இஃபா விழா... கனடாவில் குவியும் நட்சத்திரங்கள்!


கடந்த ஆண்டைப் போன்ற சோதனையை முன்னெப்போதும் சந்தித்திருக்காது இஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. காரணம் இந்த விழாவை இனப்படுகொலை அரங்கேறிய இலங்கையின் கொழும்பு நகரில் நடத்தியதுதான்.

ஐஃபாவின் இந்த விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு அழைப்பிதழ் வைக்க இலங்கை தூதர் முனைந்தபோது, அந்த அழைப்பை முதல் நபராக நிராகரித்தவர் ரஜினி.

அதன்பிறகுதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அனைத்து நடிகர் நடிகைகளும் நிராகரித்தனர். பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ய விழாக்குழுவினர் அழைத்தபோது நடிகை நமீதா கூட மறுத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு தூதராக இருந்த அமிதாப் பச்சன், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க இருந்த ஷாரூக்கான், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களும், தமிழுணர்வாளர்களின் கோரிக்கைக்கு இணங்கி புறக்கணித்தனர்.

இதன் விளைவு கடந்த ஆண்டு இஃபா விழா படுதோல்வியைச் சந்தித்தது. பெரும் நஷ்டம் அடைந்தனர் விழாவை நடத்தியவர்கள்.

இந்த ஆண்டு கனடாவின் டொரண்டோ நகரில் நடக்கிறது இஃபா விழா. நாளை வியாழக்கிழமை இந்த விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திரைப்பட விழா நடக்கிறது. எந்தத் தடையும் எதிர்ப்பும் இல்லாததால், இந்த முறை விழாவில் பங்கேற்க பாலிவுட் நட்சத்திரங்கள் குவிய ஆரம்பித்துள்ளனர்.

ஷாரூக்கான் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நடனம் ஆடுகிறார். கங்கனா ரணவத், அனுஷ்கா சர்மா, மாதவன், சுக்விந்தர் சிங், முன்னாள் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் என ஒரு பட்டாளமே நேற்று கனடா கிளம்பியது.

 

'சொரிமுத்து ஐயனாரை கேலி செய்வதா!'-அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!


சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.

இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், “நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்,” என்றார்.

தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

விரைவில் திருமணம்: சினிமாவுக்கு முழுக்கு போடும் மீரா ஜாஸ்மின்!


சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் உறுதியாக உள்ளாராம் நடிகை மீரா ஜாஸ்மின்.

இப்போதைக்கு தமிழில் அவருக்குள்ள ஒரே படம் மலையூர் மம்பட்டியான்தான். மலையாளத்தில் ஒரு படம் உள்ளது. வேறு படங்கள் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

இதற்கிடையே, தன்னை ஒப்பந்தம் செய்யத் தேடி வந்த இரு தயாரிப்பாளர்களிடம் விரைவில் தனக்கும் தனது காதலருக்கும் திருமணம் நடக்கவிருப்பதால், படங்களில் நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார்.

மாண்டலின் ராஜேஷை ரொம்ப நாளாகக் காதலித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் சினிமாவுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

எப்போது திருமணம் என்பதை விரைவில் அறிவிக்கவிருக்கிறார் மீரா. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் குடுத்தனம் நடத்தப் போகிறாராம்!

 

கிசு கிசு - போட்டி போடும் ஹீரோக்கள்... மாயமாகும் ஹீரோயின்...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

போட்டி போடும் ஹீரோக்கள்… மாயமாகும் ஹீரோயின்…

6/22/2011 11:50:30 AM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

மழை நடிகைக்கு சென்னைல ஷூட்டிங்னா காலை டிபனா தோசை கண்டிப்பா இருக்கணுமாம். இல்லேன்னா திடீர்னு கார் எடுத்துகிட்டு மாயமாயிடுவாராம்… மாயமாயிடுவாராம்… வழக்கமா போற பிரபல ஓட்டலுக்கு போயி தோசை சாப்பிட்ட பிறகே திரும்பி வருவாராம். இதனால ஷூட்டிங் லேட்டாகுதாம். அதனால காலை நேரத்துல அந்த நடிகையோட கால்ஷீட்னு தெரிஞ்சா, யூனிட்காரங்க மறக்காம தோசை வாங்கி வச்சிருவாங்களாம்… வச்சிருவாங்களாம்…

நான்தான் நம்பர் ஒன் அப்படின்னு காட்ட டாப் ஹீரோக்கள் போட்டி போட்டு சம்பளத்தை கூட்டிக்கிட்டே போறாங்களாம்… போறாங்களாம்… கோடிகளை சிங்கிள் டிஜிட்ல தர்றதா சொன்னா 'அதெல்லாம் இப்போ ஹீரோயின்களே வாங்குறாங்க. டபுள் டிஜிட்ல தந்தா கால்ஷீட். இல்லேனா நோÕனு கறாரா பேசுறாங்களாம். பெரிய ஹீரோ ஒருத்தர்கிட்ட கால்ஷீட் கேட்கப் போன தயாரிப்பாளர்களிட்ட, Ô11 சி சம்பளம் கொடுங்கÕனு அந்த ஹீரோ கேட்டதும் 'பட பட்ஜெட்டே 13 சிதான். சம்பளம் அதைவிட அதிகமா இருக்கேÕனு அதிர்ச்சியா திரும்பிட்டாராம்… தயாரிப்பு திரும்பிட்டாராம்…

சினிமா யூனியன்களோட சம்பள உயர்வை பற்றி பேச்சு நடத்துறதுக்கு இப்போவுள்ள தயாரிப்பு சங்க நிர்வாகிங்க தயங்குறாங்களாம்… தயங்குறாங்களாம்… சீக்கிரமே தேர்தல் நடக்கப்போகுது. புதுசா வர்ற நிர்வாகிங்க பேசி முடிவெடுக்கட்டும்னு தயாரிப்புங்க நழுவுறாங்களாம்… நழுவுறாங்களாம்…

 

அம்மா கேரக்டரா? அஞ்சலி எஸ்கேப்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அம்மா கேரக்டரா? அஞ்சலி எஸ்கேப்!

6/22/2011 11:49:26 AM

அஞ்சலி கூறியது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் சரவணன் இயக்கும் 'எங்கேயும் எப்போதும்’ ஷூட்டிங்குக்காக திருச்சி, விழுப்புரம் என ஊர் ஊராக சுற்றி வந்தேன். தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். 'கருங்காலிÕயில் கல்யாணம் ஆன பெண், 'மகராஜாÕவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்பவள். 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்Õல் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறேன். கேரக்டர், தயாரிப்பு பேனர் இதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை ஏற்பதில்லை. அதே போல் 5 அல்லது 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் வேடம் என்றால்கூட ஏற்பதில்லை. அதற்கு இன்னும் வயது இருக்கிறது. படத்துக்கு முக்கியமென்றால் கிளாமராக நடிப்பேன். தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. சம்பளம் ஏற்றிவிட்டீர்களா என்கிறார்கள். எனக்கு என்ன சம்பளம் தர வேண்டுமோ அதைத்தான் தருகிறார்கள். நானாக சம்பளம் ஏற்ற மாட்டேன். உயர்த்தி தர வேண்டிய நேரம் வரும்போது தானாக உயரும்.

 

மராத்தியில் நடிப்பது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மராத்தியில் நடிப்பது ஏன்?

6/22/2011 11:46:08 AM

மராத்தியில் 5 படங்களில் நடித்து வருவதாகச் சொன்னார் தேஜாஸ்ரீ. அவர் கூறியதாவது: தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மராத்தி பட உலகுக்கு வந்தேன். மராத்தியிலும் தென்னிந்திய படங்களின் கதைக்கு இணையாக, பிரமாண்டமான படங்களை உருவாக்குகிறார்கள். மராத்தி தெரியும் என்பதால், நானே டப்பிங் பேசுகிறேன். 'சம்பா' என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக, ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருக்கிறேன். மராத்தி படமாக இருந்தாலும், தெலுங்கு பட சாயலில் காட்சிகளை அமைத்து ஷூட்டிங் நடத்துகிறார்கள். தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மீண்டும் அழைக்கிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை.

 

12 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவ கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

12 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவ கதை

6/22/2011 11:44:48 AM

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படம், 'பிள்ளையார் தெரு கடைசி வீடு'. ஜித்தன் ரமேஷ் ஹீரோ. சஞ்சிதா படுகோன், சுஹாசினி ஹீரோயின்கள். படத்தை இயக்கும் திருமலை கிஷோர் கூறியதாவது: ரமேஷ் தங்கை அகிலாவின் தோழி சஞ்சிதா. விடுமுறைக்காக ஊருக்கு வருகிறார். ரமேஷ் அவரை காதலிக்கிறார். ரமேஷின் பெற்றோர், சுஹாசினியை மணம் முடிக்க பேசுகின்றனர். திகைக்கும் ரமேஷ், பெற்றோர் பேச்சை மீற முடியாமல் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் கதை. 12 வருடங்களுக்கு முன் திருப்பதி எஸ்.வி கல்லூரியில் நான் படித்தபோது, நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். சமீபத்தில் சிம்பு உட்பட பல இளம் ஹீரோக்கள் படம் பார்த்து ரமேஷின் நடிப்பை பாராட்டினர். இதுவரை 'ஜித்தன் ரமேஷ்' என்றவர்கள், இனி 'பிள்ளையார் தெரு ரமேஷ்' என்பார்கள். அந்தளவு சிறப்பாக நடித்துள்ளார். 24ம் தேதி ரிலீசாகிறது.

 

தமிழில் காஜல் தங்கை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் காஜல் தங்கை!

6/22/2011 11:42:34 AM

'பொம்மலாட்டம்', 'பழனி', 'மோதி விளையாடு', 'நான் மகான் அல்ல' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால். நிஷா தெலுங்கில் நடித்து வருகிறார். இப்போது விமல் ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, பிரேம் நிஸார் இயக்குகிறார். பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் சார்பில் ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார். 'இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் என் கனவு நனவாகி உள்ளது. மும்பையை சேர்ந்தவள் என்றாலும் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன்' என்றார் நிஷா.

 

ஹீரோ ஆனார் பிரபு மகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ ஆனார் பிரபு மகன்

6/22/2011 11:38:29 AM

'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்தப் படத்தில் சிவாஜி பேரனும், பிரபு மகனுமான விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக, மலையாள நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். விக்ரம், லட்சுமி மேனன் ஆகியோரின் பெயர்கள் சினிமாவுக்காக மாற்றப்படுகிறது. இதில் நடிப்பதற்காக, விக்ரமுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள ஒட்டப்பாளையத்துக்கு அடுத்த மாதம் 5ம் தேதி செல்லும் விக்ரம், மகாதேவன் என்ற யானையுடன் பழகுகிறார். 20 நாட்கள் ஒட்டப்பாளையத்தில் தங்கி, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும், நடை, உடை, பாவனைகள் குறித்தும் தெரிந்துகொள்கிறார். மேலும், தன் கேரக்டருக்காக தாடி, மீசை, நீளமான தலைமுடி வளர்க்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் அரக்குவேலி, ஒட்டப்பாளையம் மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. குட்டி யானைகள் ஏராளமாகக் காணப்படும் தாய்லாந்து நாட்டில், டங்குமய் என்ற இடத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் படமாகின்றன.

 

மிஷ்கினின் முகமூடியில் ஜீவா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மிஷ்கினின் முகமூடியில் ஜீவா

6/22/2011 11:37:49 AM

மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' படத்தில் ஜீவா, ஹீரோவாக நடிக்கிறார். 'கோ' ஹிட்டுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் நடித்து வருகிறார் ஜீவா. இதையடுத்து மிஷ்கின் இயக்கும் 'முகமூடி'யில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதையான இதில் நரேன் இன்னொரு ஹீரோ. இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ரொமான்டிக் திரில்லர் படத்திலும் ஜீவா நடிக்கிறார். இதை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ஜாகீர்கானூடன் வாழ்கிறேனா?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

ஜாகீர்கானூடன் வாழ்கிறேனா?

6/22/2011 11:40:50 AM

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுடன் சேர்ந்து வாழவில்லை என்றார் இந்தி நடிகையும் நடன கலைஞருமான இஷா ஷெர்வானி. கடந்த சில வருடங்களாக பழகி வரும் இஷாவும் ஜாகிரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த வருட இறுதிக்குள் ஜாகீர்கானுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். எனவே இஷாவைத்தான் ஜாகீர் திருமணம் செய்வார் என்று தகவல்கள் வெளியானது. இதுபற்றி இஷா கூறியதாவது: நான் ஜாகீர்கானுடன் சேர்ந்து வாழ்வதாக தகவல் பரப்பி விடுகிறார்கள். நான் அவருடன் சேர்ந்து வாழவில்லை. எதிர்காலத்தில் அவரை திருமணம் செய்யும் திட்டமும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. இந்த செய்திகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் என் குடும்பத்தினர் இதை படித்து விட்டு கவலை அடைகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பிரபலமாக இருப்பவர்கள் அந்த பிரபலத்துக்கு கொடுக்கும் விலை இது என்று நினைக்கிறேன். ஆனாலும் மிகவும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்ரூபவம்' படத்தில் நடிப்பது பற்றி கேட்டதற்கு அவர் பதில்சொல்ல  மறுத்துவிட்டார்.

 

அம்மா ஆகிறார் ஐஸ்வர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அம்மா ஆகிறார் ஐஸ்வர்யா!

6/22/2011 10:19:46 AM

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் ஆனது உறுதியாகி உள்ளது. ‘நான் விரைவில் தாத்தா ஆகப் போகிறேன்’ என்று ட்விட்டரில் அமிதாப்பச்சன் மகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும், கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாத வதந்தியாகவே உலா வந்தது. இந்நிலையில் தன் மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதை தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். ட்விட்டரில் அவர் எழுதிய செய்தியில், ‘நான் விரைவில் தாத்தா ஆகப் போகிறேன். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

 

நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!


முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.

இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார். ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார் விஜய்.

சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.

வீடியோ

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்ப...
 

ரஜினிக்காக அண்ணன் சத்யநாராயணா ராவ் 3 நாட்கள் தொடர் பூஜைகள்


பெங்களூரு: சிகிச்சை முடிந்து, சிங்கப்பூரில் ஓய்விலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நலமுடன் திரும்பி வரவும், புதிய வேகத்துடன் கலைத் துறையில் சாதனை படைக்கவும் அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெயக்வாட் பெங்களூர் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்புப் பூஜை மற்றும் யாகம் நடத்தினார்.

பெங்களூர் கோவிபுரத்தில் உள்ள அம்பா பாவனி கோயிலில் காலை 8.30 மணிக்கு பூஜை தொடங்கியது. பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த பூஜைகள் இன்று வரை 3 நாட்கள் நடந்தன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

இது பற்றி சத்யநாராயணா கூறுகையில், "மருத்துவமனையிலிருந்து தம்பி ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவருக்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனைக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

விரைவில் ராணா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு நடிப்பார். அதற்கு ஏற்ற வகையில் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டி இங்கு சிறப்பு பூஜை, பிரார்த்தனை செய்தோம்," என்றார்.
 

70வது பிறந்த நாள் கொண்டாடிய 'பஞ்சு'!


பஞ்சு அருணாச்சலம்... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

நூற்றுக்கும் அதிகமான படங்களின் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, காலத்தை வென்ற பல நூறு பாடல்களை இளையராஜா இசையில் தந்தவர், இயக்குநர் என அஷ்டாவதானி.

ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பல படங்களின் தயாரிப்பாளர் இவரே.

இந்த ஆண்டு அவருக்கு 'பீமா ரத சாந்தி' (70 வது பிறந்த நாள்). இந்த பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் பஞ்சு அருணாச்சலம். விழாவில் நடிகர் கமல்ஹாஸன், இளையராஜா, சோ என பலரும் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.

இதுகுறித்து பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு கூறுகையில், "அப்பாவின் பிறந்த நாளை சொந்த ஊரான காரைக்குடியில் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரஜினி சாரும் அவரது நண்பர் கமல்ஹாஸனும் சென்னையில் தங்கள் முன்னிலையில் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினி சார் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் போனில் வாழ்த்தினர் ரஜினியும் லதாவும். கமல்ஹாஸன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்," என்றார்.
 

இடுப்புக் கீழே 'எடுக்காதே'! - ஸ்ரேயா கடுகடு!


தம்மாத்தூண்டு டாப்ஸ்... எப்போது நழுவுமோ என பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்... இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.

சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்... சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

உடனே ஒரு போட்டோகிராபரை அழைத்த ஸ்ரேயா, அவர் எடுத்திருந்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். அவருடம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார்.

வேறு வழியின்றி அவரும் அழிக்க, "இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கீழே எல்லாம் எடுக்கக் கூடாது", என கடுமையாகக் கூறினார்.

"நான் மட்டுமா எடுத்தேன்... எல்லாரும்தான் எடுத்திருக்காங்க. அப்படியே எடுக்கக் கூடாது என்றாலும், பொது நிகழ்ச்சிக்கு வரும் ஸ்ரேயா போன்றவர்கள் இந்த அளவு கவர்ச்சியாக வந்தால் என்ன செய்வது? நான் எடுக்காவிட்டாலும் மற்றவர்கள் எடுக்கத்தானே செய்வார்கள்," என்றார் கோபமாக.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, " எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன்," என்றார்.

நாள் முழுக்க ஹெவி கேமரா ப்ளாஷில் இருப்பதுதான் ஸ்ரேயாவின் தொழிலே. அவரை இந்த சின்ன ஸ்டில் கேமரா ப்ளாஷ் பாதித்துவிட்டது என்றால்... என்ன சொல்றது போங்க!
 

ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்


தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.

37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது. 2007ம் ஆண்டு அவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோராகும் நாளை அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதுதொடர்பாக பல்வேறு விதமான தகவல்களும் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதாக அவருடைய மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் அமிதாப்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 2843 டி்விட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமிதாப்.

எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த செய்தியையும், ஐஸ்வர்யாவுக்கு இப்போது எத்தனையாவது மாதம் என்பதையும் அமிதாப் கூறவில்லை.

ஐஸ்வர்யாவைப் போல அழகான குழந்தை பிறக்க வாழ்த்துவோம்.

 

பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!


நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகன் ஆனார். பிரபு சாலமன் டைரக்டு செய்யும் புதிய படத்தில், அவர் அறிமுகமாகிறார்.

மறைந்த `நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபு. 1982-ம் வருடம், சங்கிலி என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகம் செய்தார் சிவாஜி. அதன் பிறகு கதாநாயகனாக உயர்ந்த பிரபு, பல வெற்றிப் படங்களின் நாயகன்.

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் பிரபுதான். சின்னத் தம்பி படம் அவரது வெற்றியின் சிகரம்.

இவருடைய மகன் விக்ரம் பிரபு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் அகடமியில், திரைப்பட தொழில்நுட்பம் படித்தவர். இவரை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு பல பட நிறுவனங்கள் முன்வந்தன. தகுந்த சந்தர்ப்பத்துக்காக விக்ரம் பிரபு காத்திருந்தார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் பிரபு நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை மைனா படம் தந்த பிரபு சாலமன் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

விக்ரம் என்ற பெயரில் ஏற்கனவே பிரபல நடிகர் இருப்பதால், இவருடைய பெயர் மாற்றப்படுகிறது. இந்தப் படத்தில் படத்தில், இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவருடைய பெயரும் மாற்றப்படுகிறது.

யானைகள் பற்றிய படம்…

இந்தப் படம் யானைகளின் வாழ்நிலையை பின்புலமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சமீபகாலமாக, காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.

இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில், “ஊருக்குள் வந்து மக்களையும் பயிர்களையும் நாசம் செய்யும் யானைகளை விரட்ட, வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கும்கி யானைகள் என்று பெயர். அந்த கும்கி யானைகள் பற்றியும் கதையில் சொல்லப்படுகிறது. கதைப்படி, படத்தின் கதாநாயகன், கும்கி யானையின் பயிற்சியாளர்.

அந்த கதாபாத்திரத்துக்கான நாயகனை தேடி 6 மாதங்களாக பல ஊர்களில் அலைந்தேன். விக்ரம் பிரபுவை சமீபத்தில்தான் பார்த்தேன். என் கதைக்கும், நான் கற்பனை செய்திருந்த கதாபாத்திரத்துக்கும் அவர் நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார்.

அவரை, யானைகளுடன் பழகவிடுவதற்காக, கேரள மாநிலம் ஒத்தப்பாளையத்துக்கு அனுப்ப இருக்கிறேன். 15 நாட்கள் யானைகளுடன் அவர் பழகியபின், படப்பிடிப்பு தொடங்கும்,” என்றார்.

ஏற்கெனவே சிவாஜியின் பேரன்கள் துஷ்யந்த், ஜூனியர் சிவாஜி ஆகியோர் சினிமாவில் அறிமுகமானது நினைவிருக்கலாம்.

 

நடிகை வாணிஸ்ரீயின் ரூ 3 கோடி நிலம் ஆக்கிரமிப்பு!


சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ 3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த கல்லூரி பெண் முதல்வரும் அவர் தங்கையும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவர்கள் ஆக்கிரமித்த நிலத்துக்குக்குப் பக்கத்திலிருந்த தன்னுடைய நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நடிகை வாணிஸ்ரீ புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்கம் (வயது 72). இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனது ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டு விட்டது என்றும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் நில விற்பனை மோசடியில், சென்னை கெல்லீசில் வசிக்கும் பிரேமகுமாரி (69) என்ற பெண்ணும், அவரது தங்கை சந்திரநாதம்(53) என்பவரும், போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது.

இதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பிரேமகுமாரி ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஆவார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறும்போது, குறிப்பிட்ட நிலம் தனது அண்ணனின் நிலம் என்றும், அதன் உண்மையான ஆவணங்கள் தன்னிடம் இருந்ததாகவும், அந்த நிலத்தை வாங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கேட்டதற்கிணங்க அந்த ஆவணங்களை கொடுத்ததாகவும், அதற்கு ரூ.10 லட்சம் மட்டும் தந்தார்கள் என்றும், இதில் மோசடி வேலைகள் நடந்தது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் தேடி வருகிறோம் என்றும், பிரேமகுமாரிக்கு குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நடிகை வாணிஸ்ரீ நிலமும் ஆக்கிரமிப்பு

இந்த குறிப்பிட்ட நிலம் அருகே உள்ள நிலம் தனக்கு சொந்தம் என்றும், ரூ.3 கோடி மதிப்புள்ள அந்த நிலமும் ரியல் எஸ்டேட் கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயும் புகார் கொடுத்துள்ளார். அதுவும் விசாரணையில் இருப்பதாகவும், அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.