ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

சென்னை: தமிழ் சினிமாவில் யார் சிறந்த வெற்றிப் படங்களைத் தருவது என்ற போட்டியைவிட, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பிடிப்பது யார் என்பதில்தான் அடிக்கடி போட்டி நடக்கிறது.

அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் கடைசியில் மூக்குடைபட்டு நிற்பதே வழக்கமாகியும்விட்டது.

ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் என அறிவிக்கப்பட்டவர் ரஜினி. அன்றுமுதல் இன்றுவரை அந்த நாற்காலியில் அவர் ஒருவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

இன்னொன்று சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமேயான ஒரு அடைமொழியாகவும் மாறிவிட்டது.

ஆனால் இடையில் பல நடிகர்கள் இரண்டு மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற பேச்சு கிளம்பிவிடும். இதை பல நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களே கிளப்பிவிடுவதுண்டு.

எண்பதுகளின் ஆரம்பத்தில் கார்த்திக் - பிரபு, இறுதியில் ராமராஜன், ராஜ்கிரண், அடுத்து விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு, சூர்யா - விக்ரம் இப்படி பலரும் இந்த சூப்பர் ஸ்டார் அடைமொழிக்குள் திணிக்க முயன்று கடைசியில்.. ம்ஹூம்.. சூப்பர் ஸ்டார் என்ற நிலை காலத்தை தாண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு (சினிமாவில் அப்படி சொல்லிக் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) நடிக்க வந்த சிவகார்த்திகேயன், வரிசையாக மூன்று ஹிட்கள் கொடுத்ததும், இப்போது தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

மான்கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேருமே இதனை உணர்ந்ததோடு, வெளிப்படையாக இது ரொம்ப ஓவராச்சே என்று கமெண்டும் அடித்துவிட்டுச் சென்றனர்.

இந்த விழாவில் பேசிய அனைவருமே சிவ கார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரோ, ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசி, அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்தி என்றார்.

இந்த பேச்சுகளால் மந்திரித்துவிட்டதுபோலாகிவிட்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சில் இதற்கெல்லாம் மறுப்போ, சங்கடப்பட்ட உணர்வையோ காட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக இவற்றை ஏற்றுக் கொண்டார்.

ஆஞ்சநேயா படத்தின்போது அஜீத் கேட்டாரே, 'ஏன் நான் சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா?' என்று. அந்தத் தொனியில்தான் அவர் பேச்சு அமைந்தது!

 

அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னை: அஜீத் நடிக்கும் புதிய படத்தில் கவுதம் மேனனுடன் மீண்டும் இணைகிறார் ஹாரிஸ் ஜெயரராஜ்.

ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன்.

இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார்.

அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.

 

அனிருத் இசையின் ரசிகன் நான் - இயக்குநர் ஷங்கர்

அனிருத் இசைக்கு ரசிகன் நான். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அவரது ஆர்வம் அவரை பெரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் என்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'மான் கராத்தே'. இந்தப் படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அனிருத் இசையின் ரசிகன் நான் - இயக்குநர் ஷங்கர்

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஷங்கர், "இந்த விழாவிற்கு நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன். அவரின் இசையில் வெளிவந்த எல்லா பாடல்களும் என்னைக் கவர்ந்துவிட்டன.

தனக்கு தெரியாத இசை சம்மந்தப்பட்ட புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஏ ஆர் ரஹ்மான் ஆர்வம் காட்டுவார். படத்துக்கு இசையமைக்கக் கூட நேரம் கிடைக்காத நிலையிலும் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்ள க்ளாஸுக்குப் போய் வருவார் ரஹ்மான். அதுபோல க்ளாஸிகல் இசை கற்றுக் கொள்கிறார் அனிருத் என்பதை அறிந்தேன்.

இந்த ஆர்வம் அவரை பெரிய நிலைக்குக் கொண்டு செல்லும்.

ஏ.ஆர்.முருகதாஸ் படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற திருப்தி அவர் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் ஏற்படுகிறது.

சிவகார்த்திகேயன் வளர்ச்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவரும் முதல் நிலை வரிசைக்கு வருவார்,'' என கூறினார்.

 

'நறநற'க்க வைத்த மான் கராத்தே ஆடியோ ரிலீஸ்‍!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற மெகா வெற்றியின் மூலம் சர்ரென்று வெற்றிச் சிகரத்தில் ஏறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு முதல் கரும்புள்ளி விழுந்துள்ளது, மான் கராத்தே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மூலம்.

சத்யம் சினிமாஸில், சற்றும் முறையற்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரபலங்கள், செய்தியாளர்கள் அனைவருமே பவுன்சர்கள் எனப்படும் குண்டர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

'நறநற'க்க வைத்த மான் கராத்தே ஆடியோ ரிலீஸ்‍!

'போன வாரம் இதே அரங்கத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் நிகழ்ச்சி நடந்தது. ஒரு முதல்வரின் நிகழ்ச்சிக்குரிய அத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், யாரும் சிறிதளவுகூட முகம் சுளிக்காதபடி அத்தனை சிறப்பாக நடந்தது அந்த நிகழ்ச்சி. ஆனா நேத்து வந்த சிவகார்த்திகேயன் பண்ற அலட்டலைப் பாத்தீங்களா?' என பலரும் வெளிப்படையாகத் திட்டித் தீர்த்தனர் நேற்றைய நிகழ்ச்சியில்.

பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் திரையுலகினர் மட்டும்தான் அதிகமாகப் பங்கேற்பார்கள். ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் சிவகார்த்திகேயனோ மாஸ் காட்ட வேண்டும் என நினைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வேறு வரவழைத்திருந்தார்.

'நறநற'க்க வைத்த மான் கராத்தே ஆடியோ ரிலீஸ்‍!

இதனால் விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வாசலில் மறித்து கெடுபிடி செய்ய, சிலர் கோபத்துடன் திரும்பிச் சென்றனர். சினிமா செய்தியாளர்கள் பலரும் அரங்கத்துக்கு வெளியே நின்றுவிட்டுத் திரும்பினர்.

தொலைக்காட்சி கேமராமேன்களும் படாதபாடுபட்டனர் (விஜய் டிவிகாரர்களுக்கு மட்டும் விலக்கு..!). அவர்களை வசதியான இடத்தில் கேமராவை வைத்து ஷூட் பண்ணக் கூட விடவில்லை பவுன்சர்கள்.

இத்தனைக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். எளிமையானவர், பந்தா இல்லாதவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர். ஆனால் மும்பையின் பவுன்சர் கலாச்சாரத்தை சத்யம் தியேட்டர் வரை அழைத்து வந்திருப்பது அவர்தான் என்றார்கள் நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் புள்ளிகள்.

நம்ம வீட்டுப் பையன் என்ற இமேஜ் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கவனத்தில் கொண்டால் சரி!

 

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்

சென்னை: என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.

விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.

இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.

இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.