'பொறணி' பேசும் பா.. பூ!

Tags:



இரண்டு பேர் சேர்ந்து பேசினாலே அடுத்தவர்களைப் பற்றி பொறணி பேசுவதைத் தவிர்க்க முடியாது. அதிலும் பெண்கள் சேர்ந்து பேச ஆரம்பித்தால் பொறணிதான் அதில் தலையாயதாக இருக்கும். அந்த வகையில் சமீப காலமாக இரண்டு நடிகைகள் பேசி வரும் பொறணிதான் கோலிவுட்டில் கலகலப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

காரணம் இந்த இரு நடிகைகளும் ஒன்று சேர்ந்து விட்டால், சக ஹீரோக்கள், மற்ற ஹீரோக்கள் குறித்துதான் அதிகம் பேசுகிறார்களாம்.

பாவனா, பூர்ணாதான் அந்த இரு சிநேகித நடிகைகள். திருச்சூரைச் சேர்ந்த பாவனாவும், கொச்சியைச் சேர்ந்த பூர்ணாவும் நெருக்கமான சினேகிதகளாம். அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடியவர்கள். அப்படிப் பேசும்போதெல்லாம் கிசுகிசுக்களைத்தான் அதிகம் பரிமாறிக் கொள்கிறார்களாம்.

தங்களுடன் நடித்த ஹீரோக்களைப் பற்றித்தான் விழுந்து விழுந்து பேசுவார்களாம். நமுட்டுச் சிரிப்புடன் ஹீரோக்களைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும்போது அந்த இடமே படு கலகலப்பாகி விடுமாம்.

இவர்களின் வாயில் சிக்கித் தவிக்கும் ஹீரோக்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

இதில் என்ன காமெடி என்றால் இவர்களைப் பற்றித்தான் நிறைய வதந்திகளும் உலா வந்தபடியே உள்ளது. பாவனாவை தெலுங்கு நடிகர்கள் சிலருடன் இணைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வதந்திகள் வந்துள்ளன. பூர்ணாவை தமிழ் நடிகர்கள் சிலருடன் இணைத்து அடுத்தடுத்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இவர்களோ அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் மற்றவர்களைப் பற்றி வம்பளந்து வருவதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.

 

41வது பிறந்த நாள்-எளிமையாக கொண்டாடிய மாதவன்

Tags:



இளம் பெண்களின் உள்ளம் கவர் நாயகர்களில் ஒருவராக சில காலத்திற்கு முன்பு வரை விளங்கிய மாதவன் தனது 41வது பிறந்த நாளை சத்தமின்றி, எளிமையாக கொண்டாடி முடித்துள்ளார்.

புதன்கிழமை மாதவனுக்குப் பிறந்த நாளாகும். இதை எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் கொண்டாடினார் மாதவன். நீண்ட காலத்திற்கு முன்பே பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டாராம் மாதவன். பார்ட்டிக்கோ, வேறு எந்தவிதமான கொண்டாட்டத்திலோ அவர் ஈடுபடுவதில்லை.

மாறாக அன்று முழுவதும் வீட்டிலேயே இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவாராம்.

தனது 41வது பிறந்த நாளையும் கூட மனைவி, மகனுடன் ஜாலியாக வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தாராம்.

மன்மதன் அம்பு படத்திற்குப் பின்னர் தற்போது வேட்டை படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அப்படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த மெனக்கெடுதலில் ஈடுபட்டுள்ளாராம்.

 

சினிமா கலைஞர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை

Tags:


சென்னை: சென்னையில் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஒருவரின் வீட்டில் 80 பவுன் நகைகளும், ரூ. 6 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெசன்ட் ரோடு முதல் தெருவில் வசித்து வரும் காஜா மொய்தீன் (60) சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் வந்தவாசி சென்றார். நேற்றிரவு இவர்கள் வீடு திரும்பியபோது பீரோ லாக்கரில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் பணம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மாயமாகியிருந்தன.

இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டின் பூட்டும், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரின் பூட்டும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் யாரோ கள்ளச் சாவிகளைப் போட்டு வீட்டைத் திறந்து, பீரோ, லாக்கர்களையும் திறந்து கொள்ளையடித்துள்ளனர்.

காஜா மொய்தீன் குடும்பத்துக்கு தெரிந்த யாரோ தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
 

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!

Tags:



சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு ரஜினியைப் பார்த்த கமல்-இருவரும் அழுத உருக்கம்!

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, கலைஞானி கமல்ஹாசன் சந்தித்து உருக்கமாக பேசிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டதாகவும், மிகவும் நெகிழ்ச்சியானதாக அந்த சந்திப்பு அமைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிகிச்சைக்காக ரஜினியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக ரஜினிகாந்த்தை, ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து கலங்கி விட்டாராம் கமல். மிகவும் உருக்கமாக, ஆறுதல் கூறி ரஜினியிடம் பேசிய கமல், நானும் சிங்கப்பூர் வரை கூட வரட்டுமா என்றும் கவலையுடன் கேட்டுள்ளார். இதைக் கேட்டு நெகிழ்ந்த ரஜினி, பரவாயில்லை, இந்த அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாறாக இருவரது கண்களும் பனித்துள்ளன.

இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

அதன் பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கமல், ரஜினியிடம், எனக்கு ராணாதான் போட்டி. நீங்கள் குணமடைவீர்கள், குணமடைந்து வந்து ராணாவில் நடிப்பீர்கள் என்று தைரியம் கூறி பேசியுள்ளார்.

ரஜினியை கமல் சந்தித்த இந்த உருக்கமான சந்திப்பு குறித்துதான் இப்போது கோலிவுட் முழுவதும் உணர்ச்சிகரமாக பேசி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ரஜினியை சந்திக்க யாரையுமே அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. கமலே கூட பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் கமல் பெரும் வேதனையும், ரஜினி குடும்பத்தார் மீது சற்று வருத்தமும் அடைந்தார். ரஜினியைப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா என்று கூட ரஜினியின் மனைவி லதாவிடம் அவர் உரிமையுடன் கோபித்துக் கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் ரஜினி சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்பு அவரே கமல்ஹாசனை பார்க்க விரும்பியதால்தான் கமல்ஹாசன்-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

 

உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்ததே-வைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக்!

Tags: ldquo, rdquo



தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வைரமுத்து,

திமுக தலைவர் கருணாநிதி கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா? என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன். அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார்.

நான் 6வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லிச் சிரித்தார்.

அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?. அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். ஆனால், எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி என்றார்.

நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன், கவிஞர் அப்துல் காதர், குஷ்பு, திண்டுக்கல் லியோனி உள்ளி்ட்டோரும் பேசினர்.

 

என்னால் நல்ல கணவனாக இருக்க முடியாது: சல்மான் கான்

Tags:



4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்துவிட்டேன், என்னால் நல்ல கணவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது என்று இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.

46 வயதாகும் சல்மான் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடன் அறிமுகமான ஷாருக் கான் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். அமீர் கான் முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

ஆனால், சல்மான் கான் ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், உள்ளிட்டோரை காதலித்தார்.
பின்னர் அந்தக் காதல்களும் தோல்வியில் முடிந்தன. இப்போது ஆசின், கங்கனா, சோனாக்ஷி ஆகியோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் சல்மான்.

மான் வேட்டை, அடிதடி, கோர்ட், சிறை வாழ்க்கை, மிரட்டல், மோதல் என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் சல்மான் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார். அனாதை இல்லங்களுக்கு இவர் பெருமளவில் உதவிகள் செய்து வருகிறார்.

ஆனாலும் அவருக்கு இதுவரை திருமணம் கைகூடவில்லை. இந் நிலையில் திருமணம் குறித்து சல்மான் கூறுகையில், நான் ரொம்ப கஷ்டமான பேர்வழி. என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. என் குணாதிசயம் அப்படி.

இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும் அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். ஆனால், அவர்களுடனான உறவைக் கூட என்னால் நீடிக்க முடியவில்லை.

என் காதல்கள் தோற்றதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறுகளால் தான் அவை முறிந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது.

இதனால் நான் திருமணத்தை பற்றி யோசிப்பதைக் கூட விட்டுவிட்டேன். இதனால் கல்யாணம் எப்போது என்று கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

அதே நேரத்தில் நான் இன்னும் காதலிப்பதை விட்டுவிடவில்லை… என் வயதில் பாதி வயதில் உள்ள சிலரை நான் இன்னும் காதலித்துக் கொண்டு தானே இருக்கிறேன் என்றார்.

 

ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்

Tags:



பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு நடிகர் ஷாருக் கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள புதிய திரைப்படமான ரா.ஒன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் பேசிய ஷாருக், யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவர் தலைவராகிவிட்டால், உடனே, இது மாதிரியான வேலைகளில் குதி்ப்பது வழக்கமாகிவிட்டது.

ஒருவர் அவரது வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய முயலக் கூடாது. அது போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும் முடியாது. ராம்தேவின் நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழ வேண்டும். இப்போது பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்துவிட்டது நிச்சயம் பெரும் கவலை தருகிறது என்றார்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, சினிமாகாரனான நான் ஏன் அரசியலுக்கு வருவானா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளை சினிமாவுக்கு வரச் சொல்ல வேண்டியது தானே. எனக்கு அரசியல் புரிவதும் இல்லை, சரிப்படவும் செய்யாது. நான் ஒரு சுயநலக்காரன். என்னை ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பொது மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வதை ரசிப்பவன்.

நேர்மையானவர்கள் தான் எனக்கு குருக்கள். கிருஷ்ணர், துரோணாச்சாரியார், ஏன் ராவணன் ஆகியோர் தாங்கள் கொண்ட கொள்கையில் துளியும் நிலை மாறாமல் நின்றனர். அந்த அளவுக்கு மன பலம் அவர்களிடமிருந்தது ஆச்சரியமான விஷயம் என்றார்.

ஷாபானா ஆஸ்மி வரவேற்பு:

அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தி நடிகை ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார்.

 

ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம்

Tags:


ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

“ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற ஹாலிவுட் படத்தில் இசையமைத்ததற்கும், ஜெய்கோ பாடலுக்கும் சேர்த்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர். ரகுமான் பெற்றார்.

ஆனால் இந்த விருது பணம் கொடுத்து வாங்கப்பட்டதாக மும்மையைச் சேர்ந்த இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் என்பவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமாவினரிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்மாயில் தர்பாரை கண்டித்து திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகப்புகழ் பெற்றவர்

அதில்,

இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. திரைக்கலைஞர்களின் லட்சிய கனவான ஆஸ்கார் விருதை 2009-ல் ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறிய வார்த்தைகளை கேட்டு தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது.

மலிவான விளம்பரம்

தமிழ் மன்னர் புகழை பழித்து கல் சுமந்த கசடர்களான கனசவிசயர் வழித் தோன்றலாய் இப்போது ஒரு இஸ்மாயில் தர்பார் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானை பழித்து விளம்பரம் தேடியுள்ளார்.

அதாவது, “ஜெய்ஹோ” பாடல் ரகுமானுக்கு உரியதில்லை என்றும் காசு கொடுத்து ஆஸ்கார் விருதை வாங்கியுள்ளார் என்றும் அவர் வசை பாடியுள்ளார். ஏ,ஆர்.ரகுமான் இசை தனித்துவம் வாய்ந்தது. நவீன தன்மைகளை உள்ளடக்கியது.

அருகதை இல்லை

அவர் இசையை பருகி உலகமே ஆனந்த கூத்தாடுகிறது. ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை. ஆஸ்கார் விருதை பற்றி அவதூறு கூறியதன் மூலம் இப்படியும் அனாமதேய பேர் வழிகள் விளம்பரம் பெற்று விடுகிறார்கள்.

ஆனால் வித்தக கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு எள்ளவு கூட களங்கம் கற்பித்து விட முடியாது. ஆஸ்கார் விருது குழுவின் 30 உறுப்பினர்களையும் காசு கொடுத்து விலைக்கு வாங்குவது என்பது இஸ்மாயில் தர்பாரின் கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ளார் அவர்.