோக்கள் வயித்தெரிச்சலில் உள்ளார்களாம்.