ஜெயலலிதா விடுதலை... தமிழ் திரையுலகம் உற்சாகம்.. கொண்டாட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து எந்த வித சிக்கலுமின்றி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாகியிருப்பதை தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது.

திமுக ஆட்சியின்போது தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிருந்தும் விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பெரும் தலைவலியாய் அமைந்தது இந்த சொத்துக்குவிப்பு வழக்கு.

Kollywood celebrates then verdict on Jaya's wealth case

இந்த வழக்கிலிருந்து இன்று முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

இதனை திரையுலகின் அனைத்து சங்கங்களும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், பிலிம்சேம்பர் உள்ளிட்ட அமைப்புகள், ஜெயலலிதாவின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் இந்த சொத்து வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது திரையுலகினருக்கும் அதிமுவினருக்கும் மிகுந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அனைத்து திரைப்பட அமைப்புகளும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்வையும் தெரிவித்தன.

அது மட்டுமல்ல, இன்று நடப்பதாக இருந்த வடிவலுவின் எலி பிரஸ் மீட்டைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஜெயலலிதாவின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றனர்.

விரைவில் 'அம்மா'வைச் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைக் கூறவும் திட்டமிட்டுள்ளனர்.

 

அன்னையர் தினத்தன்று தங்கையுடன் போய் ஆதரவற்றோருக்கு உணவு துணி வழங்கிய விஷால்!

அன்னையர் தினமான நேற்று, தன் தங்கையுடன் ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்குப் போன விஷால், அங்கிருந்த அனைவருக்கும் உணவு உடை வழங்கினார்.

அன்னையர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் அன்னையர் தினத்தை வெகுவாக கொண்டாடினர்.

Vishal's noble gesture on Mother's day

நடிகர் விஷால் தனது தங்கை ஐஸ்வர்யாவுடன் சென்னை கீழ்ப்பாக்கம் சர்ச்சில் அமைந்துள்ள மெர்சி ஹோமில் உள்ள 200 முதியவர்களுக்கு உணவு, மற்றும் துணிமணிகள் வழங்கி அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

விஷாலையும், அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் அனைவரும் அன்போடு வாழ்த்தினர்.

விஷால், தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘பாயும் புலி' உள்ளிட்ட 3 படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். படங்களைத் தயாரித்துக் கொண்டும் உள்ளார்.

 

ஏழைக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய லட்சுமி ராய்!

ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் நடிகை லட்சுமி ராய்.

நடிகை லட்சுமி ராய்க்கு இன்று பிறந்த நாள். வழக்கமாக தனது பிறந்த நாள் அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் செல்லும லட்சுமி ராய், அங்குள்ளவர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

இந்த ஆண்டும் சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்றார் லட்சுமி ராய்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய அவர், பின்னர் இனிப்புகள் வழங்கினார். அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள் உள்பட பல உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கினார்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

அவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறினார். அவர் கூறுகையில், " ஆண்டு தோறும் என் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாட நினைக்கிறேன். விரும்புகிறேன். சில ஆண்டுகளில் ஷூட்டிங்கில் இருந்தாலும்கூட, இந்த உதவு சரியாக போய்ச் சேர வேண்டும் என்பது என் ஆசை," என்றார்.

 

'வெள்ளாவி'ப் பொண்ணுக்கு வெளையாட்டு வீரருடன் காதலாமே!

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை டாப்சி வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பாட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கூறப்படுகிறது

அவரின் பெயர் மத்தியாஸ்போ என்றும் அவர் எங்கு விளையாடினாலும் டாப்சி அங்கு சென்று தனது காதலை வளர்த்து வருகிறாராம்.

Taapsee Fell Down  In Love

இவர் நடித்து வெளிவந்த காஞ்சனா 2 , வை ராஜா வை ஆகிய இரு படங்களும் வெளிவந்து வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்று இருக்கின்றன

ஆடுகளம் படத்தில் முதன்முதலில் அறிமுகமான இவருக்காகவே யாத்தே யாத்தே பாடலில் உன்ன வெள்ளாவி வச்சுத் தான் வெளுத்தாங்களா என்று பாடல் வரிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய விழா ஒன்றில் இவர் பங்கேற்ற போது பத்திரிக்கையாளர்கள் இவரின் காதலைப் பற்றி கேட்டனர். காதலிக்கவில்லை என்று மறுக்கவும் இல்லை காதலிக்கிறேன் என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.

டென்மார்ர்க்கை சேர்ந்த பாட்மிண்டன் வீரரான இவரின் வயது 34. காதலைப் பற்றி எனது பெற்றோரிடம் கலந்து பேசுவேன் என்று கூறி இருக்கிறார்.

 

இந்த நாள் தமிழருக்கு ஒரு பொன்னாள்! - ஃபெப்சி வாழ்த்து

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி இருக்கும் இந்த நாள் தமிழருக்கு பொன்னாள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஃபெப்சி வாழ்த்தியுள்ளது.

இன்று ஃபெப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சிவா, பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

FEFSI wishes Jayalalithaa

பல தடைகளைக் கடந்து தன்மேல் போட்ட பொய்யான வழக்குகளை தகர்த்தெறிந்து நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தி நியாய தேவதையாக, தர்மத்தின் தலைவியாக விடுதலை பெற்றிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் இதயத்தில் வாழும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விடுதலை நாள் தமிழருக்கு ஒரு பொன்னாள்.

இந்நாளிலே விடுதலை பெற்ற அம்மா அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மீண்டும் நடிக்க வந்த முன்னாள் முதல்வரின் மனைவி

பெங்களூர்: முன்னால் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் வெளிவந்த இயற்கை படத்தில் காதல் வந்தால் சொல்லி அனுப்பு என்று நடிகர் ஷாம் உருகி உருகி பாடுவாரே ஆம் அதே ஹீரோயின் தான்

Ex. Chief Minister Wife Again started acting

வர்ணஜாலம் , மீசை மாதவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்

2006 ல் முன்னால் முதல்வர் குமாரசமியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்குஒரு மகள் இருக்கிறார் நீண்ட வருடங்கள் கழித்து தற்போது கணவரின் சம்மதத்துடன் நடிக்க வந்துள்ளார்

இவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஐ ஹேட் டான்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது நடனத்தை மையமாக கொண்ட இப்படத்தை இயக்குனர் ரகு ராம் இயக்க உள்ளார்

கணவரின் சம்மதத்துடன் தொடர்ந்து நடிக்க இருப்பதாக திட்டமிட்டு இருக்கிறார் நடிகை குட்டி ராதிகா

 

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பால் வடிவேலுவின் ”எலி” பிரஸ் மீட் கேன்சல்

சென்னை: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பால் இன்று மாலை ஆறு மணி அளவில் நடைபெற இருந்த பிரஸ் மீட்டை கேன்சல் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான நடிகர் வடிவேலு கடந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டு தனது மார்க்கெட்டை இழந்தார்.

மீண்டும் பல வருடங்கள் கழித்து தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த வடிவேலு தற்போது எலி என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வந்தார் .

Jayalalitha Judgement Today Actor vadivelu Cancelled His own press meet

பிரஸ் மீட்

எலி படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர உள்ளது இதற்கான பிரஸ் மீட் இன்று மாலை ஆறு மணி அளவில் நடை பெற இருந்தது.

ஜெயலலிதா தீர்ப்பு

இன்று ஜெயலிதா தீர்ப்பு வெளிவரும் நிலையிலும் வடிவேலு பத்திரிக்கை யாளர் சந்திப்பை நடத்த இருக்கிறாரே என்று அனைவரும் வியந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பிரஸ் மீட்டை ரத்து செய்ததாக வடிவேலு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியது.

முன்னேற்பாடாக ரத்தான நிகழ்ச்சிகள்

சூர்யா நடித்த மாஸ் திரைப் படத்தின் பிரஸ் மீட், பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொதுக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று நடை பெறுவதாக இருந்தது ஆனால் சில நாட்களுக்கு முன்னரே இவற்றை கேன்சல் செய்து விட்டனர்.

எலி உரிமையை கைப் பற்றிய ஜெயா

இந்நிலையில் எலி படத்தின் உரிமையை ஜெயா டிவி வாங்கி விட்டதாகவும் எல்லாம் முடிந்து மேலிட உத்தரவுக்காக காத்திருப்ப தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் "கண்மணி"...!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆந்திர போலீசாரால் காப்பற்றப்பட்டார்

தெலுங்கு நடிகை ரூபா கவூர் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆந்திர காவல் துறையினரால் காப்பற்றப் பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்:

ஆட்டோ பாரதி அந்தஹ் புரம் , சந்திரமுகி மற்றும் சிகாரம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து ஆந்திர மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். தனது உறவினர் கேவல் சிங்கை காதலித்த இவர் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்

கேவல் சிங் இவர் நடிக்கத் தடை சொல்லியதால் மனமுடைந்த இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட இவர் தற்போது பூரண நலத்துடன் உள்ளார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சித்தியே போதும்… குயின் நடிகையின் முடிவு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த குயின் நடிகைக்கு சீரியலில் கிடைத்தது என்னவோ சின்னச் சின்ன கதாபாத்திரங்கள். சினிமாவிலும் தோழி வேடத்தில் நடித்து வந்தார். திடீரென்று சின்னத்திரை வேண்டாம், சினிமாவே போதும் என்று முடிவெடுத்தார். போட்டோ ஷூட் நடத்தி உலாவ விட்டார். ஆனாலும் ஒரு சில படங்கள் தவிர வாய்ப்புகள் குவியவில்லை.

சீரியல் பக்கம் ஒதுங்கிவிடலாமா என்று யோசித்தவருக்கு இதிகாச தொடரில் வாய்ப்பு கிடைக்கவே மீண்டும் சின்னத்திரையில் தலைகாட்டத் தொடங்கினார். சித்தி நடிகையின் நிறுவனம் தயாரிக்கும் 2 சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இதுவரை 25 படங்கள் 50 சீரியல்களை முடித்து விட்டாராம் நடிகை. சீரியல் வேண்டாம் சினிமாவே போதும் என்று ஒதுங்கியவரை சித்தி நடிகைதான் மீண்டும் சீரியலுக்கு அழைத்து வந்தாராம். சித்தி தயாரிக்கும் 2 சீரியல்களில் ஒன்று வில்லியாகவும் மற்றொன்றில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். இதுவே போதும் என்கிறார். காரணம் சித்திதான் காட்மதராம். அவருடைய தொடரில் நடித்தாலே போதும் வேறு தொடர்களில் நடிக்க நேரமில்லை என்று கூறி மறுத்து விடுகிறார்.

Juicy Gossips from Small screens

தமிழுக்கு நோ... இந்திக்கு ஒகே...

தமிழ் சீரியலில் நடிக்க பல நடிகைகள் வாய்ப்பு தேடி வரும் நிலையில் மொத்தமாக கும்பிடு போட்டுவிட்டு இந்தி சீரியல்கள் பக்கம் கரை ஒதுங்கி விட்டார் அந்த இளம் நடிகை. மாடலான அந்த நடிகைக்கு சூரிய தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பான அந்த தொடரில் அவரும் நடித்து வந்தார். தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளையும் மறுத்து வந்தார். இடையில் என்ன நடந்ததோ? சீரியலை சட்டென்று நிறுத்திவிட்டது சூரிய தொலைக்காட்சி. அப்பாடா ஆளை விடுங்கள் என்று அந்த நடிகை வடக்குதேசத்திற்கே திரும்பிவிட்டாராம். காரணம் அங்கே இந்திப்பட வாய்ப்புகள் கிடைத்ததுதானம்.

மாடர்ன் மங்காத்தாவான அந்த நடிகை தமிழில் அடக்க ஒடுக்க கேரக்டரில் நடித்தார். இது தனக்கு செட் ஆகாது என்று நினைத்துதான் மீண்டும் வடக்கு பக்கமே சென்று விட்டார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்திப்பட வாய்ப்பும், இந்தி சீரியல் வாய்ப்பும் கிடைத்து வருவதால் தமிழுக்கு மொத்தமாக டாட்டா காட்டி விட்டாராம்.

 

ரோமியோ ஜூலியட்டுக்கு யு

சென்னை: ஜெயம் ரவி ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திற்கு யு சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இது படப்பிடிப்புக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காதல் காட்சிகளும் கிளுகிளுப்பு காட்சிகளும் அதிக அளவில் உள்ள இப்படத்திற்கு ஒரு கட்டும் கொடுக்காமல் தணிக்கை குழுவினர், அனைவரும் கண்டு களிக்கும் வகையில் யு சான்றிதழ் வழங்கி உள்ளனர் .

நிமிர்ந்து நில் படத்திற்குப் பின் ரவி நடித்த எந்த படங்களும் திரைக்கு வராத நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன .

Romio Juliet movie gets U Certificate

ரவி அறிமுகமான முதல் படமே ஜெயமாக அமைந்தது எனவே ஜெயம் என்பது அவரின் அடைமொழியாக கூடவே ஒட்டிக் கொண்டது. அண்ணன் ராஜா இவரை வைத்து எடுத்த படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது என்று ஒரு பேச்சுஎழுந்த பொது பிற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து அந்த முயற்சியில் தோல்வி கண்ட இவர்பேராண்மை,நிமிர்ந்து நில் போன்ற வித்தியாசமான படங்களிலும் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வருகிறார்.

எங்கேயும் காதல் படத்திற்குப் பின் ஹன்சிகாவுடன் இவர் இணையும் இரண்டாவது படம் ரோமியோ ஜூலியட் ,இரண்டுமே காதல் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமான புதிதில் ரவியுடன் இணைந்து நடித்த ஹன்சிகா நீண்ட வருடங்கள் கழித்து முன்னனி நடிகையாக விளங்கும் இப்போது இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குனர் லஷ்மன் இயக்கியிருக்கும் இப்படம் ஏற்கனவே பாடல்களால் பிரச்சினைக்கு உள்ளானது. அதனால் நொந்து போயிருந்த இவர் தற்போது கிடைத்திருக்கும் சான்றிதழ் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். டி. இமான் இசையில் வெளிவர இருக்கும் இப்படத்தில் அனிருத் ஒரு பாடலைப் பாடி உள்ளார்.

 

போச்சு போச்சு... எல்லாம் போச்சு! - சந்தானம் பட விழாவில் புலம்பிய சிம்பு

கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம், பணம், காதலி என சகலத்தையும் இழந்து விட்டேன். என் வாழ்க்கையில் எல்லாமே போய் விட்டது, என்றார் நடிகர் சிம்பு.

நடிகர் சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்' படத்தின் ‘டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்தான் இப்படி உருக்கமாகப் பேசினார் சிம்பு.

I'm a loser, says Simbu

நான்தான் அறிமுகம் செய்தேன்

சத்யம் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் சிம்பு பேசுகையில், ‘‘மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போவதற்கு அவருடைய திறமைதான் காரணம். எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கி கொடுத்தவர், எங்க அப்பா. இங்கு நான் நிற்பதற்கு காரணம், அவர்தான்.

தட்டிவிடத்தான் ஆளிருக்கு...

தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுப்பதற்கு இங்கு சில பேர்தான் இருக்கிறார்கள். என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

பிகரைத் தேடிப் போகவில்லையே...

நிறைய பேர் நான் ஆன்மிகத்தில் போய் விட்டேன் என்று சொல்கிறார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை' தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவன் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடம் கற்றுக்கொடுத்தது.

படம், பணம், காதலி மூணும் போச்சு..

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.

கல்யாணமும் நடக்கலியே...

என்னை விட்டுப் படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது. சரி, நமக்காக ஒரு பெண் இருக்கிறாள். கடைசிவரை அந்த காதலி நம்முடன் இருப்பாள் என்று நினைத்தேன். அவளும் போய் விட்டாள். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதன் சிரிப்பை பார்த்தாவது கஷ்டம் போய்விடும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல், கடவுள் என்னை சோதித்து விட்டார்.

உயிர் இருக்கே...

எல்லாமே என்னை விட்டு போய் விட்டாலும், உயிர் மட்டும் என்னிடம் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிர் இருக்கிறது. இத்தனை கஷ்டங்களை நான் கடப்பதற்கு என் ரசிகர்கள் உடன் இருக்கிறார்கள். ஊடக நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

மீண்டும் அப்பா துணை

மே 9-ந் தேதி வெளியாக இருந்த ‘வாலு' படம் வெளியாகவில்லை. என்னடா இது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டாரே என்று நினைத்தேன். இப்போது அந்த படத்தை என் அப்பா வாங்கி வெளியிட இருக்கிறார். நமக்காக வாழ்வதை விட, நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்பதை கடந்த இரண்டரை வருடங்களில் கற்றுக்கொண்டேன்," என்றார்.

ஆர்யா

விழாவில் நடிகர்கள் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ராஜேஷ் எம், படத்தின் இயக்குநர் முருகானந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோரும் பேசினார்கள்.

 

என் வெற்றிக்கு சந்தானமும் ஒரு முக்கிய காரணம் - உதயநிதி

சினிமாவில் நான் ஹீரோவாக வெற்றி பெற சந்தானமும் ஒரு முக்கிய காரணம் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடந்தது.

Udhayanidhi praises Santhanam

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் நடிகனாக வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ராஜேஷும், நடிகர் சந்தானமும் தான் காரணம். அதே போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்தின் நடனம் எனக்குப் பிடித்திருந்தது. சந்தானத்தைப் பார்த்த பிறகு நானும்ம் நடனத்தின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்," என்றார்.

இவ்விழாவில் நடிகர் ஆர்யா, வி.டி.வி. கணேஷ், நடிகர் சிலம்பரசன், தம்பி ராமையா, பாடகர் கானா பாலா ஆகியோரும் பங்கேற்று பேசினர்.

முதல் முறையாக நடிகர் சந்தானத்தின் தந்தையும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

ஏ ஆர் ரஹ்மானிடம் பெற்ற பயிற்சிதான் என்னை இசையமைப்பாளராக்கியது! - சந்தோஷ் தயாநிதி

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்'.

இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடித்த அகிலா கிஷோர் நடித்துள்ளனர்.

முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக கடல், லிங்கா படங்களில் பணியாற்றியுள்ளார்.

இனிமே இப்படித்தான் படத்திற்கு இசையமைத்தது குறித்து சந்தோஷ் தயாநிதி பேசுகையில், "இப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல்களுக்கு புதிய பாடகர்களைப் பாட வைத்துள்ளேன்.

கானா பாலா பாடியுள்ள பாடல் சிறப்பாக வந்துள்ளது. கானா வினோத் என்பவர் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘கடல்', ‘லிங்கா', ‘மரியான்' உள்ளிட்ட படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மானின் பட்டறையில் பணியாற்றியது இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இப்படத்தின் நாயகன் சந்தானம் நல்ல மனிதர். நான் இப்படத்திற்காக இசையமைத்த டியூன்களை அவரிடம் போட்டு காண்பிக்கும்போது, அவர் எந்த திருத்தமும் சொல்லவில்லை. உடனே ஓகே சொல்லிவிட்டார்.

சந்தானத்திற்கு பிடித்ததுபோல் இப்படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஆடியன்சுக்கு சம்மர் டீரிட்டாக இருக்கும். எனக்கு இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த சந்தானத்திற்கு நன்றி,' என்றார்.

நேற்று பிரமாண்டமாக நடந்த இதன் இசை வெளியீட்டு விழாவில் முதல் சிடியை ஆர்யா மற்றும் சிம்பு வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

 

ஜூன் 12 ம் தேதி முதல் எந்த தமிழ் படமும் திரையிடப் படாது - கலைப்புலி எஸ்.தாணு அதிரடி

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயரிப்பாளர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

போராட்டத்திற்குப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு க்யுப் ,யூ.எப்.ஓ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கட்டண உயர்வைக் குறைப்பது தொடர்பாக இன்னும் இரண்டொரு நாட்களில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.

இந்த நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்துவதால் படத்தை வெளியிட முடியவில்லை இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப் பட வேண்டும்

Next Month Not Release Any Tamil Movie- Producer S.Thanu

தமிழ்த் திரையுலகின் போதாத காலம்

கடந்த சில வருடங்களாகவே தமிழ்ப் படவுலகம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது பெரிய படங்கள் கூட பிரச்சினைக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது .

கட்டண உயர்வு

இது போதாதென்று டிஜிட்டல் நிறுவனங்கள் வேறு அவ்வப்போது கட்டணங்களை உயர்த்தி பிரச்சினை தருவது மட்டும் இல்லாமல் சமயங்களில் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் செய்து வருகின்றன இதற்கு சமீபத்திய எடுத்துக் காட்டு உத்தம வில்லன் திரைப்படம்.

தொடரும் உண்ணா விரதங்கள்

இந்த கட்டண உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்த் திரை உலகினர் ஆங்கங்கே தொடர்ந்து உண்ணாவிரதத்தில்ஈடுபட்டு வருகின்றனர் .

கலைப்புலி எஸ் .தாணு

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தில் டிஜிட்டல் நிறுவனங்களின் விளம்பரங்கள் திரையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும், இப்பிரச்சினைக்கு சுமூக முறையில் தீர்வு காணப் பட வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப் பட்டன.

தலையிடுமா தமிழக அரசு

இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் அதாவது டிஜிட்டல் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .

ஜூன்12 தேதி முதல் படம் திரையிடப் படாது

இம்மாதம் 29ம் தேதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப் படாவிடில் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் எந்த படத்தையும் திரையிட விட மாட்டோம்என்று அவர் கூறியுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் திரைக்கு இது போதாத காலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

அம்மா வருக.. நல்லாட்சி தொடரட்டும்!- அபிராமி ராமநாதன்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.

வழக்கிலிருந்து ஜெயலலிதா முழுமையாக விடுதலையான தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் முதல் வாழ்த்தை அபிராமி ராமநாதன் அறிக்கையாக வெளியிட்டார்.

Abhirami Ramanathan welcomes verdict on Jayalalithaa wealth case

அதில், "தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல சோதனைகளை கடந்து அந்த சோதனை களையெல்லாம் வெற்றி சாதனைகலாக்கிய பெருமைக்குரியவர்.

பெண்களின் கண்களாக இருக்கும் நம்முடைய கலைத்துறையின் மூத்த சகோதரி "அம்மா" என்று நாடு முழுவதும் இருக்கும் மக்களால் போற்றப்படும் தாங்கள் மீண்டும் அரியணையில் அமர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை செய்ய எல்லாம் வல்ல  இறைவன், இறைவி ஆசியால் "அம்மா' உங்களுக்கு நீண்ட நெடிய அயுளை தந்து நல்ல உடல்நலத்துடன் சேவையாற்ற ஒட்டுமொத்த திரையுலகின் சார்பில் பிராத்திக்கிறோம். அம்மா வருக... உங்கள் நல்லாட்சி தொடரட்டும்," என்று கூறியுள்ளார்.