நடிப்புக்காக கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட ஷெபாலி ஷா

Tags:


நடிப்பு தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக பல நடிகர், நடிகையர் நிஜமாகவே அதுபோல செய்து பார்த்து பின்னர் நடிப்பார்கள். அந்த வரிசையில், பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா, தான் நடிக்கப் போகும் கேரக்டருக்காக ஒரு கைதியுடன் ஒரு நாளை செலவிட்டுள்ளார்.

குச் லவ் ஜெய்சா என்ற படத்தில் நடிக்கிறார் ஷெபாலி. இதில் ராகுல் போஸும் நடிக்கிறார். தலைமறைவு விசாரணைக் கைதியாக இப்படத்தில் நடிக்கிறார் போஸ். அவரை ஒரு காபி ஷாப்பில் வைத்து சந்திக்க நேரிடுகிறார் ஷெபாலி. இந்த சந்திப்பு இருவரது வாழக்கையையும் மாற்றிப் போடுகிறது.

இந்த வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து கைதிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அறிய விரும்பினார் ஷெபாலி. அதன்படி சிறை அனுமதியைப் பெற்று ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து அவருடன் நாள் முழுக்க கழித்துள்ளார்.

இதுகுறித்து ஷெபாலி கூறுகையில், எனக்கு கைதியுடன் பேசியபோது எந்தவிதமான பதட்டமும் ஏற்படவில்லை. மாறாக, இயல்புடன் அவரிடம் பேசினேன். அவருடைய குற்றப் பின்னணி குறித்தெல்லாம் நான் எதுவும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.

மாறாக சிறையில் சாப்பாடு எப்படி இருக்கிறது, அரசியல், சமூகம் உள்பட பல விஷயங்களையும் அவரிடம் கேஷுவலாக பேசினேன். ஒரு கைதியின் மன நிலை, எப்படிப் பேசுவார், எப்படி நடந்து கொள்வார் என்பதை அப்சர்வ் செய்ய அது எனக்கு உதவியது என்றார் ஷெபாலி.
 

கை நிறைய படங்கள்-பூரிப்பில் ஹன்சிகா

Tags:


19 வயதேன தனக்கு கை நிறையப் படங்களும், ரசிகர்களிடம் அமோக ஆதரவம் கிடைத்திருப்பதால் பெரும் பூரிப்பில் இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

நடிப்பு என்னவோ சுட்டுப் போட்டாலும் வராது போலத்தான் இருக்கிறது. இருந்தாலும் கொழுக் மொழுக் என பொம்மை போல இருப்பதாலோ என்னவோ, ஹன்சிகாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு, திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும். சின்னக் குஷ்பு என்று கூறி சிலாகிக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

ரசிகர்களோ அடுத்த நமீதா ரெடி என்ற ஆனந்தப்படுகின்றனர். எடுத்த எடுப்பிலேயே பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் ஹன்சிகாவுக்கு இப்போது கை நிறையப் படங்கள்.

தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க கடும் முயற்சியில் இருக்கிறார் ஹன்சிகா. இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னிந்தியப் படங்களுக்கே இப்போது நான் முழுக் கவனத்தையும் தந்து வருகிறேன். எனக்கு எப்போதுமே தென்னிந்திய உணவு வகைகள்தான் ரொம்பப் பிடிக்கும். எனது தாயார் கூட பேசாமல் நீ தென்னிந்தியாவிலேயே பிறந்திருக்கலாம் என்று கூட கிண்டலடிப்பார். இப்போதோ நான் தென்னிந்திய நடிகையாகிருக்கிறேன்.

இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாகப் போராடப் போகிறேன். தமிழாக இருந்தாலும் சரி, தெலுங்காக இருந்தாலும் சரி ஒரே மரியாதையுடன் இரு மொழிகளையம் பாவித்து நடிப்பேன் என்றார் ஹன்சிகா.

உடம்பைக் குறைக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டால், நான் என்ன மாடலா, மெலிந்து போவதற்கு. நான் நடிகை, கவர்ச்சி எனக்குப் பொருத்தமாக இருக்கிறது. எனவே அதற்கேற்றபடி உடலைப் பராமரிக்கிறேன். மேலும் நான் இப்படி இருந்தால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கிறது. எனவே மெலியும் முயற்சிக்கு வாய்ப்பில்லை என்கிறார் கண்களைச் சிமிட்டியபடி.
 

ஒரு பெண்ணாக கனிமொழியை நான் ஆதரிக்கிறேன்-குஷ்பு

Tags:


சென்னை: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.

நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன் என்றார் குஷ்பு.

உண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.

பின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

'டகாய்ச்சி' காட்டும் அமலா பால்!

Tags:


வளரம் வரைக்கும்தான் நாயகர்களையம், நாயகிகளையும் பிடிக்க முடியும். கொஞ்சம் வளர்ந்த விட்டாலோ, அவ்வளவுதான் அவர்களைப் பிடிக்கவே முடியாது.

இந்த வரிசையில் மைனா நாயகி அமலா பாலும் இணைந்துள்ளாராம். இவர் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை என்று எரிச்சலுடன் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனராம் அவரை வைத்துப் படம் எடுப்பவர்கள்.

கேரளத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சீட்டைப் பிடித்துக் கொண்டு ஜம்மென்று அமர்ந்துள்ள அமலா பால் கையில் இப்போது ஏராளமான படங்கள். இவருடன் சேர்ந்து நடிக்க ஹீரோக்கள் மத்தியிலும் நல்ல கிராக்கி இருப்பதால் அமலா பால் வீட்டில் தயாரிப்பாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால் இதை வைத்து தான் ஒரு பெரிய சூப்பல் ஸ்டாரினி ஆகி விட்டதாக கருதி விட்டாரோ என்னவோ, ஏகப்பட்ட பந்தாக்களைக் காட்ட ஆரம்பித்துள்ளாராம் அமலா பால்.

தான் நடித்த பட விழாக்களுக்குப் போவதில்லை, சம்பளத்தை கட் அன்ட் ரைட்டாக பேசுகிறார், அடிக்கடி தனது மேனேஜர்களை மாற்றுகிறார் என்று புலம்புகிறார்கள்.

ஹீரோக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் அமலா பால், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இதற்கிடையே, அமலா பாலுக்கும், ஒரு மூத்த நடிகருக்கும் இடையே நெருக்கமான நட்பு வேறு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் சூடாகப் பேசிக் கொள்கிறார்களாம்.