வர்ற, 28ம் தேதி காஜல் தங்கச்சி நிஷாவுக்குத் திருமணம்.. !

மும்பை நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கும், கரண் வெலச்சாவுக்கும் டிசம்பர் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

வர்ற, 28ம் தேதி காஜல் தங்கச்சி நிஷாவுக்குத் திருமணம்.. !

இஷ்டம் தமிழ்ப் படத்தில் நடித்துவர் நிஷா. காஜல் அகர்வாலின் செல்லத் தங்கை. ஆனால் அக்கா காஜலுக்கு கை கொடுத்த தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் நிஷாவுக்கு சவுகரியமாக இல்லை.

தெலுங்கில் ஐந்து படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்துள்ளார் நிஷா. தற்போது கரண் வெலச்சாவைத் திருமணம் செய்து லைப் லைனை மாற்றப் போகிறார்.

இவர்களது திருமணம் டிசம்பர் 28ம் தேதி மும்பையில் நடைபெறுகிறதாம். தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால் காஜல்தான் பெரும் குஷியுடன் வளைய வளைய வருகிறாராம்.

திருமணத்திற்குப் பின்னாலும் நிஷா நடிப்பாராம்.. 'இஷ்டம்' இருப்பவர்கள் பார்த்து ரசிக்கலாம்...!

 

இளையராஜா சுகவீனம்.. அப்பல்லோவில் தீவிரப் பரிசோதனை

இளையராஜா  சுகவீனம்.. அப்பல்லோவில் தீவிரப் பரிசோதனை

சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இப்போது நார்மலாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. இது சினிமா உலகை மட்டுமல்ல, அவரது பல கோடி அபிமானிகளையும் அதிர வைத்தது.

இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம்.

இளையராஜாவுக்கு லேசான நெஞ்சுவலிதான் என்றும், இப்போது ஐசியுவில் நார்மலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறித்த சோதனைகள் அனைத்தும் முடிந்தபிறகு ஆஞ்சியோகிராம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அதுவரை இளையராஜா கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தலைமை மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார்.

 

ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

சென்னை: அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

அதில் அவரது மகனும் நடிகருமான சிம்பு பாடி இருக்கும் ‘லவ் ஆந்தம்' (காதல் கீதம்) என்ற இசை ஆல்பம் தொடர்பாக அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது:

எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள ‘லவ் ஆந்தம்' என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி பாடகர் ஏகானை அவர்கள் ‘புக்' செய்து தரவேண்டும். முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும். ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை (ரூ.1 கோடி) திருப்பிக் கேட்டேன்.

ஆனால் அவர்கள் திருப்பி தராமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன். இதன் பிறகுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழி என எனக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறு சிலரையும் இதே போல் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே இருவர் மீதும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

அவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து இழந்த எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பிரிந்து கிடக்கும் மனிதர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த இசை ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.


 

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

ராஜமுந்திரி: ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

நடிகைகள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப்படுவது ஜவுளிக்கடை, நகைக்கடை, கார் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான்.

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறுகிறார்கள்.

ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்திருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள்.

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடிகைகளையும் தொட்டுப் பார்க்க முனைந்தனர்.

விழா அமைப்பாளர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுஷ்கா, ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள்.

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

இதில் சில ரசிகர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

 

நலமாக உள்ளார் இளையராஜா!

நலமாக உள்ளார் இளையராஜா!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் பணிகளில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, சுவாசம் சீராக்கப்பட்டது. பின்னர் அவரது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவைகள் சோதிக்கப்பட்டன.

இதயக் குழாயில் இருந்த அடைப்பு காரணமாக அவருக்கு நெஞ்சடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.

இப்போது அவரது இதயம் சீராக இயங்குவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரு தினங்களில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் இளையராஜா என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 

புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!

ஆமீர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 படம் முதல் மூன்று தினங்களில் ரூ 69.58 கோடி வசூலித்துள்ளதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆமீர்கான், கத்ரீனா கைப், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா நடித்த படம் தூம் 3. இதில் ஆமீர்கான் வில்லனாக நடித்திருந்தார்.

புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!

கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது இந்தப் படம்.

முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் இப்போது வெளியாகியுள்ளது.

புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!

படம் வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் இந்தப் படம் 36.22 கோடியை குவித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் முதல் இவ்வளவு பெரிய தொகையைக் குவித்துள்ள படம் தூம் 3 தான்.

இதற்கு முன் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் ரூ 33.1 கோடியையும், க்ரிஷ் 35.91 கோடியையும் குவித்திருந்தன.

புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!

இந்த வசூலை முறியடித்துள்ளது தூம் 3. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தூம் 3 வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் சேர்த்துதான் இந்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் தூம் 3 வசூல் மட்டும திருப்தியாகவே உள்ளதாகவும், இந்த வேகத்தில் வசூல் குவிந்தால் விரைவில் ரூ 300 கோடியை இந்தப் படம் வசூலித்துவிடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை

ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.

இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும்.

இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை

ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...'

'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..."

அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?"

'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி.

இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர்.

டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 'தலைவா,வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'.

அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று

ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்".

இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !"

அமிதாப் ஆடிப் போனார்.

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?"

ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார்.

இருவரும் வாடிகன் சென்றனர்.

போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார்.

அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார், "பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"

 

சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்!

சச்சினுக்காக மேலும் ஒரு பாடலை உருவாக்கிய தனுஷ், அதை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார்.

திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் சச்சின்.

சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்!

மும்பை கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் திரண்டிருந்தனர்.

சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்!

தமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த நடிகர் தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்தார். இதற்காக சச்சின் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

ஏற்கெனவே சச்சினுக்காக சச்சின் கீதம் என்ற வீடியோ பாடலையும் தனுஷ் உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அதையும் நினைவு கூர்ந்தார்.